உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 136
  • மரியாள் கடவுளுடைய தாயா?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • மரியாள் கடவுளுடைய தாயா?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • ‘இதோ, நான் யெகோவாவுக்கு அடிமை!’
    இவர்களுடைய விசுவாசத்தைப் பின்பற்றுங்கள்
  • நீங்கள் எப்பொழுதாவது யோசித்ததுண்டா?
    விழித்தெழு!—1996
  • மரியாள் (இயேசுவின் தாய்)
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • மரியாள் ‘சர்வேசுரனுடைய மாதாவா’?
    விழித்தெழு!—1996
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 136
குழந்தை இயேசுவோடு மரியாள்

மரியாள்—கடவுளுடைய தாயா?

பைபிள் தரும் பதில்

இல்லை. மரியாளைக் கடவுளுடைய தாய் என்று பைபிள் சொல்வதில்லை. கிறிஸ்தவர்கள் மரியாளை வணங்க வேண்டும் என்றோ மரியாளுக்கு விசேஷ மதிப்பு தர வேண்டும் என்றோ பைபிள் சொல்வதில்லை.a இதை யோசித்துப் பாருங்கள்:

  • மரியாள் ஒருபோதும் தன்னை கடவுளுடைய தாய் என்று சொல்லவில்லை. அதுமட்டுமல்ல, பைபிளும், ‘கடவுளுடைய மகனை’ அவர் பெற்றெடுத்ததாக சொல்கிறதே தவிர, கடவுளைப் பெற்றெடுத்ததாக சொல்வதில்லை.​—மாற்கு 1:1; லூக்கா 1:32.

  • இயேசு கிறிஸ்துவும், மரியாளைக் கடவுளுடைய தாய் என்றோ அவருக்கு விசேஷ பக்தி காட்ட வேண்டும் என்றோ ஒருபோதும் சொல்லவில்லை. ஒருசமயம், ஒரு பெண் இயேசுவின் தாயாக இருக்கும் பாக்கியத்தைப் பெற்ற மரியாளை ‘சந்தோஷமானவர்’ என்று சொல்லி அவருக்கு விசேஷ மதிப்புக் கொடுத்தார். அப்போது இயேசு அந்தப் பெண்ணிடம், “இல்லை, கடவுளுடைய வார்த்தையைக் கேட்டு அதன்படி நடக்கிறவர்கள்தான் சந்தோஷமானவர்கள்!” என்று சொல்லி அவளைத் திருத்தினார்.—லூக்கா 11:27, 28.

  • “கடவுளுடைய தாய்,” “தியோடோகோஸ்” (கடவுளைப் பெற்றெடுத்தவள்) ஆகிய வார்த்தைகள் பைபிளில் இல்லை.

  • பைபிளில் சொல்லப்பட்டிருக்கிற “விண்ணரசி” என்ற வார்த்தை மரியாளைக் குறிப்பதில்லை; விசுவாசதுரோக இஸ்ரவேலர்கள் வணங்கிய ஒரு பொய் தெய்வத்தைத்தான் குறிக்கிறது. (எரேமியா 44:15-19) அது ஒருவேளை இஷ்டார் (அஸ்டார்ட்), என்ற பாபிலோனியப் பெண் தெய்வமாக இருந்திருக்கலாம்.

  • ஆரம்பகால கிறிஸ்தவர்கள் மரியாளை வணங்கவுமில்லை, அவருக்கு விசேஷ மரியாதை கொடுக்கவுமில்லை. ஆரம்பகால கிறிஸ்தவர்கள், “மற்ற மதப் பிரிவுகளிலிருந்து விலகியிருந்திருப்பார்கள். மரியாளுக்கு அளவுக்கு அதிகமான மரியாதை கொடுத்தால், பெண் தெய்வத்தை வணங்குவதாக மற்றவர்கள் நினைத்துவிடுவார்களோ என்று பயந்திருக்கலாம்” என்பதாக ஒரு சரித்திராசிரியர் சொல்கிறார்.—இன் குவெஸ்ட் ஆப் த ஜூயிஷ் மேரி.

  • கடவுள் என்றென்றும் இருக்கிறார் என்று பைபிள் சொல்கிறது. (சங்கீதம் 90:1, 2; ஏசாயா 40:28) கடவுளுக்கு ஆரம்பம் இல்லாததால் அவருக்கு ஒரு தாய் இருக்க முடியாது. அதுமட்டுமல்ல, கடவுள் குடியிருப்பதற்கு வானாதி வானங்கள்கூட போதாது என்று பைபிள் சொல்கிறது. அப்படியென்றால், மரியாள் தன்னுடைய வயிற்றில் கடவுளைச் சுமந்திருக்கவே முடியாது.—1 ராஜாக்கள் 8:27.

