பைபிளில் இருக்கும் புதையல்கள் | அப்போஸ்தலர் 21-22
“யெகோவாவுடைய விருப்பப்படி நடக்கட்டும்”
எருசலேமில் தனக்கு ஆபத்து காத்திருந்தாலும் கடவுளுடைய சக்திதான் தன்னை அங்கே வழிநடத்துகிறது என்பதை பவுல் புரிந்துவைத்திருந்தார். (அப் 20:22, 23) அவர்மேல் அக்கறையாக இருந்த கிறிஸ்தவர்கள் சிலர், அங்கே போக வேண்டாம் என்று அவரைக் கெஞ்சிக் கேட்டுக்கொண்டார்கள். அதற்கு அவர், “ஏன் இப்படி அழுது என்னை மனம்தளர வைக்கிறீர்கள்?” என்று கேட்டார். (அப் 21:13) யெகோவாவுடைய சேவையில் அதிகமாக ஈடுபடுவதற்காக யாராவது தியாகங்கள் செய்யும்போது, நாம் ஒருபோதும் அவர்களுடைய மனதை மாற்றுவதில்லை.