செப்டம்பர் 15-ல் துவங்கும் வாரத்தின் அட்டவணை
செப்டம்பர் 15-ல் துவங்கும் வாரம்
பாட்டு 81; ஜெபம்
சபை பைபிள் படிப்பு:
பைபிள் கதைகள் கதை 5, 6 (30 நிமி.)
தேவராஜ்ய ஊழியப் பள்ளி:
பைபிள் வாசிப்பு: எண்ணாகமம் 26-29 (10 நிமி.)
எண் 1: எண்ணாகமம் 27:15–28:10 (4 நிமிடத்திற்குள்)
எண் 2: கடவுள் பிசாசைப் படைக்கவில்லை—நியாயங்காட்டி பக். 363 பாரா 2 (5 நிமி.)
எண் 3: ஆதாம்—பாவத்தினால் ஏற்படும் படுமோசமான பின்விளைவுகள்—ஆதி. 3:1-23; யோவா. 3:16, 18; ரோ. 5:12, 14; 6:23; 1 கொ. 15:22, 45, 47 (5 நிமி.)
ஊழியக் கூட்டம்:
15 நிமி: நாம் என்ன சாதித்தோம்? சபையின் ஊழியக் கண்காணி கொடுக்கும் பேச்சு. சென்ற ஊழிய ஆண்டில் சபை செய்த விஷயங்களைப் பற்றி சொல்லுங்கள். விசேஷ விநியோகிப்பைப் பற்றியும் சொல்லுங்கள். சபையார் செய்த நல்ல விஷயங்களைப் பற்றி சொல்லி அவர்களைப் பாராட்டுங்கள். ஆகஸ்ட் மாதத்தில் கிடைத்த நல்ல அனுபவங்களைப் பற்றி சொல்ல சொல்லுங்கள், ஊழியத்தில் அதிகம் செய்த ஒரு பிரஸ்தாபியைப் பேட்டி எடுங்கள். வரும் ஊழிய ஆண்டில் ஊழியத்தில் சபையார் முன்னேற்றம் செய்ய வேண்டிய ஓரிரு குறிப்புகளைச் சொல்லுங்கள். அதற்கு உதவும் நடைமுறையான ஆலோசனைகளைக் கொடுங்கள்.
15 நிமி: “தீர்க்கதரிசிகள் நமக்கு முன்மாதிரிகள்—நாகூம்.” கேள்வி-பதில்.
பாட்டு 46; ஜெபம்