உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • ijwbq கட்டுரை 145
  • புதிய எருசலேம் என்றால் என்ன?

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • புதிய எருசலேம் என்றால் என்ன?
  • பைபிள் தரும் பதில்கள்
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • பைபிளின் பதில்
  • புதிய எருசலேமை அடையாளம் கண்டுபிடிக்க...
  • மகிமையாய்ப் பிரகாசிக்கும் நகரம்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • எருசலேம்—“அது மகாராஜாவினுடைய நகரம்”
    காவற்கோபுரம்—யெகோவாவின் ராஜ்யத்தை அறிவிக்கிறது-1998
  • ஒரு புதிய வானமும் ஒரு புதிய பூமியும்
    வெளிப்படுத்துதல்—அதன் மகத்தான உச்சக்கட்டம் சமீபித்துவிட்டது
  • யார் பரலோகத்துக்குச் செல்கிறார்கள்? ஏன்?
    நீங்கள் பூமியில் பரதீஸில் என்றும் வாழலாம்
மேலும் பார்க்க
பைபிள் தரும் பதில்கள்
ijwbq கட்டுரை 145
புதிய எருசலேம்—வெளிப்படுத்துதல் புத்தகத்தில் விவரிக்கப்பட்டுள்ள மாதிரி

புதிய எருசலேம் என்றால் என்ன?

பைபிளின் பதில்

“புதிய எருசலேம்” என்ற வார்த்தை பைபிளில் இரண்டு தடவை மட்டும்தான் வருகிறது. இது ஒரு அடையாள அர்த்தமுள்ள நகரம். இயேசுவோடு சேர்ந்து கடவுளுடைய அரசாங்கத்தில் ஆட்சி செய்வதற்காக பூமியிலிருந்து பரலோகத்துக்கு போகும் ஒரு தொகுதியை இது குறிக்கிறது. (வெளிப்படுத்துதல் 3:12; 21:2) இந்தத் தொகுதியை, கிறிஸ்துவின் மணமகள் என்றும் பைபிள் சொல்கிறது.

புதிய எருசலேமை அடையாளம் கண்டுபிடிக்க...

  1. புதிய எருசலேம் பரலோகத்தில் இருக்கிறது. பைபிளில் புதிய எருசலேமைப் பற்றி எங்கெல்லாம் வருகிறதோ அங்கெல்லாம் அது பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதாகச் சொல்லப்பட்டிருக்கிறது. அதோடு, அந்த நகரத்தின் நுழைவாசல்களை தேவதூதர்கள் காவல் காப்பதாகவும் சொல்லப்பட்டிருக்கிறது. (வெளிப்படுத்துதல் 3:12; 21:2, 10, 12) அந்த நகரத்தின் சுற்றளவு சுமார் 2,220 கிலோமீட்டர் என்றும் பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:16) அதாவது, சதுரங்கமாக இருந்த அந்த நகரத்தின் உயரம் கிட்டத்தட்ட 560 கிலோமீட்டர். அவ்வளவு உயரமான ஒரு நகரம் கண்டிப்பாக இந்த பூமியில் இருக்க வாய்ப்பே இல்லை.

  2. கிறிஸ்துவின் மணமகள், அதாவது இயேசுவைப் பின்பற்றுகிறவர்களின் ஒரு தொகுதிதான் புதிய எருசலேம். புதிய எருசலேமை ‘மணமகள், ஆட்டுக்குட்டியானவரின் மனைவி’ என்று பைபிள் சொல்கிறது. (வெளிப்படுத்துதல் 21:9, 10) இயேசுவைத்தான் பைபிள் அடையாள அர்த்தத்தில் ஆட்டுக்குட்டி என்று சொல்கிறது. (யோவான் 1:29; வெளிப்படுத்துதல் 5:12) “ஆட்டுக்குட்டியானவரின் மனைவி” அதாவது கிறிஸ்துவின் மணமகள், இயேசுவோடு பரலோகத்தில் ஒன்றுபடப்போகிற கிறிஸ்தவர்களைக் குறிக்கிறது. இயேசுவுக்கும் இந்தக் கிறிஸ்தவர்களுக்கும் இடையில் இருக்கும் பந்தம் ஒரு கணவனுக்கும் மனைவிக்கும் இடையில் இருக்கும் பந்தம் மாதிரி இருப்பதாக பைபிள் சொல்கிறது. (2 கொரிந்தியர் 11:2; எபேசியர் 5:23-25) அதோடு, புதிய எருசலேமின் அஸ்திவாரக் கற்களில் “ஆட்டுக்குட்டியானவரின் 12 அப்போஸ்தலர்களுடைய 12 பெயர்கள்” எழுதப்பட்டிருக்கின்றன. (வெளிப்படுத்துதல் 21:14) பரலோகத்தில் வாழ்வதற்காக அழைக்கப்பட்டிருக்கிற கிறிஸ்தவர்கள், “அப்போஸ்தலர்களையும் தீர்க்கதரிசிகளையும் அஸ்திவாரமாக” வைத்துக் கட்டப்பட்டிருக்கிறார்கள் என்றும் பைபிள் சொல்கிறது. (எபேசியர் 2:20) இதை வைத்து பார்க்கும்போது, இந்தக் கிறிஸ்தவர்கள்தான் புதிய எருசலேம் என்று நமக்குத் தெளிவாகத் தெரிகிறது.

