உலகத்தைக் கவனித்தல்
புற்றுநோய் குணப்படுத்தப் புதிய முறை
புற்றுநோயைக் குணப்படுத்துவது நாம் நினைத்ததைப் பார்க்கிலும் அருகிலிருக்கிறதா? தென் ஆப்பிரிக்க விஞ்ஞானக் கூட்டணி ஒன்று “புற்றுநோயைக் கொல்லும் மருந்துகளைப் படர்ந்து பரவும் கட்டிகளுக்கு நேரடியாகக் கொண்டுசெல்லும்”படி திட்டமிடப்பட்ட ஒரு தனி நோய் எதிர்ப்பொருளை உண்டுபண்ணியிருப்பதாகத் தென் அமெரிக்கன் டைஜஸ்ட் அறிவிக்கிறது. எப்படி? இந்தச் செயற்கை எதிர்ப் பொருட்களைத் திட்டமான புற்றுநோயைக் கண்டுபிடிக்கும்வரை உடலில் அலசித்தேடும்படி செயல்பட வைத்தல். இந்த எதிர்ப்பொருள் அதன் இரையைக் கண்டவுடன், தான் சுமந்துசெல்லும் அந்தக் கொல்லும் மருந்தைக் “கீழே கொட்டு”வதன் மூலம் அந்தக் கட்டியை அழிக்கும். “மோப்பத்தால் கண்டுபிடிக்கும் பயிற்றுவிக்கப்பட்ட ஒரு நாயைப் போல்,” கண்டுபிடித்தக் கட்டியுடன் அது நின்றுவிடாது, இன்னும் கண்டுபிடிக்கப்படாதிருக்கும் புற்றுநோயைக் கண்டுபிடித்துத் தன்னிடம் இன்னும் உள்ள உயிரைக் காக்கும் அந்த மருந்தை அதில் ஊடுருவச் செல்லும்படி கொட்டுவதற்கு அது தொடர்ந்து தேடும்.
உயிரைக் காக்கும் உள்ளுறுப்பு தன்னியக்கம்
நெடுநேரம் மூழ்கிவிட்டபின் பிழைப்பது கூடிய காரியமா? ஆம், “மம்மாலியன் டைவிங் ரிஃப்லெக்ஸ்” என்றறியப்படும் உயிரைக் காக்கும் உள்ளுறுப்பு தன்னியக்கத்துக்கு நன்றி என நியூ யார்க் டேய்லி நியூஸ் அறிவிக்கிறது. மிச்சிகன் பல்கலைக் கழகத்தோடு ஆராய்ச்சி செய்பவர் டாக்டர் மார்ட்டின் நெமிராஃப், நீர் நாய்கள் தண்ணீருக்குள் நீண்ட காலப் பகுதிகள் பிழைத்திருக்கக்கூடியதாக்கும் அதே “இயலியக்க அமைப்பு” மனிதருக்கு இருக்கிறதென்று கண்டுபிடித்தார். முன்பு, நான்கு நிமிடங்களுக்குமேல் பிராணவாயு இல்லாவிடில் மூளை செத்துவிட்டதென நம்பப்பட்டது. எனினும், 70 டிகிரிகள் பாரன்ஹைட்டுக்கும் குறைவான வெப்பத்திலுள்ள நீருக்குள் ஓர் ஆள் அமிழ்ந்திருந்தால், உள்ளுறுப்பு தன்னியக்கம் இயங்கத் தொடங்கி, மூளையைத் தவிர உடலின் மற்ற எல்லாப் பாகங்களுக்கும் செல்லும் இரத்த ஓட்டத்தின் வேகத்தைக் குறைக்கும். இது, சமீபத்தில் மூன்று வயது சிறுமி 40 நிமிடங்கள் தண்ணீருக்குள் மூழ்கிப் போயிருந்தும் பிழைத்ததன் காரணத்தை விளக்குகிறது. மூழ்கியவரைத் தண்ணீரிலிருந்து வெளியிழுத்தப்பின் உடனடியாக உயிர்ப்பிக்கும் நடவடிக்கை எடுத்தால் மூளையையும் உடலையும் உயிருக்குக் கொண்டுவரச் செய்யலாம். இந்தத் தன்னியக்கம் பெரியவர்களைவிட பிள்ளைகளிலேயே நன்றாய் வேலை செய்வதாகச் சொல்லப்படுகிறது.
