உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • wp21 எண் 1 பக். 14-15
  • ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?
  • காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
  • இதே தகவல்
  • ஜெபம் செய்வதால் என்ன நன்மை?
    காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2016
  • ஜெபத்தில் கடவுளிடம் நெருங்கி வாருங்கள்
    பைபிள் உண்மையிலேயே என்ன கற்பிக்கிறது?
  • ஜெபம்—நமக்குக் கிடைத்திருக்கும் ஒரு பாக்கியம்
    பைபிள் நமக்கு என்ன சொல்லித் தருகிறது?
  • ஜெபம்​—கடவுளிடம் நெருங்க வழி
    இன்றும் என்றும் சந்தோஷம்!—கடவுள் சொல்லும் வழி
மேலும் பார்க்க
காவற்கோபுரம் யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது (பொது)-2021
wp21 எண் 1 பக். 14-15

ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்?

பமலா என்பவர் புற்றுநோயால் ரொம்ப அவதிப்பட்டார். அதனால், ஒரு மருத்துவ நிபுணரைப் பார்த்து சிகிச்சை எடுத்துக்கொண்டார். இருந்தாலும், தன்னுடைய சூழ்நிலையைச் சமாளிக்க பலம் கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்தார். அப்படிச் செய்தது அவருக்குப் பிரயோஜனமாக இருந்ததா?

இதைப் பற்றி பமலா என்ன சொல்கிறார் என்று கவனியுங்கள்: “சிகிச்சை எடுக்குறப்பல்லாம் எனக்கு ரொம்ப பயமா இருக்கும். ஆனா, யெகோவாகிட்ட ஜெபம் செஞ்சப்போ என் மனசு அப்படியே அமைதியாயிடுச்சு, என்னால தெளிவா யோசிக்க முடிஞ்சுது. இப்பக்கூட வலி தாங்க முடியாம கஷ்டப்படுகிறேன். ஆனாலும், நம்பிக்கையான மனநிலையோட இருக்க ஜெபம்தான் எனக்கு உதவி செய்யுது. ‘எப்படி இருக்கீங்க’னு மத்தவங்க என்கிட்ட கேக்குறப்போ ‘முடியலதான், ஆனாலும் சந்தோஷமா இருக்கேன்’னு சொல்லுவேன்.”

உயிருக்கு ஆபத்தான ஒரு பெரிய பிரச்சினை வந்த பிறகு ஜெபம் செய்துகொள்ளலாம் என்று இருந்துவிடக் கூடாது. நம் எல்லாருக்குமே பிரச்சினைகள் இருக்கத்தான் செய்கின்றன. அவை சின்ன பிரச்சினையாகவோ, பெரிய பிரச்சினையாகவோ இருக்கலாம். அவற்றைச் சமாளிக்க உதவி தேவை என்பதை நாம் உணருகிறோம். ஜெபம் அதற்குக் கைகொடுக்குமா?

“யெகோவாமேல் உன் பாரத்தைப் போட்டுவிடு. அவர் உன்னை ஆதரிப்பார். நீதிமானை ஒருபோதும் தள்ளாட விடமாட்டார்” என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 55:22) இது எவ்வளவு ஆறுதலாக இருக்கிறது! அப்படியென்றால் ஜெபம் செய்வது உங்களுக்கு எப்படி உதவும்? சரியான விதத்தில் கடவுளிடம் ஜெபம் செய்தால், உங்களுடைய பிரச்சினையைச் சமாளிப்பதற்குத் தேவையான உதவியை அவர் செய்வார்.—“ஜெபம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்” என்ற பெட்டியைப் பாருங்கள்.

ஜெபம் செய்வதால் கிடைக்கும் நன்மைகள்

மன சமாதானம்

வேலையை இழந்திருந்த தொழிலதிபர், இப்போது சந்தோஷமாக நம்பிக்கையோடு நடந்துபோகிறார்.

“உங்களுடைய எல்லா விண்ணப்பங்களையும் . . . கடவுளிடம் சொல்லுங்கள். அப்போது, எல்லா சிந்தனைக்கும் மேலான தேவசமாதானம் உங்கள் இதயத்தையும் மனதையும் கிறிஸ்து இயேசுவின் மூலமாகப் பாதுகாக்கும்.” (பிலிப்பியர் 4:6, 7) உங்களுடைய கவலைகளையெல்லாம் கடவுளிடம் கொட்டினால், பிரச்சினைகள் மத்தியிலும் நீங்கள் மன அமைதியோடு இருக்கவும் ஞானமாக நடந்துகொள்ளவும் அவர் உதவி செய்வார்.

