ஜனவரி 30–பிப்ரவரி 5
ஏசாயா 43–46
பாட்டு 33; ஜெபம்
ஆரம்ப குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவா சொன்னதை நிறைவேற்றுவார்”: (10 நிமி.)
ஏசா 44:26-28—எருசலேமும் அதன் ஆலயமும் திரும்ப கட்டப்படும் என்றும் கோரேசு என்பவர் பாபிலோனை கைப்பற்றுவார் என்றும் யெகோவா சொல்லியிருந்தார் (ip-2 பக். 71-72 பாரா. 22-23)
ஏசா 45:1, 2—பாபிலோன் எப்படிக் கைப்பற்றப்படும் என்பதை யெகோவா சொல்லியிருந்தார் (ip-2 பக். 77-78 பாரா. 4-6)
ஏசா 45:3-6—பாபிலோனைக் கைப்பற்ற ஏன் கோரேசுவைப் பயன்படுத்தினார் என்றும் யெகோவா சொல்லியிருந்தார் (ip-2 பக். 79-80 பாரா. 8-10)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
ஏசா 43:10-12—இஸ்ரவேலர்கள் யெகோவாவுக்கு எப்படி சாட்சிகளாக இருந்தார்கள்? (w14 11/15 பக். 21-22 பாரா. 14-16)
ஏசா 43:25—என்ன முக்கியமான காரணத்துக்காக யெகோவா நம்முடைய பாவங்களை மன்னிக்கிறார்? (ip-2 பக். 60 பாரா 24)
ஏசாயா 43 முதல் 46 வரை உள்ள அதிகாரங்களில் இருந்து யெகோவாவைப் பற்றி நான் என்ன கற்றுக்கொண்டேன்?
இந்த அதிகாரங்களில் இருக்கும் எந்தக் குறிப்புகளைப் பயன்படுத்தி ஊழியத்தில் சந்திக்கும் மக்களிடம் பேசுவேன்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) ஏசா 46:1-13
ஊழியத்தை நன்றாக செய்யுங்கள்
முதல் சந்திப்பு: (2 நிமிடத்திற்குள்) kt துண்டுப்பிரதி, பக். 1—உங்களோடு வேலை செய்கிறவர்களிடம் அல்லது பள்ளியில் படிப்பவர்களிடம் சந்தர்ப்ப சாட்சிக் கொடுங்கள்.
மறுசந்திப்பு: (4 நிமிடத்திற்குள்) kt துண்டுப்பிரதி—பைபிளை ஏன் படிக்க வேண்டும்? என்ற வீடியோவையும் காட்டுங்கள்.
பைபிள் படிப்பு: (6 நிமிடத்திற்குள்) bh பக். 108 பாரா. 8-9
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
பைபிளை நம்பலாமா?: (15 நிமி.) வீடியோவைக் காட்டுங்கள். (வீடியோக்கள் > நம் கூட்டங்களும் ஊழியமும் என்ற தலைப்பில் பாருங்கள்). சந்தர்ப்ப சாட்சிக் கொடுக்கும்போது... பொது ஊழியம் செய்யும்போது... வீட்டுக்கு வீடு ஊழியம் செய்யும்போது... இந்த வீடியோவை எப்படிப் பயன்படுத்தலாம் என்று கேளுங்கள். இந்த வீடியோவைப் பயன்படுத்தியதால் கிடைத்த நல்ல அனுபவங்களையும் கேளுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) ia அதி. 18 பாரா. 14-21, ‘சிந்திக்க’ பக். 161
இன்று படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 121; ஜெபம்