மெக்ஸிக்கோவில் நாயின் இரண்டகநிலை
மெக்ஸிக்கோ நகரத்தின் பிரச்னைகள் போக்குவரவு நடமாட்டம், புகைப்பனி மூடியிருப்பது, மீறிய நெருக்கம் ஆகியவை மாத்திரமே அல்ல. பொது சுகாதார நிர்வாக இலாகாவின் ஓர் அதிகாரி டாக்டர் ஏன்ஜலினி டி லா கார்ஸா சொல்வதன்படி, மெக்ஸிக்கோ நகரத்தில் பத்தாயிரத்துக்கு மேற்பட்ட நாய்கள் இருக்கின்றன, மேலும் இந்த நாய்களின் தொகை ஆண்டுக்கு 20% வீதம் பெருகிக் கொண்டிருக்கின்றன! கூடுதலாக வீடற்ற 2,00,000 நாய்கள் நகர வீதிகளில் சுற்றிக்கொண்டிருக்கின்றன, இவை நாய்வெறி நோயையும் மற்ற நோய்களையும் கொண்டுசெல்பவையாகக் கருதப்படுகின்றன. இவற்றின் தொகையைக் குறைக்க எடுக்கும் முயற்சியில் ஆண்டுதோறும் 12,000 நாய்கள் நகரத்திலிருந்து விலக்கி ஒழிக்கப்படுகின்றன. ஆனால் நாய்களைப் பிடிப்பவர்களை, மிருக ஒழிப்பை எதிர்க்கிறவர்கள் தாக்கித் தொல்லைக் கொடுக்கின்றனர். நிந்தித்துத் திட்டுவதிலிருந்து கற்களையும் தடிகளையும், சுடுபடைக்கலங்களையுங்கூட கொண்டு தாக்கப்படுதலை அவர்கள் அனுபவிக்கின்றனர்.
“இயல்பான எதிர்ச்செயல்”
அரசியல் புலனாய்வுத் துறை சொல்வதன்படி ஐக்கிய மாகாணங்களில் “வலுக்காட்டாய கற்பழிப்பு” 1985-ன்போது 4 சதவீத அளவு அதிகரித்தது. இத்தகைய கற்பழிப்புகளின் மிகப் பெரிய எண்ணிக்கை நியூ யார்க் நகரத்தில் பதிவு செய்யப்பட்டது, அறிவிக்கப்பட்ட சம்பவங்கள் 3,880, இதைப் பின்தொடர்ந்து லாஸ் ஆஞ்சலிஸில் 2,318 சம்பவங்கள். பல காரியங்களைக் காரணங்களென அதிகாரிகள் எடுத்துக் குறிப்பிட்டாலும், “உடையிலும், உடல் நெளிப்பிலும், குறிப்பாக எண்ணத்தைத் தூண்டுகிற சொற்களிலும் தங்கள் தீயக் கவர்ச்சியூட்டும் நடத்தையால் சில பெண்கள் கற்பழிப்பை வரவழைக்கின்றனர்,” என்று சில நிபுணர்கள் வற்புறுத்துகின்றனர். (தி கிளோப் அண்ட் மெய்ல், டோரோன்டோ, கானடா) 16 வயது பெண்ணைக் கற்பழித்தக் குற்றஞ்சாட்டப்பட்ட ஒருவனை உவிஸ்கான்ஸின் நீதிபதி நன்னடத்தை சோதனைமுறை விடுதலைத் தீர்ப்பளித்தார். ஏன்? தூண்டுதல் வசியம் செய்யும் உடைக்கு “இயல்பான எதிர்ச்செயலாக” அந்தக் கற்பழிப்பு நடந்ததென நீதிபதி முடிவு செய்தார்.
