ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
நவம்பர் 14-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி நவம்பர் 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் நவம்பர் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். ஒவ்வொரு நடிப்பிலும் ‘எனக்கு மதத்தில் அக்கறையில்லை’ எனச் சொல்லி உரையாடலை நிறுத்த முயலுபவர்களுக்கு வெவ்வேறு விதமாகப் பதில் அளிப்பதைக் காட்டுங்கள்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகம், பக். 17-ஐக் காண்க.
15 நிமி: கடவுளுடைய இருதயத்தை மகிழ்விக்கும் நன்கொடைகள். 2005, நவம்பர் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 26-30-ன் அடிப்படையில் மூப்பரின் பேச்சு.
20 நிமி: “யெகோவாவின் மகிமையை அறிவியுங்கள்.”a பாரா 4-ஐக் கலந்தாலோசிக்கும்போது சாட்சிகொடுப்பதற்கு நல்நடத்தை எவ்வாறு வாய்ப்பளிக்கலாம் என்பதைக் காட்டும் சுருக்கமான அனுபவங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 24, முடிவு ஜெபம்.
நவம்பர் 21-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: யெகோவாவை உங்கள் கடவுளாக்கிக் கொள்ளுதல். 2005, ஏப்ரல் 1, காவற்கோபுரம், பக்கங்கள் 25-8-ன் அடிப்படையில் மூப்பரின் பேச்சு. ஆபிரகாம், தாவீது, எலியா ஆகியோரின் முன்மாதிரியிலிருந்து கற்றுக்கொள்ளும் படிப்பினைகளை எவ்வாறு நடைமுறையில் பின்பற்றலாம் என்பதைச் சொல்லுங்கள்.
15 நிமி: “தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—கூர்ந்து கவனிப்பதன் மூலம்.”b வீட்டுக்காரரின் அக்கறையை வெளிப்படுத்துகிற ஏதோவொன்றை ஒரு பிரஸ்தாபி கவனித்ததால் அதற்கேற்ப தன் குறிப்புகளை மாற்றியமைப்பதைப் போல் ஒரு நடிப்பைச் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 67, முடிவு ஜெபம்.
நவம்பர் 28-ல் துவங்கும் வாரம்
12 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடை பெற்றுக்கொண்டதற்கான ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். நவம்பர் மாத வெளி ஊழிய அறிக்கையைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். பக்கம் 4-லுள்ள ஆலோசனைகளை (உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாக இருந்தால்) பயன்படுத்தி டிசம்பர் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் டிசம்பர் 8 தேதியிட்ட விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். நடைமுறைக்கு உதவும் வேறு பிரசங்கங்கள் இருந்தால் அவற்றையும் பயன்படுத்தலாம். நன்கொடை ஏற்பாட்டைப் பற்றியும் சொல்லுங்கள்.
15 நிமி: “நாம் எப்படி உதவலாம்?” பேச்சு. தேவை அதிகமுள்ள சகவிசுவாசிகளுக்கு இடருதவி அளிக்க யெகோவாவின் ஊழியர்கள் எடுத்திருக்கும் முயற்சிகளுக்கு சில உதாரணங்களைக் கொடுங்கள். (ஆங்கில விழித்தெழு! பத்திரிகைகளில் ஆகஸ்ட் 8, 2003, பக். 10-15; நவம்பர் 22, 2002, பக். 19-24; தமிழ் விழித்தெழு!-வில் நவம்பர் 8, 2001, பக். 23-7 ஆகியவற்றைக் காண்க. வேறு பிரசுரங்களில் உள்ள அனுபவங்களையும் பயன்படுத்தலாம்.) பிறகு நம் ராஜ்ய ஊழியத்தில் பக்கம் 3-லுள்ள கட்டுரையில் காணப்படும் முக்கிய குறிப்புகளைக் கலந்தாலோசியுங்கள். மனிதாபிமான அடிப்படையில் இடருதவிக்கு நன்கொடை அளிக்க யாரேனும் விரும்பினால் அந்தத் தொகையை உலகளாவிய வேலைக்கான நன்கொடையாக அளிப்பது நல்லது என்பதை வலியுறுத்துங்கள்.
18 நிமி: டிசம்பர் மாதத்தில் நற்செய்தியை அறிவித்தல். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். ஐந்து நிமிட முன்னுரையில், ஜனவரி 2005 நம் ராஜ்ய ஊழியம், பக்கம் 8-ல் காணப்படும், “மாதிரி பிரசங்கங்களைப் பயன்படுத்தும் விதம்” என்ற கட்டுரையிலுள்ள பின்வரும் குறிப்புகளைச் சுருக்கமாக மறுபார்வை செய்யுங்கள்: (1) பிரசங்கங்களை நம் சொந்த வார்த்தையில் சொன்னால் பொதுவாக நமக்கு நல்ல பலன் கிடைக்கும். (2) நாம் பகுத்துணர்வைப் பயன்படுத்த வேண்டும், உள்ளூர் பழக்கவழக்கங்களை மனதில் வைத்து பிரசங்கங்களை மாற்றியமைக்கவும் வேண்டும். (3) நம் பிராந்தியத்திலுள்ள மக்களின் பின்னணியையும் சிந்தனையையும்கூட மனதில் வைத்திருக்க வேண்டும். (4) நாம் காட்ட நினைத்துள்ள அதிகாரத்தைக் கவனமாய் வாசிக்க வேண்டும்; அதில் ஆர்வத்தைத் தூண்டும் குறிப்புகளைத் தேட வேண்டும். (5) மாதிரி பிரசங்கங்களைத்தான் நாம் உபயோகிக்க வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. இக்குறிப்புகளை மறுபார்வை செய்த பின்னர் டிசம்பர் மாத பிரசுர அளிப்பின்போது இவற்றை எப்படிப் பயன்படுத்தலாம் என்பதைக் கலந்தாலோசியுங்கள். ஜனவரி 2005 நம் ராஜ்ய ஊழிய உட்சேர்க்கையில் உள்ள மாதிரி பிரசங்கங்களையோ உள்ளூரில் பயனுள்ளதாக இருக்கிற வேறு பிரசங்கங்களையோ நீங்கள் பயன்படுத்தலாம். ஓரிரு பிரசங்கங்களை நடித்துக்காட்ட செய்யுங்கள்.
பாட்டு 123, முடிவு ஜெபம்.
டிசம்பர் 5-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
15 நிமி: சபை தேவைகள்.
20 நிமி: “நம் ஊழியம் நிறைவேற்றுகிற காரியங்கள்.”c பாரா 5-ஐக் கலந்தாலோசிக்கும்போது, 2004, பிப்ரவரி 15, காவற்கோபுரம், பக்கம் 32-லுள்ள குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
பாட்டு 26, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.