உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • km 2/11 பக். 2
  • “என்னைப் பின்பற்றி வா”

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • “என்னைப் பின்பற்றி வா”
  • நம் ராஜ்ய ஊழியம்—2011
  • இதே தகவல்
  • ‘என்னைப் பின்பற்றி வாருங்கள்’
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-2009
  • “இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”
    என்னைப் பின்பற்றி வா
  • கடவுளுடைய சேவையை முழுமையாகச் செய்கிறீர்களா?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (படிப்பு)—2019
  • “என்னைப் பின்பற்றி வா”​—⁠என்ன அர்த்தத்தில்?
    என்னைப் பின்பற்றி வா
மேலும் பார்க்க
நம் ராஜ்ய ஊழியம்—2011
km 2/11 பக். 2

“என்னைப் பின்பற்றி வா”

1. வரவிருக்கும் மாதங்களில் சபை பைபிள் படிப்பின்போது நமக்கு என்ன வாய்ப்பு இருக்கிறது?

1 இயேசுவின் வாழ்க்கைச் சரிதையை விவரிக்கிற நான்கு சுவிசேஷப் பதிவுகளும், அவரை அப்படியே படம்பிடித்துக் காட்டுகின்றன. கிறிஸ்தவர்களாகிய நாம், “அவருடைய அடிச்சுவடுகளை நெருக்கமாகப் பின்பற்றி” வர வேண்டும் என்பதால், ஏப்ரல் 18-ல் துவங்கும் வாரத்திலிருந்து சபை பைபிள் படிப்பில் “என்னைப் பின்பற்றி வா” என்ற புத்தகத்தை நாம் படிக்கும்போது... நன்றாகத் தயாரித்துச் சென்று, கூர்ந்து கவனிக்க வேண்டும். (1 பே. 2:21; மாற். 10:21) ஊழியம் சம்பந்தமாக நம்மை ஊக்கப்படுத்துகிற குறிப்புகளை இயேசுவின் வாழ்க்கைச் சரிதையிலிருந்து முக்கியமாகச் சிந்தித்துப் பார்ப்பது பிரயோஜனமாக இருக்கும்.

2. சோதனைகளைச் சகிப்பதில் இயேசு வைத்த முன்மாதிரி நமக்கு எப்படி உதவும்?

2 இயேசுவின் முன்மாதிரி: வீட்டுக்கு வீடு ஊழியத்தின்போது யாராவது நற்செய்தியை உதறித்தள்ளி உங்களுக்குக் கடும் எதிர்ப்புத் தெரிவித்திருக்கிறார்களா? நாம் அப்படிப்பட்ட சூழ்நிலைகளை எதிர்ப்படும்போது, இயேசு சொன்ன முத்தான வார்த்தைகளை ஞாபகத்தில் வைக்க வேண்டும்: “அவர்கள் என்னைத் துன்புறுத்தியிருந்தால் உங்களையும் துன்புறுத்துவார்கள்.” (யோவா. 15:20) நமக்கு வருகிற எல்லா எதிர்ப்புகளையும் துன்புறுத்தலாக எடுத்துக்கொள்ளக் கூடாது என்பது உண்மைதான். என்றாலும், தம்முன் வைக்கப்பட்டிருந்த சந்தோஷத்தின் காரணமாக... தமக்கு வந்த சோதனைகளையும் கஷ்டங்களையும் இயேசுவால் சகித்துக்கொள்ள முடிந்தது. அவ்வாறே நாமும், யெகோவாவின் அங்கீகாரத்தைப் பெறுவதன்மீது நம் மனதை ஒருமுகப்படுத்தினோமானால்... நம் உத்தமத்திற்குக் கிடைக்கப்போகிற பரிசின்மீது கண்களைப் பதித்தோமானால்... ‘மனச்சோர்வடைந்து தளர்ந்துபோக மாட்டோம்.’ (எபி. 12:2, 3; நீதி. 27:11) ஊழியத்தில் நாம் தவறாமல் ஈடுபடுகையில்... கிறிஸ்து இயேசு நமக்குப் பக்கபலமாக இருப்பாரென்பது உறுதி!—மத். 28:20.

3. ஊழியத்தின்மீது இயேசுவின் மனப்பான்மையைக் காட்டுவதற்கு நாம் என்ன செய்யலாம்?

3 “இதற்காகவே அனுப்பப்பட்டிருக்கிறேன்”: நற்செய்தியை அறிவிக்கும் வேலைக்கே இயேசு முதலிடம் கொடுத்தார். (லூக். 4:43) அதில் அவர் முழுமூச்சுடன் மும்முரமாக ஈடுபட்டார். அதை அவர் அவசரமாகச் செய்யப்பட வேண்டிய வேலையாகக் கருதினார்; கடவுளுடைய அரசாங்கத்தைப் பற்றிப் பேசுவதற்கு எப்போதும் சந்தர்ப்பம் தேடினார். அப்படியானால், இயேசுவைப் பின்பற்றுகிற நாம் என்ன செய்ய வேண்டும்? அன்றாட அலுவல்கள் சம்பந்தமாக நாம் சந்திக்கிறவர்களில் யாரிடமாவது நற்செய்தியைச் சொல்ல வாய்ப்பு இருக்கிறதா? இவ்வாறு, நற்செய்தியை நாலா பக்கமும் பரப்புவதற்கு, கிறிஸ்துவினுடைய அன்பு நம்மை நெருக்கி ஏவுவதாக!—2 கொ. 5:14.

4. என்ன வழிகளில் நாம் ஊழியத்தை இன்னும் சிறப்பாகச் செய்யலாம்?

4 “அந்த மனிதர் பேசுவதுபோல் இதுவரை யாருமே பேசியதில்லை”: இயேசு கற்பித்த விதம், அதைக் கேட்டுக்கொண்டிருந்தவர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. (யோவா. 7:46; மத். 7:28, 29) கற்பிக்கும் விஷயத்தில் எது அவரை மற்றவர்களிலிருந்து வேறுபடுத்திக்காட்டியது? தாம் போதித்த சத்தியங்களை அவர் நெஞ்சார நேசித்தார், தம் போதனைகளைக் கேட்ட மக்களை அவர் நேசித்தார், திறம்பட போதிப்பதில் கரைகண்டவராய் இருந்தார். இந்தப் பெரிய போதகரைப் பின்பற்றினோமென்றால், நாம் ஊழியத்தை இன்னும் சிறப்பாகச் செய்யலாம்.—லூக். 6:40.

5. “என்னைப் பின்பற்றி வா” என்ற புத்தகத்தைப் படிக்கும்போது... நாம் எதை இலக்காக வைக்க வேண்டும்?

5 இவையெல்லாம் இயேசுவின் வாழ்க்கைச் சரிதையிலிருந்து நமக்குத் தெரியவந்த சில ரத்தினங்கள் மட்டுமே. இன்னும் என்னென்ன ரத்தினங்களை நீங்கள் கண்டுபிடிக்கலாம்? சபை பைபிள் படிப்பின்போது இயேசுவின் வாழ்க்கைச் சரிதையை அலசி ஆராய்கையில்... சொல்லிலும் செயலிலும் கிறிஸ்துவைப் பின்பற்றி, ‘அவருடைய அன்பை அறிந்துகொள்வதை’ இலக்காக வையுங்கள்.—எபே. 3:19.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்