வாழ்க்கையும் ஊழியமும் கூட்டத்துக்குத் தயாரிக்க தேவையான தகவல்கள்
© 2022 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
மார்ச் 6-12
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 23-26
“ஆலயத்தில் வழிபாடு நன்றாக ஒழுங்கமைக்கப்படுகிறது”
it-2-E பக். 241
லேவியர்கள்
தாவீதின் காலத்தில் லேவியர்களின் வேலை நன்றாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தது. அவர் லேவியர்களை மேற்பார்வையாளர்களாக, அதிகாரிகளாக, நீதிபதிகளாக, வாயிற்காவலர்களாக, பொக்கிஷ அரை அதிகாரிகளாக நியமித்தார். ஆலயத்தில் இருந்த குருமார்களுக்கு உதவி செய்வதற்கும் நிறைய லேவியர்கள் நியமிக்கப்பட்டார்கள். அவர்கள் பிரகாரங்களிலும் சாப்பாட்டு அரைகளிலும் இருந்த வேலைகளை செய்தார்கள். அதாவது, பலி செலுத்துவதற்கு உதவுவது, சுத்திகரிப்பு வேலையை செய்வது, எடை போடுவது, அளப்பது, வித்தியாசமான காவல் வேலைகளை செய்வது என நிறைய வேலைகளைச் செய்தார்கள். குருத்துவ பிரிவுகளைப் போலவே இசைக் கலைஞர்களாக இருந்த லேவியர்களும் 24 தொகுதிகளாக ஒழுங்கமைக்கப்பட்டிருந்தார்கள். இந்தத் தொகுதிகள் மாறி மாறி வேலை செய்தார்கள். குறிப்பிட்ட சில வேலைகளை யார் செய்ய வேண்டும் என்பதை குலுக்கல் முறையில் தேர்ந்தெடுத்தார்கள்.—1நா 23; 25; 26; 2நா 35:3-5, 10.
it-2-E பக். 686
குருமார்கள்
சில குருமார்கள் அதிகாரிகளாக நியமிக்கப்பட்டார்கள். மற்ற குருமார்களுடைய வேலைகளை அவர்கள் மேற்பார்வை செய்தார்கள். குறிப்பிட்ட சில வேலைகளை செய்வதற்கு குலுக்கல் போடப்பட்டது. குருமார்கள் 24 தொகுதிகளாக பிரிக்கப்பட்டிருந்தார்கள். வருடத்தில் இரண்டு முறை அவர்களுக்கு சேவை செய்யும் வாய்ப்பு கிடைக்கும். ஒவ்வொரு முறையும் அவர்கள் ஒரு வாரத்துக்கு சேவை செய்வார்கள். ஆனால், பண்டிகை காலங்களில் எல்லா குருமார்களும் சேவை செய்வார்கள். ஏனென்றால், மக்கள் அந்த சமயத்தில் ஆயிரக்கணக்கான பலிகளை செலுத்துவார்கள்.—1நா 24:1-18, 31; 2நா 5:11; 2நா 29:31-35-ஐயும் 30:23-25-ஐயும் 35:10-19-ஐயும் ஒப்பிட்டுப் பாருங்கள்.
யெகோவாவுக்குத் துதிகளைப் பாடுங்கள்
உண்மையில், 4,000 லேவியர்கள் இசைப்பணிக்காக ஒதுக்கி வைக்கப்படும் அளவிற்கு, பாடுவது ஆலயத்தில் வணக்கத்தின் முக்கியமான ஒரு பாகமாக இருந்தது. (1 நாளாகமம் 23:4, 5) இவர்கள் பாடகர்களுடன் சேர்ந்துகொள்வார்கள். இசை, விசேஷமாக பாடகர்கள், வணக்கத்தில் ஒரு முக்கிய பாகத்தை வகித்தனர்; நியாயப்பிரமாணத்தின் அதிமுக்கியமான காரியங்களைப் புகட்டவேண்டும் என்பதற்காகவே அல்ல, ஆனால் வணக்கத்திற்குச் சரியான உணர்வைக் கொடுப்பதற்காகவே. இஸ்ரவேலர் யெகோவாவை ஊக்கத்துடன் வணங்க அது உதவியது. இந்த அம்சத்திற்கென்று கொடுக்கப்பட்ட தயாரிப்பையும் விவரமான கவனிப்பையும் கவனியுங்கள்: “கர்த்தரைப் பாடும் பாட்டுகளைக் கற்றுக்கொண்டு, நிபுணரான தங்கள் சகோதரரோடுங்கூட அவர்கள் இலக்கத்திற்கு இருநூற்றெண்பத்தெட்டுப்பேராயிருந்தார்கள்.” (1 நாளாகமம் 25:7) அவர்கள் யெகோவாவுக்குத் துதி பாடுவதை எவ்வளவு கருத்தூன்றியதாக எடுத்துக்கொண்டார்கள் என்பதைக் கவனியுங்கள். அவர்கள் பாடலில் பயிற்சிபெற்றவர்களாகவும் நிபுணர்களாகவும் இருந்தார்கள்!
