கேள்விப் பெட்டி
◼ யெகோவாவின் சாட்சிகளுடைய சட்டப்பூர்வ நிறுவனங்களின் சின்னங்களைச் சபைகளோ தனி நபர்களோ பயன்படுத்துவது சரியா?
ஒரு நிறுவனம் ஒரு பெயரையோ, சின்னத்தையோ, முத்திரையையோ அதற்குரிய அடையாளமாக (லோகோ) பயன்படுத்தலாம்; இது, அந்த நிறுவனத்தைச் சட்டென அடையாளங்காண உதவலாம். “உவாட்ச் டவர்” (காவல் கோபுரம்) சின்னம், “த உவாட்ச் டவர் பைபிள் அண்ட் டிராக்ட் சொஸைட்டி ஆஃப் இண்டியாவையும்” நம் அமைப்பு பயன்படுத்துகிற மற்ற நிறுவனங்களையும் குறிக்கிறது. “ஜெஹோவாஸ் விட்னஸஸ் ஆஃப் இண்டியா” என்ற பெயரில் இயங்கும் நிறுவனம், பைபிள் திறந்திருப்பது போன்ற ஒரு படத்தைக் கடிதங்களில் சின்னமாகப் பயன்படுத்துகிறது. யெகோவாவின் சாட்சிகளுடைய மற்ற நிறுவனங்கள் வேறு சின்னங்களைப் பயன்படுத்துகின்றன.
சபைகள் அல்லது தனி நபர்கள், அமைப்புடைய சட்டப்பூர்வ நிறுவனங்களின் சின்னங்களையோ பெயர்களையோ தங்கள் ராஜ்ய மன்றங்களிலும், ராஜ்ய மன்ற பெயர்ப் பலகைகளிலும், கடிதங்களிலும், சொந்தப் பொருள்களிலும், மற்றவற்றிலும் பயன்படுத்தக் கூடாது; சொல்லப்போனால், அந்தச் சின்னங்களையும் பெயர்களையும் சற்று மாற்றிப் பயன்படுத்தவும் கூடாது. அமைப்பின் சின்னங்களை அப்படிப் பயன்படுத்தினால், சபைக்கும் அமைப்பின் நிறுவனங்களுக்கும் உள்ள சட்டப்பூர்வ தொடர்பைக் குறித்து அரசாங்க அதிகாரிகளும் பிரஸ்தாபிகளும் மற்றவர்களும் குழம்பிப்போகலாம். அதுபோல், அமைப்பின் சின்னங்களைப் பயன்படுத்தி கடிதங்கள் எழுதினால், அவற்றை உலகத் தலைமை அலுவலகமோ கிளை அலுவலகமோ அங்கீகரிப்பதாக அல்லது அனுப்புவதாகத் தவறாய் கருதப்படலாம்.
இனி கட்டப்படவிருக்கும் ராஜ்ய மன்றங்களில் “உவாட்ச் டவர்” சின்னத்தைப் பயன்படுத்தக் கூடாது, அதைச் சற்று மாற்றிப் பயன்படுத்தவும் கூடாது; அது “உவாட்ச் டவர்” நிறுவனத்திற்குச் சொந்தமான ராஜ்ய மன்றமாக இருந்தாலும் பயன்படுத்தக் கூடாது. ஒருவேளை அந்தச் சின்னம் தற்போதுள்ள ராஜ்ய மன்ற கட்டிடங்களிலோ பெயர்ப் பலகைகளிலோ இருக்கலாம்; அவற்றை மாற்றியமைப்பது பெரிய வேலையாக இருந்தால், அதற்கு அதிக நேரமும் உழைப்பும் பணமும் செலவாகும்; அதனால், சபைகள் உடனடியாக அதை மாற்றியமைக்க வேண்டியதில்லை. என்றாலும், எப்போது ராஜ்ய மன்றத்தைப் புதுப்பிக்க திட்டமிடப்பட்டிருக்கிறதோ அப்போது அவற்றை மாற்றியமைக்கலாம். ஒருவேளை அவற்றை மாற்றியமைப்பது சின்ன வேலையாக இருந்தால், உடனடியாக மாற்றியமைக்க ஏற்பாடு செய்யலாம்.