ஒழுங்கற்ற மருத்துவம் சம்பந்தமாய்ப் புதிய திட்டங்கள்
ஒழுங்கற்ற மருத்துவத்தை நீதிமன்றத்தில் முறையிட்டு வழக்குத் தொடுப்பதைப் பற்றிய பயம் மருத்துவ தொழிலைக் கொண்டவர்களுக்குள் அதிகரித்துக் கொண்டே போவதால், ஐக்கிய மாகாணங்களில் ஒரு புதிய சேவை, “வரப்போகும் நோயாளி எப்பொழுதாவது ஒழுங்கற்ற மருத்துவத்தை முறையிட்டு வழக்குத் தொடர்ந்தவரா” இல்லையாவென தீர்மானிக்க மருத்துவருக்கு உதவிசெய்கிறது. ‘மருத்துவரின் எச்சரிக்கை அறிவிப்பு’ என்றறியப்படும் புதிய தொலைபேசி திட்டத்தில் மாறும் காலங்கள் என்பது இவ்வாறு அறிவிக்கிறது, வரப்போகும் நோயாளிகளைத் தேர்ந்தெடுத்துக் காட்டுவதற்கு ஆண்டு கட்டணம் 150 டாலர்கள், அதோடுகூட தனிப்பட்ட பெயர் குறிப்பிடப்படும் ஒவ்வொரு தனி ஆளுக்கும் 10 டாலர்கள். எனினும் மருத்துவருக்குச் செய்யப்பட்ட இந்த ஏற்பாட்டுக்கு எதிர் ஏற்பாடாக, ஒரு மருத்துவர் எப்போதாவது ஒழுங்கற்ற மருத்துவ வழக்கில் உட்பட்டிருந்தாராவென அறிய விரும்பும் நோயாளிகளுக்கு உதவிசெய்யவும் ஒரு புதிய திட்டம் ஏற்படுத்தி வைக்கப்பட்டிருக்கிறது. இதன் கட்டணம் 5 டாலர்கள். எந்தச் சேவையும் ஒரு குறிப்பிட்ட நீதிமன்ற வழக்கின் முடிவை வெளிப்படுத்தாது.
கூரறிவுத் திறம்வாய்ந்தக் குழந்தைகள்
குழந்தைகளுக்கு அறிவுத்திற அளவெண்கள் (IQs) உண்டா? உண்டென்று தனித்தனி ஆராய்ச்சிகள் வெளிப்படுத்துகின்றன. அவர்களுடைய கவன அளவுகளைச் சோதிப்பதன் மூலம் ஆறு மாத இளங்குழந்தைகளின் அறிவுத்திற அளவெண்களையும் (IQs) தாங்கள் அளவிட முடியுமென அராய்ச்சியாளர் சொல்லுகின்றனர் என்று தி டிட்ராய்ட் நியூஸ் அறிவிக்கிறது. இந்தக் கணிப்பு எண்கள் அவர்கள் நான்கு அல்லது ஐந்து வயதாயிருக்கையில் தரஅளவுபடுத்தப்பட்ட அறிவுத்திற அளவெண் (IQ) சோதனைகளில் எடுக்கப்பட்ட அவர்கள் கணிப்பு எண்களோடு வெகு நெருங்க ஒத்திருக்கின்றனவென சொல்லப்படுகிறது. படிக்கும் திறமையைப் பெற்றோர் நிலையாய்த் தூண்டிவரும் பிள்ளைகள், குறைந்தத் தடவைகளே தூண்டுதலைப் பெறும் பிள்ளைகளைப் பார்க்கிலும், அறிவுத்திற அளவெண் (IQ) சோதனைகளில் உயர்ந்த எண்ணை அடைகிறார்களென நியூ யார்க் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர் மார்க் போர்ன்ஸ்டீன் குறிப்பிட்டார்.
13-லிருந்து 19-வயதுக்குட்பட்டோரில் கருச்சிதைவுகள்
“தொழில் மயமாக்கப்பட்ட எந்தத் தேசத்திலும் இருப்பதைப் பார்க்கிலும்” ஐக்கிய மாகாணங்களிலேயே “மணமாகாத 13-19 வயதுக்குட்பட்டவர்களுக்குள் மிக அதிகம் உயர்ந்த கர்ப்பந்தரித்தல் வீதம்” உண்டென்று மனித ஆண்பெண் பால் பண்பைப் பற்றிய மருத்துவ நோக்குநிலைகள் என்ற பத்திரிகையில் ஓர் கட்டுரை குறிப்பிடுகிறது. இந்தப் பெண்களில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பகுதியானவர்கள் குழந்தையைப் பிறப்பிக்கிறார்கள், மூன்றில் ஒரு பங்கான மீதிபேர் தங்கள் கர்ப்பத்தைக் கருச்சிதைவினால் முடிவுசெய்கிறார்கள். 13-19 வயதுக்குட்பட்டவர்களில் நடப்பிக்கப்பட்ட 4,50,000 கருச்சிதைவுகளில் 15,000, 15 வயதுக்குக் கீழ்பட்ட பெண்களில் நடப்பிக்கப்பட்டன. கருத்தடை முறையாக இந்த இளம் பெண்களில் பலர், திரும்பத் திரும்பக் கருச்சிதைவு செய்வதைத் தெரிந்துகொள்கின்றனரென அந்தக் கட்டுரை கூறுகிறது. ஐக்கிய மாகாணங்களில் நடப்பிக்கப்படும் எல்லா கருச்சிதைவுகளிலும் 28 சதவீதம் 13-19 வயதுக்குட்பட்டவர்கள் காரணமாயிருக்கிறார்களென புள்ளிவிவரங்கள் குறிப்பிட்டுக் காட்டுகின்றன.
