ஊழியக் கூட்டத்திற்கான அட்டவணை
அக்டோபர் 13-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள்.
35 நிமி: “சபை கூட்டங்களில் புதிய மாற்றம்.” a நேரம் இருப்பதைப் பொறுத்து, முடிந்தவரை கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து குறிப்புகள் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
அக்டோபர் 20-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். நம் ராஜ்ய ஊழியத்திலுள்ள அறிவிப்புகளில் சிலவற்றைத் தேர்ந்தெடுத்துச் சொல்லுங்கள்.
20 நிமி: ஊழியத்தில் எப்போதும் சந்தோஷம் காணுங்கள். ஜூலை 1, 2008, காவற்கோபுரம், பக்கங்கள் 24-25 பாராக்கள் 11-17-லுள்ள தகவலின் அடிப்படையில் உற்சாகமூட்டும் பேச்சு. பல வருடங்களாக யெகோவாவுக்கு உண்மையாய் சேவை செய்துவரும் ஓரிருவரைப் பேட்டி காணுங்கள். ஜனங்கள் நற்செய்திக்கு செவிசாய்க்காவிட்டாலும் ஊழியத்தில் எப்போதும் சந்தோஷம் காண எது அவர்களுக்கு உதவியிருக்கிறது?
20 நிமி: அக்டோபர்-டிசம்பர் காவற்கோபுரத்தையும் அக்டோபர்-டிசம்பர் விழித்தெழு!-வையும் அளியுங்கள். பத்திரிகைகளைப் பற்றி சுருக்கமாக சொல்லிவிட்டு, எந்தெந்த கட்டுரைகள் தங்களுடைய பிராந்தியத்தில் உள்ளவர்களின் ஆர்வத்தைத் தூண்டுபவையாக இருக்கின்றன, ஏன் என்பதை சபையாரிடம் கேளுங்கள். உரையாடலை ஆரம்பிக்க தாங்கள் என்ன கேள்வியைக் கேட்கப்போகிறார்கள் என்று சபையாரைக் கேளுங்கள்; அதோடு, பத்திரிகைகளை அளிப்பதற்கு முன் கட்டுரையிலுள்ள எந்த வசனத்தைக் காட்ட திட்டமிட்டிருக்கிறார்கள் என்றும் கேளுங்கள். பேச்சின் இறுதியில், பக்கம் 8-லுள்ள மாதிரி அணுகுமுறைகளையோ உங்கள் பிராந்தியத்திற்குப் பொருத்தமான வேறு அணுகுமுறைகளையோ பயன்படுத்தி ஒவ்வொரு பத்திரிகையையும் அளிக்கும் நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள்.
அக்டோபர் 27-ல் துவங்கும் வாரம்
5 நிமி: சபை அறிவிப்புகள். கணக்கு அறிக்கையையும் நன்கொடைகளைப் பெற்றுக்கொண்டதற்கு சங்கம் அனுப்பிய ஒப்புதல் கடிதங்களையும் வாசியுங்கள்.
10 நிமி: சபை தேவைகள்.
30 நிமி: “தனிப்பட்ட படிப்பும் குடும்ப பைபிள் படிப்பும் அதிமுக்கியம்!” b நேரம் இருப்பதைப் பொறுத்து, முடிந்தவரை கொடுக்கப்பட்டுள்ள வசனங்களை வாசித்து குறிப்புகள் சொல்லும்படி சபையாரைக் கேளுங்கள்.
நவம்பர் 3-ல் துவங்கும் வாரம்
10 நிமி: சபை அறிவிப்புகள். அக்டோபர் மாத வெளி ஊழிய அறிக்கைகளைச் சமர்ப்பிக்கும்படி பிரஸ்தாபிகளுக்கு நினைப்பூட்டுங்கள். நவம்பர் 10-ல் ஆரம்பமாகும் துண்டுப்பிரதியின் விசேஷ வினியோகிப்புக்கான ஏற்பாடுகளைப் பற்றி சொல்லுங்கள். வினியோகிப்புக்கான துண்டுப்பிரதிகளைப் பெற்றுக்கொள்ளாத எல்லாரும் அவற்றைப் பெற்றுக்கொள்ளும்படி உற்சாகப்படுத்துங்கள்.
20 நிமி: 2009-ஆம் ஆண்டிற்கான தேவராஜ்ய ஊழியப் பள்ளி. தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் செய்யப்பட்டுள்ள புதிய மாற்றத்தைக் குறித்து தேவராஜ்ய ஊழியப் பள்ளி அட்டவணை உட்சேர்க்கையில் “அறிவுரைகள்” பகுதியில் காணப்படும் தகவலை பள்ளிக் கண்காணி சபையாருடன் கலந்தாலோசிக்கிறார். முக்கியமாக, புதிய மாற்றங்களைப் பற்றிச் சொல்கிறார். பேச்சு நியமிப்பைப் பெறும்போது அதைத் தவறாமல் கொடுக்கவும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகள் பாகத்தில் கலந்துகொள்ள தயாரிக்கவும், தேவராஜ்ய ஊழியப் பள்ளியிலிருந்து பயனடையுங்கள் என்ற புத்தகத்திலிருந்து பள்ளிக் கண்காணி வாராவாரம் கொடுக்கும் ஆலோசனைகளைக் கடைப்பிடிக்கவும் அவர் எல்லாரையும் உற்சாகப்படுத்துகிறார்.
15 நிமி: ‘கற்பிக்கும் திறமையை’ வளர்த்திடுங்கள். இந்தப் பகுதியை, ஊழிய கண்காணி அல்லது தகுதிவாய்ந்த வேறொரு மூப்பர் நடத்துவார். இவர், ஜனவரி 15, 2008, காவற்கோபுரத்தில் பக்கங்கள் 9-12, பாராக்கள் 5-18-ல் திறம்பட கற்பிப்பதில் உட்பட்டுள்ள ஐந்து முக்கிய அம்சங்களையும் அதைப் பற்றிய சுருக்கமான குறிப்புகளையும் சிந்திப்பார். கற்பிக்கும் திறமையில் முன்னேற்றம் செய்ய இந்தக் குறிப்புகள் தங்களுக்கு உதவியதாகக் கருதும் ஓரிரு பிரஸ்தாபிகளைப் பேட்டிக் காண்பார்.
[அடிக்குறிப்புகள்]
a ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.
b ஒரு நிமிடத்திற்கும் குறைவான நேரத்தை அறிமுகத்துக்குப் பயன்படுத்திக்கொண்டு கேள்வி-பதில் முறையில் கலந்தாலோசியுங்கள்.