it-1-E பக். 898
வாயிற்காவலர்கள்
ஆலயத்தில். தாவீது ராஜா ஆட்சி செய்த சமயத்தில், கிட்டத்தட்ட 4000 வாயிற்காவலர்கள் இருந்தார்கள். அவர்களின் ஒவ்வொரு தொகுதியும் ஏழு நாட்களுக்கு வேலை செய்தது. யெகோவாவின் ஆலயத்தை பாதுகாக்கும் பொறுப்பு அவர்களுக்கு இருந்தது. சரியான நேரத்தில் அவர்கள் ஆலயக் கதவுகளை திறந்து மூடினார்கள். (1நா 9:23-27; 23:1-6) காவல் காக்கிற வேலை மட்டுமில்லாமல், சில வாயிற்காவலர்கள் மக்கள் கொண்டுவந்த காணிக்கைகளையும் வாங்கி வைத்தார்கள். (2ரா 12:9; 22:4) கொஞ்சக் காலத்துக்கு பிறகு, பொல்லாத ராணி அத்தாலியாளிடமிருந்து இளம் யோவாஸை பாதுகாப்பதற்காக சிறப்பு காவல்படை ஆலயக் கதவுகளில் காவலுக்கு நிறுத்தப்பட்டது. (2ரா 11:4-8) யோசியா ராஜாவின் ஆட்சியில் சிலைகள் அழிக்கப்பட்ட சமயத்தில், பாகால் வணக்கத்தோடு சம்பந்தப்பட்ட பொருள்களை ஆலயத்திலிருந்து எடுத்துப்போடுவதற்கு காவலர்கள் உதவி செய்தார்கள்.—2ரா 23:4.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
யெகோவாவை வணங்கும்போது உங்கள் சந்தோஷம் அதிகமாகும்
10 சகோதர சகோதரிகளோடு சேர்ந்து பாடல்களைப் பாடும்போது நாம் யெகோவாவை வணங்குகிறோம். (சங். 28:7) பாடல்கள் பாடுவதை வணக்கத்தின் ஒரு முக்கிய பாகமாக இஸ்ரவேலர்கள் நினைத்தார்கள். ஆலயத்தில், பாடல்களைப் பாடுவதற்கு 288 லேவியர்களை தாவீது ராஜா நியமித்தார். (1 நா. 25:1, 6-8) இன்றைக்கு நாமும் யெகோவாவைப் புகழ்ந்து பாட்டுப் பாடுவதன் மூலமாக அவர்மேல் வைத்திருக்கிற அன்பைக் காட்டலாம். பாட்டுப் பாடுவதற்கு இனிமையான குரல் இருக்க வேண்டும் என்ற அவசியமில்லை. இதைக் கொஞ்சம் யோசித்துப்பாருங்கள். பேசும்போது, “நாம் எல்லாரும் பல தடவை தவறு செய்கிறோம்.” (யாக். 3:2) அதற்காக நாம் சபையிலோ ஊழியத்திலோ பேசாமல் இருப்பதில்லை. அதே மாதிரி நமக்கு சரியாகப் பாட வரவில்லை என்றால்கூட, நாம் தயங்க வேண்டியதில்லை. தாராளமாக யெகோவாவைப் புகழ்ந்து பாடலாம்.
மார்ச் 13-19
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 1 நாளாகமம் 27-29
“ஒரு அப்பா தன் மகனுக்கு கொடுத்த ஆலோசனை”
நம் கிறிஸ்தவ அடையாளத்தைக் காத்துக்கொள்ளுதல்
9 பைபிள் சத்தியத்தை உங்களுக்கு நீங்களே உறுதிப்படுத்திக் கொள்ளுங்கள். யெகோவாவின் ஊழியர்களாக பைபிள் அறிவின் அடிப்படையில் நம் அடையாளத்தை மனதில் ஆழமாகப் பதிய வைக்காவிட்டால் அது படிப்படியாக மறைந்துவிடலாம். (பிலிப்பியர் 1:9, 11) இளைஞரோ, முதியவரோ, கிறிஸ்தவர்கள் ஒவ்வொருவருமே, தங்களுடைய நம்பிக்கை பைபிள் சத்தியத்தின் அடிப்படையிலானது என்பதை முழுமையாக உறுதிப்படுத்திக்கொள்வது அவசியம். சக விசுவாசிகளை பவுல் இவ்வாறு அறிவுறுத்தினார்: “எல்லாவற்றையும் நிச்சயப்படுத்திக்கொள்ளுங்கள்; நலமானதைப் பற்றிக்கொள்ளுங்கள்.” (1 தெசலோனிக்கேயர் 5:21, NW) தெய்வ பயமுள்ள குடும்பங்களில் வளரும் இளைஞர்கள், பெற்றோரின் விசுவாசத்தின் அடிப்படையில் அவர்களும் உண்மையான கிறிஸ்தவர்களாகிவிட முடியாது என்பதை அறிந்துகொள்ள வேண்டும். சாலொமோனின் தகப்பனாகிய தாவீது அவரிடம், ‘உன் பிதாவின் தேவனை அறிந்து அவரை உத்தம இருதயத்தோடு சேவி’ என அறிவுரை கூறினார். (1 நாளாகமம் 28:9) தன்னுடைய தகப்பன் எப்படி யெகோவாவில் விசுவாசத்தை வளர்த்தார் என்பதை கவனிப்பது மட்டுமே இளைஞராய் இருந்த சாலொமோனுக்குப் போதுமானதாக இருக்கவில்லை. யெகோவாவைப் பற்றி அறிந்துகொள்ள அவராகவே முயற்சி எடுக்க வேண்டியிருந்தது, அவர் அதைச் செய்தார். கடவுளிடம் அவர் இவ்வாறு மன்றாடினார்: “இப்போதும் நான் இந்த ஜனத்திற்கு முன்பாகப் போக்கும் வரத்துமாயிருக்கத்தக்க ஞானத்தையும் அறிவையும் எனக்குத் தந்தருளும்.”—2 நாளாகமம் 1:10.
