தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
டிசம்பர் 26, 2005-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் வாய்மொழியாக கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 30 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது நவம்பர் 7 முதல் டிசம்பர் 26, 2005 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுக்களின் அடிப்படையில் அமைந்தது. [குறிப்பு: கேள்விகளுக்குப் பிறகு எந்த ரெஃபரன்ஸும் கொடுக்கப்படவில்லை என்றால், பதில்களைக் கண்டுபிடிப்பதற்கு நீங்களே சொந்தமாக ஆராய்ச்சி செய்ய வேண்டும்.—ஊழியப் பள்ளி, பக். 36-7-ஐக் காண்க.]
பேச்சு பண்புகள்
1. “அன்பினிமித்தம்” அறிவுறுத்துகிறோமா என்பதை உறுதிப்படுத்திக்கொள்ள நாம் என்ன செய்யலாம்? (பிலே. 9) [be-TL பக். 266]
2. நாம் எவ்விதங்களில் ‘ஆரோக்கியமான போதனையினால் அறிவுறுத்தலாம்’? (தீத். 1:9, NW) [be-TL பக். 267 பாரா. 1-2]
3. உற்சாகமூட்டும் விதத்தில் பேச்சு கொடுப்பது ஏன் முக்கியம், அதை நாம் எப்படிச் செய்யலாம்? [be-TL பக். 268 பாரா. 1-3, பெட்டி]
4. யெகோவா தம் மக்களுக்காகச் செய்திருப்பவற்றை மோசேயின் மாதிரியைப் பின்பற்றி நாம் மற்றவர்களுக்கு நினைப்பூட்டுவது அவர்களுக்கு எப்படித் தைரியமூட்டுகிறது? (உபா. 3:28; 31:1-8) [be-TL பக். 268 பாரா 5–பக். 269 பாரா 1]
5. யெகோவா தற்போது செய்கிறவற்றையும் எதிர்காலத்தில் செய்யப்போகிறவற்றையும் பற்றி மகிழ்ச்சிபொங்க பேசுவது சபையாருக்கு ஏன் ஊக்கமளிக்கும்? [be-TL பக். 270-1]
பேச்சு நியமிப்பு எண் 1
6. செப்டுவஜின்ட் என்றால் என்ன, கிறிஸ்தவர்களுக்கு அது ஏன் அக்கறைக்குரியது? [si-TL பக். 307 பாரா 12–பக். 310 பாரா 14]
7. மசோரெட்டுகள் யார், பைபிள் மொழிபெயர்ப்புக்கு அவர்கள் செய்துள்ள குறிப்பிடத்தக்க உதவிகள் யாவை? [si-TL பக். 310 பாரா 18; பக். 311 பாரா. 20-1]
8. ஆங்கில புதிய உலக மொழிபெயர்ப்பு பைபிளின் எபிரெய வேதாகமப் பகுதிக்குரிய அடிப்படை மூல வாக்கியம் எது, இதை அதிகாரப்பூர்வமான, நம்பகமான மொழிபெயர்ப்பு என ஏன் சொல்லலாம்? [si-TL பக். 312 பாரா. 28, 30]
9. பூர்வ கிறிஸ்தவர்கள் கடவுளுடைய வார்த்தையைப் பிரஸ்தாபிப்பதில் தீவிர ஆர்வத்தை எப்படிக் காட்டினர்? [si-TL பக். 315 பாரா. 1-5]
10. பரிசுத்த வேத எழுத்துக்களின் தற்போதுள்ள கையெழுத்துப் பிரதிகளையும் வாக்கியங்களையும் ஆராய்வது பைபிளைப் பற்றி எதை வெளிப்படுத்துகிறது? [si-TL பக். 320 பாரா 32]
வாராந்தர பைபிள் வாசிப்பு
11. தாவீது செய்த யுத்தங்களில் யெகோவா பிரியப்படாததன் காரணமாகவா ஆலயத்தைக் கட்ட தாவீதை அவர் அனுமதிக்கவில்லை? (1 நா. 22:6-10)
12. யெகோவா ஒரு தொகுதியாக தம் ஊழியர்களின் தேவைகளைக் கவனிப்பது மட்டுமல்லாமல், தமக்குப் பயப்படுகிறவர்கள் ஒவ்வொருவரின் தனிப்பட்ட சூழ்நிலையையும் கவனிக்கிறார் என்பதை ஆலய பிரதிஷ்டை ஜெபத்தில் சாலொமோன் எப்படித் தெரிவித்தார்? (2 நா. 6:29-31)
13. இரண்டு நாளாகமம் 11:15-ல் (NW) குறிப்பிடப்பட்டுள்ள “ஆட்டு வடிவ பேய்கள்” எதைக் குறிக்கின்றன?
14. பாஷாவின் ஆட்சி “ஆசாவின் மூன்றாம் வருஷத்திலே” ஆரம்பமாகி 24 ஆண்டுகள் மட்டுமே நீடித்திருந்தது என்ற பதிவும், “ஆசா அரசாண்ட முப்பத்தாறாம் வருஷத்திலே” யூதாவுக்கு விரோதமாக பாஷா வந்தார் என்ற பதிவும் எப்படி ஒத்துப்போக முடியும்? (1 இரா. 15:33; 2 நா. 16:1)
15. சாத்தானின் உலகத்திற்குச் சம்பவிக்கப் போகிறவற்றைப் பற்றி 2 நாளாகமம் 20:22, 23 எவ்வாறு தத்ரூபமாக விளக்குகிறது?