ஜூலை 9-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஜூலை 9-ல் துவங்கும் வாரம்
பாட்டு 39; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 4, பெட்டி பக். 33 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 11-14 (10 நிமி.)
எண் 1: எசேக்கியேல் 11:14-25 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: யோவான் 6:53-57-ன் அர்த்தம் என்ன?—நியாயங்காட்டி பக். 263 பாரா. 3-4 (5 நிமி.)
எண் 3: மனத்தாழ்மை என்றால் என்ன, இக்குணம் நமக்கு எவ்வாறு உதவும்?—செப். 2:3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
15 நிமி: மறுசந்திப்புகளைத் திறம்பட செய்யுங்கள். பின்வரும் கேள்விகளின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு: (1) ஒவ்வொரு மறுசந்திப்புக்கும் ஒரு இலக்கு வைப்பது ஏன் நல்லது? (2) முதல் ஓரிரு சந்திப்புகளின்போது எவ்வளவு நேரம் எடுத்துக்கொள்ளலாம்? (3) மறுசந்திப்பின்போது நம்மை எப்படி அறிமுகப்படுத்தலாம்? (4) விருப்பமில்லை என்று ஒருவர் சொன்னால் நாம் என்ன சொல்லலாம்? (5) ஒரு துண்டுப்பிரதியை, சிற்றேட்டை அல்லது பத்திரிகைகளைப் பெற்றுக்கொண்டவரை மீண்டும் சந்திக்கும்போது பைபிள் கற்பிக்கிறது புத்தகத்தை எப்படி, எப்போது அறிமுகப்படுத்தலாம்? (6) மறுசந்திப்பில் பேசுவதற்கான தகவல் எங்கே கிடைக்கும்? (7) ஊழியத்தில் சந்தித்தவரை மறுபடியும் வீட்டில் சந்திக்க முடியவில்லை என்றால், அவருடைய ஆர்வத்தை வளர்க்க என்ன செய்யலாம்? (8) மறுசந்திப்புகள் செய்யும்போது அனுபவமுள்ள பிரஸ்தாபிகள் மற்ற பிரஸ்தாபிகளுக்கு எப்படிப் பயிற்சி அளிக்கலாம்?
15 நிமி: “நீங்கள் ‘சந்தோஷப்பட’ காரணம்.” கேள்வி-பதில். பாரா 4-ஐச் சிந்திக்கையில், ஒவ்வொரு மாதமும் ஊழிய அறிக்கையைக் கொடுக்கும்படி எல்லாரையும் உற்சாகப்படுத்துங்கள். ஒழுங்கமைக்கப்பட்டிருத்தல் புத்தகத்தில் பக்கங்கள் 88-90-லிருந்து பொருத்தமான குறிப்புகளை மறுபார்வை செய்யுங்கள்.
பாட்டு 9; ஜெபம்