யெகோவாவுக்கு எப்போதும் முழு இருதயத்தோடு சேவை செய்யுங்கள்
13 இயேசுவின் உவமை கற்பிக்கும் பாடம் தெளிவாகப் புரிகிறது. சபைக் கூட்டங்களுக்குச் செல்வது, வெளி ஊழியத்தில் ஈடுபடுவது போன்ற சந்தோஷமும் திருப்தியும் தருகிற காரியங்களில் நாம் தவறாமல் ஈடுபடுகிறோம் என்றால் அது பாராட்டுக்குரியது. ஆனால், யெகோவாவுக்கு முழு இருதயத்தோடு சேவை செய்வதில் இவை மட்டுமல்ல, இன்னும் நிறைய உட்பட்டுள்ளன. (2 நா. 25:1, 2, 27) ஒரு கிறிஸ்தவர் ‘பின்னால் இருப்பவற்றை’ பற்றி, அதாவது இந்த உலகத்தின் சில காரியங்களைப் பற்றி, இன்னும் ஆசை ஆசையாய் நினைத்துப் பார்த்துக்கொண்டிருந்தால் கடவுளோடு தனக்குள்ள நல்லுறவை இழந்துவிடலாம். (லூக். 17:32) ‘பொல்லாததை அறவே வெறுத்து, நல்லதை இறுகப் பற்றிக்கொண்டால்’ மட்டுமே ‘கடவுளுடைய அரசாங்கத்திற்கு நாம் தகுதி உள்ளவர்களாய்’ இருப்போம். (ரோ. 12:9; லூக். 9:62) எனவே, சாத்தானின் உலகத்திலுள்ள எதுவும்—அது எத்தனை பயனுள்ளதாக, இன்பம் அளிப்பதாகத் தோன்றினாலும்—கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்ட காரியங்களில் நாம் முழு இருதயத்தோடு ஈடுபடுவதற்குத் தடையாக இருக்க ஒருபோதும் அனுமதிக்காதிருப்போமாக!—2 கொ. 11:14; பிலிப்பியர் 3:13, 14-ஐ வாசியுங்கள்.
‘தைரியமாக . . . செயல்படுங்கள்’
20 ஆலயத்தைக் கட்டி முடிக்கும்வரை யெகோவா சாலொமோனோடு இருப்பார் என்று தாவீது ராஜா அவருக்கு ஞாபகப்படுத்தினார். (1 நா. 28:20) சாலொமோன் கண்டிப்பாக அந்த வார்த்தைகளைத் தியானித்துப் பார்த்திருப்பார். அதனால், தனக்கு வயதும் அனுபவமும் போதாது என்று சொல்லிக்கொண்டு அவர் அந்த வேலையைச் செய்யாமல் இருக்கவில்லை. அதற்குப் பதிலாக, மிகுந்த தைரியத்தைக் காட்டினார். யெகோவாவின் உதவியோடு, அந்தப் பிரமாண்டமான ஆலயத்தை ஏழரை வருஷங்களில் கட்டி முடித்தார்.
21 யெகோவா சாலொமோனுக்கு உதவியது போலவே நமக்கும் உதவுவார். குடும்பத்திலும் சரி, சபையிலும் சரி, தைரியத்தைக் காட்டுவதற்கும் நம் வேலையைச் செய்து முடிப்பதற்கும் அவர் நமக்கு உதவுவார். (ஏசா. 41:10, 13) நாம் தைரியத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யும்போது, இப்போதும் எதிர்காலத்திலும் அவர் நம்மை ஆசீர்வதிப்பார் என்பது உறுதி! அதனால், ‘தைரியமாக . . . செயல்படுங்கள்.’
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
நட்பில் விரிசல் ஏற்படும்போது நீங்கள் ஒரு நல்ல நண்பராக இருப்பீர்களா?
தாவீது கஷ்டப்பட்டபோது, சில நண்பர்கள் அவருக்கு உண்மையாக இருந்தார்கள். அவர்களில் ஒருவர்தான் ஊசாய்; பைபிள் இவரை ‘தாவீதின் நண்பர்’ என்று சொல்கிறது. (2 சா. 16:16; 1 நா. 27:33) அவர் அரண்மனை அதிகாரியாகவும், தாவீது ராஜாவின் நெருங்கிய நண்பராகவும் இருந்திருக்கலாம். சில சமயங்களில், ராஜாவின் ரகசிய கட்டளைகளை அவர்தான் நிறைவேற்றினார்.
தாவீதின் மகன் அப்சலோம் ஆட்சியைப் பறித்தபோது, நிறைய இஸ்ரவேலர்கள் அவன் பக்கம் சேர்ந்துகொண்டார்கள். ஆனால், ஊசாய் அவனோடு சேரவில்லை. தாவீது தப்பித்து ஓடியபோது, ஊசாயும் அவரோடு போனார். சொந்த மகனும், நெருக்கமான சிலரும் தனக்குத் துரோகம் செய்ததால், தாவீது ரொம்பவே மனம் உடைந்து போயிருந்தார். ஆனாலும், ஊசாய் தாவீதுக்கு உண்மையாக இருந்தார். தாவீதுக்கு எதிரான சதித்திட்டத்தை முறியடிக்க, தன்னுடைய உயிரையே பணயம் வைக்கத் தயாராக இருந்தார். தான் ஒரு அரண்மனை அதிகாரி என்பதாலும், வெறும் கடமை உணர்ச்சியாலும் அவர் அப்படிச் செய்யவில்லை. உண்மையான நண்பராக இருந்ததால்தான் அவர் அப்படிச் செய்தார்.—2 சா. 15:13-17, 32-37; 16:15–17:16.
மார்ச் 20-26
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 1-4
“சாலொமோன் ராஜா முட்டாள்தனமான முடிவை எடுக்கிறார்”
it-1-E பக். 174 பாரா 5
படை
இஸ்ரவேல் படையில் ஏராளமான குதிரைகளையும் ரதங்களையும் வாங்கிக் குவித்த முதல் ராஜா சாலொமோன்தான்! அவரிடம் இருந்த பெரும்பாலான குதிரைகள் எகிப்திலிருந்து வர வைக்கப்பட்டன. இந்த குதிரைகளையும் ரதங்களையும் பராமரிப்பதற்கே இஸ்ரவேல் முழுவதும் நிறைய நகரங்கள் கட்டப்பட வேண்டியிருந்தது. அந்தளவுக்கு அவரிடம் குதிரைகளும் ரதங்களும் இருந்தன! (1ரா 4:26; 9:19; 10:26, 29; 2நா 1:14-17) இருந்தாலும், அவருடைய இந்த போர் யுக்தியை யெகோவா ஆசீர்வதிக்கவே இல்லை.—ஏசா 31:1.