மரியாள்​—இயேசுவின் தாய், “கடவுளுடைய தாய்” அல்ல

தாவீது ராஜாவின் வம்சத்தில் பிறந்த யூதப் பெண்தான் மரியாள். (லூக்கா 3:23-31) மரியாளுக்கு கடவுள்மேல் விசுவாசமும் பக்தியும் இருந்தது. அதனால், கடவுளுக்கு மிகவும் பிரியமானவராக இருந்தார். (லூக்கா 1:28) இயேசுவின் தாயாக இருப்பதற்கு மரியாளைக் கடவுள் தேர்ந்தெடுத்தார். (லூ 1:31, 35) மரியாளுக்கு யோசேப்பு மூலம் பிறந்த மற்ற பிள்ளைகளும் இருந்தார்கள்.​—மாற்கு 6:3.

மரியாள், இயேசுவின் சீஷராக ஆனதைப் பற்றி பைபிள் சொல்கிறது. ஆனால், அவரைப் பற்றிய கூடுதல் தகவல்கள் எதுவும் கொடுக்கப்படவில்லை.​—அப்போஸ்தலர் 1:14.

மரியாளைக் கடவுளுடைய தாய் என்று ஏன் சிலர் நினைக்கிறார்கள்?

கி.பி. நான்காவது நூற்றாண்டின் கடைசியில்தான் மரியாளை வணங்கும் பழக்கம் ஆரம்பித்தது என்று அத்தாட்சிகள் காட்டுகின்றன. அந்த சமயத்தில்தான், கத்தோலிக்க சர்ச் ரோம சாம்ராஜ்யத்தின் தேசிய மதமாக ஆனது. அதனால், பொய் மதத்தைச் சேர்ந்த நிறைய பேர் பெயரளவில் கிறிஸ்தவர்களாக ஆனார்கள். பைபிளில் சொல்லப்படாத திரித்துவப் போதனையையும் சர்ச் ஏற்றுக்கொண்டது.

சர்ச்சில் இருந்த நிறைய பேர் திரித்துவக் கோட்பாட்டை ஏற்றுக்கொண்டதால், இயேசுவைக் கடவுள் என்று நம்பினார்கள். அதனால், மரியாள் கடவுளுடைய தாயாக இருக்க வேண்டுமென்ற முடிவுக்கு வந்தார்கள். கி.பி. 431-ல், எபேசுவில் இருந்த சர்ச் கவுன்சில், மரியாளை “கடவுளுடைய தாய்” என்று அதிகாரப்பூர்வமாக அறிவித்தது. அதற்கு பின்புதான் மரியாள் வழிபாடு அதிகமாகப் பரவ ஆரம்பித்தது. மற்ற மதங்களைச் சேர்ந்தவர்கள் சர்ச்சில் சேர்ந்தபோது தாங்கள் வணங்கிக்கொண்டிருந்த கருவள தெய்வமான அர்த்தமி (ரோமர்களுக்கு டயானா), ஐஸிஸ் போன்ற பெண் தெய்வங்களுக்குப் பதிலாக கன்னி மரியாளின் உருவங்களையும் படங்களையும் வணங்க ஆரம்பித்தார்கள்.

கி.பி. 432-ல் போப் சிக்ஸ்டஸ் III, “கடவுளுடைய தாயை” கவுரவிப்பதற்காக ரோமில் ஒரு சர்ச்சைக் கட்டும்படி உத்தரவிட்டார். குழந்தை பாக்கியத்தைக் கொடுக்கும் ரோமப் பெண் தெய்வமான லுசினாவை கவுரவிப்பதற்காக ஒரு கோயில் ஏற்கெனவே கட்டப்பட்டிருந்தது. அந்தக் கோயிலுக்குப் பக்கத்தில் இந்த சர்ச் கட்டப்பட்டது. இந்த சர்ச்சைப் பற்றி ஒரு எழுத்தாளர் இப்படிச் சொன்னார்: “ரோம் ஒரு கிறிஸ்தவ நாடாக ஆன பிறகு, மற்ற மதத்தவர்கள் தங்களுடைய ‘மாபெரும் தாய்க்கு’ செலுத்திய வணக்கத்தை மரியாளுக்குச் செலுத்த ஆரம்பித்தார்கள் என்பதற்கு இது ஒரு நிரந்தர அடையாளமாக இருக்கிறது.”​—மேரி​—த கம்ப்ளீட் ரிசோர்ஸ்.

a மரியாளை கடவுளுடைய தாய் என்று பல மதப் பிரிவுகள் சொல்லிக்கொடுக்கின்றன. மரியாளை “விண்ணரசி” என்றும் தியோடோகோஸ் என்றும் சொல்கின்றன. தியோடோகோஸ் என்ற கிரேக்க வார்த்தைக்கு “கடவுளைப் பெற்றெடுத்தவள்” என்று அர்த்தம்.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்