பயங்கரவாதம்—பாதுகாப்பாக இருப்பவரும் உண்டா?
அணுகுண்டு தாக்குதல்கள், திட்டமிட்டக் கொலைகள், விமானக் கடத்தல்கள்—இவை அனுதின சம்பவங்களாகிவிட்டன. உலகில் பெரும்பகுதி பாதுகாப்பாக இல்லை. ஐக்கிய மாகாணங்களின் மத்திய புலன் ஆய்வு முகமையின் இயக்குநர் வில்லியம் J, கேஸி “பயங்கரவாதம் எல்லைகளில்லாத இரக்கம் கொள்ளாத ஒரு போராக ஆகிவிட்டிருக்கிறது,” என்று சொல்லுகிறார்.
1971-ல் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குப் பலியானவர்களின் எண்ணிக்கை இரண்டு டஜனுக்கும் குறைவாகவே இருந்தது. 1983-க்குள் ஒவ்வொரு வருடமும் கொல்லப்பட்டவர்களின் எண்ணிக்கை பத்தாயிரத்தைக் கடந்துவிட்டது! “பயங்கரவாதம் ஏய்ட்ஸ் வியாதியைப் போல் பயங்கரமாகப் பரவிவிட்டிருக்கிறது” என்று ஐக்கிய நாடுகளின் முன்னாள் பிரதிநிதி ஜீன் கர்க்பாட்ரிக் எழுதினார்.
இந்த வகையான வன்முறை சரித்திரத்துக்கு ஒரு கொடுமையான திருப்பத்தை உண்டாக்கியிருக்கிறது. “வெவ்வேறு சகாப்தங்களுக்கு வெவ்வேறு பெயர்கொடுக்க விரும்பும் சரித்திராசிரியர்கள், “விசுவாசத்தின் சகாப்தம் அல்லது பகுத்தறிவு சகாப்தம், என்றெல்லாம் பெயர்கொடுத்திருக்கின்றனர் என்று தி உவால் ஸ்ட்ரீட் ஜர்னல் குறிப்பிடுகிறது. ஆனால் அது பின்வருமாறு முடிக்கிறது: “நம்முடைய சகாப்தம் பயங்கரவாத சகாப்தம் என்றுதான் அழைக்கப்படமுடியும். ஏனென்றால் கொள்ளைக் கூட்டத்தின் அல்லது கொலைக்காரத் தொகுதியின் ஓரிரு தனிச் சம்பவங்களை நாம் கையாளுகிறவர்களாயில்லை; அவை எப்பொழுதுமே இருந்துவந்திருக்கின்றன. நாம் வாழ்ந்துவரும் இந்தக் காலம் ஒழுங்காக அமைக்கப்பட்டிருக்கும் அனைத்து சமுதாயத்திற்கும் எதிரான ஒரு புரட்சி, நாகரீகத்தின் மீதே தொடுக்கப்படும் ஒரு போர்.”
விசேஷமாகப் பயணம் செய்யும்போது பயங்கரவாதத்திற்கு பலியாகிவிடும் அச்ச உணர்வு அநேகரில் காணப்படுகிறது. இதற்குக் காரணங்களும் உண்டு. இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு “ஏர் இந்திய” (Air India) விமானம் எண் 182-ல் அணுகுண்டு வெடித்து ஜயர்லாந்துக்கு அருகே கடலில் நொறுங்கிவிழுந்தது. 83 சிறுவர் உட்பட 329 பயணிகளும் உயிரிழந்தனர். இந்த விமானம் புறப்பட்ட இடமாகிய டொரான்டோவில் (கனடா) இதற்குள் அணுகுண்டு வைக்கப்பட்டதாகக் கருதப்படுகிறது.
இந்தச் சம்பவத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்புதானே TWA விமானம் எண் 847 கிரீஸிலுள்ள ஏத்தன்ஸிலிருந்து இத்தாலியிலுள்ள ரோமுக்குச் செல்லும் வழியில் கடத்தப்பட்டது. அந்தப் பிரதேசத்தில் மூன்றே நாட்களுக்குள் நடந்த மூன்றாவது கடத்தல் சம்பவமாகும். இந்த விமானம் விசித்திரமான முறையில் கடத்தப்பட்டது. பணையாக நிறுத்தப்பட்ட இந்த அமெரிக்கர் “என்ன நடக்குமோ என்று உணர்ச்சிகளைத் தூண்டிய பயங்கரவாத செயல் முதன்முறையாக தொலைக்காட்சி தொடர்புடையதாயிருந்த” தொலைக்காட்சியில் காணப்பட்டார்கள் என்று டைம் பத்திரிகை அறிக்கை செய்தது.