it-1-E பக். 427
ரதம்
சாலொமோனுடைய ஆட்சிக்கு முன்பு இஸ்ரவேல் படையில் இவ்வளவு ரதங்கள் இருந்ததே இல்லை! அதற்கு காரணம், ராஜாக்கள் நிறைய குதிரைகள் வைத்திருக்கக்கூடாது என்று யெகோவா கொடுத்திருந்த எச்சரிப்புதான். ஏனென்றால், ராஜா நிறைய குதிரைகளை வாங்கிக் குவித்தால் தேசத்தின் பாதுகாப்பிற்காக அவர் குதிரைகளை நம்பியிருப்பது போல் ஆகிவிடும். குதிரைகள் குறைவாக இருந்தால் ரதங்களும் குறைவாக இருக்கும். ஏனென்றால், குதிரைகளைப் பயன்படுத்திதான் ரதங்களை ஓட்டினார்கள்.—உபா 17:16.
சாலொமோன் ராஜா இஸ்ரவேல் படையை பெரிதாக்கியபோது நிறைய ரதங்களை அதில் சேர்த்துக்கொண்டார். அவர் 1400 ரதங்களை வைத்திருந்தார். (1ரா 10:26, 29; 2நா 1:14, 17) எருசலேமும் வேறு சில நகரங்களும் ‘ரதங்களுக்கான நகரங்கள்’ என அழைக்கப்பட்டன. ஏனென்றால், அந்த குதிரைகளை கவனித்துக்கொள்வதற்கும் ரதங்களை பராமரிப்பதற்கும் தேவையான எல்லாமே அங்கு இருந்தன.—1ரா 9:19, 22; 2நா 8:6, 9; 9:25.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
இரண்டு நாளாகம புத்தகத்திலிருந்து சிறப்பு குறிப்புகள்
1:11, 12. ஞானத்தையும் அறிவையும் பெறுவதற்கு இருதயப்பூர்வமான ஆசை சாலொமோனுக்கு இருந்ததை அவருடைய விண்ணப்பத்தின் மூலம் யெகோவா அறிந்துகொண்டார். நம்முடைய ஜெபங்களும்கூட இருதயத்திலிருப்பதை வெளிப்படுத்துகிறது. ஆகவே, ஜெபத்தில் எதைக் கேட்கிறோம் என்பதைச் சிந்தித்துப் பார்ப்பது ஞானமானது.
மார்ச் 27–ஏப்ரல் 2
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 5-7
“என் இதயம் எப்போதும் இங்கேதான் இருக்கும்”
ஒன்றுகூடி வருவதை விட்டுவிடாதிருங்கள்
பிற்பாடு, எருசலேமில் தாவீது ராஜாவாக இருந்தபோது, யெகோவாவுக்கு மகிமையாக நிரந்தரமான ஒரு வீட்டைக் கட்ட வேண்டும் என்ற மிகுந்த ஆசையை அவர் தெரிவித்தார். ஆனால் தாவீது யுத்த வீரராக இருந்ததால், யெகோவா அவரிடம், “நீ என் நாமத்திற்கு ஆலயத்தைக் கட்ட வேண்டாம்” என கூறினார். மாறாக, ஆலயம் கட்டுவதற்கு தாவீதின் குமாரனாகிய சாலொமோனை தேர்ந்தெடுத்தார். (1 நாளாகமம் 22:6-10) ஏழரை ஆண்டுகால கட்டுமானத்திற்குப் பிறகு, பொ.ச.மு. 1026-ல் அந்த ஆலயத்தை சாலொமோன் திறந்து வைத்தார். யெகோவா இந்தக் கட்டடத்தை அங்கீகரித்து, “நீ கட்டின இந்த ஆலயத்தில் என் நாமம் என்றைக்கும் விளங்கத்தக்கதாக, அதைப் பரிசுத்தமாக்கினேன்; என் கண்களும் என் இருதயமும் எந்நாளும் அங்கேயிருக்கும்” என்று கூறினார். (1 இராஜாக்கள் 9:3) இஸ்ரவேலர் உண்மைத்தன்மையுடன் நிலைத்திருக்கும் வரையில், அந்த வீட்டின் மீது யெகோவா தமது தயவை காட்டுவார். அவர்கள் நெறிபிறழ்கையிலோ அந்த இடத்திலிருந்து தமது தயவை விலக்கிவிடுவார், அந்தக் “கோவில் இடிந்த கற்குவியல் ஆகும்.”—1 இராஜாக்கள் 9:4-9, பொ.மொ.; 2 நாளாகமம் 7:16, 19, 20.
it-2-E பக். 1077-1078
ஆலயம்
வரலாறு. இஸ்ரவேலர்கள் யெகோவாவைவிட்டு வழிதவறிப் போனபோது மற்ற தேசத்து மக்கள் ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களை சூறையாடுவதற்கு யெகோவா அனுமதித்தார். உதாரணத்துக்கு, எகிப்தின் ராஜா சீஷாக், சாலொமோனுடைய மகன் ரெகொபெயாம் ஆட்சி செய்த காலத்தில் ஆலயத்திலிருந்த பொக்கிஷங்களையெல்லாம் எடுத்துக்கொண்டு போய்விட்டார். (கி.மு. 993) இது ஆலயம் அர்ப்பணிக்கப்பட்டு வெறும் 33 வருஷங்களில் நடந்தது. (1ரா 14:25, 26; 2நா 12:9) கடைசியில், கி.மு. 607-ல் நேபுகாத்நேச்சாருடைய தலைமையில் வந்த பாபிலோனிய படை எருசலேம் ஆலயத்தை முழுவதுமாக அழித்துவிட்டது.—2ரா 25:9; 2நா 36:19; எரே 52:13.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
அவர் ‘மனிதரின் இதயங்களை அறிந்திருக்கிறார்!’
