உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g86 7/8 பக். 29-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1986
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • கொடிய கொக்கேய்ன்
  • தாய்ப் பாலிலிருந்து ஏய்ட்ஸ் [AIDS] நோய்
  • சீனரின் எலி கட்டுப்பாடு
  • இளமையின் அளவு கடந்த பசி
  • “கசப்பான கனிகள்”
  • பல் மருந்துவர்களின் பரதீஸா?
  • பாலுறவின்பேரில் பாதிரிமாரின் கருத்து
  • தபால் தலைகளை சலவை செய்து பயன்படுத்துதல்
  • பெண் பாதிரிகள்
  • டி.வி.-யும் பருமையும்
  • “ஜப்பானின் பிரயோஜனமான கடைகள்”
  • என்னுடைய பிள்ளையைப் பிட்டத்தில் அடிப்பதா?
  • கல்லிலிருந்து செம்பு
  • அஞ்சல் தலை சேகரிப்பு—கருத்தைக் கவரும் ஓய்வுநேர விருப்பவேலை மற்றும் பெரும் வாணிகம்
    விழித்தெழு!—1995
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1987
  • எய்ட்ஸ் வளரிளமைப் பருவத்தினருக்கு ஒரு பேராபத்து
    விழித்தெழு!—1992
  • எய்ட்ஸ்—நான் ஆபத்திலிருக்கிறேனா?
    விழித்தெழு!—1993
மேலும் பார்க்க
விழித்தெழு!—1986
g86 7/8 பக். 29-31

உலகத்தைக் கவனித்தல்

கொடிய கொக்கேய்ன்

புதியதோர் ஆய்வு தென் அமெரிக்கச் செடிவகையிலிருந்து எடுக்கப்படும் ‘கொக்கேய்ன்’ என்ற வஸ்து ‘ஹெரோய்ன்’ என்ற போதை வஸ்துவைவிட அதிகக் கொடியது என்று கண்டுபிடித்திருக்கிறது. அமெரிக்க மருத்துவக் கழக பத்திரிகையின் சமீப வெளியீடு, “எலிகள் ஹெரோய்ன் மற்றும் கொக்கேய்ன் வஸ்துக்களை சாப்பிட அனுமதிக்கப்பட்டால், அவைகளுக்கு கொக்கேய்ன் ஹெரோய்னைவிட மும்மடங்கு அதிகக் கொடிய நச்சுத்தன்மை வாய்ந்ததாக இருக்கிறது,” என்று அறிக்கை செய்கிறது. சில காலத்திற்கு முன்புவரை கொக்கேய்ன் பயன்படுத்தப்படுவது ஆபத்தற்றவை என்று அநேகரால் கருதப்பட்டு வந்தது. ஆனால் கனடாவில் மான்ட்ரியலிலுள்ள கான்கார்டியா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த மைக்கல் போஸார்த் மற்றும் ராய் வைஸ் என்ற ஆராய்ச்சியாளர்கள், தங்களுடைய அறிக்கையில், “கொக்கேய்ன் போதைத் தன்மை மிகக்குறைவாக மதிப்பிடப்பட்டிருக்கிறது,” என்று கூறுகின்றனர். ஐக்கிய மாகாணங்களின் போதை மருந்து துர்ப்பிரயோக தேசீய நிறுவனத்தின் இயக்குனர் வில்லியம் போலின் குறிப்பிடுகிறபடி, “இன்று பொதுவாகப் பயன்படுத்தப்பட்டு வரும் மிக ஆபத்தான கள்ளப்போதை வஸ்துக்களில் கொக்கேய்னும் அதிகமாக அறியப்பட்டுவருகிறது.” சமீபத்தில் செய்யப்பட்ட ஆய்வுகள், “இது மிக சக்திவாய்ந்த போதைப்பொருள் என்ற முடிவுக்கு” வழிநடத்தியிருக்கிறது என்று அவர் தொடர்ந்து கூறினார்.

