அறிமுகம்
போரே இல்லாத உலகத்தில் வாழ ஏங்குகிறீர்களா? ‘போரே இருக்காதுனு சொல்றது எல்லாம் கேட்க நல்லாத்தான் இருக்கு. ஆனா, நிஜமா நடக்குமா’ என்று சிலர் யோசிக்கிறார்கள். மனிதர்களால் ஏன் போர்களுக்கு முற்றுப்புள்ளி வைக்க முடியவில்லை என்று பைபிள் சொல்கிறது. உலகம் முழுவதும் சமாதானம் மலரும் என்பதையும் அது சீக்கிரத்திலேயே நடக்கும் என்பதையும் நாம் எப்படி உறுதியாக நம்பலாம் என்றும் பைபிள் சொல்கிறது.
இந்தப் பத்திரிகையில், “போர்” என்ற வார்த்தை, ஒரு அரசியல் நோக்கத்துக்காக ஆயுதம் ஏந்திய படைகள் ஒன்றோடு ஒன்று மோதுவதைக் குறிக்கிறது. இதில் குறிப்பிடப்பட்டுள்ள சிலருடைய பெயர்கள் மாற்றப்பட்டுள்ளன.