ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
ஜனவரி 9-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, அல்லது உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு விதங்களில், ஜனவரி 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், ஜனவரி விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக்காட்டச் செய்யுங்கள். ஒரு நடிப்பு, வியாபார பிராந்தியத்தில் பிரஸ்தாபி சாட்சி கொடுப்பதைப் போல் இருக்கட்டும்.
15 நிமி:“பைபிள் கற்பிக்கிறது புத்தகம்—பைபிள் படிப்பிற்கு உதவும் முக்கிய புத்தகம்.”a இந்தப் புதிய புத்தகத்தில் பைபிள் படிப்புகளை நடத்தத் தூண்டுவியுங்கள்.
20 நிமி:“பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து பைபிள் படிப்புகளை எப்படி ஆரம்பிக்கலாம்.” உட்சேர்க்கையில் பக்கம் 3-ன் அடிப்படையிலான நடிப்புகளும் சபையார் கலந்தாலோசிப்பும். ஆர்வம் காட்டுபவர்களுக்கு பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலிருந்து உடனே பைபிள் படிப்புகளை ஆரம்பித்து, தொடர்ந்து நடத்தலாம். மறுசந்திப்பு செய்யும்போது எப்படி பைபிள் படிப்பை ஆரம்பிக்கலாம் என்பதைக் காண்பிக்கும் நன்கு தயாரிக்கப்பட்ட மூன்று நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள். முதல் நடிப்பு, பக்கங்கள் 4-5-ஐயும், இரண்டாவது நடிப்பு பக்கம் 6-ஐயும், மூன்றாவது நடிப்பு, பக்கம் 7-ல் உள்ள முதல் பாராவையும் பயன்படுத்துவதாக இருக்கட்டும். ஒவ்வொரு நடிப்பிலும் உள்ள முக்கிய விஷயத்தை முன்கூட்டியே தெரிவியுங்கள், நடிப்புக்குப் பின்பும் அதைக் கலந்தாலோசியுங்கள். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்திலுள்ள பாராக்களை வாசிக்கையில் தேவையான பகுதிகளை மட்டுமே வாசிக்கச் சொல்லலாம். ஒவ்வொரு நடிப்பின் முடிவிலும் பிரஸ்தாபி அடுத்த சந்திப்புக்கு அடித்தளம் போடுவதுபோல் இருக்கட்டும்.
பாட்டு 125, முடிவு ஜெபம்.
ஜனவரி 16-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். உடல்நல பராமரிப்புக்கான இரத்தமில்லா மாற்று சிகிச்சை—நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் என்ற வீடியோ சம்பந்தமான கலந்தாலோசிப்பு இரண்டு வாரங்களுக்கு ஊழியக் கூட்டத்தில் நடைபெறும். அக்கூட்டங்களுக்குத் தயாரிக்கும் வகையில் அந்த வீடியோவைப் பார்த்துவர அனைவரையும் ஊக்கப்படுத்துங்கள்.
15 நிமி:யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் என்ற புத்தகத்தில் பக்கங்கள் 4-7 வரையுள்ள விஷயங்களின் அடிப்படையில் பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பக்கம் 4-ல் காணப்படும் தகவலைப் பயன்படுத்தி மூன்று நிமிடங்களுக்குள்ளாக முன்னுரையைச் சொல்லி, 5-ம் பக்கத்திலிருந்து 7-ம் பக்கத்தில் உபதலைப்பு வரையுள்ள தகவலைப் பயன்படுத்தி சபையாருடன் கலந்தாலோசியுங்கள். இப்புத்தகத்தின் இன்னும் கூடுதலான பகுதிகள் அடுத்து வரும் ஊழியக் கூட்டங்களில் கலந்தாலோசிக்கப்படும்.
20 நிமி:“உலகத்தில் சுடர்களைப் போல் பிரகாசிக்கிற இளைஞர்கள்.”b பள்ளியில் எப்படிச் சாட்சி கொடுக்க முடிந்திருக்கிறதென்று சொல்லும்படி இளைஞர்களிடம் கேளுங்கள். அவர்களில் ஓரிருவரை முன்கூட்டியே ஏற்பாடு செய்துகொள்ளலாம்.
பாட்டு 107, முடிவு ஜெபம்.
ஜனவரி 23-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-லுள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தி, அல்லது உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு விதங்களில், பிப்ரவரி 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும் பிப்ரவரி விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒரு பிரசங்கத்தை இளைஞர் ஒருவர் நடித்துக் காட்டுவதாக இருக்கட்டும்.
15 நிமி:சபை தேவைகள்.
20 நிமி:“தனிப்பட்ட அக்கறை காட்டுங்கள்—கேள்வி கேட்டு, சொல்வதைக் கவனிப்பதன் மூலம்.”c பாரா 2-ஐக் கலந்தாலோசிக்கையில், உரையாடலைத் துவங்குவதற்கு எந்தெந்த கேள்விகள் அதிக பயனளிப்பவையாக இருந்தன என்று சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள். சாதுரியமான கேள்விகளைக் கேட்டு, சொல்வதைக் கவனிப்பதன் மூலம் ஒரு நபரின் உள்ளத்தில் இருப்பதை வெளிக்கொண்டுவரும் விதத்தை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
பாட்டு 205, முடிவு ஜெபம்.
