பிப்ரவரி 14-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
பிப்ரவரி 14-ல் துவங்கும் வாரம்
பாட்டு 3; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
w08 3/15 பக். 9-11 பாரா. 9-18 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: நெகேமியா 9–11 (10 நிமி.)
எண் 1: நெகேமியா 11:1-14 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: இயேசு பூமியிலிருந்தபோது கடவுளாய் இருந்தாரென மத்தேயு 1:23 குறிப்பாய்க் காட்டுகிறதா?—rs பக். 214 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: கடவுளுடைய அளவற்ற கருணை எவ்விதங்களில் வெளிக்காட்டப்படுகிறது—1 பே. 4:10 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
12 நிமி: முன்பின் தெரியாதவர்களோடு உரையாடுவது எப்படி. ஊழியப் பள்ளி புத்தகத்தில் பக்கங்கள் 62-64-ல் உள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. சந்தர்ப்ப சாட்சி கொடுக்கும்போதோ வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போதோ திறமையாய் உரையாடலை ஆரம்பிக்கிற பிரஸ்தாபி ஒருவரைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள்.
18 நிமி: “நினைவுநாள் அனுசரிப்புக் காலம்—கூடுதலாக ஊழியம் செய்வதற்கான சமயம்!” கேள்வி-பதில். இதை ஊழியக் கண்காணி நடத்துவார். இந்தக் கட்டுரையைக் கலந்தாலோசித்த பின்பு... மார்ச், ஏப்ரல், மே மாதங்களில் வெளி ஊழியக் கூட்டங்களுக்காகச் செய்யப்பட்டுள்ள ஏற்பாடுகளைச் சபையாருக்குத் தெரிவியுங்கள். இந்த ஒவ்வொரு மாதத்திலும், 50 மணிநேரம் எடுப்பதற்காகக் கொடுக்கப்பட்டிருந்த வெவ்வேறு அட்டவணைகளைக் குறிப்பிடுங்கள்; இப்படிக் குறிப்பிடுவது, தங்களுடைய சூழ்நிலைக்கு ஒத்துவருகிற அட்டவணையைத் தேர்ந்தெடுத்துக்கொள்ளச் சபையாருக்கு உதவியாக இருக்கும். கடந்த வருடம் நினைவுநாள் அனுசரிப்புக் காலத்தில்... நிறைய வேலைகளின் மத்தியிலோ உடல்நலக் குறைபாடுகளின் மத்தியிலோ துணைப் பயனியர் ஊழியம் செய்த இரண்டு அல்லது மூன்று பிரஸ்தாபிகளைப் பேட்டி காணுங்கள்.
பாட்டு 8; ஜெபம்