வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்கு தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2023 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
மே 1-7
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 17-19
“யெகோவா பார்ப்பதுபோல் மற்றவர்களை பாருங்கள்”
எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?
7 ஆசாவின் மகன் யோசபாத் ராஜாவின் உதாரணத்தைப் பற்றி இப்போது பார்க்கலாம். யெகோவாவுக்குப் பிடித்த நிறைய நல்ல குணங்கள் அவரிடம் இருந்தன. அவர் யெகோவாவை நம்பியபோது, நிறைய நல்ல விஷயங்களைச் செய்தார். அதே சமயத்தில், தன்னுடைய வாழ்க்கையில் சில மோசமான தீர்மானங்களையும் எடுத்தார். உதாரணத்துக்கு, பொல்லாத ராஜாவான ஆகாபின் மகளை தன்னுடைய மகனுக்குக் கல்யாணம் செய்து வைத்தார். பிறகு, மிகாயா தீர்க்கதரிசி கொடுத்த எச்சரிக்கையையும் மீறி சீரியர்களோடு போர் செய்வதற்காக ஆகாபோடு கூட்டுச் சேர்ந்தார். அந்தப் போரில், சீரியர்கள் யோசபாத்தைத் தாக்கினார்கள், அவரைக் கொலை செய்யவும் முயற்சி செய்தார்கள். (2 நா. 18:1-32) பிறகு, அவர் எருசலேமுக்குத் திரும்பியபோது, தீர்க்கதரிசியான யெகூ அவரிடம் இப்படிக் கேட்டார்: “மோசமான ஆட்களுக்கு நீங்கள் உதவி செய்தது சரியா? யெகோவாவை வெறுக்கிற ஆட்கள்மீது அன்பு காட்டியது சரியா?”—2 நாளாகமம் 19:1-3-ஐ வாசியுங்கள்.
யெகோவாவின் அன்பை ஆழமாக யோசித்துப் பாருங்கள்!
8 நம்மேல் யெகோவா நிறைய அன்பு வைத்திருக்கிறார். அதை நாம் புரிந்துகொள்ள வேண்டும் என்று ஆசைப்படுகிறார். நம்மிடம் இருக்கும் குறைகளை மட்டும் பார்க்காமல் நம்மிடம் இருக்கும் நல்லதையும் பார்க்கிறார். (2 நா. 16:9) இதற்கு ஒரு உதாரணத்தை கவனியுங்கள். யூதாவை ஆட்சி செய்த யோசபாத் ராஜா ஒரு தவறான தீர்மானம் எடுத்தார். கீலேயாத்திலுள்ள ராமோத்தில், சீரியர்களை எதிர்த்து சண்டைபோட இஸ்ரவேலின் ராஜா ஆகாபோடு சேர்ந்துகொண்டார். அவர்கள் போரில் ஜெயிப்பார்கள் என்று 400 பொய் தீர்க்கதரிசிகள் ஆகாபிடம் சொன்னார்கள். ஆனால், அவர்கள் போரில் ஜெயிக்க மாட்டார்கள் என்று யெகோவாவின் தீர்க்கதரிசி மிகாயா யோசபாத்திடமும் ஆகாபிடமும் சொன்னார். போரில் ஆகாப் இறந்துவிட்டார். ஆனால், யோசபாத் உயிர் தப்பினார். அவர் செய்த தவறை புரிய வைக்க யெகோவா யெகூவை அனுப்பினார். அவருடைய தவறை யெகூ சுட்டிக்காட்டினாலும், “நன்மையான காரியங்கள் உம்மிடத்திலே காணப்பட்டது” என்று அவர் சொன்னார். (2 நா. 18:4, 5, 18-22, 33, 34; 19:1-3) யோசபாத்திடம் யெகோவா என்ன நல்ல விஷயத்தைப் பார்த்தார்?
9 பல வருடங்களுக்கு முன்பு, மக்கள் எல்லாரும் யெகோவாவின் சட்டத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்று யோசபாத் நினைத்தார். அதற்காக பிரபுக்கள், லேவியர்கள், ஆசாரியர்கள் எல்லாரையும் யூதாவில் இருந்த எல்லா நகரங்களுக்கும் அனுப்பினார். யெகோவாவின் சட்டத்தை மக்களுக்குக் கற்றுக்கொடுக்க சொன்னார். இதனால் மற்ற நாடுகளில் இருந்தவர்களும் யெகோவாவைப் பற்றி தெரிந்துகொண்டார்கள். (2 நா. 17:3-10) சீரியர்களோடு போர் செய்யும் விஷயத்தில் யோசபாத் ஒரு தவறான தீர்மானம் எடுத்தாலும் பல வருடங்களுக்கு முன்பு அவர் செய்த இந்த நல்ல விஷயத்தை யெகோவா மறக்கவில்லை. நாமும் சில நேரங்களில் தவறு செய்வதால் இந்த உதாரணத்தைப் படிப்பது நமக்கு ஆறுதலாக இருக்கிறது. யெகோவாவை சேவிக்க நம்மால் முடிந்த மிகச் சிறந்ததை செய்யும்போது, யெகோவா நம்மை எப்போதும் நேசிப்பார். நாம் செய்யும் நல்ல விஷயங்களை மறக்கவே மாட்டார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
10 ஆசாவின் மகன் யோசபாத், “தன்னுடைய அப்பாவான ஆசாவின் வழியில் நடந்துவந்தார்.” (2 நா. 20:31, 32) மக்கள் தொடர்ந்து யெகோவாவை வணங்குவதற்கு, தன்னுடைய அப்பாவைப் போலவே யோசபாத்தும் அவர்களை உற்சாகப்படுத்தினார். ‘யெகோவாவின் திருச்சட்ட புத்தகத்திலிருந்து’ மக்களுக்குக் கற்றுக்கொடுப்பதற்கு, அவர் யூதா நகரங்களுக்கு ஆட்களை அனுப்பினார். (2 நா. 17:7-10) மக்கள் ‘யெகோவாவைத் திரும்பவும் வழிபட ஆரம்பிக்க’ வேண்டும் என்பதற்காக இஸ்ரவேலின் வடக்கு ராஜ்யம் வரை, அதாவது, எப்பிராயீம் மலைப்பகுதிவரை போனார். (2 நா. 19:4) யோசபாத் ராஜா, ‘யெகோவாவை முழு இதயத்தோடு வணங்கினார்.’—2 நா. 22:9.
11 இன்று, உலகம் முழுவதும் இருக்கிற மக்கள் தன்னைப் பற்றி கற்றுக்கொள்ள வேண்டும் என்று யெகோவா ஆசைப்படுகிறார். இந்தக் கற்பிக்கும் வேலையை நம் எல்லாராலும் செய்ய முடியும். ஒவ்வொரு மாதமும் இந்த வேலையில் ஈடுபட வேண்டும் என்பது உங்களுடைய குறிக்கோளா? மற்றவர்களுக்கு பைபிளைப் பற்றி கற்றுக்கொடுக்க நீங்கள் ஆசைப்படுகிறீர்களா? அதற்காக ஜெபம் செய்கிறீர்களா? நீங்கள் முயற்சி செய்தால், பைபிள் படிப்பு ஆரம்பிக்க யெகோவா உங்களுக்கு உதவுவார். மற்றவர்களுக்கு பைபிள் படிப்பு எடுப்பதற்காக, உங்களுடைய ஓய்வு நேரத்தைத் தியாகம் செய்ய நீங்கள் தயாராக இருக்கிறீர்களா? மக்கள் திரும்பவும் யெகோவாவை வணங்குவதற்கு யோசபாத் உதவி செய்தார். செயலற்ற பிரஸ்தாபிகள் திரும்பவும் யெகோவாவை வணங்குவதற்கு நாமும் உதவலாம். அதோடு, நம்முடைய சபை பிராந்தியத்தில் இருக்கிற சபை நீக்கம் செய்யப்பட்டவர்கள், முன்பு செய்துவந்த பாவத்தை விட்டிருக்கும்போது, அவர்களைப் போய் பார்த்து, அவர்களுக்கு உதவி செய்ய மூப்பர்கள் ஏற்பாடு செய்கிறார்கள்.
மே 8-14
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 20-21
“உங்கள் கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வையுங்கள்”
சேர்ந்திருப்போம் உலக முடிவை சந்திப்போம்!