தாய்ப் பாலிலிருந்து ஏய்ட்ஸ் [AIDS] நோய்

ரூட்டர்ஸ் செய்திப் பிரிவின்படி டாக்டர் ஜூலியன் கோல்டு (ஆஸ்திரேலிய அரசின் தேசிய ஏய்ட்ஸ் காப்புப் பணிப் பிரிவைச் சேர்ந்தவர்), சிட்னியில் ஒரு ஆண் குழந்தைக்கு ஏய்ட்ஸ் நோய் [AIDS] வந்திருக்கிறது என்று சொன்னார். இது உடலில் தற்காப்பு மண்டலத்தை அழித்திடும் கொடிய நோய். இந்தக் குழந்தை ஒரு வயதைக் கடந்துவிட்டது, தனது தாயால் பாலூட்டப்பட்டதால் இதற்கு ஏய்ட்ஸ் நோய் வந்திருக்கலாம். அப்படி இருக்குமென்றால், இந்த வழியில் ஏய்ட்ஸ் நோயைப் பெறும் காரியத்தில் இந்தக் குழந்தைதான் பதிவில் முதலிடத்தைப் பெறுகிறான். குழந்தையைப் பிரசவித்தப் பின்பு ஒரு இரத்தமேற்றிக் கொண்டதன் மூலம் அந்தத் தாய்க்கு ஏய்ட்ஸ் நோய் தொற்றியது.

ஐக்கிய மாகாணங்களில் நோய்களைக் கட்டுப்படுத்தும் மையத்தைச் சேர்ந்த டாக்டர் மார்த்தா ராஜர்ஸ் விழித்தெழு! நிருபரிடம் சொன்னதாவது: “ஏய்ட்ஸ் நோய் இருக்கும் முக்கால் பகுதி குழந்தைகள் தங்களுடைய தாய்மார்களிடமிருந்து தாங்கள் தாயின் கருவில் வளரும்போதோ அல்லது பிரசவத்தின்போது தாயின் இரத்தத்துடன் தொடர்பு கொள்ளும்போதோ பெறுகின்றனர்.” ஏய்ட்ஸ் நோய் தாய்ப்பால் மூலம் தொற்றுவதும் கூடிய காரியம் என்றும் குறிப்பிட்டாள்.

சீனரின் எலி கட்டுப்பாடு

எலி இறைச்சி புசிப்பதும் எலித்தோல் காலணிகளை அணிவதும் சீனாவின் புறநகர்ப்பகுதிகளில் ஒரு பழக்கமாகக் காணப்படுகிறது; எலிகளைக் கட்டுப்படுத்துவதற்கு இவை ஒரு நல்ல முறை என்று சைனா டெய்லி என்ற ஆங்கில மொழி தினசரி அறிக்கை செய்கிறது. “ஃபூஜியன் மாநிலத்தில் எலிக்கண்டம் வறுவல்தான் உலகத்திலேயே மிகச் சிறந்தது என்று அந்தப் பிராந்திய மக்கள் போற்றுகின்றனர்,” என்று எக்கனாமிக் இன்பர்மேஷன் என்ற சீனமொழி தினசரி கூட்டுகிறது. சைனா டெய்லி குறிப்பிடுகிறபடி, தென் மேற்கு சீனாவிலிருக்கும் ஒரு தொழிற்சாலை எலித்தோலில் சிறுவர் காலணிகளை உற்பத்தி செய்கின்றது. “அதன் மென்மையான, வளுவளுப்பும் பளபளப்புமான தன்மை காலணிகளுக்கு மிகவும் பொருத்தமானது,” என்றும் கூறுகிறது, சீனாவில் ஆண்டுதோறும் 1.5 கோடி டன்கள் தானியத்தை எலிகள் சாப்பிடுகின்றன என்று சொல்லப்படுகிறது.

