தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
தேவராஜ்ய ஊழியப் பள்ளியில் பின்வரும் கேள்விகள் சிந்திக்கப்படும்.
1. “வெள்ளாட்டுக் குட்டியை அதின் தாயின் பாலிலே சமைக்க வேண்டாம்” என்ற கட்டளையிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? (யாத். 23:19) [w-TL06 4/1 பக். 31 பாரா. 1-5]
2. ஊரீம், தும்மீம் என்பவை யாவை, பூர்வ இஸ்ரவேலில் அவை எப்படிப் பயன்படுத்தப்பட்டன? (யாத். 28:30) [w-TL06 1/15 பக். 18; w-TL01 9/1 பக். 27]
3. மோசேயிடம் கடவுள் எப்படி “முகமுகமாய்” பேசினார்? (யாத். 33:11, 20) [w-TL04 3/15 பக். 27]
4. ஆசரிப்புக் கூடாரம் கட்டுவதற்கு வேண்டிய பொருள்களை இஸ்ரவேலர் தாராளமாகக் கொடுத்ததோடு தங்கள் திறமைகளையும் அதற்காகப் பயன்படுத்தியதிலிருந்து என்ன பாடங்களைக் கற்றுக்கொள்ளலாம்? (யாத். 35:5, 10) [w-TL99 11/1 பக். 31 பாரா. 1-2]
5. யாத்திராகமம் 40:28-ல் குறிப்பிடப்பட்டுள்ள தொங்குதிரை கடவுளுடைய பெரிய ஆன்மீக ஆலயத்தில் எதற்கு அடையாளமாக இருக்கிறது? [w-TL00 1/15 பக். 15 பாரா. 7-8]
6. பலிபீடத்தில் முழுமையாகச் செலுத்தப்பட்ட “சர்வாங்க தகனபலி” மூலம் இயேசுவுடைய பலியின் எந்த அம்சம் நம் கவனத்திற்குக் கொண்டுவரப்படுகிறது? (லேவி. 1:13) [w-TL04 5/15 பக். 21 பாரா 3]
7. ‘கொழுப்பு முழுவதும் யெகோவாவுடையது’ என்ற விஷயம் நம் மனதில் எதைப் பதிய வைக்கிறது? (லேவி. 3:16, 17) [w-TL04 5/15 பக். 22 பாரா 2]
8. இரத்தத்தை பலிபீடத்தின் அடியிலே ஊற்றுவதும் பல்வேறு பொருள்களின் மீது பூசுவதும் எதை அர்த்தப்படுத்துகிறது? (லேவி. 9:9) [w-TL04 5/15 பக். 22 பாரா 5]
9. லேவியராகமம் 12:8-லுள்ள விஷயம் இயேசுவின் பெற்றோர்களைப் பற்றி எதைப் புரிந்துகொள்ள நமக்கு உதவுகிறது, இதிலிருந்து நாம் என்ன பாடத்தைக் கற்றுக்கொள்ளலாம்? [w-TL98 12/15 பக். 6 பாரா 5]
10. இயேசுவுடைய மீட்புப் பலியின் பிரயோகம் இஸ்ரவேலின் வருடாந்தர பிராயச்சித்த நாளில் எவ்வாறு அடையாளமாகக் காட்டப்பட்டது? (லேவி. 16:11-16) [w-TL98 2/15 பக். 12 பாரா 2]