8 யோசபாத் ராஜா ஆட்சி செய்தபோது கடவுளுடைய மக்களை தாக்க, எதிரிகளுடைய படை வந்தது. அது ரொம்ப பெரிய படை, அதில் இருந்தவர்கள் எல்லாரும் பயங்கர பலசாலிகள். (2 நா. 20:1, 2) இஸ்ரவேலர்கள் அப்போது என்ன செய்தார்கள்? யெகோவாவையே முழுமையாக நம்பினார்கள், உதவிக்காக அவரிடம் ஜெபம் செய்தார்கள். (2 நாளாகமம் 20:3, 4-ஐ வாசியுங்கள்.) பிரச்சினையை எப்படி தீர்க்கலாம் என்று தனித்தனியாக யோசிக்காமல், அவர்கள் எல்லாரும் ஒன்றாகக் கூடிவந்தார்கள். “யூதா கோத்திரத்தார் அனைவரும், அவர்கள் குழந்தைகளும், அவர்கள் பெண்ஜாதிகளும், அவர்கள் குமாரருங்கூடக் கர்த்தருக்கு முன்பாக நின்றார்கள்” என்று பைபிள் சொல்கிறது. (2 நா. 20:13) பெரியவர்கள்-சிறியவர்கள் என்று மொத்த ஜனங்களும், யெகோவா உதவி செய்வார் என்று நம்பினார்கள். ஒற்றுமையாக இருந்து அவர் சொன்னதை செய்தார்கள். அதனால்தான், யெகோவா அவர்களை காப்பாற்றினார். (2 நா. 20:20-27) எதிர்ப்பு வரும்போது, இஸ்ரவேலர்களை போலவே நாமும் ஒன்றாக சேர்ந்து இருந்தால் யெகோவா நம்மையும் காப்பாற்றுவார்.
புதுமணத் தம்பதிகளே—யெகோவாவுக்குச் சேவை செய்வதையே உங்கள் லட்சியமாக வையுங்கள்
7 யகாசியேல் என்ற லேவியர் மூலம் யோசபாத்திடம் யெகோவா பேசினார். “அணிவகுத்துப் போய் நில்லுங்கள், அசையாமல் அப்படியே நில்லுங்கள், யெகோவா உங்களை எப்படிக் காப்பாற்றுகிறார் என்று பாருங்கள்” என்று சொன்னார். (2 நா. 20:13-17) பொதுவாக, போர்க்களத்தில் யாரும் இப்படிச் சும்மா நிற்கமாட்டார்கள்! ஆனால், அந்தக் கட்டளை மனுஷரிடமிருந்து வரவில்லை, யெகோவாவிடமிருந்து வந்தது. யெகோவாமேல் முழு நம்பிக்கை வைத்து அவர் சொன்னதை அப்படியே யோசபாத் செய்தார். எதிரிகளை எதிர்த்து போர் செய்யப்போனபோது, படைவீரர்களை அல்ல, பாடகர்களையே அவர் முன்வரிசையில் நிறுத்தினார். தான் சொன்னபடியே யோசபாத்துக்கு யெகோவா உதவினார், எதிரிகளைத் தோற்கடித்தார்.—2 நா. 20:18-23.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 1271 பாரா. 1-2
யோராம்
யோராம் ஆட்சி செய்த காலம் முழுவதுமே நிறைய கஷ்டங்களை அனுபவித்தார். முதலில், ஏதோமியர்கள் கலகம் செய்தார்கள். அதற்கு பிறகு, லிப்னாவும் யூதாவுக்கு எதிராக கலகம் செய்தது. (2ரா 8:20-22) எலியா யோராமிடம் இப்படி ஒரு எச்சரிப்பைக் கொடுத்தார்: “யெகோவா உன்னுடைய மக்களுக்கும், உன் மகன்களுக்கும், மனைவிகளுக்கும் மிகப் பெரிய தண்டனை கொடுக்கப்போகிறார், உன் சொத்துகளையெல்லாம் பறித்துவிடுவார். உனக்கு ஏகப்பட்ட நோய்கள் வரும். உன் குடலிலும் ஒரு நோய் வரும். அந்த நோய் நாளுக்கு நாள் மோசமாகி, கடைசியில் உன்னுடைய குடல் வெளியே வந்துவிடும்.”—2நா 21:12-15.
இது அப்படியே நடந்தது! அரேபியர்களும் பெலிஸ்தியர்களும் தேசத்தைக் கைப்பற்றுவதற்கு யெகோவா அனுமதித்தார். அவர்கள் யோராமுடைய மனைவிகளையும், மகன்களையும் சிறைபிடித்துக்கொண்டு போனார்கள். “இரண்டு வருஷங்களுக்குப் பின்பு, . . . அவருடைய குடல்கள் வெளியே வந்தன.” பிறகு, அவர் இறந்துபோனார்.—2நா 21:7, 16-20; 22:1; 1நா 3:10, 11.
மே 15-21
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 22-24
“தைரியமான செயல்களுக்கு யெகோவா பலன் கொடுக்கிறார்”
w09 10/1 பக். 22 பாரா. 1-2
கெட்ட நண்பர்களால் யெகோவாவைவிட்டு விலகிய யோவாஸ்
கடவுளுடைய ஆலயம் இருந்த எருசலேம் நகரத்துக்கு அது கொடிய காலமாக இருந்தது. அப்போதுதான் அகசியா ராஜா கொல்லப்பட்டிருந்தார். அதன் பிறகு அவருடைய அம்மா என்ன செய்தாள் என்பதை நினைத்தாலே பயங்கரமாக இருக்கிறது. அவள் அகசியாவின் மகன்களை, அதாவது தன் சொந்தப் பேரன்களை, கொலை செய்தாள்! ஏன் என்று உனக்குத் தெரியுமா?—பேரன்கள் யாரும் ராஜாவாகக் கூடாது, தானே ஆட்சி செய்ய வேண்டுமென அவள் நினைத்தாள்.
ஆனால், அவளுடைய பேரன்களில் ஒருவனான யோவாஸ் கொல்லப்படவில்லை; இது அத்தாலியாளுக்கே தெரியவில்லை. அவன் எப்படிக் காப்பாற்றப்பட்டான் எனத் தெரிந்துகொள்ள நீ ஆசைப்படுகிறாயா?—யோவாசுக்கு யோசேபாள் என்ற அத்தை இருந்தாள்; அவள் அவனைக் கடவுளுடைய ஆலயத்தில் மறைத்து வைத்தாள். அவளுடைய கணவர் யோய்தா ஆலயத்தில் தலைமைக் குருவாக இருந்ததன் காரணமாக அவளால் அப்படிச் செய்ய முடிந்தது. இவர்கள் இருவரும் சேர்ந்து, யோவாசைப் பத்திரமாகப் பார்த்துக்கொண்டார்கள்.
w09 10/1 பக். 22 பாரா. 3-5
கெட்ட நண்பர்களால் யெகோவாவைவிட்டு விலகிய யோவாஸ்
ஆறு வருடங்கள் யோவாஸ் ஆலயத்தில் யாருக்கும் தெரியாமல் பத்திரமாக வைக்கப்பட்டிருந்தான். அங்கே யெகோவா தேவனையும் அவருடைய சட்டங்களையும் பற்றிய எல்லா விஷயங்களும் அவனுக்குக் கற்றுக்கொடுக்கப்பட்டன. அவனுக்கு ஏழு வயதானபோது, அவனை ராஜாவாக்க யோய்தா நடவடிக்கை எடுத்தார். யோய்தா உண்மையில் என்ன செய்தார், கெட்ட ராணியான அத்தாலியாளுக்கு என்ன நடந்தது என்பதையெல்லாம் தெரிந்துகொள்ள ஆசைப்படுகிறாயா?—
அந்தச் சமயத்தில் எருசலேமிலிருந்த ராஜாக்களுக்கு விசேஷக் காவலர்கள் இருந்தார்கள்; அவர்கள் எல்லாரையும் யோய்தா ரகசியமாக வரவழைத்தார். தானும் தன் மனைவியும் அகசியா ராஜாவின் மகனை எப்படி உயிரோடு காப்பாற்றினார்கள் என்பதை அவர்களிடம் தெரிவித்தார். பிறகு, அவர்கள்முன் யோவாசைக் கொண்டு வந்து நிறுத்தினார்; அந்தச் சிறுவனே ராஜாவாவதற்கு உரிமையுள்ளவன் என்பதை அவர்கள் புரிந்துகொண்டார்கள். அதனால் அவர்கள் ஒரு திட்டம் போட்டார்கள்.
