ஜனவரி 30-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜனவரி 30-ல் துவங்கும் வாரம்
பாட்டு 5; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
“பின்பற்றி வா” அதி. 14 பாரா. 17-21, பெட்டி பக். 149 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: ஏசாயா 43-46 (10 நிமி.)
எண் 1: ஏசாயா 45:15-25 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுளுடைய பொறுமை மீட்புக்கு வழிநடத்தும் விதம்—2 பே. 3:9, 15 (5 நிமி.)
எண் 3: சட்டப்பூர்வ தேவைகளின்படி திருமணம் செய்வது உண்மையில் முக்கியமா?—நியாயங்காட்டி பக். 248 பாரா 3-பக். 249 பாரா 2 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள். பக்கம் 4-ல் உள்ள அணுகுமுறையைப் பயன்படுத்தி, பிப்ரவரி மாதத்தின் முதல் சனிக்கிழமையில் ஒரு பைபிள் படிப்பை எப்படித் தொடங்குவது என நடித்துக் காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
10 நிமி: சோஷியல் நெட்வொர்க்—இதைப் பற்றி நான் என்ன தெரிந்திருக்க வேண்டும்?—பகுதி 1. ஜனவரி-மார்ச் 2012 விழித்தெழு!-வில் பக்கங்கள் 14-17-ல் உள்ள தகவலின் அடிப்படையில் பேச்சு.
20 நிமி: “எப்படிப்பட்ட சிகிச்சையை எடுத்துக்கொள்வதென தீர்மானித்துவிட்டீர்களா?” கேள்வி-பதில். முதல் பாராவைச் சிந்தித்த பிறகு, நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையிலுள்ள இந்த இரண்டு கேள்விகளையும் சிந்தியுங்கள்: (1) இரத்தத்தின் சிறு கூறுகள் என்றால் என்ன, அவற்றைப் பயன்படுத்துவதைக் குறித்து ஒவ்வொரு கிறிஸ்தவரும் ஏன் தீர்மானிக்க வேண்டும்? (2) என்னுடைய சொந்த இரத்தத்தை உபயோகித்து செய்யப்படும் சில சிகிச்சைகளைப் பற்றி ஏன் நானே தீர்மானிக்க வேண்டும்?
பாட்டு 43; ஜெபம்