புத்தகங்களே மேம்பட்டவை!
ஜெர்மனியின் டார்ட்மண்ட பல்கலைக் கழகம் நடத்தின 13-லிருந்து 16 வயது பெண்களும் பையன்களும் உட்பட்ட ஓர் ஆராய்ச்சி, நல்ல மாணாக்கர் கம்ப்யூட்டருக்கும் டெலிவிஷனுக்கும் முன்னால் குறைந்த நேரத்தைச் செலவிடுகின்றனரென குறிப்பாகக் காட்டுகிறது. ஏன்? ஏனென்றால் அவர்கள் “எழுதப்பட்ட வார்த்தையின் மூலமே மேற்கத்திய அறிவு வளர்ச்சியுடன் அதிகத் தொடர்புகொள்”வதை விரும்பித் தெரிந்துகொள்கின்றனர், நவீன தொழில்துறை விஞ்ஞானத்தையும் கம்ப்யூட்டர்களையும் பற்றி அடிக்கடி மிகத் தயக்கமும் சந்தேகமுமுள்ள கருத்தைக் கொள்கின்றனர். இதற்கு மாறாக, “கம்ப்யூட்டர் பழக்கத்திற்கு அடிமையானவர்கள்” காட்சி திரைக்கு முன்னால் ஒரு நாளுக்கு எட்டு மணிநேரங்கள் வரையாகச் செலவிடுகின்றனரென்று ஜெர்மன் செய்தித்தாள் ஃப்ரான்க்ஃபர்ட்டர் அல்ஜிமீயன் ஸீயட்டஸ் அறிவிக்கிறது. இந்தக் காலப்பகுதியின் மூன்று அல்லது நான்கு மணிநேரங்கள் கம்ப்யூட்டரிடம் செலவிடப்படுகிறது, மீதிநேரம் டெலிவிஷன் அல்லது வீடியோ பார்ப்பதில் செலவிடப்படுகிறது.
மாணாக்கர் வன்முறை பெருகுகிறது
பிளக்கப்பட்ட கார் டயர்கள், நொறுக்கப்பட்ட மோட்டார் காற்றுத்தடுப்புகள், தீக்கொளுத்துதல், கத்திக் குத்துகள், சுடுதல் இவையெல்லாம் அதிகரிக்கும் மாணாக்கர் வன்முறைச் செயல்களை அறிவித்த 4,000 பள்ளி ஆசிரியருக்குள் எடுத்த ஆராய்ச்சியில் முனைப்பாய்த் தோன்றுகின்றன. மாணாக்கர் ஒருவரையொருவர் கத்தியால் குத்திக்கொள்ளுகிறார்கள், சிறுவர்களைக் கட்டட மாடி முகப்புகளிலிருந்து கீழே எறிகிறார்கள், கண்ணாடி தகடு பொருத்தியுள்ள பலகணிகள் வழியாகவுங்கூட அவ்வாறு எறிகிறார்கள். ஒவ்வொரு நான்கு ஆசிரியரிலும் ஒருவர் பயமுறுத்தலுக்கு ஆளாகிறார், பத்தில் ஒருவர் உடல்சம்பந்தமான தாக்குதலுக்கு ஆளாகிறார், ஒவ்வொரு 25 பேரிலும் ஒருவர் தீவிரத் தாக்குதலை அனுபவிக்கிறார். இந்த வன்முறைச் செயல்களுக்கு ஆண்களும் பெண்களும் இலக்காகும்படி செய்யப்படுகின்றனர், பெண் ஆசிரியர்கள் பலர் பால் சம்பந்தமாய்த் தாக்கப்பட்டார்களென அறிவித்தனர். பள்ளி வன்முறைச் செயல்கள் “அவ்வளவு மோசமாயிருப்பதால், சில பகுதிகளில் வெளிப்படையான போர் நடக்கிறது,” என்று இலண்டன் டைம்ஸ் பத்திரிகை அறிவிக்கிறது.