யோய்தா எல்லா மக்கள் முன்பாகவும் யோவாசை அழைத்து வந்து, அவன் தலையில் கிரீடம் வைத்து ராஜாவாக்கினார். அந்தச் சமயத்தில் மக்கள், “ராஜா வாழ்க என்று சொல்லி கைகொட்டினார்கள்.” யோவாசுக்குப் பாதுகாப்பாய் அந்தக் காவலர்கள் சூழ்ந்து நின்றார்கள். அந்தச் சந்தோஷ ஆரவாரத்தையெல்லாம் அத்தாலியாள் கேட்டபோது அங்கு ஓடிவந்து, “துரோகம் துரோகம்” என்று கத்தினாள். அப்போது, யோய்தாவின் கட்டளைப்படி அந்தக் காவலர்கள் அவளைக் கொன்று போட்டார்கள்.—2 இராஜாக்கள் 11:1-16.
it-1-E பக். 379 பாரா 5
சவ அடக்கம், அடக்கம் செய்யப்படுகிற இடங்கள்
“‘தாவீதின் நகரத்தில்,’ ராஜாக்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில்” தலைமைக் குருவான யோய்தா அடக்கம் செய்யப்பட்டார். அவருக்கு இந்த விசேஷ கௌரவம் கிடைத்தது. ஏன் அப்படி சொல்கிறோம்? யோய்தா அரச குடும்பத்தை சேர்ந்தவர் கிடையாது. இந்த மாதிரியான ஒரு சவ அடக்கம் வேறு யாருக்கும் செய்யப்பட்டதாக பைபிளில் சொல்லப்படவில்லை.—2நா 24:15, 16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 1223 பாரா 13
சகரியா
12. சகரியா இறப்பதற்கு முன்பு, “இதற்கெல்லாம் யெகோவா உங்களுக்குச் சரியான தண்டனை கொடுப்பார்” என்று சொன்னார். இந்த வார்த்தைகள் எப்படி நிறைவேறின? சீரியர்கள் யூதா தேசத்தைப் பயங்கரமாக சேதப்படுத்தினார்கள். பிறகு, யோவாஸ் ராஜாவுடைய இரண்டு ஊழியர்கள் அவரை கொலை செய்தார்கள். இது எல்லாவற்றுக்கும் காரணம், “குருவாகிய யோய்தாவின் மகன்களுடைய இரத்தத்தை” சிந்தியதுதான்!—2நா 24:17-22, 25.
மே 22-28
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 25-27
“யெகோவாவினால் அதைவிட அதிகமாக உங்களுக்குக் கொடுக்க முடியும்”
it-1-E பக். 1266 பாரா 6
யோவாஸ்
யூதாவின் ராஜாவான அமத்சியா ஏதோமியர்களுக்கு எதிராக போர் செய்வதற்கு இஸ்ரவேல் தேசத்து ராஜாவிடம் 1,00,000 போர்வீரர்களை அனுப்பச் சொல்லி கேட்டார். ஆனால், கடவுளுடைய ஊழியர் ஒருவர் கொடுத்த ஆலோசனையால் அமத்சியா ராஜா அந்த போர்வீரர்களை திருப்பி அனுப்பிவிட்டார். அவர் இப்படி செய்தது அந்த போர்வீரர்களுக்கு பிடிக்கவில்லை. அவர்களுக்கு ஏற்கெனவே 100 தாலந்து வெள்ளியை அமத்சியா கூலியாகக் கொடுத்திருந்தார். இருந்தாலும், போரில் கொள்ளையடிக்கப்படுகிற பொருள்களில் பங்கு கிடைக்காமல் போய்விடும் என்பதால் அவர்கள் கோபமாக இருந்தார்கள். அவர்கள் தங்கள் வீடுகளுக்கு திரும்பி போனார்கள். ஆனால், கொஞ்சம் நாட்களில், தெற்கு ராஜ்யத்தின் நகரங்களை கொள்ளையடித்தார்கள்.—2நா 25:6-10, 13.
யெகோவா நல்லவர் என்பதை “ருசித்து” பாருங்கள்
16 யெகோவாவுக்காகத் தியாகங்கள் செய்யுங்கள். யெகோவாவைச் சந்தோஷப்படுத்த நம்மிடம் இருக்கிற எல்லாவற்றையுமே விட்டுக்கொடுக்க வேண்டும் என்று அர்த்தம் கிடையாது. (பிர. 5:19, 20) அதே சமயத்தில், சில வசதிகளை விட்டுக்கொடுக்க வேண்டுமே என நினைத்து யெகோவாவுக்கு நிறைய சேவை செய்யாமல் இருந்துவிட்டால், இயேசு உவமையில் சொன்ன அந்த நபர் மாதிரிதான் நாம் இருப்போம். அவன் கடவுளை ஒதுக்கித்தள்ளிவிட்டு அவனுடைய சௌகரியங்களைப் பிடித்துக்கொண்டிருந்தான். (லூக்கா 12:16-21-ஐ வாசியுங்கள்.) பிரான்சில் இருக்கும் கிறிஸ்டியன் என்ற சகோதரர், “யெகோவாவுக்காகவும் என் குடும்பத்துக்காகவும் என்னோட நேரத்தயும் சக்தியயும் கொடுக்காம போயிட்டேன்” என்று சொல்கிறார். ஆனால், ஒரு கட்டத்தில் அவரும் அவருடைய மனைவியும் பயனியர் ஊழியம் செய்ய வேண்டும் என்று முடிவெடுத்தார்கள். அந்தக் குறிக்கோளை அடைவதற்காக அவர்கள் இரண்டு பேரும் வேலையை விட்டுவிட்டார்கள். வருமானத்துக்காக வீடுகளையும் அலுவலகங்களையும் சுத்தம் செய்யும் வேலையை ஆரம்பித்தார்கள். அவர்களுக்குக் கிடைத்த குறைந்த வருமானத்தை வைத்து திருப்தியாக வாழக் கற்றுக்கொண்டார்கள். அவர்கள் செய்த தியாகங்களுக்குப் பலன் கிடைத்ததா? “இப்ப ஊழியத்த நாங்க சந்தோஷமா அனுபவிக்கறோம். பைபிள் படிப்புகளும் மறுசந்திப்புகளும் யெகோவாவ பத்தி கத்துக்கறத பாக்கறது சந்தோஷமா இருக்கு” என்று கிறிஸ்டியன் சொல்கிறார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உங்களுக்கு ஆன்மீக ஆலோசகர் இருக்கிறாரா?
உசியா என்ற 16 வயது வாலிபர், அந்த இளம் வயதில், தெற்கு ராஜ்யமாகிய யூதாவின் அரசனாக முடிசூட்டப்பட்டார். அவர் 50-க்கும் அதிகமான வருடங்கள் அரசாண்டார். அதாவது, அவரது ஆட்சிகாலம் பொ.ச.மு. 829 முதல் 778 வரை நீடித்தது. சிறு வயதிலிருந்தே உசியா, ‘கர்த்தரின் பார்வைக்குச் செம்மையானதைச் செய்தார்.’ அப்படிச்செய்ய அவருக்கு எது உதவியது? ‘தெய்வ பயத்தை அவருக்குப் போதித்துவந்த சக்கரியாசின் [சகரியாவின்] வாழ்நாள் முழுவதும் ஓசியாஸ் [உசியா] கடவுளைத் தேடி வந்தார். அவர் ஆண்டவரைத் தேடின காலமெல்லாம், அவர் எல்லாக் காரியங்களிலும் அவருக்கு வெற்றி அளித்தார்’ என்று சரித்திரப்பூர்வ பதிவு உசியாவைப்பற்றி சொல்கிறது.—2 நாளாகமம் 26:1, 4, 5; கத்தோலிக்க பைபிள்.
