டிசம்பர் 13-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 13-ல் துவங்கும் வாரம்
❑ சபை பைபிள் படிப்பு:
lv அதி. 16, பாரா. 9-14, பெட்டி 220-221
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: 2 நாளாகமம் 15-19
எண் 1: 2 நாளாகமம் 15:8-19
எண் 2: ஒருவர் இவ்வாறு சொன்னால்: “கிறிஸ்தவர்கள் இயேசுவுக்கே சாட்சிகளாயிருக்கும்படி கருதப்படுகிறார்கள், யெகோவாவுக்கு அல்ல” (rs பக். 208 பாரா 3)
எண் 3: யெகோவாவை வழிபடுவதில் நாம் எப்படி மதிப்பு மரியாதை காட்டலாம்?
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: 2011 தேவராஜ்ய ஊழியப் பள்ளி. பள்ளிக் கண்காணியின் பேச்சு. சபையின் தேவையை மனதில் வைத்து 2011 அட்டவணையிலிருந்து பேச்சைத் தயாரித்துக் கொடுங்கள். துணை ஆலோசகரின் பொறுப்பைக் குறிப்பிடுங்கள். தங்களுக்குக் கொடுக்கப்படுகிற பேச்சு நியமிப்புகளைக் கையாளுவதிலும், பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளில் பங்குகொள்வதிலும், ஊழியப் பள்ளி புத்தகத்திலிருந்து வாரா வாரம் கொடுக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்றுவதிலும் ஊக்கமாய் உழைக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “எல்லாச் சந்தர்ப்பங்களிலும் பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில். கொடுக்கப்பட்டுள்ள ஆலோசனைகளில் ஓரிரண்டை நடித்துக் காட்ட செய்யுங்கள்.