ஜூன் 29-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூன் 29-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: லேவியராகமம் 14-16
தேவராஜ்ய ஊழியப் பள்ளி மறுபார்வை
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: சிறந்த தோற்றம்—ஏன் முக்கியம். ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 131-134-ன் அடிப்படையில் சபையாருடன் கலந்தாலோசிப்பு.
10 நிமி: “எல்லாருக்கும்,” அதாவது பலதரப்பட்ட மக்களுக்கும் ஏற்றவாறு பைபிள் விஷயங்களைத் தேர்ந்தெடுத்துப் பேசுங்கள். (1 கொ. 9:22) சபையாருடன் கலந்தாலோசிப்பு. பின்வரும் கேள்விகளைக் கலந்தாலோசிக்கையில், சபையார் தங்களுடைய அனுபவங்களைச் சொல்லலாம். என்னென்ன பைபிள் விஷயங்கள் ஒரு குறிப்பிட்ட வயதினரை, பாலினத்தவரை, அல்லது மதத்தினரைக் கவர்ந்திருப்பதாக நீங்கள் கண்டிருக்கிறீர்கள்? பலதரப்பட்ட மக்களுக்குப் பிடித்தமான பைபிள் விஷயங்களைத் தேர்ந்தெடுப்பதற்கு நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தை நாம் எப்படிப் பயன்படுத்தலாம்? வீட்டுக்காரர் வேறு ஏதேனும் விஷயத்தில் ஆர்வம் காட்டினால், அதற்குப் பதிலளிக்கவும் நாம் எப்படித் தயாராய் இருக்கலாம்?
10 நிமி: ஜூலை, ஆகஸ்ட் மாதங்களுக்கான பிரசுர அளிப்பு. அந்தப் பிரசுரங்களிலுள்ள தலைப்புகளைப் பற்றிச் சுருக்கமாகச் சொல்லுங்கள். உங்களுடைய பிராந்தியத்திற்கு ஏற்ற அணுகுமுறைகளைப் பயன்படுத்தி இரண்டு அல்லது மூன்று நடிப்புகளுக்கு ஏற்பாடு செய்யுங்கள்.