ராஜாவின் ஆலோசகரான சகரியாவைப்பற்றி பைபிளிலுள்ள இந்தப் பதிவைத் தவிர வேறு எந்தத் தகவலும் நமக்குத் தெரியாது. இருந்தாலும், இளம் ராஜாவான உசியா சரியானதைச் செய்வதற்கு, ‘தெய்வ பயத்தை போதித்துவந்த சகரியா’ பெரும் உதவியாக இருந்தார். “அவர் வேதவசனங்களில் நல்ல புலமை பெற்றவராகவும், அவற்றைக் குறித்து ஆழமான அறிவும் அனுபவமும் உடையவராகவும், தன் அறிவை மற்றவர்களிடம் பகிர்ந்துகொள்ள முடிந்தவராகவும்” இருந்திருக்க வேண்டும் என்று த எக்ஸ்போஸிட்டர்ஸ் பைபிள் சகரியாவைப்பற்றி குறிப்பிடுகிறது. “அவர் தீர்க்கதரிசனங்களை நன்கு அறிந்திருந்தார். அதோடு . . . புத்திசாலியாகவும் தேவ பக்தியுள்ளவராகவும் நேர்மையானவராகவும் இருந்தார்; அதுமட்டுமல்ல, உசியாமீது அவர் நல்ல தாக்கத்தை ஏற்படுத்தியதாகவும் தெரிகிறது” என்று ஒரு பைபிள் அறிஞர் சகரியாவைப்பற்றி விவரித்தார்.
மே 29–ஜூன் 4
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 28-29
“பெற்றோர் யெகோவாவை வணங்கவில்லை என்றாலும் உங்களால் அவருக்கு சேவை செய்ய முடியும்”
யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள்
8 எசேக்கியாவின் வாழ்க்கை ரூத்தின் வாழ்க்கையிலிருந்து ரொம்பவே வித்தியாசமாக இருந்தது. யெகோவாவுக்காக அர்ப்பணிக்கப்பட்ட ஒரு தேசத்தில் எசேக்கியா பிறந்தார். இருந்தாலும் அந்த தேசத்தில் இருந்த எல்லாரும் யெகோவாவை உண்மையோடு வணங்கவில்லை. உதாரணத்துக்கு, எசேக்கியாவின் அப்பா ஆகாஸ் கெட்ட ராஜாவாக இருந்தார். கடவுளுடைய ஆலயத்துக்கு அவர் மதிப்பு கொடுக்கவில்லை. பொய் தெய்வங்களை வணங்க மக்களைத் தூண்டினார். சொந்த மகன்களையே பொய் தெய்வங்களுக்குப் பலியாகக் கொடுக்கும் அளவுக்கு கொடூரமாக நடந்துகொண்டார். இப்படிப்பட்ட மோசமான சூழலில்தான் எசேக்கியா வளர்ந்தார்.—2 இரா. 16:2-4, 10-17; 2 நா. 28:1-3.
யெகோவாவின் நண்பர்களைப் போல் இருங்கள்
9 ஆகாஸ் நடந்துகொண்டதைப் பார்த்து எசேக்கியா யெகோவாமீது கோபப்பட்டிருக்கலாம். ஆனால் அவர் கோபப்படவில்லை. இன்று நிறைய பேர் எசேக்கியா அனுபவித்த அளவுக்கு கஷ்டங்களை அனுபவிப்பதில்லை. இருந்தாலும், அவர்களுக்கு வரும் பிரச்சினைகளை நினைத்து யெகோவாமீதும் அவருடைய அமைப்புமீதும் கோபப்படுகிறார்கள். (நீதி. 19:3) இன்னும் சிலர் மோசமான சூழலில் வளர்ந்ததால் கஷ்டப்படுவதாக சொல்கிறார்கள். அல்லது அப்பா-அம்மா செய்த தவறுகளைப் பார்த்து அவர்களும் அதை செய்வதாக சொல்கிறார்கள். (எசே. 18:2, 3) இதெல்லாம் நியாயமான காரணங்களாக இருக்க முடியுமா?
10 நிச்சயம் இருக்காது. இதற்கு எசேக்கியாவின் வாழ்க்கையே ஒரு நல்ல உதாரணம். யெகோவாமீது கோபப்படுவதற்கு நமக்கு எந்த நியாயமான காரணமும் இல்லை. ஏனென்றால் யெகோவா மனிதர்களுக்கு ஒருநாளும் கஷ்டத்தைக் கொடுக்க மாட்டார். (யோபு 34:10) பொதுவாக பிள்ளைகள், அப்பா-அம்மாவிடமிருந்து நல்லதையும் கற்றுக்கொள்ளலாம் கெட்டதையும் கற்றுக்கொள்ளலாம். (நீதி. 22:6; கொலோ. 3:21) அதற்காக அப்பா-அம்மா எப்படி இருக்கிறார்களோ அப்படித்தான் பிள்ளைகளும் இருக்க வேண்டும் என்று அவசியம் இல்லை. ஏனென்றால், எது சரி எது தவறு என்று தீர்மானிக்கும் உரிமையை யெகோவா எல்லாருக்குமே கொடுத்திருக்கிறார். (உபா. 30:19) இந்த உரிமையை எசேக்கியா எப்படிப் பயன்படுத்தினார்?
11 ஆகாஸ் இவ்வளவு மோசமான ராஜாவாக இருந்தாலும் அவருடைய மகன் எசேக்கியா நல்ல ராஜாவாக இருந்தார். (2 இராஜாக்கள் 18:5, 6-ஐ வாசியுங்கள்.) அவருடைய அப்பாவைப் போல் அவர் நடந்துகொள்ளவில்லை. அதற்கு பதிலாக யெகோவாவின் தீர்க்கதரிசிகளான ஏசாயா, மீகா, ஓசியா ஆகியோர் சொன்னதைக் கேட்டார். அவர்கள் சொன்ன ஆலோசனைகளையும் புத்திமதிகளையும் கேட்டு நடந்தார். அதனால் அவருடைய அப்பா செய்த நிறைய தவறுகளை அவரால் சரிசெய்ய முடிந்தது. அவர் ஆலயத்தைச் சுத்தம் செய்தார், மக்களை மன்னிக்கும்படி யெகோவாவிடம் கெஞ்சி கேட்டார். நாட்டில் இருந்த சிலைகளை எல்லாம் ஒழித்துக் கட்டினார். (2 நா. 29:1-11, 18-24; 31:1) அதன்பின் அசீரியா ராஜாவான சனகெரிப் எருசலேமை தாக்கப்போவதாக பயமுறுத்தியபோது அசாதாரண தைரியத்தையும் விசவாசத்தையும் காட்டினார். யெகோவா நிச்சயம் பாதுகாப்பார் என்று நம்பினார். தைரியமாக இருக்க மக்களை உற்சாகப்படுத்தினார். (2 நா. 32:7, 8) ஒருசமயம் அவர் பெருமையாக நடந்துகொண்டார், இருந்தாலும் யெகோவா அவரை திருத்தியபோது அதை மனத்தாழ்மையோடு ஏற்றுக்கொண்டார். (2 நா. 32:24-26) உண்மையில் எசேக்கியா நமக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்கிறார். மோசமான சூழலில் அவர் வளர்ந்தாலும் அதையெல்லாம் காரணம் காட்டி அவர் கெட்டவராக நடந்துகொள்ளவில்லை. அதற்குப் பதிலாக யெகோவாவுடைய நண்பர் என்பதைக் காட்டினார்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நாத்தான் உண்மை வணக்கத்திற்குத் தோள்கொடுத்தவர்
யெகோவாவை உண்மையோடு வழிபட்டுவந்த நாத்தான், தாவீதின் திட்டத்தை மகிழ்ச்சியோடு வரவேற்றார்; ஆம், சரித்திரத்திலேயே முதன்முறையாக உண்மை வணக்கத்திற்கென ஒரு நிரந்தர ஆலயத்தைக் கட்ட தாவீதுக்கு முழு ஆதரவு தருவதாகக் குறிப்பிட்டார். என்றாலும், அந்தச் சந்தர்ப்பத்தில் நாத்தான் யெகோவாவின் அபிப்பிராயத்தைக் கேட்டுச் சொல்வதற்குப் பதிலாகத் தன்னுடைய சொந்த அபிப்பிராயத்தைத் தெரிவித்தார். ஆனால், வேறொரு செய்தியை தாவீதிடம் சொல்லுமாறு அந்த இரவே நாத்தானுக்குக் கடவுள் கட்டளையிட்டார்; அதாவது, தாவீது ஆலயத்தைக் கட்ட மாட்டார், அவரது மகன்களில் ஒருவரே கட்டுவார் எனச் சொல்லுமாறு நாத்தானுக்குக் கட்டளையிட்டார். என்றாலும், தாவீதுடன் ஓர் ஒப்பந்தம் செய்வதாகவும், அதனால் அவரது சிம்மாசனம் “என்றென்றைக்கும் நிலைபெற்றிருக்கும்” என்பதாகவும் நாத்தான் மூலம் கடவுள் சொன்னார்.—2 சா. 7:4-16.
