ஜனவரி 7-13
அப்போஸ்தலர் 21-22
பாட்டு 33; ஜெபம்
ஆரம்பக் குறிப்புகள் (3 நிமிடத்திற்குள்)
பைபிளில் இருக்கும் புதையல்கள்
“யெகோவாவுடைய விருப்பப்படி நடக்கட்டும்”: (10 நிமி.)
அப் 21:8-12—எருசலேமுக்குப் போக வேண்டாம் என்று சக கிறிஸ்தவர்கள் பவுலைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள்; ஏனென்றால், அங்கே அவருக்கு ஆபத்து காத்திருந்தது (bt பக். 177-178 பாரா. 15-16)
அப் 21:13—யெகோவாவின் விருப்பத்தைச் செய்வதில் பவுல் உறுதியாக இருந்தார் (bt பக். 178 பாரா 17)
அப் 21:14—பவுல் உறுதியாக இருந்ததால், சகோதரர்கள் அவரைத் தடுக்கவில்லை (bt பக். 178 பாரா 18)
புதையல்களைத் தோண்டி எடுங்கள்: (8 நிமி.)
அப் 21:23, 24—கிறிஸ்தவர்கள் இனிமேலும் திருச்சட்டத்தின் கீழ் இல்லாதபோதிலும் எருசலேமிலிருந்த மூப்பர்கள் பவுலுக்கு ஏன் இந்த ஆலோசனையைத் தந்தார்கள்? (bt பக். 184-185 பாரா. 10-12)
அப் 22:16—பவுலின் பாவங்கள் எப்படி மன்னிக்கப்பட்டன? (“அவருடைய பெயரில் நம்பிக்கை வை, அப்போது உன் பாவங்கள் மன்னிக்கப்படும்” என்ற அப் 22:16-க்கான nwtsty ஆராய்ச்சிக் குறிப்பு)
அப்போஸ்தலர் 21, 22 அதிகாரங்களிலிருந்து யெகோவாவைப் பற்றி என்ன கற்றுக்கொண்டீர்கள்?
இந்த அதிகாரங்களிலிருந்து வேறு என்ன புதையல்களைத் தோண்டி எடுத்தீர்கள்?
பைபிள் வாசிப்பு: (4 நிமிடத்திற்குள்) அப் 21:1-19 (th படிப்பு 5)a
ஊழியத்தை நன்றாகச் செய்யுங்கள்
வாசிப்பதிலும் கற்றுக்கொடுப்பதிலும் முழு மூச்சோடு ஈடுபடுங்கள்: (10 நிமி.) கலந்துபேசுங்கள். பொருத்தமான முன்னுரை என்ற வீடியோவைக் காட்டிவிட்டு, கற்றுக்கொடுப்பது என்ற சிற்றேட்டில் இருக்கிற முதல் பாடத்தைக் கலந்துபேசுங்கள்.
பேச்சு: (5 நிமிடத்திற்குள்) w10-E 2/1 பக். 13 பாரா 2-பக். 14 பாரா 2—பொருள்: கிறிஸ்தவர்கள் வாராந்தர ஓய்வு நாளைக் கடைப்பிடிக்க வேண்டுமா? (th படிப்பு 1)b
கிறிஸ்தவர்களாக வாழுங்கள்
“யெகோவா சொல்லிக்கொடுத்தபடி பிள்ளைகளை வளர்த்தோம்”: (15 நிமி.) கலந்துபேசுங்கள். வீடியோவைக் காட்டுங்கள்.
சபை பைபிள் படிப்பு: (30 நிமி.) kr அதி. 13 பாரா. 11-23
இந்த வாரம் படித்ததும் அடுத்த வாரம் படிக்கப்போவதும் (3 நிமி.)
பாட்டு 131; ஜெபம்