அக்டோபர் 15-ல் துவங்கும் வாரத்திற்கான அட்டவணை
அக்டோபர் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 33; ஜெபம்
❑ சபை பைபிள் படிப்பு:
‘சாட்சி கொடுங்கள்’ அதி. 8 பாரா. 17-24, பெட்டி பக். 67 (30 நிமி.)
❑ தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: தானியேல் 10-12 (10 நிமி.)
எண் 1: தானியேல் 11:15-27 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கிறிஸ்தவர்கள் ஏன் பழிவாங்கப் பார்ப்பதில்லை?—ரோ. 12:18-21 (5 நிமி.)
எண் 3: கடவுளின் உண்மையுள்ள ஊழியர்கள், கிறிஸ்தவமண்டலத்தின் பல்வேறு சர்ச்சுகளில் இருக்கிறார்களா?—நியாயங்காட்டி பக். 283 பாரா. 1-3 (5 நிமி.)
❑ ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஒருவர் இவ்வாறு சொன்னால், ‘எனக்கு அதில் அக்கறையில்லை.’ நியாயங்காட்டிப் பேசுதல் புத்தகத்தில் பக்கம் 16, பாரா 1-லிருந்து பக்கம் 18 பாரா 3 வரையுள்ள தகவலின் அடிப்படையில் கலந்தாலோசிப்பு. கொடுக்கப்பட்டிருக்கும் சில அணுகுமுறைகளையும், உங்கள் பிராந்தியத்தில் பலன் தந்த வேறு அணுகுமுறைகளையும் கலந்தாலோசியுங்கள். கொடுக்கப்பட்டுள்ள இரண்டு குறிப்புகளை நடித்துக்காட்ட ஏற்பாடு செய்யுங்கள்.
20 நிமி: “நற்செய்தியை அறிவிக்க துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்துங்கள்.” கேள்வி-பதில். பாரா 5-ஐ கலந்தாலோசிக்கும்போது, நவம்பர் மாதத்தில் கொடுக்கப்போகும் துண்டுப்பிரதிகளைச் சுருக்கமாக மறுபார்வை செய்து ஒரு நடிப்புக்கு ஏற்பாடு செய்யுங்கள். பாரா 7-ஐ கலந்தாலோசிக்கும்போது, துண்டுப்பிரதிகளைப் பயன்படுத்தி சந்தர்ப்ப சாட்சி கொடுப்பதுபோல் நடித்து காட்டுங்கள்.
பாட்டு 97; ஜெபம்