உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 140
  • இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிள் தரும் பதில்
  • இரட்சிக்கப்பட நாம் என்ன செய்ய வேண்டும்?
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1996
  • இரட்சிப்பு—அது உண்மையில் எதை அர்த்தப்படுத்துகிறது
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1997
  • இரட்சிப்பு
    வேதவசனங்களிலிருந்து நியாயங்காட்டிப் பேசுதல்
  • “இயேசுவை நம்புங்கள்”—மீட்பு கிடைப்பதற்கு இயேசுவை நம்பினால் போதுமா?
    பைபிள் தரும் பதில்கள்
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 140
இயேசுவைச் சுற்றிலும் பல்வேறு இன மக்கள் இருக்கிறார்கள்

இயேசு இரட்சிக்கிறார்—எப்படி?

பைபிள் தரும் பதில்

இயேசு தன்னுடைய உயிரை மீட்புவிலையாகக் கொடுத்ததன் மூலம், கடவுள்பயமுள்ள மனிதர்களை இரட்சித்தார். (மத்தேயு 20:28) அதனால்தான், அவரை ‘உலகத்தின் மீட்பர்,’ அதாவது இரட்சகர், என்று பைபிள் சொல்கிறது. (1 யோவான் 4:14) “அவரைத் தவிர வேறு யாராலும் மீட்பு இல்லை; ஏனென்றால், நாம் மீட்புப் பெறும்படி பூமியிலுள்ள மனுஷர்களுக்கு அவருடைய பெயரைத் தவிர வேறெந்தப் பெயரும் கொடுக்கப்படவில்லை” என்றும் பைபிள் சொல்கிறது.—அப்போஸ்தலர் 4:12.

தன்மேல் விசுவாசம் வைக்கிற எல்லாருக்காகவும் இயேசு ‘மரணமடைந்தார்.’ (எபிரெயர் 2:9; யோவான் 3:16) ஆனாலும், “கடவுள் அவரை உயிரோடு எழுப்பினார்.” அதற்குப் பிறகு, இயேசு ஆவி உடலில் பரலோகத்துக்குப் போனார். (அப்போஸ்தலர் 3:15) அதனால், “தன் மூலம் கடவுளை அணுகுகிற ஆட்களை முழுமையாக மீட்பதற்கு [இயேசு] வல்லவராக இருக்கிறார். ஏனென்றால், அவர்களுக்காகப் பரிந்து பேச அவர் எப்போதும் உயிரோடு இருக்கிறார்.”—எபிரெயர் 7:25.

நமக்காக இயேசு ஏன் பரிந்து பேச வேண்டியிருக்கிறது?

நாம் எல்லாரும் பாவம் செய்கிறவர்கள். (ரோமர் 3:23) கடவுளிடம் நாம் நெருங்கிப் போவதற்குப் பாவம் தடையாக இருக்கிறது. அதோடு, இந்தப் பாவத்தினால் நமக்கு மரணமும் வருகிறது. (ரோமர் 6:23) ஆனால், தன்னுடைய மீட்புப் பலியில் விசுவாசம் வைக்கிறவர்கள் சார்பாக இயேசு ஒரு “வழக்கறிஞராக” செயல்படுகிறார். (1 யோவான் 2:1, அடிக்குறிப்பு) அவர்களுடைய ஜெபத்தைக் கேட்கும்படியும் தன்னுடைய மீட்புப் பலியின் அடிப்படையில் அவர்களுடைய பாவத்தை மன்னிக்கும்படியும் கடவுளிடம் அவர் பரிந்து பேசுகிறார். (மத்தேயு 1:21; ரோமர் 8:34) அவர் பரிந்து பேசுகிற விஷயங்களைக் கடவுள் கேட்டு அதற்குப் பதில் கொடுக்கிறார். ஏனென்றால், அந்த விஷயங்கள் கடவுளுடைய விருப்பத்துக்கு ஏற்றதாக இருக்கின்றன. இயேசு மூலமாக “இந்த உலகத்தை . . . மீட்பதற்கே” அவரைக் கடவுள் இந்தப் பூமிக்கு அனுப்பினார்.—யோவான் 3:17.

இரட்சிக்கப்படுவதற்கு இயேசுமேல் நம்பிக்கை வைத்தால் மட்டும் போதுமா?

நாம் இரட்சிக்கப்படுவதற்கு இயேசுமேல் நம்பிக்கை வைக்க வேண்டும் என்பது உண்மைதான். ஆனால், அது மட்டும் போதாது. (அப்போஸ்தலர் 16:30, 31) “உயிர் இல்லாத உடல் செத்ததாயிருப்பதுபோல், செயல்கள் இல்லாத விசுவாசமும் செத்ததாயிருக்கிறது” என்று பைபிள் சொல்கிறது. (யாக்கோபு 2:26) அப்படியென்றால், நாம் இரட்சிக்கப்படுவதற்கு இதையெல்லாம் செய்ய வேண்டும்:

  • இயேசுவைப் பற்றியும், அவருடைய தகப்பனான யெகோவாவைப் பற்றியும் தெரிந்துகொள்ள வேண்டும்.—யோவான் 17:3.

  • அவர்கள்மேல் விசுவாசம் வைக்க வேண்டும்.—யோவான் 12:44; 14:1.

  • அவர்கள் கொடுக்கிற கட்டளைகளுக்குக் கீழ்ப்படிவதன் மூலமாக நம்முடைய விசுவாசத்தைச் செயலில் காட்ட வேண்டும். (லூக்கா 6:46; 1 யோவான் 2:17) தன்னை “கர்த்தாவே” என்று கூப்பிடுகிற எல்லாரும் இரட்சிக்கப்படுவார்கள் என்று இயேசு சொல்லவில்லை. பரலோகத்தில் இருக்கிற, தன் “தகப்பனுடைய விருப்பத்தின்படி செய்கிறவர்கள்தான்” இரட்சிக்கப்படுவார்கள் என்று அவர் சொன்னார்.—மத்தேயு 7:21.

  • எவ்வளவு கஷ்டம் வந்தாலும் விசுவாசத்தைத் தொடர்ந்து செயலில் காட்ட வேண்டும். “முடிவுவரை சகித்திருப்பவர்தான் மீட்புப் பெறுவார்,” அதாவது இரட்சிக்கப்படுவார் என்று இயேசு ரொம்பத் தெளிவாகச் சொல்லியிருக்கிறார்.—மத்தேயு 24:13.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்