ஜனவரி 30-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள். ஜனவரி மாத ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு ஞாபகமூட்டுங்கள். ஊழியத்தில் பிப்ரவரி மாதம் அளிக்கப்போகிற பிரசுரத்தைக் குறிப்பிடுங்கள்; ஒரு பிரசங்கத்தை நடித்துக் காட்டச் செய்யுங்கள்.
15 நிமி:நமக்கு நன்மை அளிக்கும் அன்பான ஏற்பாடுகள். மூப்பரின் பேச்சு. அனைத்து சபைகளுக்கும் கிளை அலுவலகம் அனுப்பியிருந்த ஜனவரி 3, 2006 தேதியிட்ட கடிதத்தை வாசித்துக் கலந்தாலோசியுங்கள். அந்தக் கடிதம், மருத்துவமனை தொடர்பு ஆலோசனைக் குழு (HLC) மற்றும் நோயாளி சந்திப்புக் குழு (PVG) தொடர்பானதாகும்.
20 நிமி:“முக்கிய மருத்துவ முறையை விளக்குகிற வீடியோ.” அப்போஸ்தலர் 15:28, 29-ஐ வாசியுங்கள்; இரத்தத்தின் புனிதத்தன்மை சம்பந்தமான கடவுளுடைய சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும் என்ற மிக முக்கிய காரணத்தினாலேயே கிறிஸ்தவர்கள் இரத்தமேற்றிக் கொள்ள மறுக்கின்றனர் என்பதைச் சுருக்கமாக வலியுறுத்துங்கள். அதைத் தொடர்ந்து நோயாளியின் தேவைகளையும் உரிமைகளையும் மதித்தல் வீடியோவைப் பற்றி கலந்தாலோசியுங்கள். அதற்கு, கட்டுரையில் தரப்பட்டுள்ள கேள்விகளைப் பயன்படுத்துங்கள். முடிவில் கடைசி பாராவை வாசியுங்கள்.
பாட்டு 45, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 6-ல் துவங்கும் வாரம்
10 நிமி:சபை அறிவிப்புகள்.
25 நிமி:கற்பிக்க உதவும் புதிய புத்தகத்தை அறிந்திருத்தல். பேச்சும் சபையார் கலந்தாலோசிப்பும். பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தில் தங்களுக்குப் பிடித்த சில அம்சங்களைச் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள். ஒவ்வொரு அதிகாரத்திலுமுள்ள முக்கிய குறிப்புகளைச் சிறப்பித்துக் காட்டும் ஆரம்பக் கேள்விகள், மறுபார்வைப் பெட்டி (பக். 106, 114), விளக்கக் குறிப்புகளுடன் கூடிய படங்கள் (பக். 122-3, 147, 198), பிற்சேர்க்கை (பக். 197, பாரா. 1-2) ஆகிய அம்சங்கள் இவற்றில் சில. இப்புத்தகம் கனிவான விதத்திலும் மனதைத் தொடும் விதத்திலும் கற்பிக்கிறது (பக். 11, பாரா 12); எளிதான, தெளிவான விளக்கங்களைக் கொடுக்கிறது (பக். 58, பாரா 5), திறம்பட்ட உதாரணங்களைப் பயன்படுத்துகிறது. (பக். 159, பாரா 12) பைபிள் படிப்புகளை ஆரம்பிக்க உதவும் வகையில் முன்னுரை (பக். 3-7) தயாரிக்கப்பட்டுள்ளது. புதிய மாணாக்கர் ஒருவருடன் பக்கம் 7-ல் உள்ள பெட்டியைக் கலந்தாலோசிக்கும் விதத்தை நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். புதிய புத்தகத்தைப் பயன்படுத்தியபோது கிடைத்த அனுபவங்களைச் சொல்லுங்கள்.
10 நிமி:துணைப் பயனியர் சேவையால் கிடைக்கிற ஆசீர்வாதங்கள். (நீதி. 10:22) கடந்த கோடை மாதங்களில் துணைப் பயனியர்களாகச் சேவை செய்தவர்களிடம், எவ்வாறு திட்டமிட முடிந்தது என்பதையும், அதன் பயனாக என்னென்ன சந்தோஷங்களையும் ஆசீர்வாதங்களையும் பெற முடிந்தது என்பதையும் சொல்லுமாறு கேளுங்கள். வருகிற மார்ச், ஏப்ரல், மே மாதங்களின்போது துணைப் பயனியர் ஊழியம் செய்வதைக் குறித்து ஜெபத்துடன் சிந்திக்குமாறு எல்லாரையும் ஊக்கப்படுத்துங்கள்.
பாட்டு 16, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.