ஆலயத்தைக் கட்டுவது சம்பந்தமாக நாத்தான் நினைத்தது ஒன்று, யெகோவா நினைத்ததோ வேறொன்று. என்றாலும், மனத்தாழ்மைமிக்க அந்தத் தீர்க்கதரிசி முறுமுறுக்காமல் யெகோவாவின் நோக்கத்தை ஏற்றுக்கொண்டு அதை ஆதரித்தார். எப்பேர்ப்பட்ட சிறந்த முன்மாதிரி! கடவுள் நம்மை ஏதோவொரு விதத்தில் திருத்தும்போது நாம் நாத்தானைப் போல் நடந்துகொள்ளலாம், அல்லவா? கடவுளுடைய தயவை நாத்தான் இழக்கவில்லை என்பது, ஒரு தீர்க்கதரிசியாக அவர் தொடர்ந்து பயன்படுத்தப்பட்டதிலிருந்து தெரிகிறது. சொல்லப்போனால், ஆலயச் சேவைக்காக 4,000 இசைக் கலைஞர்களை நியமிக்க யெகோவா நாத்தானையும் தரிசனம் பெற்றவராகிய காத்தையும் தமது சக்தியால் தூண்டினார்.—1 நா. 23:1-5; 2 நா. 29:25.
ஜூன் 5-11
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 30-31
“ஒன்றுகூடிவருவது நல்லது”
it-1-E பக். 1103 பாரா 2
எசேக்கியா
உண்மை வணக்கத்துக்காக ஆர்வத்துடிப்போடு செயல்பட்டார். எசேக்கியா 25 வயதில் ராஜாவானார். ராஜாவான உடனேயே யெகோவாவின் வணக்கத்துக்காக ஆர்வத்துடிப்போடு செயல்பட ஆரம்பித்தார். முதலில், ஆலயத்தை திறந்து, அதை பழுது பார்த்தார். பிறகு, குருமார்களையும் லேவியர்களையும் கூப்பிட்டு, “இப்போது இஸ்ரவேலின் கடவுளான யெகோவாவுடன் ஒப்பந்தம் செய்ய மனதார ஆசைப்படுகிறேன்” என்று சொன்னார். இது, யெகோவாவுக்கு உண்மையோடு இருப்பதாக வாக்குக் கொடுக்கும் ஒரு ஒப்பந்தம். அந்த சமயத்தில் திருச்சட்ட ஒப்பந்தம் அமலில்தான் இருந்தது. இருந்தாலும், மக்கள் அதன்படி செய்யவில்லை. எசேக்கியா செய்த ஒப்பந்தத்தின் மூலம் யூதா தேசத்தில், திருச்சட்ட ஒப்பந்தத்தை மறுபடியும் நிலைநாட்டினார். அவர் ஆர்வத்துடிப்போடு லேவியர்களையும் இசைக் கலைஞர்களையும் பாடகர்களையும் ஆலயத்தில் ஒழுங்குபடுத்தினார். பஸ்கா பண்டிகை கொண்டாடப்படுகிற நிசான் மாதம் வந்தபோது, ஆலயத்தை புனிதப்படுத்த வேண்டியிருந்தது. குருமார்களும் லேவியர்களும்கூட தீட்டுப்பட்டு இருந்தார்கள். நிசான் மாதம் 16-ஆம் நாளில் ஆலயம் சுத்திகரிக்கப்பட்டது. பிறகு, இஸ்ரவேல் தேசத்தில் இருந்த எல்லாருக்காகவும் விசேஷமாக பாவ பரிகார பலி செலுத்தப்பட வேண்டியிருந்தது. முதலில், அதிகாரிகள் பலி செலுத்துவதற்கான மிருகங்களை கொண்டுவந்தார்கள். பிறகு மக்கள் ஆயிரக்கணக்கில் தகன பலிகளை கொண்டுவந்தார்கள்.—2நா 29:1-36.
it-1-E பக். 1103 பாரா 3
எசேக்கியா
மக்கள் தீட்டுப்பட்டு இருந்ததால், பஸ்கா கொண்டாடப்பட வேண்டிய சமயத்தில் அதை கொண்டாட முடியவில்லை. தீட்டுப்பட்டவர்கள் ஒரு மாதத்துக்கு பிறகு பஸ்காவை கொண்டாடலாம் என்று திருச்சட்டம் சொல்லியிருந்ததால், எசேக்கியா சில ஏற்பாடுகளை செய்தார். பஸ்கா பண்டிகையை கொண்டாடுவதற்கு யூதா தேசத்தில் இருந்தவர்களை மட்டுமல்லாமல் இஸ்ரவேலில் இருந்தவர்களையும் அவர் அழைத்தார். அதற்காக, கடிதங்களை எழுதி தூதுவர்கள் மூலம் அனுப்பினார். இஸ்ரவேலில் இருந்த நிறைய பேர் இந்த தூதுவர்களை பார்த்து கேலி கிண்டல் செய்தார்கள். ஆனால், கொஞ்சம் பேர், குறிப்பாக ஆசேர், மனாசே மற்றும் செபுலோன் கோத்திரத்தை சேர்ந்த சிலர் மனத்தாழ்மையாக இந்த அழைப்பை ஏற்றுக்கொண்டார்கள். எப்பிராயீம், இசக்கார் கோத்திரத்தை சேர்ந்த சிலரும் இந்த பண்டிகைக்கு வந்தார்கள். அதோடு, யெகோவாவை வணங்கிய இஸ்ரவேலராக இல்லாத நிறைய பேரும் இந்த பண்டிகைக்காக வந்தார்கள். வடக்கு ராஜ்யத்தை சேர்ந்தவர்கள் பண்டிகைக்கு வருவதும் உண்மை வணக்கத்துக்காக உறுதியாக நிற்பதும் அவ்வளவு சுலபமாக இருந்திருக்காது. ஏனென்றால், பத்து கோத்திர ராஜ்யம் முழுவதுமே பொய் வணக்கத்தில் ஊறிப்போய் இருந்தது. தூதுவர்களை மக்கள் எப்படி கேலி கிண்டல் செய்து எதிர்த்தார்களோ அதேபோல் இவர்களையும் எதிர்த்திருப்பார்கள்.—2நா 30:1-20; எண் 9:10-13.
it-1-E பக். 1103 பாரா. 4-5
எசேக்கியா
பஸ்கா பண்டிகை முடிந்த பிறகு புளிப்பில்லாத ரொட்டி பண்டிகையை மக்கள் ஏழு நாட்களுக்கு கொண்டாடினார்கள். ரொம்ப சந்தோஷமாக அந்த பண்டிகையைக் கொண்டாடியதால் இன்னும் ஏழு நாட்களுக்கு அந்தப் பண்டிகையைத் தொடர்ந்து கொண்டாடலாம் என்று அவர்கள் நினைத்தார்கள். அதைப் பற்றி பைபிள் இப்படிச் சொல்கிறது: “எல்லாரும் எருசலேமில் மிகவும் சந்தோஷமாகப் பண்டிகையைக் கொண்டாடினார்கள். ஏனென்றால், இஸ்ரவேலின் ராஜாவான தாவீதின் மகன் சாலொமோன் காலத்திலிருந்து அதுவரை எருசலேமில் இதுபோல் நடந்ததே இல்லை.”—2நா 30:21-27.