இளமையின் அளவு கடந்த பசி

அளவு கடந்த பசியினால் அளவுக்கு மிஞ்சி சாப்பிடுவதால் ஏற்படும் வயிற்றுக் கொளாறுகள் உயர்நிலைப்பள்ளிப் பெண்பிள்ளைகளையும் பாதிக்கிறது என்று மேரி. D. வேன்தோர் மற்றும் ப்ரான்ஸிஸ் X. வோகல் செய்த ஆய்வின் முடிவு வளரிளமைப் பருவம் என்ற புத்தகத்தில் பிரசுரிக்கப்பட்டது. அளவு கடந்த பசியினால் பாதிக்கப்படும் ஆட்கள் அளவுக்கு மிஞ்சிய உணவு அருந்துகிறார்கள், இது சாதாரணமாக வயிற்றுப் போக்கில் விட்டுவிடுகிறது. வாந்தி எடுக்க முயற்சிப்பதினாலோ அல்லது மலமிளக்கி மருந்துகளை அதிகமாக பயன்படுத்துவதாலோ, ஏற்படுவதாயிருக்கிறது. இந்த அபூர்வப் பசியின் விளைவாக வயிற்றுக் கோளாறுகள் கல்லூரிப் பெண்களுக்குத்தான் ஏற்படும் என்று முன்பு கருதப்பட்டது, இப்பாழுது ஒரு குறிப்பிட்ட இனப்பிரிவினரில் 14-18 வயதினர் மத்தியில் காணப்படுகிறது. “மற்றொரு முக்கியமான கண்டுபிடிப்பு இனம் சம்பந்தப்பட்டது,” என்று அந்த அறிக்கை குறிப்பிடுகிறது. இந்தக் குறிப்பிட்ட நோய் மிக முக்கியமாக வெள்ளையர்களையும், மேல்நிலைப் பெண்களையும் பாதிக்கிறது என்று கருதப்பட்டது, ஆனால் இந்த ஆய்வு, “வெள்ளையர்களைப் போலவே கருப்பு (நீக்ரோ) இனத்தைச் சேர்ந்த நடுநிலைப் பெண்களிலும் அளவுகடந்த பசிக்குரிய அறிகுறிகள் காணப்படுகிறது,” என்று குறிப்பிடுகிறது.

“கசப்பான கனிகள்”

வன்முறையில் மிகுந்திருந்த இளைஞர் தொகுதிகளை ஃப்ராங்க்ஃபர்ட் காவல்துறை விசாரணைக் குழு விசாரணை செய்ய தீர்மானித்தது. இளைஞர்கள் வன்முறைச் செயலில் ஈடுவடுவதற்குக் காரணம் அவர்கள் தேவையிலிருப்பதோ அல்லது வீட்டில் கஷ்டமான பிரச்னை மிகுந்த சூழ்நிலை இருப்பதோ அல்ல என்பதை அவர்கள் கண்டனர். மாறாக, இன்று “தெருக் கலவரங்களில் ஈடுபட்டிருந்த 15-19 வயது இளைஞர்கள் 1968-ல் தங்களுடைய பிள்ளைகளைத் தெரு தெருவாகத் தங்களுடன் போராட்டங்களுக்கு அழைத்துச்சென்ற, புரட்சி செய்த பெற்றோர்களின் பிள்ளைகளாவர்,” என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது. “இந்தப் பிள்ளைகளுக்குத் தாய்ப் பாலுடன் புரட்சி என்ற மனநிலையும் போஷிக்கப்பட்டது. பரிசோதனை வெற்றி கண்டது. . . . 1968-ன் தாய்மார்களும் தகப்பன்மார்களும், ஆட்சியாதிக்கத்தை எதிர்த்துப் போராடும் வகையில் தங்கள் பிள்ளைகளை வளர்த்திருப்பதைக் குறித்து பெருமைப்பட்டார்கள். இன்று இந்தப் பெற்றோர்கள்தானே, தங்களுடைய சொந்த பிள்ளைகள் இப்படிப்பட்ட வளர்ப்பின் கசப்பான கனிகளாக அவர்களுடைய சொந்த மருந்தை அவர்களுக்கே சுவைக்கக் கொடுப்பதைக் கண்டு ஆச்சரியப்படுவதற்கில்லை.

பல் மருந்துவர்களின் பரதீஸா?

உலக முழுவதிலும் 18 முதல் 25 வயது கொண்ட ஆட்களில் சொத்தைப் பல் அதிகமாகக் காணப்படும் இடம் பிரேஸில்—நபருக்கு 18 சொத்தைப் பற்கள். பிரேஸிலில் கேம்பினாஸ் பல் மருத்துவ நிபுணர்க் கழகத்தின் தலைவர் ஜோஸ் பாலோ கடவே டி டொலெடோ குறிப்பிட்டபடி அந்தத் தேசத்தில் 90 சதவீகித மக்களுக்கு அடிப்படை பல் மருத்துவ சேவை கிடைப்பதில்லை. பல் மருத்துவ தொழில் நுட்பத்தில் முன்னேற்றமடைந்த “முக்கியமான உலக நாடுகளில்” பிரேஸில் அங்கீகரிக்கப்பட்டிருப்பதுதானே இந்நிலையை இன்னும் கவலைக்கிடமாக்கியுள்ளது.

