பைபிளில் இருக்கும் புதையல்கள் | வெளிப்படுத்துதல் 4-6
நான்கு குதிரைவீரர்களின் சவாரி
இயேசு பரலோகத்தில் போர் செய்து சாத்தானையும் அவனோடு சேர்ந்த பேய்களையும் இந்தப் பூமிக்குத் தள்ளியபோது “ஜெயிக்கிறவராகப் புறப்பட்டுப் போனார்.” இந்தக் கடைசி நாட்களில் தன்னுடைய ஊழியர்களுக்கு உதவியும் பாதுகாப்பும் தருவதன் மூலம் அவர்கள் சார்பாக அவர் தொடர்ந்து ஜெயித்துவருகிறார். அர்மகெதோனில் மற்ற மூன்று குதிரைவீரர்களின் சவாரிக்கு முடிவுகட்டுவதன் மூலமும், அவர்கள் ஏற்படுத்திய சேதங்களை அதன்பின் சரிசெய்வதன் மூலமும் அவர் ‘ஜெயித்து முடிப்பார்.’