சாலொமோனின் பிரார்த்தனை நமக்கு ஆறுதலின் அருமருந்தாய் இருக்கிறது. நம் உள்ளத்தின் உணர்வுகளை, ஆம், நம்முடைய துன்பத்தையும் ‘மனவேதனையையும்’ மற்றவர்களால் முழுமையாகப் புரிந்துகொள்ள முடியாமல்போகலாம். (நீதிமொழிகள் 14:10) ஆனால், நம் மனதின் ஏக்கங்கள் என்னவென்று யெகோவாவுக்குத் தெரியும்; அவருக்கு நம்மீது மிகுந்த அக்கறை இருக்கிறது. நம் உள்ளத்தில் இருப்பதையெல்லாம் அவரிடம் கொட்டின பிறகு நம் மனப்பாரம் குறைந்துவிடும். அதனால்தான், “உங்கள் கவலைகளையெல்லாம் அவர்மேல் வைத்துவிடுங்கள்” என்று பைபிள் சொல்கிறது. ஏனென்றால், ‘அவர் உங்கள்மீது அக்கறையாக இருக்கிறார்.’—1 பேதுரு 5:7.
ஏப்ரல் 10-16
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 8-9
“அவள் ஞானத்தை பெரிதாக நினைத்தாள்”
தாராளகுணம் ததும்புகையில்
நிச்சயமாகவே, சாலொமோனை சந்திக்க சேபாவின் ராஜஸ்திரீ நேரத்தையும் முயற்சியையும் தியாகம் செய்தாள். தற்போது ஏமன் குடியரசு என அழைக்கப்படும் பகுதியில் சேபா நாடு இருந்தது. ஆகவே, அந்த ராஜஸ்திரீ எருசலேமுக்கு வருவதற்கு சுமார் 1,600 கிலோமீட்டர் ஒட்டகத்தில் பயணம் செய்திருக்கலாம். “பூமியின் எல்லைகளிலிருந்து வந்தாள்” என இயேசு சொன்னார். ஏன் சேபாவின் ராஜஸ்திரீ இவ்வளவு முயற்சியெடுத்து வந்தாள்? மிக முக்கியமாக ‘சாலொமோனுடைய ஞானத்தைக் கேட்கவே’ அவள் வந்தாள்.—லூக்கா 11:31.
அறிவு தாகத்தை தீர்த்த பயணம்
எப்படியிருந்தாலும் சரி, அந்த ராணி எருசலேமுக்கு “மிகுந்த பரிவாரத்தோடும், கந்தவர்க்கங்களையும், மிகுதியான பொன்னையும் இரத்தினங்களையும் சுமக்கிற ஒட்டகங்களோடும்” வந்து சேர்ந்தாள். (1 இராஜாக்கள் 10:2) ‘பரிவாரம்’ என்று சொல்லப்பட்டதால் அதில் ஆயுதம் தாங்கிய வீரர்களும் இருந்திருக்கவேண்டும் என்பதாக சிலர் சொல்கின்றனர். இவள் செல்வாக்கு மிகுந்த ஒரு ராணி, சாதாரண செல்லாக்காசு அல்ல என்பதாலும், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள பொருட்களோடு பயணம் செய்ததாலும் இத்தனை பரிவாரத்தோடு வந்தாள் என்பதைப் புரிந்துகொள்ளலாம்.
‘யெகோவாவுடைய நாமத்தோடு சம்பந்தப்பட்ட’ சாலொமோனின் புகழை அந்த ராணி கேள்விப்பட்டாள் என்பதை நாம் ஏற்கெனவே கவனித்தோம். ஆகவே, இது ஏதோ ஒரு வியாபார நோக்கத்தோடு செய்யப்பட்ட உப்பு சப்பில்லாத சாதாரண பயணம் என்று நாம் நினைத்துவிட முடியாது. ஆகவே, முக்கியமாக சாலொமோனுடைய ஞானத்தை காதாரக் கேட்பதற்காகவே இந்த ராணி வந்தாள் என்றே அத்தாட்சிகள் காட்டுகின்றன. ஒருவேளை அவருடைய தேவனாகிய யெகோவாவைப் பற்றி தெரிந்துகொள்வதற்காகவும் வந்திருக்கலாம். இவள் சேம் அல்லது காமுடைய வம்சத்தில் வந்திருக்க வேண்டும்; அவர்கள் யெகோவாவை வணங்கியவர்கள், எனவே தன்னுடைய முன்னோரின் மதத்தைப் பற்றி தெரிந்துகொள்ள வேண்டும் என்ற விருப்பமும் அவளுக்கு இருந்திருக்கலாம்.
அறிவு தாகத்தை தீர்த்த பயணம்
சேபாவின் ராணி சாலொமோனுடைய ஞானத்தையும், அவருடைய ஆட்சியில் இருந்த செழிப்பையும் பார்த்தபோது ‘பிரமைகொண்டாள்.’ (1 இராஜாக்கள் 10:4, 5) அந்த ராணி ‘பேச்சற்றுபோனதாக’ சிலர் இந்த வார்த்தைகளுக்கு அர்த்தம் கொள்கின்றனர். ஒரு வல்லுனர் அவள் மயக்கம்போட்டு விழுந்திருக்க வேண்டும் என்பதாக குறிப்பிடுகிறார். என்ன ஆகியிருந்தாலும் சரி, தான் கண்டதையும் கேட்டதையும் வைத்து அந்த ராணி அசந்துபோய்விட்டாள். சாலொமோனுடைய ஊழியர்களெல்லாம் சந்தோஷமானவர்கள் என்பதாக குறிப்பிட்டாள், ஏனெனில் அவர்கள் எப்போதும் ராஜாவுடைய ஞானத்தை கேட்டார்கள். சாலொமோனை அரியணையில் அமரச் செய்ததற்காக அவள் யெகோவாவை துதித்தாள். அதன் பிறகு அவள் விலையுயர்ந்த பரிசுகளை ராஜாவுக்கு அளித்தாள்; பொன்னின் மதிப்பு மட்டுமே இப்போதைய மதிப்பின்படி சுமார் 4,00,00,000 டாலர். சாலொமோனும் அந்த ராணிக்கு பரிசுகளை அளித்து, ‘அவள் விரும்பி கேட்டவற்றையெல்லாம் கொடுத்தார்.’—1 அரசர் 10:6-13.
