எப்படிப்பட்ட சிகிச்சையை எடுத்துக்கொள்வதென தீர்மானித்துவிட்டீர்களா?
திடீரென்று ஆஸ்பத்திரியில் சேர்க்க வேண்டிய நிலைமை யாருக்கு வேண்டுமானாலும் வரலாம். (யாக். 4:14) விவேகமாக நடப்பவர்கள் முன்கூட்டியே அதற்குத் தயாராய் இருப்பார்கள். (நீதி. 22:3) இதுபோன்ற சூழ்நிலையில் எப்படிப்பட்ட சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதென நீங்கள் தீர்மானித்துவிட்டீர்களா? அதை எழுதி வைத்திருக்கிறீர்களா? இந்த விஷயத்தில், நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தில் “இரத்தத்தின் சிறு கூறுகளையும் என்னுடைய சொந்த இரத்தத்தைப் பயன்படுத்திச் செய்யப்படும் மருத்துவ முறைகளையும் பற்றி நான் என்ன தீர்மானம் எடுக்க வேண்டும்?” என்ற தலைப்பிலுள்ள கட்டுரை உங்களுக்கு உதவும்.
உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையை நீங்கள் வீட்டிலேயே பூர்த்தி செய்யலாம். ஆனால், இரண்டு சாட்சிகள் இல்லாமல் அதில் தேதியை எழுதவோ கையொப்பம் இடவோ கூடாது. ராஜ்ய மன்றத்தில் உங்கள் தொகுதிக் கண்காணி அல்லது வேறொரு மூப்பர் முன்னே கையொப்பம் போடலாம். “சாட்சிகளின் வாக்குமூலம்” [STATEMENT OF WITNESSES] என்ற தலைப்பின் கீழுள்ள தகவலின் அடிப்படையில் அந்த அட்டையில் கையொப்பம் போடுவது ரொம்ப முக்கியம். தொகுதிக் கண்காணிகள் தங்கள் தொகுதியில் உள்ள அனைத்துப் பிரஸ்தாபிகளும் இதைப் பூர்த்தி செய்துவிட்டார்களா என்று பார்த்துக்கொள்வார், யாருக்காவது உதவி தேவைப்பட்டால் உதவுவார். ஒவ்வொரு வருடமும் இந்த அட்டையைப் பூர்த்தி செய்ய வேண்டும். பிரஸ்தாபிகள் இந்த அட்டையை எப்போதும் வைத்திருக்க வேண்டும், ஜெராக்ஸ் காப்பியை அல்ல.
சில சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதா வேண்டாமா என்பது அவரவருடைய மனசாட்சியைச் சார்ந்தது. எனவே, அவசர சிகிச்சை தேவைப்படும் நிலை வரும்வரை காத்திருக்காமல் முன்னதாகவே தீர்மானித்துவிடுங்கள். ஆங்கில அட்டையில் இருக்கும் விஷயங்கள் உங்களுக்குச் சரியாகப் புரியவில்லை என்றால், ஆங்கிலம் நன்றாகத் தெரிந்த ஏதாவது ஒரு பிரஸ்தாபியிடம் உதவி கேளுங்கள், அவர் உங்களுக்கு அதிலுள்ள விஷயங்களை விளக்கி சொல்வார். மற்றவர்கள் பூர்த்தி செய்திருக்கும் விஷயங்களை அப்படியே காப்பி அடிக்காமல், ஒவ்வொரு பிரஸ்தாபியும் நன்றாக ஜெபம் செய்து சொந்தமாகத் தீர்மானம் எடுக்க வேண்டும். ‘கடவுளது அன்பு’ புத்தகத்தில் அதிகாரம் 7-ஐயும், அதில் குறிப்பிடப்பட்டுள்ள பிரசுரத்தையும் வசனங்களையும், நவம்பர் 2006 நம் ராஜ்ய ஊழியத்தின் உட்சேர்க்கையையும் பாருங்கள்; சரியான தீர்மானம் எடுக்க இவை உங்களுக்கு உதவும். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்த பிரஸ்தாபியாக இருந்தால், உடல்நல பராமரிப்பு முன்கோரிக்கை அட்டையைப் பூர்த்தி செய்து அதை எப்போதும் உங்களுடன் வைத்திருங்கள்.
[பக்கம் 3-ன் சிறு குறிப்பு]
எப்படிப்பட்ட சிகிச்சை முறைகளை ஏற்றுக்கொள்வதென நீங்கள் தீர்மானித்துவிட்டீர்களா? அதை எழுதி வைத்திருக்கிறீர்களா?