அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்புகள் டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர் புத்தகத்தை அளியுங்கள். இந்தப் புத்தகம் இல்லாவிட்டால், பைபிள்—கடவுளுடைய வார்த்தையா, மனிதனுடையதா? (ஆங்கிலம்), என்னுடைய பைபிள் கதை புத்தகம், அல்லது நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம் போன்ற புத்தகங்கள் சபை கையிருப்பில் இருந்தால் அவற்றை அளிக்கலாம். ஜனவரி: பழுப்பேறியோ நிறம் மாறியோ உள்ளதும், 1991-ம் வருடத்திற்கு முன்பு வெளியிடப்பட்டதுமான 192 பக்க புத்தகம் ஏதாவது இருந்தால் அவற்றை அளிக்கலாம். வீட்டுக்காரர்கள் அந்தப் புத்தகத்தை ஏற்றுக்கொள்ளாவிட்டால், விழிப்புடன் இருங்கள்! சிற்றேட்டை அளிக்கலாம். பிப்ரவரி: யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் புத்தகம் சிறப்பித்துக் காட்டப்படும். இந்தப் புத்தகம் கையிருப்பில் இல்லாத சபைகள், வெளிப்படுத்துதல்—உச்சக்கட்டம் புத்தகத்தையோ, அதிகப்படியாக கையிருப்பில் இருக்கும் பழைய பிரசுரங்களையோ அளிக்கலாம். மார்ச்: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? புத்தகத்தைச் சிறப்பித்துக் காட்டுங்கள். பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க விசேஷ முயற்சி எடுங்கள்.
◼ அந்தந்த சபையின் முக்கிய மொழியில் 2006-ம் ஆண்டிற்கான நினைவு ஆசரிப்பு அழைப்பிதழ்கள் சீக்கிரத்தில் அனுப்பி வைக்கப்படும். உங்கள் பிராந்தியத்தில் பிற மொழிகள் பேசப்படுமாயின், அந்த மொழிகளிலும் அழைப்பிதழ்களைப் பெற்றுக்கொள்ள விரும்பினால், இவற்றை முடிந்தளவு சீக்கிரமாக லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) ஆர்டர் செய்ய வேண்டும். தயவுசெய்து உங்கள் பிராந்தியத்திற்குத் தேவையான மொழிகளில் மட்டுமே அழைப்பிதழ்களை ஆர்டர் செய்யுங்கள்.
◼ 2007-ம் ஆண்டிற்கான நினைவு ஆசரிப்பு, ஏப்ரல் 2-ம் தேதி, திங்கட்கிழமை சூரிய அஸ்தமனத்திற்குப் பிறகு நடைபெறும் என்பதைத் தயவுசெய்து கவனியுங்கள். இது முன்னதாகவே அறிவிக்கப்படுவதன் நோக்கம், ஒரே ராஜ்ய மன்றத்தை பல சபைகள் பயன்படுத்துகையில் சகோதரர்கள் வேறொரு மன்றத்தை புக் செய்வதற்கே. அப்படிப்பட்ட சந்தர்ப்பங்களில், நினைவு ஆசரிப்பு அமைதியாகவும் சுமுகமாகவும் நடப்பதற்காக, அந்தக் கட்டடத்தில் நடக்கும் மற்ற நிகழ்ச்சிகளால் எவ்வித இடையூறும் குழப்பமும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வதற்கு அந்த மன்றத்து நிர்வாகத்திடம் மூப்பர்கள் முன்னதாகவே ஒப்பந்தம் செய்துகொள்ள வேண்டும்.
◼ இது ஒரு முக்கியமான நிகழ்ச்சியாக இருப்பதால், நினைவு ஆசரிப்பு பேச்சைக் கொடுக்க ஒவ்வொரு வருடமும் ஒரே சகோதரரை நியமிக்காமல் அல்லது சுற்றுமுறையில் ஒருவர் மாறி ஒருவராக நியமிக்காமல், அதிக தகுதிவாய்ந்த மூப்பர்களில் ஒருவரை மூப்பர் குழு தேர்ந்தெடுக்க வேண்டும். அபிஷேகம் பண்ணப்பட்டவர்களில் பேச்சைக் கொடுப்பதற்கு தகுதிவாய்ந்த மூப்பர் ஒருவர் இருந்தால், அவரையே உபயோகிக்க வேண்டும்.
◼ கன்னடம், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளில் நம் ராஜ்ய ஊழியத்தைப் பயன்படுத்தும் சபைகளுக்கு, “வேதாகமம் முழுவதும்”—நம்பத்தக்கது, நன்மை அளிப்பது (2006) என்ற தலைப்பிலுள்ள சிற்றேடு அந்தந்த மொழியில் அனுப்பி வைக்கப்படும். இந்தச் சிற்றேட்டில், 2006-ம் வருடம் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கொடுக்கப்படுகிற பேச்சு நியமிப்பு எண் 1-க்கான தகவல் உள்ளது. இம்மொழிகளில், திருத்தப்பட்ட 2006 தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை விரைவில் அனுப்பப்படும். பிற மொழிகளில் நடத்தப்படும் சபைகள் மேற்கூறப்பட்ட மொழிகளிலுள்ள சிற்றேடுகளில் எவற்றையாவது உபயோகிக்க விரும்பினால், லிட்ரேச்சர் ரிக்வெஸ்ட் ஃபார்மில் (S-14) அவற்றிற்கான தங்கள் ஆர்டர்களை அனுப்பலாம்.
◼ கிடைக்கும் புதிய ஆடியோ காம்பேக்ட் டிஸ்க்குகள்:
பெரிய போதகரிடம் கற்றுக்கொள் —(MP3 ஃபார்மட்) —ஆங்கிலம்
என்னுடைய பைபிள் கதை புத்தகம் —(MP3 ஃபார்மட்) —ஆங்கிலம்
நித்திய ஜீவனுக்கு வழிநடத்துகிற அறிவு —(MP3 ஃபார்மட்) —ஆங்கிலம்
குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்—(MP3 ஃபார்மட்) —ஆங்கிலம்
எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப் பெரிய மனிதர்—(MP3 ஃபார்மட்) —ஆங்கிலம்
திருப்தியான வாழ்க்கைக்கு வழி—(MP3 ஃபார்மட்) —ஆங்கிலம்
கடவுள் நம்மிடமிருந்து எதைத் தேவைப்படுத்துகிறார்? —ஆங்கிலம், கன்னடம், பெங்காலி, மலையாளம்
நீங்கள் நேசிக்கும் ஒருவர் மரிக்கையில்—காம்பாக்ட் டிஸ்க்கில் —ஆங்கிலம், கன்னடம், குஜராத்தி, தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம், ஹிந்தி
ஆவிக்குரிய ஆஸ்தியை மதித்தல்—(நாடகம்) —ஹிந்தி