w95 9/1 பக். 11 பாரா 12
பொய்க் கடவுட்களுக்கு எதிராக சாட்சிகள்
சாலொமோனைக் காண வந்தோரில் ஒரு பிரதான நபர் சேபாவின் அரசி. அத்தேசத்தின் மீதும் அதன் ராஜாவின் மீதும் இருந்த யெகோவாவின் ஆசீர்வாதத்தை கண்கூடாகக் கண்டபிறகு, அவள் சொன்னதாவது: “உமது கடவுளாகிய யெகோவாவுக்கு முன்பாக நீர் ராஜாவாயிருக்கும்படி உம்மைத் தமது சிங்காசனத்தின் மேல் வீற்றிருக்கப்பண்ண உம்மில் பிரியங்கொண்ட உமது கடவுளாகிய யெகோவா புகழப்படுவாராக; உமது கடவுள் இஸ்ரவேலை என்றும் நிலைநிறுத்தும்படி நேசிக்கிறபடியினால் அவர் நியாயமும் நீதியும் செய்கிறதற்கு உம்மை அவர்கள்மேல் ராஜாவாக ஏற்படுத்தினார்.”—2 நாளாகமம் 9:8, தி.மொ.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-2-E பக். 1097
சிம்மாசனம்
இஸ்ரவேலை ஆட்சி செய்த ராஜாக்களுடைய சிம்மாசனங்களிலேயே, சாலொமோனுடைய சிம்மாசனத்தைப் பற்றிதான் பைபிள் விவரமாக சொல்கிறது. (1ரா 10:18-20; 2நா 9:17-19) சிம்மாசனத்துக்கு எறிப் போக ஆறு படிகள் இருந்தன என்று சொன்ன பிறகு, பைபிள் இப்படித் தொடர்ந்து விளக்குகிறது: “ஒவ்வொரு கைப்பிடியின் பக்கத்திலும் ஒரு சிங்க உருவம் வைக்கப்பட்டிருந்தது. அதோடு, ஆறு படிக்கட்டுகளிலும் இந்தப் பக்கம் ஒரு சிங்கம், அந்தப் பக்கம் ஒரு சிங்கம் என மொத்தம் 12 சிங்க உருவங்கள் வைக்கப்பட்டிருந்தன.” (2நா 9:17-19) ராஜாவாக சாலொமோனுக்கு இருந்த அதிகாரத்தை இந்த சிங்கங்கள் அடையாளப்படுத்தின. (ஆதி 49:9, 10; வெளி 5:5) 12 சிங்கங்கள் 12 இஸ்ரவேல் கோத்திரங்களை குறித்திருக்கலாம். அந்த சிம்மாசனத்தில் உட்கார்ந்து ஆட்சி செய்யும் ராஜாவை எல்லாரும் ஆதரிப்பதை அது அர்த்தப்படுத்தியிருக்கலாம்.
ஏப்ரல் 17-23
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 10-12
“ஞானமான ஆலோசனையில் இருந்து நன்மையடையுங்கள்”
கடவுளின் தயவைப் பெற்றுக்கொள்ள அவர் முயற்சி செய்திருக்கலாம்!
அப்போது, என்ன செய்வதென்று தீர்மானிப்பது ரெகொபெயாமுக்குக் கஷ்டமாக இருந்தது. ஏனென்றால், மக்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றினால், அவரும் அவருடைய குடும்பத்தாரும் அவருடைய அரண்மனையில் இருப்பவர்களும் சில சௌகரியங்களை விட்டுக்கொடுக்க வேண்டியிருக்கும். மக்களின் வேண்டுகோளை நிராகரித்தால், ஒருவேளை அவர்கள் கலகம் செய்யலாம். அதனால் அவர் என்ன செய்தார்? தன்னுடைய அப்பாவுக்கு ஆலோசகர்களாக இருந்த பெரியவர்களிடம் முதலில் இதைப் பற்றிப் பேசினார். மக்களுடைய வேண்டுகோளை நிறைவேற்றும்படி அவர்கள் சொன்னார்கள். பிறகு, தன் வயதிலிருந்தவர்களிடம் பேசிவிட்டு, மக்களைக் கடுமையாக நடத்துவதென்று தீர்மானித்தார். “என் அப்பா உங்கள்மீது பாரமான சுமையைச் சுமத்தினார், நான் அதைவிட பாரமான சுமையை உங்கள்மீது சுமத்துவேன்; என் அப்பா உங்களைச் சாட்டையால் அடித்தார், நான் முள்சாட்டையால் அடிப்பேன்” என்று அந்த மக்களிடம் சொன்னார்.—2 நா. 10:6-14.
ஞானமான தீர்மானங்களை நீங்கள் எப்படி செய்யலாம்
சபையில் முதிர்ச்சியுள்ளவர்களையும் நமக்கு யெகோவா அளித்திருக்கிறார். நம் தீர்மானங்களைக் குறித்து அவர்களுடன் கலந்து பேசலாம். (எபேசியர் 4:12, 13) எனினும், மற்றவர்களின் ஆலோசனையைக் கேட்கையில், தாங்கள் எடுக்க விரும்பும் தீர்மானத்தை ஆமோதிப்பவரைக் கண்டுபிடிக்கும் வரை ஒவ்வொருவராக அணுகிக் கொண்டிருப்போரைப் போல் நாம் இருக்கக் கூடாது. அப்படிப்பட்டவர்கள் தங்கள் தீர்மானத்தை ஆமோதிப்பவரின் புத்திமதியைத்தான் பின்பற்றுவார்கள். ரெகொபெயாமின் முன்மாதிரியையும் ஒரு படிப்பினையாக மனதிற்கொள்ள வேண்டும். முக்கிய தீர்மானத்தை எடுக்க வேண்டிய கட்டத்தில் அவன் தன் தகப்பனோடு ஊழியம் செய்திருந்த முதியோரிடமிருந்து சிறந்த ஆலோசனையைப் பெற்றான். ஆனால் அவர்களுடைய ஆலோசனையைப் பின்பற்றாமல் தன் வயதுள்ள வாலிபரிடம் ஆலோசனை கேட்டான். அந்த ஆலோசனைக்கு இசைவாக துளிகூட ஞானமில்லாத தீர்மானத்தையே செய்தான். விளைவு? ராஜ்யத்தில் பெரும் பாகத்தை இழந்தான்.—1 இராஜாக்கள் 12:1-17.