கடவுள் தரும் ஞானம்

ஜெபப் புத்தகத்திலிருந்து ஜெபத்தை ஒப்பித்துக்கொண்டிருந்த பெண் இப்போது தன் வீட்டில் பைபிள் படித்துக்கொண்டிருக்கிறார்.

“உங்களில் ஒருவனுக்கு ஞானம் குறைவாக இருந்தால், கடவுளிடம் அவன் கேட்டுக்கொண்டே இருக்க வேண்டும்; அப்படிக் கேட்கிறவர்களை அவர் திட்ட மாட்டார். எல்லாருக்கும் தாராளமாகக் கொடுக்கிற கடவுள் அவனுக்கும் கொடுப்பார்.” (யாக்கோபு 1:5) பிரச்சினைகளில் தவிக்கும்போது நல்ல தீர்மானங்கள் எடுப்பது கடினம். ஆனால், ஞானத்தைக் கேட்டு கடவுளிடம் ஜெபம் செய்யும்போது பைபிளில் இருக்கிற நிறைய ஆலோசனைகளை அவர் நம்  ஞாபகத்துக்குக் கொண்டுவருவார். 

பலமும் ஆறுதலும்

மருத்துவமனையில் இருந்த தம்பதி இப்போது பூங்காவில் ஒன்றாக நடந்துபோகிறார்கள். தடியைப் பிடித்து நடக்க அந்தக் கணவர் தன் மனைவிக்கு உதவுகிறார்.

“என்னைப் பலப்படுத்துகிறவர் மூலம் எல்லாவற்றையும் செய்ய எனக்குப் பலம் இருக்கிறது.” (பிலிப்பியர் 4:13) யெகோவா சர்வவல்லமையுள்ள கடவுள். நம்முடைய பிரச்சினைகளைச் சமாளிப்பதற்கும் சோதனைகளைத் தாங்கிக்கொள்வதற்கும் தேவையான பலத்தை அவரால் நமக்குத் தர முடியும். (ஏசாயா 40:29) யெகோவாவை, “எல்லா விதமான ஆறுதலின் கடவுள்” என்றும் பைபிள் சொல்கிறது. நமக்கு வருகிற “எல்லா சோதனைகளிலும்” அவரால் நமக்கு ஆறுதல் தர முடியும்.—2 கொரிந்தியர் 1:3, 4.

கடவுளிடம் ஜெபம் செய்யுங்கள்!

தன்னிடம் ஜெபம் செய்யும்படி யெகோவா உங்களைக் கட்டாயப்படுத்துவது இல்லை என்பது உண்மைதான். ஆனாலும், தன்னிடம் பேசும்படி அன்பாகக் கேட்கிறார். (எரேமியா 29:11, 12) ஒருவேளை, முன்பு செய்த ஜெபத்துக்கெல்லாம் கடவுள் பதில் கொடுக்கவில்லையே என்று நீங்கள் யோசிக்கலாம். நம்பிக்கை இழந்துவிடாதீர்கள்! அன்பான பெற்றோர் தங்கள் பிள்ளைகள் எதிர்பார்க்கிற விதத்தில் அல்லது அவர்கள் எதிர்பார்க்கிற சமயத்தில் உதவி செய்யாமல் இருக்கலாம். ஒருவேளை, பிள்ளைகள் எதிர்பார்ப்பதைவிட சிறந்த விதத்தில் உதவி செய்ய பெற்றோர் நினைக்கலாம். ஆனால், ஒரு விஷயம் உண்மை: அன்பான பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்கு நிச்சயம் உதவி செய்வார்கள்.

யெகோவாவைப் போல அன்பு காட்டுகிற ஒரு அப்பா யாருமே கிடையாது. அவர் உங்களுக்கும் உதவி செய்ய ஆசையாக இருக்கிறார். இதுவரை பார்த்த பைபிள் ஆலோசனைகளைக் கவனமாக யோசித்துப் பார்த்து அதன்படி செய்ய முயற்சி எடுக்கும்போது, உங்களுடைய ஜெபங்களுக்குக் கடவுள் மிகச் சிறந்த விதத்தில் பதில் கொடுப்பார்.—சங்கீதம் 34:15; மத்தேயு 7:7-11.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்