பாலுறவின்பேரில் பாதிரிமாரின் கருத்து

இரண்டு வழக்கறிஞர்கள், G. சிட்னி புக்கானன் மற்றும் மாரக் ஜான்சன், ஐக்கிய மாகாணங்களில் ஹெளஸ்டன் பல்கலைக் கழகத்தின் பல்கலைக்கழக பூங்கா சட்ட நிறுவனத்தை சேர்ந்தவர்கள். 469 மத போதகர்களையும் பாதிரிமார்களையும் பாலுறவு பழக்கவழக்கங்களைப் பற்றி கேட்டனர். வேசித்தனம் ஒரு பாவம் என்று 40 சதவிகித பாதிரிமார்கள்தான் நம்புகிறார்கள். “ஜானும் மேரியும் அவ்வப்போது வேசித்தனத்தில் ஈடுபட்டு உங்களிடம் ஆலோசனைக்கும் ஒழுக்க சம்பந்தமாக வழிநடத்துதலுக்கும் வந்திக்கையில், வேசித்தனம் ஒழுக்கங்கெட்ட நடத்தை என்று அவர்களிடம் சொல்வதைவிட, அதே காரியத்தை வெறுமேன பிரசங்கிப்பது பாதிரிமார்களுக்கு எளிதாக இருக்கிறது என்பதைத்தான் தங்களுடைய ஆய்வு காண்பித்திருக்கிறது,” என்று சைக்காலஜி டுடே என்ற பத்திரிகையில் கருத்து தெரிவித்திருக்கின்றனர்.

தபால் தலைகளை சலவை செய்து பயன்படுத்துதல்

“தபால்தலைகளைத் தங்கள் இரகசிய அறைகளில் சலவை செய்யும் ஆட்கள் இன்று இருக்கிறார்கள். அந்தத் தொழில் பெரிதாகத்தான் போகிறது,” என்று அரசாங்கத்தால் கண்டுபிடிக்கப்படும்வரை சலவை செய்யப்பட்ட தபால்தலைகளை விற்பனை செய்துவந்த கடை முதலாளி டேவிட் A. ஷ்மிட் கூறுகிறார். “தபால்தலை சலவை—நவீன வகை குற்றச் செயலுக்கு நல்வரவு” என்று தி வால் ஸ்ட்ரீட் ஜர்னல் அறிவிக்கிறது. இந்தச் சலவை ஆட்கள் ஏற்கனவே பயன்படுத்தப்பட்ட தபால்தலைகளைக் குப்பைத் தொட்டிகளில் இருந்தும் வேலைகளிலிருந்து ஓய்வுபெற்ற ஆட்களுடைய வீடுகளிலிருந்தும் தர்ம ஸ்தலங்களிலிருந்தும் விலைகொடுத்து வாங்குகின்றனர். கடிதங்களிலிருந்து தபால்தலைகளை பிரித்து எடுப்பதற்காக அவற்றை வெந்நீரில் ஊறவைத்து, பின்பு அந்தத் தபால்தலைகள் மீது தபால் நிலையத்தினர் போட்டிருக்கும் முத்திரையைக் கலைப்பதற்காக அவற்றை வெளுக்கின்றனர். முத்திரையிடப்படாத தபால்தலைகள்—அஞ்சலகங்களின் பழுதான இயந்திரங்களின் விளைபொருள்—சலவையை இன்னும் எளிதாக்கிவிடுகின்றன. ஆனால் இந்தத் தபால்தலைகளை விற்பனை செய்வதும் பயன்படுத்துவதும் ஒரு சட்டவிரோதச் செயல். 1983-ன் பிற்பகுதி முதல் அஞ்சலக அதிகாரிகள் ரூ.13 கோடிக்கும் அதிக மதிப்புள்ள இப்படிப்பட்ட தபால்தலைகளைக் கைப்பற்றியுள்ளனர்.

