ஆகஸ்ட் 6-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
ஆகஸ்ட் 6-ல் துவங்கும் வாரம்
பாட்டு 63; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 5 பாரா. 9-16 பெட்டி பக். 41-42 (25 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எசேக்கியேல் 24-27 (10 நிமி.)
எண் 1: எசேக்கியேல் 24:15-27 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: எந்தச் சூழ்நிலைகளில் போர் செய்யும்படி இஸ்ரவேலர்களைக் கடவுள் அனுமதித்தார்?—நியாயங்காட்டி பக். 271 பாரா 5–பக். 273 பாரா 1 (5 நிமி.)
எண் 3: எசேக்கியேல் 18:20-ம், யாத்திராகமம் 20:5-ம் ஒன்றுக்கொன்று முரண்படுகிறதா? (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
5 நிமி: அறிவிப்புகள்.
10 நிமி: விடுமுறைக்குப் பின் ஸ்கூலுக்கு போக தயாரா? கலந்தாலோசிப்பு. பள்ளியில் கிறிஸ்தவ இளைஞர்கள் எதிர்ப்படும் சில பிரச்சினைகளைச் சொல்லுமாறு சபையாரைக் கேளுங்கள். பிரசுரங்கள், டிவிடி போன்றவற்றை குடும்ப வழிபாட்டில் பயன்படுத்தி, பள்ளியில் பிரச்சினைகளைச் சமாளிக்கவும் தங்கள் நம்பிக்கையை குறித்துப் பேசவும் பிள்ளைகளை எப்படித் தயார்ப்படுத்தலாம் என விளக்குங்கள். (1 பே. 3:15) ஓரிரண்டு சூழ்நிலையைத் தேர்ந்தெடுத்து, அதைச் சமாளிக்க நம் பிரசுரங்கள் எப்படி உதவும் எனக் காட்டுங்கள். பள்ளிப் பருவத்தில் சாட்சிக் கொடுத்த அனுபவங்களைச் சொல்லுமாறு சபையாரைக் கேளுங்கள்.
15 நிமி: சபைத் தேவைகள்.
5 நிமி: ஆகஸ்ட் மாதத்தில் பத்திரிகைகளை அளிப்பது எப்படி? கலந்தாலோசிப்பு. இந்த மாத விழித்தெழு! மக்களை எப்படிக் கவருகிறது என்பதை 30-லிருந்து 60 வினாடிகளுக்கு விளக்குங்கள். பிறகு அட்டைப்பட கட்டுரைகளை எடுத்துக்கொண்டு, என்ன கேள்வியைக் கேட்கலாம், எந்த வசனத்தை வாசிக்கலாம் என்று சபையாரிடம் கேளுங்கள். பத்திரிகையை எப்படி அளிக்கலாம் என்பதை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
பாட்டு 97; ஜெபம்