வெறுமனே ஜாலியாக இருந்துவிட்டு போவதற்காக மக்கள் இந்தப் பண்டிகையைக் கொண்டாடவில்லை. இது உண்மையிலேயே அவர்களுடைய வணக்கத்தில் ஒரு பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. அது நமக்கு எப்படி தெரியும்? மக்கள் தங்களுடைய வீடுகளுக்கு திரும்பிப் போவதற்கு முன்பு, யூதா மற்றும் பென்யமீன் முழுவதும் இருந்த பூஜைத் தூண்களையும் ஆராதனை மேடுகளையும் பலிபீடங்களையும் பூஜைக் கம்பங்களையும் அழித்துப்போட்டார்கள். எப்பிராயீம் மற்றும் மனாசே பகுதிகளிலும் இதைச் செய்தார்கள். (2நா 31:1) மோசே செய்திருந்த செம்பு பாம்பை சுக்குநூறாக உடைப்பதன் மூலம் எசேக்கியா ஒரு நல்ல முன்மாதிரி வைத்தார். ஏனென்றால், மக்கள் அதை ஒரு சிலையாக பயன்படுத்திக்கொண்டு இருந்தார்கள். (2ரா 18:4) உண்மை வணக்கம் மறுபடியும் நிலைநாட்டப்படுவதற்கு இந்த சம்பவங்கள் உதவியாக இருந்தன. இந்த பிரம்மாண்டமான பண்டிகைக்கு பிறகு, உண்மை வணக்கம் தொடர்ந்து செயல்படுவதற்கு எசேக்கியா சில நடவடிக்கைகளை எடுத்தார். அதற்காக, அவர் குருமார்களையும் லேவியர்களையும் ஒழுங்குபடுத்தினார். அதோடு, இந்த ஏற்பாடுகளை எல்லாம் ஆதரிப்பதற்கு தங்களுடைய நன்கொடைகளை தரச் சொல்லி மக்களை உற்சாகப்படுத்தினார்.—2நா 31:2-12.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
“இதன்படி நடந்தால் சந்தோஷமானவர்களாக இருப்பீர்கள்”
14 நாம் மனத்தாழ்மையானவர்கள் என்பதைக் காட்டுவதற்கான மற்றொரு வழி: காதுகொடுத்துக் கேட்பது! ‘நன்றாகக் காதுகொடுத்துக் கேட்கும்படி’ யாக்கோபு 1:19 சொல்கிறது. காதுகொடுத்துக் கேட்பதில் யெகோவா மிகச் சிறந்த முன்மாதிரி! (ஆதி. 18:32; யோசு. 10:14) உதாரணத்துக்கு, யாத்திராகமம் 32:11-14-ல் இருக்கும் உரையாடலை படித்துப் பாருங்கள். (வாசியுங்கள்.) மோசேயின் கருத்தைக் கேட்க வேண்டிய அவசியம் இல்லையென்றாலும், அவர் தன்னுடைய உணர்ச்சிகளைக் கொட்ட யெகோவா அனுமதித்தார். ஒருவேளை, முன்பு தவறு செய்த ஒருவர் உங்களிடம் பேசும்போது நீங்கள் பொறுமையோடு கேட்பீர்களா? அவர் கொடுக்கும் ஆலோசனையின்படி செய்வீர்களா? ஆனால், விசுவாசத்தோடு யாராவது தன்னிடம் பேசும்போது, யெகோவா பொறுமையோடு காதுகொடுத்துக் கேட்கிறார்!
15 உங்களையே இப்படிக் கேட்டுக்கொள்ளுங்கள்: ‘ஆபிரகாம்... ராகேல்... மோசே... யோசுவா... மனோவா... எலியா... எசேக்கியா... இவங்கெல்லாம் பேசுனத யெகோவா கேட்டாரு. இன்னைக்கு மத்தவங்க பேசுறதயும் அவரு மனத்தாழ்மையோட கேட்குறாரு. அப்படீனா, நானும் மத்தவங்க பேசுறத கேட்கணும், இல்லையா? சகோதர சகோதரிகள் பேசுறத காதுகொடுத்து கேட்குறது மூலமாவும், பொருத்தமான சமயத்துல அவங்களோட ஆலோசனைகளின்படி செய்றது மூலமாவும், அவங்களுக்கு என்னால இன்னும் அதிகமா மதிப்பு கொடுக்க முடியுமா? சபையில இருக்குற யாராவதுமேல இல்லனா என்னோட குடும்பத்துல இருக்குற யாராவதுமேல இன்னும் அக்கறை காட்ட வேண்டியிருக்கா? அதுக்கு நான் என்ன செய்யலாம்?’—ஆதி. 30:6; நியா. 13:9; 1 ரா. 17:22; 2 நா. 30:20.
ஜூன் 12-18
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 32-33
“இக்கட்டான காலத்தில் மற்றவர்களை பலப்படுத்துங்கள்”
it-1-E பக். 204 பாரா 5
அசீரியா
சனகெரிப். எசேக்கியா அசீரிய ராஜாவான சனகெரிப்புக்கு எதிராக கலகம் செய்தார். (2ரா 18:7) அதனால், 46 யூத நகரங்களை சனகெரிப் கைப்பற்றினான். (ஏசா 36:1, 2-ஐ ஒப்பிட்டு பாருங்கள்). பின்பு, சனகெரிப் லாகீசில் முகாம் போட்டிருந்தபோது எசேக்கியாவை கப்பம் கட்டச் சொன்னான். 30 தாலந்து தங்கத்தையும் 300 தாலந்து வெள்ளியையும் கொடுக்கச் சொல்லி கேட்டான். (2ரா 18:14-16; 2நா 32:1; ஏசா 8:5-8-ஐ ஒப்பிட்டு பாருங்கள்.) இதையெல்லாம் எசேக்கியா கொடுத்து அனுப்பி இருந்தாலும், சனகெரிப் தன்னுடைய ஆட்களை அனுப்பி எந்த நிபந்தனையும் இல்லாமல் எருசலேமை சரணடையச் சொன்னான்.—2ரா 18:17–19:34; 2நா 32:2-20.
‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்’—இன்று யார்?
12 நம்மால் செய்ய முடியாததை யெகோவா நமக்காக செய்யத் தயாராக இருக்கிறார். ஆனால், முடிந்ததைச் செய்ய நாம் முயற்சிக்கிறோமா என்று அவர் கவனிக்கிறார். எசேக்கியா ‘தன் பிரபுக்களோடும் தன் பராக்கிரமசாலிகளோடும் ஆலோசனைபண்ணினார்.’ பிறகு, அனைவரும் சேர்ந்து ‘நகரத்திற்குப் புறம்பேயிருக்கிற ஊற்றுகளைத் தூர்த்துப்போட்டார்கள் . . . அவர் [எசேக்கியா] திடன்கொண்டு, இடிந்துபோன மதிலையெல்லாம் கட்டி, அவைகளையும் வெளியிலுள்ள மற்ற மதிலையும் கொத்தளங்கள்மட்டும் உயர்த்தி . . . திரளான ஆயுதங்களையும் கேடகங்களையும் பண்ணினார்.’ (2 நா. 32:3-5) எசேக்கியா, அவருடைய பிரபுக்கள், விசுவாசமுள்ள தீர்க்கதரிசிகள் போன்ற அநேக பராக்கிரமசாலிகளைப் பயன்படுத்தி யெகோவா தம்முடைய மக்களை அன்று பாதுகாத்தார், வழிநடத்தினார்.
‘ஏழு மேய்ப்பர்களும் எட்டு அதிபதிகளும்’—இன்று யார்?
13 ஊற்றுகளை அடைப்பதையும் மதிலைக் கட்டுவதையும்விட எசேக்கியா அடுத்து செய்ததுதான் மிக முக்கியமானது. அக்கறையுள்ள மேய்ப்பனாக இருந்ததால் தன்னுடைய மக்களை ஒன்றுகூட்டி பின்வரும் வார்த்தைகளால் அவர்களை உற்சாகப்படுத்தினார்: “அசீரியா ராஜாவுக்கு . . . பயப்படாமலும் கலங்காமலுமிருங்கள்; அவனோடிருக்கிறவர்களைப் பார்க்கிலும் நம்மோடிருக்கிறவர்கள் அதிகம். அவனோடிருக்கிறது மாம்ச புயம், நமக்குத் துணைநின்று நம்முடைய யுத்தங்களை நடத்த நம்மோடிருக்கிறவர் நம்முடைய தேவனாகிய கர்த்தர்தானே.” ஆம், யெகோவா தம்முடைய மக்களுக்காகப் போர் செய்வார். விசுவாசத்தைப் பலப்படுத்தும் எப்பேர்ப்பட்ட வார்த்தைகள் இவை! “யூதாவின் ராஜாவாகிய எசேக்கியா சொன்ன இந்த வார்த்தைகளின்மேல் ஜனங்கள் நம்பிக்கை வைத்தார்கள்.” ‘அந்த வார்த்தைகள்’ மக்களை பலப்படுத்தின. தம்முடைய தீர்க்கதரிசி மூலம் யெகோவா முன்னறிவித்தபடியே எசேக்கியா, அவருடைய பிரபுக்கள், மற்ற பராக்கிரமசாலிகள், தீர்க்கதரிசிகளான மீகா, ஏசாயா போன்றவர்கள் தாங்கள் சிறந்த மேய்ப்பர்கள் என்பதை நிரூபித்தார்கள்.—2 நா. 32:7, 8; மீகா 5:5, 6-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
உண்மையிலேயே மனம் திருந்துவது என்றால் என்ன?