பெண் பாதிரிகள்

இங்கிலாந்து சர்ச்சில் ஆண்கள் மட்டுமே பாதிரிகளாக இருக்கும் நிலை ஆபத்திலிருக்கிறது. ஆங்கிலேய குருவர்க்கத்தினரில் கீழ்நிலைக்கு—டீக்கன் ஸ்தானத்திற்கு—பெண்களை நியமிக்க அனுமதிப்பதற்கு சாதகமாக சர்ச்சுகளின் பொதுப்பேரவை முடிவெடுத்திருக்கிறது. ஆங்கில நாட்டுக் குருத்துவ முறையில் டீக்கன் ஸ்தானம் ஒரு பாதிரி ஸ்தானத்திற்கு ஒரு படி கீழனது. “பெண் டீக்கன்கள் குருவர்க்கத்தை சேர்ந்த அங்கத்தினராவர், ‘ரெவரண்டு’ அல்லது ‘பாதிரி’ என்றளவுக்கு மதிக்கப்பட்டு விவாகங்களும் ஞானஸ்நானங்களும் கொடுப்பார்கள், ஆனால் பரிசுத்த நற்கருணை ஆராதனை நடத்தும் நிலையில் இருக்கமாட்டார்கள்,” என்று துராமின் பிரதான டீக்கன் மைக்கல் பெரி கூறுகிறார். ஆங்கிலேய சர்ச்சை சேர்ந்த குழுக்குள் உகாண்டா, கென்யா, நியுஸிலாந்து, ஹாங்காங் மற்றும் கனடாவிலும், எப்பிஸ்கோப்பல் சர்ச் ஐக்கிய மாகாணங்களிலும் ஏற்கனவே பெண்களைப் பாதிரிகளாக நியமித்திருக்கின்றனர்.

டி.வி.-யும் பருமையும்

அளவுக்கு மிஞ்சி டி.வி. பார்ப்பது இளமைப்பருமையைக் கூட்டுகிறது என்று தொலைக்காட்சி பார்க்கும் 6 முதல் 11 வயது பிள்ளைகள் ஆய்வு செய்த ஒரு ஹார்வர்டு ஆய்வுக் குழு அறிக்கை செய்கிறது. இந்தப் பிள்ளைகளில் காணப்பட்ட தூலிப்பு அல்லது பருமை—சாதாரணமாக 15 சதவிகிதம்—அவர்கள் ஒவ்வொரு நாளும் டெலிவிஷனுக்கு முன்பாக செலவழிக்கும் ஒவ்வொரு கூடுதல் மணிநேரத்துக்கும் 2 சதவிகிதம் கூடிற்று. ஏன்? ஏனென்றால் இளைஞர்கள் டி.வி. பார்க்கும் நேரத்தில் தாங்கள் உட்கொள்ளும் தீனி அதிகமாகிறது, உடற்பயிற்சி குறைகிறது. ஆராய்ச்சியாளர்களில் ஒருவராகிய டாக்டர் வில்லியம் H. டீட்ஸ் கூறுகிறார்: “சிறுவர்கள் வாரத்திற்கு 25 மணிநேரத்தை டெலிவிஷன் பார்ப்பதில் செலவழிக்கிறார்கள். அவர்கள் அந்த 25 மணி நேரத்திற்கு வேறு எதுவும், விசேஷமாக சுறுசுறுப்பான வேறு வேலைகள் எதுவும் செய்வதில்லை.”

“ஜப்பானின் பிரயோஜனமான கடைகள்”

ஜப்பானில் செல்வச்செழிப்பு மற்றொரு வகை தொழில் நிறுவனம் வளர்ச்சியுறுவதற்கு வழி வகுத்துள்ளது—பென்ரி-யா, அல்லது “பிரயோஜனமான கடைகள்.” குடும்பங்களால் நடத்தப்பட்டுவரும் இந்தத் தொழில், வாடிக்கையாளருக்கு ஒரு குறிப்பிட்ட தொகைக்கு தனிப்பட்ட பணிகளை செய்துவருகிறது. ஜப்பானிய பெண்களில் அநேகர் வீட்டுக்கு வெளியே சென்று வேலை செய்வதானது பெருகிக்கொண்டிருப்பதால், அவர்களுடைய வீட்டு வேலைகளை செய்ய அவர்களுக்கு நேரமும் பெலமும் இல்லாததால், பென்ரி-யா-வின் சேவை ஆண்டுதோறும் 40 சதவிகிதம் உயர்ந்து வருகிறது, என்று தி டெய்லி யொமியூரி கூறுகிறது. பென்ரி-யா என்ன செய்யும்? அவர்கள் உங்கள் வீட்டை சுத்தம் செய்வார்கள் (இரண்டு மணி நேரத்திற்கு ரூ.240), உங்களை குறிப்பிட்ட நேரத்தில் விழிக்கச் செய்வதற்கு தொலைப்பேசி மூலம் தொடர்பு கொள்வார்கள் (ரூ.40), தலையிலிருந்து நரைமுடிகளை எடுத்துவிடுவார்கள் (ஒரு மணிநேரத்துக்கு ரூ.120), உங்கள் நேச பிராணிகளைக் கவனித்துக் கொள்வார்கள் (ஒரு மணிநேரத்திற்கு ரூ.240 வரை), அல்லது உங்கள் வீட்டு முன்கதவு பூட்டப்பட்டிருக்கிறதா என்பதைப் பார்த்துக் கொள்வார்கள் (ரூ.400).