குழப்பமடைந்த மொழிபெயர்ப்பாளர்கள்
ஒவ்வொரு நாளும், கம்ப்யூட்டர்கள், பத்திரங்களை (இலக்கிய அலங்காரமில்லாமல் இயல் மொழி நடையிலுள்ளவற்றை) ஒரு மொழியிலிருந்து மற்றொன்றுக்கு மொழிபெயர்ப்பதில் மிகத் திறமை வாய்ந்தவையாகிக் கொண்டிருக்கின்றன. அவை இப்பொழுது, “ஒரு பொத்தானை வெறுமென அழுத்துவதோடு, ஆங்கில மூலவாக்கியத்தை, ஸ்பானிஷ், ஃபிரென்ஞ், இத்தாலியன், ஜெர்மன் மற்றும் போர்த்துகீஸில் மொழிபெயர்த்து ஆண்டுதோறும் 50,000 பக்கங்களை உண்டுபண்ணுகின்றன,” என்று ஸீராக்ஸ் கார்ப்பரேஷனின் மொழிபெயர்க்கும் பகுதியின் மேலாளர் பீட்டர் டி மாரோ சொல்லுகிறார். யூரோட்டா எனப்படும் இத்தகைய ஒரு அமைப்பு முறையின் விலை 3 கோடி டாலர்கள் (36 கோடி ரூபாய்). எனினும், “அரிதாகப் பயன்படுத்தும் சொற்களுடன் அல்லது இரு கருத்தைக் கொண்டுள்ள சொற்களுடன் இந்த அறிவு பொறிகளுக்கு இன்னும் சங்கடமுண்டு,” என்று மெக்ஸிக்கன் செய்தித்தாள், எல் யூனிவெர்ஸல் அறிவிக்கிறது. உதாரணமாக, தீ-க்கு எதிராகப் பாதுகாப்பு என்று அங்கிலத்தில் இருக்கும் சொற்றொடரைத் தவறாக ஒருவேளை பாதுகாப்பைத் தீக்கொளுத்து என மொழிபெயர்த்துவிடலாம்!
கடல் மட்டம் எழும்புகிறது
அடுத்த நூற்றாண்டின்போது, உலக முழுவதிலும் கடற்கரையோரத்தில் வாழும் மக்கள் உண்மையான ஒரு பயமுறுத்தலை எதிர்ப்படலாம் என்று இயற்கை எனப்படும் பிரிட்டிஷ் பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட சமீப அறிக்கை ஒன்றில், மண்ணியல் அமைப்பு ஆராய்ச்சியாளர் இருவர் வலியுறுத்துகின்றனர். அவர்களுடைய கண்டுபிடிப்புகளின்படி, மிக அதிகமாக எரிபொருள்களை எரித்ததன் மூலம் ஆகாயத்துக்குள் வெளிவிடப்பட்ட கரியமில வாயு, பூகோள கடல் மட்டத்தில் கவனிக்கத்தக்க எழுச்சியை உண்டுபண்ணியிருக்கிறது. இந்தக் கரியமில வாயு பூமியின் வெப்பம் வெளிச்செல்வதைத் தடுப்பதால், இதன் விளைவாக “வெப்ப வீட்டு” நிலை அல்லது சீதோஷ்ண நிலை வெப்பமாதல் உண்டாகிறது. இது கடல்களில் வெப்பக் காரண எழுச்சியை உண்டு பண்ணுகிறது, அதோடுகூட நிலநடுக்கோட்டு மண்டலப் பகுதியிலுள்ள பனிக்கட்டிப் பாளங்கள் உருகும்படியும் செய்கிறது. பூகோள கடல்மட்டம் ஆண்டுதோறும் எழும்பும் இதில் மனிதன் இடையிட்டுத் தடை செய்வது ஓரளவு வேகங்குறைய செய்திருக்கிறபோதிலும், இந்த மண்ணியல் அமைப்பு ஆராய்ச்சியாளர் பின்வருமாறு கூறுகின்றனர்: “கடல்மட்ட எழுச்சி மனிதவர்க்கத்துக்கு மனமிரங்கி விட்டுக் கொடுக்காத ‘மரணத்தையும் வரிகளையும்’ சேர்ந்துகொள்கிறது.”
