தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
ஏப்ரல் 27, 2009-ல் துவங்கும் வாரத்தின்போது, பின்வரும் கேள்விகள் தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் கலந்தாலோசிக்கப்படும். பள்ளிக் கண்காணி 20 நிமிடத்திற்கு இந்த மறுபார்வையை நடத்துவார்; இது மார்ச் 2 முதல் ஏப்ரல் 27, 2009 வரையிலான வாரங்களுக்குரிய பேச்சுகளின் அடிப்படையில் அமைந்திருக்கும்.
1. நம் மனசாட்சியைப் பயிற்றுவித்து அதற்குச் செவிசாய்ப்பது சம்பந்தமாக யோசேப்பின் உதாரணம் நமக்கு என்ன கற்பிக்கிறது? (ஆதி. 39:7-12) [w-TL07 10/15 பக். 23 பாரா 16]
2. நமக்கு விரோதமாக பாவம் செய்பவர்களை மன்னிக்கும் விஷயத்தில் யோசேப்பு எப்படி ஒரு நல்ல முன்மாதிரி? (ஆதி. 45:4, 5) [w-TL99 1/1 பக். 31 பாரா. 2-3]
3. ‘செங்கோல்’ மற்றும் ‘நியாயப்பிரமாணிக்கனின் கோல்’ எதை அர்த்தப்படுத்துகின்றன? [w-TL04 1/15 பக். 29]
4. “என் எலும்புகளை இவ்விடத்திலிருந்து கொண்டுபோவீர்களாக” என்று யோசேப்பு சொன்னது எப்படிப்பட்ட தாக்கத்தை ஏற்படுத்தியது? (ஆதி. 50:25) [w-TL07 6/1 பக். 28 பாரா 10]
5. ஒரு சவாலான நியமிப்பைப் பெறும்போது எது நமக்கு நம்பிக்கை அளிக்கலாம்? (யாத். 4:10, 13) [w-TL04 3/15 பக். 25 பாரா 4]
6. யெகோவா பார்வோனை நடத்திய விதத்தால் என்ன விளைந்தது, அது நம்மை எப்படிப் பாதிக்க வேண்டும்? (யாத். 9:13–16) [w-TL05 5/15 பக். 21 பாரா 8]
7. யாத்திராகமம் 14:30, 31 நம் நாளுக்கு எப்படிப் பொருந்துகிறது? [w-TL04 3/15 பக். 26 பாரா 5]
8. யாத்திராகமம் 16:1-3 காட்டுகிறபடி, குறைகூறுவதில் என்ன ஆபத்துகள் உள்ளன? [w-TL06 7/15 பக். 15 பாரா. 4, 5]
9. நியாயப்பிரமாண உடன்படிக்கையின்படி, யாத்திராகமம் 19:5, 6-க்கு இசைவாக இஸ்ரவேலர் எந்தளவுக்கு ‘ஆசாரிய ராஜ்யமும் பரிசுத்த ஜாதியுமாய் இருந்தார்கள்’ எனச் சொல்ல முடியும்? [w-TL95 7/1 பக். 16 பாரா 8]
10. பேராசையைக் குறித்த பத்தாவது கட்டளை எந்த விதத்தில் மனிதனுடைய சட்டங்களைவிட மேம்பட்டதாய் இருக்கிறது? (யாத் 20:17) [w-TL06 6/15 பக். 23-24 பாரா 16]