வாழ்க்கையில் அனுபவ பாடம் பயின்றவர்களிடமும் வேதவசனங்களைப் பற்றி நன்றாய் அறிந்திருப்பவர்களிடமும், சரியான நியமங்களுக்கு ஆழ்ந்த மரியாதை காட்டுகிறவர்களிடமும் ஆலோசனையை நாடுங்கள். (நீதிமொழிகள் 1:5; 11:14; 13:20) முடிந்தால், உட்பட்டுள்ள நியமங்களையும் நீங்கள் சேகரித்த எல்லா தகவல்களையும் குறித்து ஆழ்ந்து யோசிக்க நேரமெடுங்கள். யெகோவாவினுடைய வார்த்தையின் அடிப்படையில் காரியங்களை ஆராய்கையில் சரியான தீர்மானம் தெள்ளத் தெளிவாய் தெரியலாம்.—பிலிப்பியர் 4:6, 7.
it-2-E பக். 768 பாரா 1
ரெகொபெயாம்
ரெகொபெயாம் திமிர் பிடித்தவராக இருந்தார். மற்றவர்களுடைய உணர்வுகளுக்கு அவர் சுத்தமாக மதிப்பு கொடுக்கவில்லை. அதனால், மக்களுடைய ஆதரவை அவர் இழந்துவிட்டார். யூதா மற்றும் பென்யமீன் கோத்திரங்கள் மட்டும்தான் அவருக்கு ஆதரவு கொடுத்தன. அவற்றோடு சேர்ந்து, இரண்டு ராஜ்யங்களை சேர்ந்த குருமார்களும் லேவியர்களும், பத்து கோத்திரத்தை சேர்ந்த சில ஆட்களும் அவருக்கு ஆதரவு கொடுத்தார்கள்.—1ரா 12:16, 17; 2நா 10:16, 17; 11:13, 14, 16.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
it-1-E பக். 966-967
‘ஆட்டு உருவப் பேய்கள்’
எகிப்தில் இருந்த பொய் மதத்தின் சுவடுகள் இஸ்ரவேலர்கள்மேல் இருந்ததை யோசுவா 24:14 காட்டுகிறது. (எசே 23:8, 21) யெரொபெயாமின் காலத்தில், ‘ஆட்டு உருவப் பேய்கள்’ இருந்தன என்று சொல்லியிருப்பது, இஸ்ரவேலர்கள் மத்தியில் ஆட்டு உருவத்தின் வழிபாடு இருந்ததை காட்டுகிறது என்று சில அறிஞர்கள் நம்புகிறார்கள். எகிப்தியர்கள் செய்ததைப் போலவே இஸ்ரவேலர்களும் இந்த வணக்கத்தை செய்திருக்கலாம் என்றும் அவர்கள் நினைக்கிறார்கள்.—2நா 11:15.
இருந்தாலும், ‘ஆட்டு உருவப் பேய்கள்’ என்ற வார்த்தைக்கான உண்மையான அர்த்தம் நமக்கு தெளிவாக தெரியவில்லை. ஒருவேளை, பொய் தெய்வங்களை வணங்கிய மக்களின் மனதில், அந்த தெய்வங்களின் உருவம் ஆடுகளின் உருவத்தைப் போல் இருந்திருக்கலாம் என்பதை இந்த வார்த்தை காட்டலாம். அல்லது, பொதுவாக எல்லா சிலைகளின்மேலும் இருந்த வெறுப்பைக் காட்டுவதற்காக இந்த பதிவுகளில் ‘வெள்ளாடுகள்’ என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டிருக்கலாம். இப்படி சொல்வதற்கு காரணம்: சிலைகள் என்ற வார்த்தைக்கு மூல மொழியில் “சாணம்” என்று அர்த்தம். அதற்காக, சிலைகள் எல்லாமே சாணத்தை பயன்படுத்தி செய்யப்பட்டன என்று அர்த்தம் கிடையாது.—லேவி 26:30; உபா 29:17.
ஏப்ரல் 24-30
பைபிளில் இருக்கும் புதையல்கள் | 2 நாளாகமம் 13-16
“யெகோவாவை நம்பியிருக்க வேண்டும்—எப்போதெல்லாம்?”
இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?
12 இளைஞராக இருந்தபோது ஆசா ராஜா மனத்தாழ்மையாக நடந்துகொண்டார். தைரியமானவராகவும் இருந்தார். உதாரணத்துக்கு, அவருடைய அப்பா அபியாவுக்குப் பிறகு அவர் ஆட்சிக்கு வந்தபோது, சிலை வணக்கத்தை ஒழிப்பதற்காக எல்லா முயற்சிகளையும் எடுத்தார். அதுமட்டுமல்ல, “தங்களுடைய முன்னோர்களின் கடவுளான யெகோவாவை வழிபட வேண்டும் என்றும், அவர் தந்த திருச்சட்டத்தையும் கட்டளைகளையும் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் யூதா மக்களிடம் சொன்னார்.” (2 நா. 14:1-7) எத்தியோப்பியனான சேராகு, பத்து லட்சம் படை வீரர்களோடு யூதாவை முற்றுகையிட்டபோது, “யெகோவாவே, நாங்கள் நிறைய பேரோ கொஞ்சப் பேரோ, எங்களுக்குச் சக்தி இருக்கிறதோ இல்லையோ, எப்படியிருந்தாலும் உங்களால் உதவி செய்ய முடியும். அதனால் யெகோவா தேவனே, எங்களுக்கு உதவி செய்யுங்கள். நாங்கள் உங்களைத்தான் நம்பியிருக்கிறோம்” என்று ஜெபம் செய்தார். அழகான வார்த்தைகள்! யெகோவாமேல் ஆசாவுக்கு எவ்வளவு நம்பிக்கை இருந்தது என்பதை இவை காட்டுகின்றன. அவருடைய நம்பிக்கை வீண்போகவில்லை! யெகோவா ‘எத்தியோப்பியர்களைத் தோற்கடித்தார்.’—2 நா. 14:8-12.
இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?
13 பத்து லட்சம் படை வீரர்களை நேருக்கு நேர் சந்திப்பது சாதாரண விஷயமா என்ன? ஆனாலும், அவ்வளவு பெரிய படையை ஆசா தோற்கடித்தார். ஆனால் வருத்தமான விஷயம் என்னவென்றால், அதைவிட சின்ன படையை வைத்திருந்த இஸ்ரவேல் ராஜா பாஷா மிரட்டியபோது யெகோவாவிடம் அவர் உதவி கேட்கவில்லை. சீரியா ராஜாவிடம் உதவி கேட்டார். இப்படிச் செய்ததால் வாழ்க்கை முழுவதும் அவர் கஷ்டப்பட்டதுதான் மிச்சம்! அனானி தீர்க்கதரிசி மூலம் யெகோவா அவரிடம் இப்படிச் சொன்னார்: “உங்களுடைய கடவுளான யெகோவாமேல் நம்பிக்கை வைக்காமல் சீரியா ராஜாமேல் நீங்கள் நம்பிக்கை வைத்ததால், அவனுடைய படை உங்கள் கையிலிருந்து தப்பித்துவிட்டது.” (2 நா. 16:7, 9; 1 ரா. 15:32) நமக்கு என்ன பாடம்?
இளம் ஆண்களே, மற்றவர்களுடைய நம்பிக்கையை நீங்கள் எப்படிச் சம்பாதிக்கலாம்?
14 எப்போதுமே மனத்தாழ்மையாக இருங்கள். தொடர்ந்து யெகோவாவை நம்பியிருங்கள். நீங்கள் ஞானஸ்நானம் எடுத்தபோது யெகோவாமேல் உங்களுக்குப் பலமான விசுவாசம் இருந்திருக்கும். அவர்மேல் ரொம்ப நம்பிக்கை வைத்திருந்திருப்பீர்கள். யெகோவாவும் தன்னுடைய குடும்பத்தில் ஒருவராக இருக்கிற பாக்கியத்தை உங்களுக்குக் கொடுத்திருக்கிறார். அன்று எப்படி யெகோவாவை நம்பினீர்களோ அதே மாதிரி எப்போதும் நம்புங்கள். பொதுவாக, வாழ்க்கையில் பெரிய பெரிய முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்புவீர்கள். ஆனால், மற்ற சமயங்களிலும் நம்புவீர்களா? உதாரணத்துக்கு, பொழுதுபோக்கு... வேலை... வாழ்க்கையில் உங்களுக்கு இருக்கிற குறிக்கோள்கள்... ஆகியவற்றைப் பற்றி முடிவுகள் எடுக்கும்போது யெகோவாவை நம்புகிறீர்களா? சொந்த புத்தியை நம்பவே நம்பாதீர்கள்! எப்போதுமே பைபிள் நியமங்களைப் பாருங்கள். அதன்படி முடிவுகளை எடுங்கள். (நீதி. 3:5, 6) அப்படிச் செய்யும்போது யெகோவாவை சந்தோஷப்படுத்துவீர்கள். சபையில் இருப்பவர்களுடைய மதிப்பு மரியாதையையும் சம்பாதிப்பீர்கள்.—1 தீமோத்தேயு 4:12-ஐ வாசியுங்கள்.
புதையல்களைத் தோண்டி எடுங்கள்
முழு இதயத்தோடு யெகோவாவுக்குச் சேவை செய்யுங்கள்!
7 நாம் யெகோவாவுக்கு முழு இதயத்தோடு பக்தியைக் காட்டுகிறோமா இல்லையா என்று எப்படித் தெரிந்துகொள்ளலாம்? அதற்கு, நாம் ஒவ்வொருவரும் இப்படிக் கேட்டுக்கொள்ள வேண்டும்: ‘கஷ்டமா இருந்தாலும் நான் யெகோவாவுக்குக் கீழ்ப்படிவேனா? யெகோவாவோட சபையை சுத்தமா வைச்சுக்கணுங்கிறதுல நான் உறுதியா இருப்பேனா?’ தன்னுடைய பாட்டியை ராஜமாதா அந்தஸ்திலிருந்து இறக்குவதற்கு ஆசாவுக்கு எவ்வளவு தைரியம் தேவைப்பட்டிருக்கும்! சில சமயங்களில், ஆசாவைப் போலவே நீங்களும் தைரியமாகச் செயல்பட வேண்டியிருக்கலாம். உதாரணத்துக்கு, உங்கள் குடும்பத்தில் இருக்கிற ஒருவரோ, நெருங்கிய நண்பரோ ஏதாவது பாவம் செய்துவிடலாம். மனம் திருந்தாததால், அவர் சபை நீக்கம் செய்யப்படலாம். அப்போது நீங்கள் என்ன செய்வீர்கள்? அவரோடு எந்தத் தொடர்பும் வைத்துக்கொள்ளாமல் இருப்பதற்கு உறுதியாக இருப்பீர்களா? உங்கள் இதயம் உங்களை என்ன செய்யத் தூண்டும்?