விமானம் 847-ம் பணையக்கைதிகளாயிருந்த மக்களில் ஒருவர் பயங்கரமாகக் கொல்லப்பட்டதையும் மற்றவர்களுடைய உயிர் பலியாகும் ஆபத்திலிருந்ததையும் கண்டு அச்சத்தால் கலங்கிய ஐக்கிய மாகாணங்களின் ஜனாதிபதி ரீகன் பின்வருமாறு சொன்னார்: “நான் மற்றவர்களைப் போலவே வெறுப்படைந்திருக்கிறேன். நான் தனிமையிலிருக்கும்போது, நம்பிக்கையிழந்தவனாய் நடந்துகொண்டு அலைமோதிக்கொண்டிருந்தேன்.”
கடைசியில் ஒரு ஒப்பந்தம் செய்யப்பட்டது, பணையக்கைதிகள் விடுவிக்கப்பட்டனர். ஆனால் மத்திய புலன் ஆய்வு முகமையின் இயக்குநர் கேஸி பின்வருமாறு சொன்னார்: “TWA விமானம் கடத்தல் வெறும் ஒரு ஆரம்பமே.”
அது அப்படியே ஆரம்பமாகத்தான் இருந்தது. அமெரிக்க பணையக்கைதிகள் விடுதலைச் செய்யப்படுவதற்கு முன்பாக ஜெர்மனியில் ஃப்ராங்ப்ஃபர்ட் சர்வதேச விமான நிலையத்தில் ஒரு வெடி குண்டு வெடித்தது. அருகேயிருந்த மூன்றுபேர் கொல்லப்பட்டனர். பலர் காயமுற்றனர்.
அக்டோபர் 1985-ல் மத்தியதிரைக் கடலில் இத்தாலியைச் சேர்ந்த அக்கில் லாரோ என்ற கப்பல் பயங்கரவாதிகளால் கடத்தப்பட்டது. இந்தச் சம்பவத்தைத் தொடர்ந்து நான்கு நாட்களுக்கு அச்சமும் திகிலும் நிலவியது. இது முடிவதற்கு முன்பு அமெரிக்கப் பணையக்கைதி ஒருவர் கொல்லப்பட்டார்.
நவம்பர் மாதத்தில் எகிப்திய விமானம் எண் 648 எதிர்பாராத பெருஞ்சேதத்திற்கு இறையானது. எந்தவித மனிதாபிமானமுமின்றி அதன் பயணிகள் ஒருவர் பின்னர் ஒருவராக சுட்டுக்கொல்லப்பட்டனர். தங்களுடைய விமானத்திற்கு வேண்டிய எண்ணெய் கொடுக்கப்படாவிட்டால் எல்லோருமே கொல்லப்படுவர் என்று மிரட்டினர். எகிப்திய இராணுவத்தினர் அந்த விமானத்தைத் தாக்கியபோது, பயணிகளில் பெரும்பான்மையினர் கொல்லப்பட்டிருந்தனர். மொத்தத்தில் 60 பேர் உயிரிழந்தனர், 27 பேர் காயமுற்றனர். அடுத்த பக்கத்தில், அந்தப் பயங்கரவாதிகளின் தாக்குதலில் உயிர்தப்பிய ஒருவரின் நேரடியான விவரிப்பை வாசித்துப் பார்க்கலாம்.
பின்பு கிறிஸ்மஸ் பண்டிகையைத் தொடர்ந்து, ரோம் மற்றும் வியன்னா விமான நிலையங்களைக் கடுமையாகத் தாக்கிய பயங்கரவாதிகள் 19 பேரைக் கொன்றனர், 110 பேரைக் காயப்படுத்தினர். இப்படியாக இது தொடருகிறது. ஒரு சம்பவம் மறையும்போது மற்றொன்று எழும்புகிறது. அநேகமாக ஒவ்வொரு நாளும், எங்கேயாவது ஓரிடத்தில் இந்தப் பயங்கரவாதிகளின் தாக்குதல் நடக்கிறது.
பிரான்ஸ் தேசத்தில் நடந்த ஒரு குண்டுவீச்சைக் குறித்து, பிப்ரவரி 6-ன் தி நியு யார்க் டைம்ஸ் பின்வருமாறு குறிப்பிட்டது: “கடந்த பல நாட்களில் பாரீஸின் மக்கள் நடமாட்டம் மிகுந்த ஒரு பகுதியில் நடந்த மூன்றாவது சம்பவமாகும். இந்த நகரத்தின் மிகச்சிறந்த நன்கு அறியப்பட்ட வியாபார இடங்களில் பயங்கரவாத செயல்களுக்கான ஒரு திட்டம் அமல்படுத்தப்பட்டிருக்கிறது என்பதை இது தெளிவுபடுத்தியிருக்கிறது.”
