ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 12-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ பிப்ரவரி 15 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், பிப்ரவரி மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். அதில் ஒரு நடிப்பு, ‘எனக்கு மதத்தில் அக்கறையில்லை’ எனச் சொல்லி உரையாடலை நிறுத்த முயலுபவருக்கு எவ்வாறு பதில் அளிக்கலாம் என்பதைக் காட்டுவதுபோல் இருக்கட்டும்.—நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக். 16-17-ஐக் காண்க.
35 நிமி: “யெகோவாவின் புண்ணியங்களை அறிவியுங்கள்.” a ஊழியக் கண்காணியால் நடத்தப்பட வேண்டும். கலந்தாலோசிப்பின் போது பொருத்தமான சந்தர்ப்பத்தில் நினைவு ஆசரிப்பு நடைபெறும் சரியான சமயத்தையும் இடத்தையும் அறிவியுங்கள், கூடுதலான வெளி ஊழிய ஏற்பாடுகளையும் அறிவியுங்கள், ஏப்ரல் மாதத்தின்போது துணைப் பயனியர் ஊழியம் செய்ய சபையின் இலக்கைக் குறித்தும் அறிவியுங்கள்.
பாட்டு 147, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 19-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள்.
20 நிமி: “பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தைப் பயன்படுத்துகையில் பெரிய போதகரைப் பின்பற்றுங்கள்.” b 6-வது பாராவை கலந்தாலோசிக்கையில் சுருக்கமான ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரு பிரஸ்தாபி தன் மாணாக்கருடன் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தின் 6-வது அதிகாரத்தை மறுபார்வை செய்ய, அந்த அதிகாரத்தின் கடைசியிலுள்ள பெட்டியைப் பயன்படுத்துவதுபோல் அது இருக்கட்டும்.
20 நிமி: மார்ச் மாதத்தில் ஒரு பைபிள் படிப்பை ஆரம்பிக்க முடியுமா? சபையாருடன் கலந்தாலோசித்தல். மார்ச் மாதத்தில் முதல் 15 நாட்களுக்கு, பைபிள் படிப்பு ஆரம்பிக்கும் நோக்கத்துடன் பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை நாம் அளிப்போம். ஜனவரி 2006 நம் ராஜ்ய ஊழியம் உட்சேர்க்கையில் பக்கங்கள் 3-6-ல் கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளை மறுபார்வை செய்யுங்கள். பக்கம் 6-லுள்ள ஆலோசனைகளில் ஒன்றைப் பயன்படுத்தியோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு ஏதாவது அணுகுமுறையைப் பயன்படுத்தியோ முதல் சந்திப்பில் எவ்வாறு பைபிள் படிப்பை ஆரம்பிப்பது என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள். பிரஸ்தாபிகள் ஊழியத்தில் அந்தப் புத்தகத்தைப் பயன்படுத்தியதால் கிடைத்த சுவாரஸ்யமான அனுபவங்களைச் சொல்லுமாறு கேளுங்கள். முக்கியமாக, பைபிள் படிப்புகளை ஆரம்பித்ததைப்பற்றிய அனுபவங்களைச் சொல்லுமாறு கேளுங்கள்.
பாட்டு 220, முடிவு ஜெபம்.
பிப்ரவரி 26-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள். பக்கம் 8-ல் உள்ள ஆலோசனைகளைப் பயன்படுத்தியோ, உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமாயுள்ள வேறு அணுகுமுறைகளைப் பயன்படுத்தியோ மார்ச் 1 தேதியிட்ட காவற்கோபுரத்தையும், மார்ச் மாத விழித்தெழு!-வையும் அளிப்பதை நடித்துக் காட்டச் செய்யுங்கள். ஒரு நடிப்பு, வியாபார பிராந்தியத்தில் பிரஸ்தாபி சாட்சி கொடுப்பதைப் போல் இருக்கட்டும்.
15 நிமி: “செயலற்றவர்களை மறந்துவிடாதீர்கள்.” c மே 1, 2004 காவற்கோபுரத்தின் 21-2 பக்கங்களிலுள்ள 13-16 பாராக்களின் குறிப்புகளையும் சேர்த்துக்கொள்ளுங்கள்.
20 நிமி: “ஊழியத்தில் கிறிஸ்துவைப் பின்பற்றுங்கள்.” d நேரம் இருந்தால் குறிப்பிடப்பட்டுள்ள வசனத்தை வாசித்துக் குறிப்பு சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 18, முடிவு ஜெபம்.
மார்ச் 5-ல் துவங்கும் வாரம்
15 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலிருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட அறிவிப்புகள். நினைவுநாள் ஆசரிப்புக்கான விசேஷ அழைப்பிதழைப் பயன்படுத்துங்கள். சபையார் ஒவ்வொருவருக்கும் அழைப்பிதழின் ஒரு பிரதியைக் கொடுங்கள், உங்கள் பிராந்தியத்தில் இதை விநியோகிப்பதற்காக சபை செய்திருக்கும் ஏற்பாடுகளைத் தெரிவியுங்கள். எல்லாரும் அதில் முழுமையாகப் பங்குகொள்ளும்படி ஊக்கப்படுத்துங்கள். இந்த அழைப்பிதழை எப்படி விநியோகிக்கலாம் என்பதைக் காட்டுகிற ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள்.
15 நிமி: ஒழுங்கமைக்கப்பட்ட விதத்தில் நற்செய்தியைப் பிரசங்கித்தல். யெகோவாவின் சித்தத்தைச் செய்ய ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கம் 102-லுள்ள உபதலைப்பிலிருந்து அந்த அதிகாரத்தின் கடைசிவரையுள்ள பகுதியின் அடிப்படையில் பேச்சும் சபையாருடன் கலந்தாலோசிப்பும்.
15 நிமி: “நம்மிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள பொக்கிஷம்.” e நேரம் இருந்தால், கொடுக்கப்பட்டிருக்கும் வசனங்களின் பேரில் குறிப்புகள் சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
பாட்டு 104, முடிவு ஜெபம்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
c ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
d ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.
e ஒரு நிமிடத்திற்கும் குறைவான அறிமுக குறிப்புகளுக்குப் பின்பு கேள்வி-பதில் கலந்தாலோசிப்பு.