என்னுடைய பிள்ளையைப் பிட்டத்தில் அடிப்பதா?

பிள்ளை கவனிப்பு நிபுணர்களில் பலர் பிள்ளைகளைப் பிட்டத்தில் அடிப்பதை அங்கீகரிப்பதில்லை என்றாலும், ஐக்கிய மாகாணங்களிலுள்ள 88 சதவிகித பெற்றோர் தங்களுடைய பிள்ளைகளைப் பிட்டத்தில் அடிக்கின்றனர் என்று நியு ஹாம்ஃப்ஷயர் பல்கலைக்கழகக் குடும்ப ஆய்வுக் கூடம் செய்த ஆய்வு எடுத்துக் காட்டுகிறது. அதற்கு பதில் வேறோரு சிட்சிப்பு முறையைப் பயன்படுத்துமாறு அநேக மனோதத்துவ நிபுணர்கள் ஆலோசனை கொடுக்கின்றனர். “பிள்ளையைப் பிட்டத்தில் அடிப்பது பெற்றோருக்கும் பிள்ளைக்கும் இடையே பேச்சுத் தொடர்பு கொண்டிருப்பதற்கு எவ்விதத்திலும் ஈடாகாது,” என்று வடமேற்கு பல்கலைக்கழக மருத்துவ பள்ளியின் உளநூல் பேராசிரியர் டாக்டர் கென்னத் கேய் கூறுகிறார். இந்த மனோதத்துவ நிபுணர்களின் கருத்தை மறுப்பவளாய், பிள்ளையைப் பிட்டத்தில் அடிப்பது நல்ல பேச்சுத் தொடர்புக்கு வழிவகுப்பதாய் உணருகிறாள் 4 முதல் 8 வயதிலிருக்கும் மூன்று பிள்ளைகளுக்குத் தாய்: “மற்ற விதமான தண்டனைகள் அவர்கள் மீது அவ்வளவு நல்ல பாதிப்பை ஏற்படுத்துவதில்லை.”

கல்லிலிருந்து செம்பு

ஜெர்மனியைச் சேர்ந்த போக்கமிலுள்ள ஜெர்மானிய சுரங்க மியூசியத்தின் பிரதிநிதிகள் யோர்தான் பிரதேசத்தில் ஃபென்னிலும் அதைச் சுற்றிலும் உள்ள இடங்களில் பூர்வ காலத்தில் உற்பத்தியான செம்பு உலோகம் குறித்து கடந்த ஆண்டு இரண்டு மாதங்கள் செலவழித்தனர். பொ.ச.மு. எட்டாவது நூற்றாண்டிலிருந்து ஐந்தாவது நூற்றாண்டு வரையாக ஃபெனனில் செம்பு உலோகத்தின் ஏராளமான உற்பத்தி காணப்பட்டிருக்கிறது. “போக்கமிலிருந்து வந்த அறிவியல் நிபுணர்கள் ஒரே சமயத்தில் பயன்படுத்தப்பட்டு வந்த பன்னிரண்டு உருக்கு ஆலைகளில் பயன்படுத்தப்பட்ட மின்பொறிகளைக் கண்டுபிடித்தனர். அவை பேரிக்காய்போன்று காணப்பட்டது. 25 லிட்டர் கொள்ளவு கொண்டவையாயிருந்தது,” என்று சால்ஸ்பர்கர் நேஷ்ரிச்டன் என்ற ஆஸ்திரியா தினசரி அறிக்கை செய்கிறது. “அந்த சமயத்தில் செம்பு உலோக உற்பத்தி பல்லாயிரக்கணக்கான டன்களாக இருந்திருக்கும்.” ஃபெனனில் சுமார் 2,00,000 டன்கள் செம்பு உலோகக் கசடு காணப்படுகிறது. செம்பு உலோகம் இப்படிப்பட்ட முறையில் உற்பத்தி செய்யப்பட்டது என்பதற்குரிய குறிப்பு யோபு 28:2-4-ல் பைபிள் காண்பிக்கிறது. “செம்பு கற்களில் உருக்கி எடுக்கப்படும்,” என்று பைபிள் விளக்குகிறது. (w85 10/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்