  3. புதிய எருசலேம், ஒரு அரசாங்கத்தின் பாகமாக இருக்கிறது. பைபிள் காலத்திலிருந்த எருசலேம், இஸ்ரவேலின் தலைநகரமாக இருந்தது. அங்கிருந்துதான் தாவீது ராஜாவும், அவருடைய மகன் சாலொமோனும், அவருடைய வம்சத்தில் வந்த மற்ற ராஜாக்களும், “யெகோவாவின் சிம்மாசனத்தில்” ஆட்சி செய்தார்கள். (1 நாளாகமம் 29:23) ‘பரிசுத்த நகரம்’ என்று அழைக்கப்பட்ட எருசலேம், தாவீதின் வம்சத்தில் வந்த ராஜாக்கள் மூலம் கடவுள் செய்த ஆட்சிக்கு அடையாளமாக இருந்தது. (நெகேமியா 11:1) புதிய எருசலேமும் “பரிசுத்த நகரம்” என்று அழைக்கப்படுகிறது. பரலோகத்துக்குப் போய் இயேசுவோடு சேர்ந்து “ராஜாக்களாகப் பூமியின் மீது ஆட்சி” செய்கிறவர்களை அது குறிக்கிறது.—வெளிப்படுத்துதல் 5:9, 10; 21:2.

  4. புதிய எருசலேம் பூமியில் இருக்கிற மக்களுக்கு ஆசீர்வாதங்களைக் கொடுக்கும். புதிய எருசலேம் ‘பரலோகத்தைவிட்டு இறங்கி வருவதாக’ சொல்லப்பட்டிருக்கிறது. அப்படியென்றால், பரலோகத்தைவிட்டு வெளியே நடக்கிற விஷயங்களுக்கு கடவுள் அதைப் பயன்படுத்துகிறார் என்று தெரிகிறது. (வெளிப்படுத்துதல் 21:2) இந்த வார்த்தைகளிலிருந்து, புதிய எருசலேம் கடவுளுடைய அரசாங்கத்தோடு சம்பந்தப்பட்டிருக்கிறது என்றும் தெரிகிறது. அந்த அரசாங்கத்தைப் பயன்படுத்தி கடவுள் தன்னுடைய விருப்பத்தை ‘பரலோகத்தில் நிறைவேற்றுவதுபோல் பூமியிலும் நிறைவேற்றுவார்.’ (மத்தேயு 6:10) கடவுளுடைய விருப்பப்படி, அந்த அரசாங்கம் பூமியிலிருக்கும் மக்களுக்கு இந்த ஆசீர்வாதங்களைக் கொடுக்கும்:

    • பாவம் நீக்கப்படும். ‘வாழ்வு தரும் தண்ணீர் நிறைந்த ஆறு’ புதிய எருசலேமிலிருந்து ஓடுகிறது. அந்த ஆறு ‘வாழ்வு தரும் மரங்களுக்கு’ தண்ணீர் கொடுக்கிறது. அந்த மரத்தின் இலைகள் “தேசத்தார் குணமாவதற்கு” உதவி செய்கிறது. (வெளிப்படுத்துதல் 22:1, 2) மக்கள் இப்படி குணமாகும்போது, பாவம் நீக்கப்படும். கடவுள் ஆரம்பத்தில் ஆசைப்பட்டப்படியே மக்கள் எல்லாரும் எந்தக் குறையும் இல்லாமல் பரிபூரணமாக ஆவார்கள்.—ரோமர் 8:21.

    • கடவுளுக்கும் மனிதர்களுக்கும் இடையில் நல்ல பந்தம் இருக்கும். பாவம், மனிதர்களை கடவுளிடமிருந்து பிரித்திருக்கிறது. (ஏசாயா 59:2) பாவம் நீக்கப்படும்போது இந்தத் தீர்க்கதரிசனம் முழுமையாக நிறைவேறும்: “கடவுளுடைய கூடாரம் மனிதர்களோடு இருக்கும், அவர்களோடு அவர் குடியிருப்பார்; அவர்கள் அவருடைய மக்களாக இருப்பார்கள். கடவுளே அவர்களோடு இருப்பார்.”—வெளிப்படுத்துதல் 21:3.

    • கஷ்டத்துக்கும் மரணத்துக்கும் நிரந்தர முடிவு. தன்னுடைய அரசாங்கத்தின் மூலமாக, நம்முடைய “கண்ணீரையெல்லாம் கடவுள் துடைத்துவிடுவார். இனிமேல் மரணம் இருக்காது, துக்கம் இருக்காது, அழுகை இருக்காது, வேதனை இருக்காது.”—வெளிப்படுத்துதல் 21:4.

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்