அறிவிப்புகள்
◼ பிரசுர அளிப்பு நவம்பர்: பைபிள்—ஒரு கண்ணோட்டம். இந்தச் சிற்றேட்டுடன் அல்லது இந்தச் சிற்றேட்டிற்குப் பதிலாக உங்கள் மொழியிலுள்ள 32 பக்க சிற்றேடு எதையாவது சேர்த்துக் கொடுப்பது பொருத்தமாக இருக்கும். அது உங்கள் பிராந்தியத்திலுள்ள மக்களின் ஆர்வத்தைத் தூண்டுவதாக இருக்க வேண்டும். டிசம்பர்: எக்காலத்திலும் வாழ்ந்தவருள் மிகப்பெரிய மனிதர். நீங்கள் போகும் வீட்டில் பிள்ளைகள் இருந்தால், பெரிய போதகரிடம் கற்றுக்கொள் அல்லது என்னுடைய பைபிள் கதை புத்தகத்தை அளியுங்கள். ஜனவரி: பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது? முதல் சந்திப்பிலேயே பைபிள் படிப்பை ஆரம்பிக்க முயற்சி செய்யுங்கள். வீட்டுக்காரரிடம் ஏற்கெனவே இந்தப் புத்தகம் இருந்தால் அல்லது பைபிள் படிப்பை ஏற்றுக்கொள்ள அவர் மறுத்தால் அவருடைய ஆர்வத்தைத் தூண்டுகிற பழைய பத்திரிகையையோ சிற்றேட்டையோ அளிக்கலாம். பிப்ரவரி: குடும்ப மகிழ்ச்சியின் இரகசியம்.
◼ உலகளாவிய வேலைக்காகக் கிளை அலுவலகத்திற்கு நேரடியாக அனுப்பப்படும் நன்கொடைகள் “The Watch Tower Bible and Tract Society of India” அல்லது “The Watch Tower” என்ற பெயரில் கொடுக்கப்பட வேண்டும். கிளை அலுவலகத்தின் நிதி சம்பந்தமான முகவரி: The Watch Tower Bible & Tract Society of India, 927/1, Addevishwanathapura, Rajanukunte, Yelahanka, Bangalore 560064.
◼ மீண்டும் கிடைக்கும் பிரசுரங்கள்:
யெகோவாவிடம் நெருங்கி வாருங்கள் —கன்னடம், தமிழ், தெலுங்கு, பஞ்சாபி, மலையாளம் மற்றும் ஹிந்தி
என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறியது) —மராத்தி
◼ கிடைக்கும் புதிய பிரசுரங்கள்:
என்னுடைய பைபிள் கதை புத்தகம் (சிறியது) —அசாமீஸ்
யெகோவாவின் சாட்சிகளுடைய காலண்டர் 2012 —பஞ்சாபி
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள் (பாடல் வரிகள் மட்டும்) —தமிழ்
யெகோவாவைப் புகழ்ந்து பாடுங்கள் (பெரிய எழுத்து பதிப்பு) —தமிழ்
சிடி-ராமில் உவாட்ச்டவர் லைப்ரரி—2011