செப்டம்பர் 8-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
செப்டம்பர் 8-ல் துவங்கும் வாரம்
பாட்டு 87; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 3, 4 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 22-25 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 22:36–23:10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: சாத்தான், ஒருவருக்குள் இருக்கும் தீமையான குணம் அல்ல—நியாயங்காட்டி பக். 362 பாரா 4-பக். 363 பாரா 1 (5 நிமி.)
எண் 3: முதல் வானவில்—பைபிள் கதைகள் கதை 11 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
10 நிமி: ஊழியத்தில் பண்பாக நடந்துகொள்ளுங்கள். (2 கொ. 6:3) பின்வரும் கேள்விகளைப் பயன்படுத்தி சபையாருடன் கலந்தாலோசியுங்கள். (1) பிரசங்கிக்கையில் பண்பாக நடந்துகொள்வது ஏன் முக்கியம்? (2) பின்வரும் சூழ்நிலையில் நாம் எப்படிப் பண்பாக நடந்துகொள்ளலாம்? (அ) நம்முடைய தொகுதியில் உள்ளவர்கள் எல்லாரும் பிராந்தியத்திற்கு வந்துசேரும்போது (ஆ) ஒரு வீட்டிலிருந்து அடுத்த வீட்டிற்கு நடந்து செல்லும்போது (இ) வாசலில் நிற்கும்போது (ஈ) நம்முடன் இருப்பவர் வீட்டுக்காரரிடம் பேசும்போது (உ) வீட்டுக்காரர் பேசும்போது (ஊ) வீட்டுக்காரர் வேலையாக இருக்கும்போது அல்லது சீதோஷ்ணம் மோசமாக இருக்கும்போது (எ) வீட்டுக்காரர் கோபமாக இருக்கும்போது.
10 நிமி: தேவையுள்ள இடங்களுக்குப் போக முடியுமா? காவற்கோபுரம், அக்டோபர் 15, 1999 பக்கம் 23-27-லுள்ள கட்டுரையின் அடிப்படையில் ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. இதிலுள்ள நியமங்களைச் சிறப்பித்துக் காட்டுங்கள். தேவை அதிகமுள்ள இடத்தில் சேவை செய்ய விருப்பமுள்ள அல்லது ஏற்கெனவே சேவை செய்கிற பயனியரை முடிந்தால் பேட்டி எடுங்கள்.
10 நிமி: “ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... மறுசந்திப்பிற்கு அடித்தளம் போடுங்கள்.” கலந்தாலோசிப்பு. தனக்குத்தானே பேசிக்கொள்ளும் ஒரு நடிப்பிற்கு ஏற்பாடு செய்யுங்கள். ஒரு பிரஸ்தாபி ஊழியத்திற்காகத் தயாரிக்கிறார்; வீட்டுக்காரர் பத்திரிகைகளை வாங்கிக்கொண்டால் மறுசந்திப்பு செய்வதற்குக் கடைசியில் என்ன கேள்வி கேட்கலாம் என்பதை யோசித்துப் பார்க்கிறார்.
பாட்டு 68; ஜெபம்