11 கொஞ்சக் காலத்தில் மனாசேயின் ஜெபத்துக்கு யெகோவா பதில் கொடுத்தார். மனம் திருந்த வேண்டும் என்று அவர் ஆசைப்படுவதை யெகோவா பார்த்தார். மனாசே உருக்கமாக செய்த ஜெபங்களை யெகோவா கேட்டு, அவரை மறுபடியும் சிம்மாசனத்தில் உட்கார வைத்தார். மனாசே எந்தளவுக்கு மனம் திருந்தியிருந்தார் என்பதை அவருடைய செயல்களிலிருந்து தெரிந்துகொள்கிறோம். அவர் ஆகாபைப் போல் இல்லாமல், யெகோவாவுக்குப் பிடித்த மாதிரி வாழ ஆரம்பித்தார். பொய் வணக்கத்தை ஒழித்துக்கட்ட தன்னால் முடிந்த எல்லா முயற்சிகளையும் எடுத்தார். யெகோவாவை வணங்குவதற்கு மக்களை ஊக்கப்படுத்தினார். (2 நாளாகமம் 33:15, 16-ஐ வாசியுங்கள்.) ஆனால், இவற்றையெல்லாம் செய்ய அவருக்குத் தைரியமும் விசுவாசமும் தேவைப்பட்டன. ஏனென்றால், இத்தனை வருஷங்களாக அவருடைய குடும்பத்தாரும் முக்கிய பிரமுகர்களும் அவருடைய மக்களும் அவரைப் போலவே மோசமான விஷயங்களைச் செய்வதற்கு அவர் காரணமாக இருந்தார். ஆனால், முன்பு செய்திருந்த மோசமான விஷயங்களையெல்லாம் மாற்ற அவருடைய வயதான காலத்தில் முயற்சியெடுத்தார். அந்தச் சமயத்தில் சின்னப் பையனாக இருந்த அவருடைய பேரன் யோசியா எதிர்காலத்தில் ஒரு நல்ல ராஜாவாக ஆவதற்கு இவர் ஒரு காரணமாக இருந்திருக்கலாம்.—2 ரா. 22:1, 2.
12 மனாசேயின் வாழ்க்கையிலிருந்து என்ன கற்றுக்கொள்கிறோம்? அவர் தன்னையே தாழ்த்தினார். ஆனால், அதோடு நிறுத்திக்கொள்ளவில்லை. கருணை காட்டச் சொல்லி யெகோவாவிடம் கெஞ்சினார். தன்னுடைய வாழ்க்கையையே மாற்றிக்கொண்டார். அதுவரை செய்திருந்த எல்லா தவறுகளையும் சரிசெய்வதற்காகக் கடினமாக முயற்சியெடுத்தார். யெகோவாவை உண்மையாக வணங்கினார். மற்றவர்களும் யெகோவாவை வணங்குவதற்குப் பக்கபலமாக இருந்தார். இன்றைக்கு படுமோசமான பாவத்தைச் செய்தவர்களுக்கும் மனாசேயின் உதாரணம் நம்பிக்கையைக் கொடுக்கிறது. ‘யெகோவா நல்லவர், மன்னிக்கத் தயாராக இருப்பவர்’ என்பதை மனாசேயின் வாழ்க்கை காட்டுகிறது. (சங். 86:5) உண்மையாகவே மனம் திருந்துகிறவர்களுக்கு நிச்சயம் மன்னிப்பு கிடைக்கும்
ஜூன் 19-25
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 34-36
“கடவுளுடைய வார்த்தையிலிருந்து நீங்கள் முழுமையாக பயனடைகிறீர்களா?”
it-1-E பக். 1157 பாரா 4
உல்தாள்
திருச்சட்ட புத்தகத்தில் இருந்த விஷயங்களை யோசியா கேட்டவுடனேயே யெகோவாவின் வழிநடத்துதல் என்னவென்று தெரிந்துகொள்வதற்காக சில ஆட்களை உல்தாள் என்ற பெண் தீர்க்கதரிசியிடம் அனுப்பினார். அந்த தீர்க்கதரிசி யெகோவாவின் செய்தியை சொன்னாள். அந்த புத்தகத்தில் சொல்லியிருக்கிற மாதிரியே யெகோவாவுக்கு உண்மையாக இல்லாத எல்லாருமே அழிக்கப்படுவார்கள் என்று சொன்னாள். அதோடு, இந்த அழிவு யோசியாவின் காலத்தில் வராது என்றும் சொன்னாள். ஏனென்றால், அவர் யெகோவாவுக்கு முன்பாக மனத்தாழ்மையாக நடந்துகொண்டார்.—2ரா 22:8-20; 2நா 34:14-28.
w09 6/15 பக். 10 பாரா 20
யெகோவாவுடைய வீட்டின்மீது பக்திவைராக்கியத்தைக் காட்டுங்கள்
20 யோசியா ராஜா ஆலயத்தைப் புதுப்பிப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்துகொண்டிருந்த சமயத்தில், ‘மோசேயைக்கொண்டு கட்டளையிடப்பட்ட யெகோவாவுடைய நியாயப்பிரமாணப் புஸ்தகத்தை ஆசாரியனாகிய இல்க்கியா கண்டெடுத்தார்.’ அவர் அரசவைச் செயலரான சாப்பானிடம் அதைக் கொடுத்தார்; அவர் அதிலுள்ளவற்றை யோசியாவுக்கு வாசித்துக்காட்டினார். (2 நாளாகமம் 34:14-18-ஐ வாசியுங்கள்.) அதன் விளைவு? தாங்க முடியாத துக்கத்தில் ராஜா தன்னுடைய உடையைக் கிழித்து, யெகோவாவிடம் விசாரிக்கும்படி தன் ஆட்களிடம் சொன்னார். உல்தாள் என்னும் பெண் தீர்க்கதரிசியின் மூலமாய்க் கடவுள் யூதாவில் செய்யப்பட்ட சில பொய் மத பழக்கங்களைக் கண்டிப்பதாக அறிவித்தார். இருந்தாலும், உருவ வழிபாட்டை ஒழித்துக்கட்ட யோசியா எடுத்த அபார முயற்சிகளை யெகோவா பார்த்தார்; முழு தேசத்திற்கும் படுமோசமான அழிவு காத்திருந்தபோதிலும் யோசியாவுக்கு யெகோவா தொடர்ந்து தயவு காட்டினார். (2 நா. 34:19-28) இதிலிருந்து நாம் என்ன கற்றுக்கொள்கிறோம்? யோசியாவுடைய ஆசையே நம்முடைய ஆசையாகவும் இருக்க வேண்டும். நம் வணக்கத்தில் விசுவாசதுரோகத்திற்கும் பாவச் செயல்களுக்கும் நாம் இடமளித்தால் என்ன நேரிடும் என்பதற்கான எச்சரிப்பூட்டும் உதாரணத்தை மனதில் வைத்து யெகோவா அளிக்கும் அறிவுரைக்கு உடனடியாகக் கீழ்ப்படிய வேண்டும். அப்போது, மெய் வணக்கத்தின்மீது நமக்கிருக்கும் பக்திவைராக்கியத்தை யெகோவா பார்த்து யோசியாவுக்குச் செய்ததைப் போலவே நமக்கும் தயவு காட்டுவார் என்பதில் நாம் உறுதியாய் இருக்கலாம்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எழுதப்பட்டுள்ள விஷயங்களுக்கு கவனம் செலுத்துவீர்களா?
15 கடைசியாக, யோசியா ராஜாவிடமிருந்து நாம் என்ன கற்றுக்கொள்ளலாம்? அவர் ஒரு நல்ல ராஜாவாக இருந்தார். ஆனால், அவர் செய்த ஒரு தவறால், அவருடைய சாவை அவரே தேடிக்கொண்டார். (2 நாளாகமம் 35:20-22-ஐ வாசியுங்கள்.) அவர் அப்படி என்ன தவறு செய்தார்? காரணமே இல்லாமல், எகிப்து ராஜாவான நேகோவை எதிர்த்து போர் செய்யப் போனார். போர் செய்ய விருப்பம் இல்லை என்று நேகோ சொல்லியும் போர் செய்யப் போனார். ஆனால், நேகோ சொன்னது “கடவுள் சொன்ன செய்தி” என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், யோசியா ஏன் போர் செய்யப் போனார்? அதைப் பற்றி பைபிள் எதுவும் சொல்வதில்லை.
