ஊழியத்தில் திறமைகளை மெருகூட்ட... மறுசந்திப்பிற்கு அடித்தளம் போடுங்கள்
ஏன் முக்கியம்: நாம் விதைத்த சத்திய விதைக்குத் தண்ணீர் ஊற்ற வேண்டுமென்றால், ஆர்வம் காட்டும் நபரை மறுபடியும் சந்திக்க வேண்டும். (1 கொ. 3:6) இதற்கு, வீட்டுக்காரரிடம் பேசிவிட்டு கிளம்பும்முன் மறுசந்திப்பிற்கான அடித்தளத்தைப் போடுங்கள். இதை எப்படிச் செய்வது? வீட்டுக்காரரை மறுபடியும் எப்போது சந்திக்க முடியும் என்று கேளுங்கள்; மறுசந்திப்பிற்காக ஒரு கேள்வியையும் கேளுங்கள். அப்போது, வீட்டுக்காரர் நம்மை மறுபடியும் சந்திப்பதற்கு ஆவலாக இருப்பார். அதோடு, அவரிடம் கேட்ட கேள்விக்கு நாம் கொடுத்த பத்திரிகையில் பதில் இருந்தால் அதைப் படித்துப் பார்க்கவும் அவர் விரும்புவார். இப்படி அடித்தளம் போடுவது மறுசந்திப்பு செய்ய உதவியாக இருக்கும். ஏனென்றால், எதைப் பற்றி பேசப் போகிறோம் என்பது நமக்கும் தெரியும், வீட்டுக்காரருக்கும் தெரியும். மறுசந்திப்பு செய்யும்போது, ‘போனமுறை வந்தப்போ உங்ககிட்ட ஒரு கேள்விக்கு பதில் சொல்றேன்னு சொல்லியிருந்தேன்ல அதை பத்திதான் இன்னைக்கு பேச வந்திருக்கேன்’ என்று சொல்லி பேச்சை ஆரம்பிக்கலாம்.
இந்த மாதம் முயன்று பாருங்கள்:
ஊழியத்திற்காகத் தயாரிக்கும்போது, மறுசந்திப்பிற்கான ஒரு கேள்வியையும் யோசித்துப் பாருங்கள். நீங்கள் யோசித்துவைத்த கேள்வியை உங்களோடு ஊழியம் செய்பவரிடம் சொல்லுங்கள்.