நவம்பர் 28-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
நவம்பர் 28-ல் துவங்கும் வாரம்
பாட்டு 50; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 11 பாரா. 15-21, பெட்டி பக். 117 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: உன்னதப்பாட்டு 1-8 (10 நிமி.)
எண் 1: உன்னதப்பாட்டு 1:1-17 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடைசி காலம் 1914-ல் ஆரம்பமானது என்று யெகோவாவின் சாட்சிகள் ஏன் சொல்கிறார்கள்?—rs பக். 239 பாரா 2-பக். 240 பாரா 1 (5 நிமி.)
எண் 3: நாம் மற்றவர்களின் மரியாதையை எவ்வாறு சம்பாதிக்கலாம்? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி, டிசம்பர் மாதத்தின் முதல் சனிக்கிழமையில் ஒரு பைபிள் படிப்பை எப்படித் துவங்குவது என்று நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள். அன்று ஊழியத்தில் கலந்துகொள்ளும்படி எல்லாரையும் ஊக்குவியுங்கள்.
15 நிமி: “நன்கு கற்பிக்க தேவை ஒரு முக்கியமான குணம்.” கேள்வி-பதில். சத்தியத்தில் முன்னேற பைபிள் படிப்பு நடத்தியவர் காட்டிய அன்பு எப்படி உதவியது என்று சொல்லும்படி சபையாரிடம் கேளுங்கள்.
10 நிமி: டிசம்பர் மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. பிராந்தியத்திலுள்ள மக்களின் ஆர்வத்தைத் தூண்டுகிற கட்டுரைகளை ஓரிரு நிமிடங்களுக்குச் சிந்தியுங்கள். பின்பு, காவற்கோபுரத்தின் அட்டைப்பட கட்டுரைகளை அறிமுகப்படுத்த ஆர்வத்தைத் தூண்டுகிற என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். இதேபோல் விழித்தெழு! பத்திரிகையின் அட்டைப்பட கட்டுரைகளுக்கும் கேளுங்கள். நேரம் இருந்தால் இரண்டு பத்திரிகையிலும் இன்னொரு கட்டுரையை எடுத்துக்கொண்டு அதேபோல் கேளுங்கள். ஒவ்வொரு இதழையும் எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 18; ஜெபம்