டிசம்பர் 12-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
டிசம்பர் 12-ல் துவங்கும் வாரம்
பாட்டு 10; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
cf அதி. 12 பாரா. 8-14 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 6-10 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 6:1-13 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: பொல்லாதவர்களை அழிப்பதற்குமுன் இவ்வளவு அதிக காலம் செல்லும்படி கடவுள் ஏன் அனுமதித்தார்?—rs பக். 241 பாரா. 1-3 (5 நிமி.)
எண் 3: அன்பு ஏன் ஒருபோதும் ஒழியாது—1 கொ. 13:8; 1 யோ. 4:8 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: 2012-க்கான தேவராஜ்ய ஊழியப்பள்ளி. பள்ளிக் கண்காணி கொடுக்கும் பேச்சு. சபையின் தேவையை மனதில் வைத்து 2012 அட்டவணையிலிருந்து பேச்சைத் தயாரித்துக் கொடுங்கள். துணை ஆலோசகரின் பொறுப்பைக் குறிப்பிடுங்கள். தங்களுக்குக் கொடுக்கப்படுகிற பேச்சு நியமிப்புகளைச் செய்ய, பைபிள் வாசிப்புப் பகுதியிலிருந்து சிறப்புக் குறிப்புகளைப் பகிர்ந்துகொள்ள, ஊழியப் பள்ளி புத்தகத்திலிருந்து வாரா வாரம் கொடுக்கப்படும் ஆலோசனைகளைப் பின்பற்ற, ஊக்கமாய் உழைக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள்.
15 நிமி: “பிரசங்கிக்க எப்போதுமே தயாராயிருங்கள்.” கேள்வி-பதில். பாரா 2-ஐக் கலந்தாலோசிக்கும்போது சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதில் கைதேர்ந்த ஒரு பிரஸ்தாபியைச் சுருக்கமாகப் பேட்டி காணுங்கள். அவர் எப்படித் தயாரிக்கிறார் என்று கேளுங்கள். அவருக்குக் கிடைத்த ஒரு நல்ல அனுபவத்தைச் சொல்ல சொல்லுங்கள்.
பாட்டு 24; ஜெபம்