16 நேகோ சொன்னது, யெகோவாவின் செய்திதானா என்று தெரிந்துகொள்வதற்கு யோசியா என்ன செய்திருக்கலாம்? யெகோவாவின் உண்மையுள்ள தீர்க்கதரிசிகளில் ஒருவரான எரேமியாவிடம் இதைப் பற்றி கேட்டிருக்கலாம். ஆனால், அவர் கேட்கவில்லை. (2 நா. 35:23, 25) இன்னொரு விஷயத்தையும் எடுத்துக்கொள்ளுங்கள். நேகோ எருசலேமுக்கு எதிராகப் போர் செய்வதற்காக கர்கேமிசுக்குப் போய்க்கொண்டிருக்கவில்லை. வேறொரு தேசத்துக்கு எதிராகப் போர் செய்வதற்காகத்தான் அவர் போய்க்கொண்டிருந்தார். யெகோவாவையோ அவருடைய மக்களையோ அவமானப்படுத்த வேண்டும் என்பது நேகோவின் நோக்கமாக இருக்கவில்லை. நேகோவை எதிர்த்து போர் செய்யப் போவதற்கு முன்பு, இந்த எல்லா விஷயங்களையும் யோசியா நன்றாக யோசித்துப் பார்த்திருக்க வேண்டும். ஆனால், அவர் அப்படிச் செய்யவில்லை. இதிலிருந்து நமக்கு என்ன பாடம்? நாம் ஒரு பிரச்சினையில் இருக்கும்போது, நாம் என்ன செய்ய வேண்டுமென்று யெகோவா எதிர்பார்க்கிறார் என்பதை முதலில் தெரிந்துகொள்ள வேண்டும். அதற்குப் பிறகுதான், தீர்மானம் எடுக்க வேண்டும்.
17 தீர்மானம் எடுப்பதற்கு முன்பு, எந்த பைபிள் நியமங்கள் நமக்கு உதவும் என்றும், அதை நம்முடைய வாழ்க்கையில் எப்படிக் கடைப்பிடிக்கலாம் என்றும் நாம் யோசித்துப் பார்க்க வேண்டும். சில சமயங்களில், நம்முடைய பிரசுரங்களை வைத்து நாம் இன்னும் கூடுதலாக ஆராய்ச்சி செய்ய வேண்டியிருக்கலாம். அல்லது ஒரு மூப்பரிடம் ஆலோசனை கேட்க வேண்டியிருக்கலாம். அப்போது, வேறு சில பைபிள் நியமங்களையும் யோசித்துப் பார்க்க அந்த மூப்பர் உதவுவார். இப்போது இதைக் கற்பனை செய்து பாருங்கள்: ஒரு சகோதரி, குறிப்பிட்ட ஒரு நாளில் ஊழியத்துக்குப் போகலாம் என்று நினைக்கிறார். (அப். 4:20) ஆனால், யெகோவாவின் சாட்சியாக இல்லாத அவருடைய கணவர், அன்று ஊழியத்துக்குப் போக வேண்டாம் என்று சொல்கிறார். இரண்டு பேரும் நேரம் செலவு செய்து ரொம்ப நாட்கள் ஆகிவிட்டதாகவும், அதனால் அவரை வெளியே கூட்டிக்கொண்டு போக ஆசைப்படுவதாகவும் அவர் சொல்கிறார். இப்போது, ஞானமான ஒரு தீர்மானம் எடுப்பதற்காக அந்தச் சகோதரி பைபிள் வசனங்களை எடுத்துப் பார்க்க வேண்டும். கடவுளுக்குக் கீழ்ப்படிய வேண்டும் என்பதை அந்தச் சகோதரி யோசித்துப் பார்க்க வேண்டும். அதோடு, சீஷர்களை உருவாக்க வேண்டுமென்ற இயேசுவின் கட்டளையையும் அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். (மத். 28:19, 20; அப். 5:29) அதுமட்டுமல்ல, மனைவி கணவனுக்குக் கட்டுப்பட வேண்டும் என்பதையும், வளைந்துகொடுக்க வேண்டும் என்பதையும் அவர் யோசித்துப் பார்க்க வேண்டும். (எபே. 5:22-24; பிலி. 4:5) அந்தச் சகோதரியின் கணவர், தன்னுடைய மனைவி ஊழியத்துக்கே போகக் கூடாது என்று சொல்கிறாரா, அல்லது அந்த ஒருநாள் மட்டும் மனைவியோடு சேர்ந்து நேரம் செலவு செய்ய வேண்டும் என்று ஆசைப்படுகிறாரா? யெகோவாவின் ஊழியர்களான நாம், வளைந்துகொடுப்பவர்களாகவும், யெகோவாவைப் பிரியப்படுத்தும் விதத்தில் தீர்மானங்கள் எடுப்பவர்களாகவும் இருக்க வேண்டும்.
ஜூன் 26–ஜூலை 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | எஸ்றா 1-3
“யெகோவா உங்களைப் பயன்படுத்துவதற்கு இடம்கொடுங்கள்”
சகரியா பார்த்ததை நீங்களும் பார்க்கிறீர்களா?
நிறைய வருஷங்களாக பாபிலோனில் அடிமைகளாக இருந்த யூதர்கள் சந்தோஷத்தின் உச்சிக்கே போய்விட்டார்கள். ஏனென்றால், அவர்களை விடுதலை செய்ய பெர்சிய ராஜாவான “கோரேசின் மனதை யெகோவா தூண்டினார்.” யூதர்கள் தங்களுடைய தாய்நாட்டுக்குத் திரும்பிப் போய், ‘இஸ்ரவேலின் கடவுளாகிய யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டலாம்’ என்று ராஜா அறிவிப்பு செய்தார். (எஸ்றா 1:1, 3) இந்த அறிவிப்பைக் கேட்டபோது அவர்களுக்கு எவ்வளவு சந்தோஷமாக இருந்திருக்கும்! ராஜா இப்படி அறிவிப்பு செய்ததால் கடவுள் கொடுத்த தேசத்துக்குப் போய்த் திரும்பவும் அவர்களால் அவரை வணங்க முடியும்.
ரதங்களும் கிரீடமும் உங்களைப் பாதுகாக்கின்றன
2 எருசலேமுக்குத் திரும்பி வந்திருந்த யூதர்கள் யெகோவாவின் வணக்கத்தார் என்பது சகரியாவுக்குத் தெரிந்திருந்தது. பாபிலோனில் இருந்த தங்கள் வீட்டையும் தொழிலையும் விட்டுவரும்படி ‘அவர்களுடைய மனதை உண்மைக் கடவுள் தூண்டியிருந்தார்.’ (எஸ்றா 1:2, 3, 5) நன்றாகப் பழக்கப்பட்ட தேசத்தை விட்டுவிட்டு அவர்கள் வந்திருந்தார்கள், அதுவும் அவர்களில் பெரும்பாலானவர்கள் அதுவரை எருசலேமைப் பார்த்ததே இல்லை. யெகோவாவின் ஆலயத்தைத் திரும்பக் கட்டுவதை அந்த யூதர்கள் அவ்வளவு முக்கியமாக நினைத்ததால்தான், கிட்டத்தட்ட 1,600 கிலோமீட்டர் (1,000 மைல்) தூரத்துக்குக் கரடுமுரடான, ஆபத்தான பாதையில் பயணம் செய்து வந்திருந்தார்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
எஸ்றா புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
1:3-6. பாபிலோனிலேயே தங்கிவிட்ட சில இஸ்ரவேலரைப் போல, அநேக யெகோவாவின் சாட்சிகளால் முழுநேர ஊழியத்திலோ தேவை அதிகமுள்ள இடங்களிலோ சேவை செய்ய முடிவதில்லை. இருந்தாலும், அவ்வாறு செய்ய முடிகிறவர்களை அவர்கள் ஆதரித்து ஊக்குவிக்கிறார்கள்; ராஜ்ய பிரசங்க வேலையையும் சீஷராக்கும் வேலையையும் முன்னேற்றுவிக்க மனமுவந்து நன்கொடைகளையும் கொடுக்கிறார்கள்.