பாதுகாப்பிற்கான பயம்
பயங்கரவாதம் உருவாக்கியிருக்கும் பயத்தை அன்மையில் அக்கில் லாரோ கப்பல் அணுகுண்டு அபாயச் செய்தியைப் பெற்றபோது நடந்த காரியத்தால் விளக்கிக்காட்டப்படுகிறது. கப்பலிலிருந்த மாலுமிகள் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிக மதிப்பு வாய்ந்த புதிய சூதாட்ட இயந்தரப் பெட்டிகளைக் கடலில் எறிந்தனர், அப்பெட்டிகள் ஒன்றில் அணுகுண்டு வைக்கப்பட்டிருக்கக்கூடும் என்ற பயமே அச்செயலுக்குக் காரணம்! அந்தச் செய்தி போலிச் செய்தியாக இருந்தது.
விமான நிலையங்கள் பல இராணுவ முகாம்களாக ஆகிவிட்டிருக்கின்றன. இஸ்ரேலின் பென் குரியான் விமான நிலையம் போன்ற விமான நிலையங்களில் பெட்டிகளும் பைகளும் முழுமையாக சோதிக்கப்படுகின்றன. அந்த விமான நிலையத்தில் சோதனையிடும் அதிகாரி ஒருவர் சந்தேகத்தினால் பற்பசை ட்யூபை அழுத்திப் பார்த்தபோது, பயணி அவரைப் பார்த்து, “அதை வெளியே அழுத்தியெடுத்தால், மறுபடியும் உள்ளே போடுவதற்குக் கஷ்டப்படுவீர்கள்,” என்று கிண்டலாகக் கூறினார். எந்தவிதமான பாதுகாப்பு முறைகளும் முழுமையான பாதுகாப்பைக் கொடுக்க அல்லது உத்தரவாதமளிக்க முடியாது.
“இந்த விஷயத்தில், எந்த ஒரு விமான நிலையமும் உண்மையிலேயே பாதுகாப்பானதாயில்லை,” என்கிறார் ஐக்கிய மாகாணங்களின் துணைப் பயன நிர்வாகி மைக்கல் பாரன். “உங்கள் பணத்தைக் கொடுக்கிறீர்கள், உங்களுக்கு ஆபத்தும் இருக்கிறது.”
பயங்கரவாதத்தால் பல்லாயிரக் கணக்கானோர் தங்கள் பயண திட்டங்களை மாற்றியிருக்கின்றனர். பெரியதோர் விமானக் கடத்தலுக்குப் பின்பு அயல்நாடுகளுக்குச் செல்லும் திட்டங்களை 8,50,000 அமெரிக்க மக்கள் ரத்துசெய்திருப்பதாக அறிக்கை காண்பிக்கிறது. நியு யார்க் பயண முகவர் ஒருவர் அண்மையில் பின்வருமாறு குறிப்பிட்டார்: “தற்சமயம் பயண முகவர்களுங்கூட ஐரோப்பாவுக்குப் போக விரும்புவதில்லை,” என்று சொல்லி, “நாங்கள் இலவசமாகப் போகலாம்” என்று முடிக்கிறார்.
நிலைமை அதிகக் கவலைக்குரியதாக இருக்கிறது. ஐக்கிய மாகாணங்களின் பேரவையிடம் நிலைமையைச் சுருக்கமாக விவரித்த மத்திய புலன் ஆய்வு முகமையின் இயக்குநர் கேஸி கூறியதாவது: “அறிவிக்கப்படாத ஒரு போரின் மத்தியிலிருக்கிறோம்.” ஆனால் எதிரி யார் என்பதைச் சுட்டிக்காட்டுவதுதான் பிரச்னை. அந்த எதிரி விமானத்தில் பக்கத்து இருக்கையில் அமர்ந்திருக்கும் பயணியாக இருக்கக்கூடும். விமானக்கடத்திகளின் கைக்குள் அடங்கியிருப்பது எப்படியிருக்கும் என்பதை அறிய ஆவலாயிருக்கிறீர்களா? அப்படியென்றால் எகிப்திய விமானம் எண் 648 கடத்தப்பட்ட சமயத்தில் உயிர்த்தப்பிய எலியாஸ் ரூசீஸ் என்பவரின் பின்வரும் கதையை வாசியுங்கள். (g86 6/22)
[பக்கம் 12-ன் படம்]
ரோம் நகரின் விமான நிலையத்தில் படுகொலை