விரைவாய் வளரும் தொழிலாக இன்னுமிருக்கிறது
கடந்த ஆண்டில் தென் ஆப்பிரிக்காவில் 6,000-த்துக்கு மேற்பட்ட தொழில்கள், சராசரி ஒரு நாளுக்கு 16 ஆக வீழ்ந்துபோயிற்று. பல தொழில்களுக்கு 1985 துன்பத்துக்கேதுவான ஆண்டாக இவ்வாறு நிரூபித்தப் போதிலும், ஒரு வகையான தொழில் தொடர்ந்து செழிந்தோங்கிக் கொண்டிருக்கிறது—‘மியூட்டி’ எனப்பட்ட ஆப்பிரிக்க மருந்தில் வாணிகம் செய்பவர்கள். ஜோஹன்னஸ்பர்கிலுள்ள இத்தகைய கடையின் சொந்தக்காரர் டாக்டர் நாயிடு, பின்வருமாறு கூறினார்: “என்னுடைய கடை சிறப்பங்காடியைப் போலிருக்கிறது. இங்கே எல்லா ஜாதியாரான ஜனங்களும் எல்லா வயதினரும் ஏதாவது பரிகாரத்தை வாங்க வருகிறார்கள்.” அன்பை அடைவதற்கு ஒருவேளை மருந்துநீர், வீட்டுப் பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு ஒரு பரிகாரம், பொல்லாத ஆவிகளை ஒட்டுவதற்கு ஏதாவது, அல்லது வருவதுரைப்பதைக் கேட்கும் நம்பிக்கையுடன் வாடிக்கைக்காரர்கள் வருகிறார்கள். மிருகத் தோல்களும் எலும்புகளும், பெருங்குரங்கின் பாகங்கள் (இவை பொல்லாத ஆவிகளுக்கு எதிராகப் பாதுகாப்பு என்று பலர் நம்புகின்றனர்), மற்றும் மருந்து இலைகள் ஆகியவற்றை அவர் சேர்த்து வைக்கிறார். கடையின் சரக்குகளைப் பொல்லாத ஆவிகளிலிருந்து பாதுகாக்க நான்கு மணி நேரங்களுக்கு ஒருமுறை எம்பெப்போ எனப்படும் ஒரு மருந்திலையை எரிக்கிறார்!
ஆங்கிலம் பேசுவதற்கு எவராவது?
இலண்டனில் இருப்பவர்கள், தங்கள் பள்ளிகளில் பெங்காலி மொழி மிகச் சாதாரணமாய்ப் பேசும் இரண்டாவது மொழியாக இப்பொழுது இருப்பதையும் 12,000-த்துக்குக் குறைவுபடாத இளைஞரால் அது பேசப்படுவதையும் அறிந்து திடுக்கிடுகின்றனர். ஒரு பள்ளியில் 45 வெவ்வேறு மொழிகள் பேசப்படுகின்றன. நகர முழுவதிலும் 161 வெவ்வேறு மொழிகள் பள்ளிப் பிள்ளைகளால் பேசப்படுகின்றன, எனினும் பெரும்பான்மையருக்கு வீட்டிலுங்கூட ஆங்கிலம் பொது மொழியாக இருந்து வருகிறது.
ஐக்கிய மாகாணங்களில், 1980-ன் பத்தாண்டுகளின்போது கல்லூரிகளில் ஜப்பானிய மொழி மிக அதிக விரைவாய்ப் பரவும் மொழியாகிவிட்டது—கல்லூரி படிநிலைக்கு 40 சதவீதத்துக்குமேல் பெருகிவிட்டது. கல்லூரிக்கு முந்தின கல்விப்படி நிலையிலும் இந்த மொழியில் இதைப்போன்ற அக்கறை காட்டப்படுகிறது. ஐந்து ஆண்டுகளுக்கு முன்னால் பெயர் பதிவு செய்தவர்களின் எண்ணிக்கையோடு ஒப்பிட இப்பொழுது ஜப்பானிய மொழி மாணாக்கர்கள் மூன்று மடங்குகள் அதிகரித்திருக்கின்றனரென நியூ யார்க் நகரத்திலுள்ள ஜப்பான் சொஸையட்டி அறிவிக்கிறது! ஜப்பான் மொழியைப் படிப்பதற்கு ஏன் இந்த அவசர முற்போக்கு? அந்த மொழியில் தேசீய அக்கறை காட்டுவது, “ஜப்பானுக்கும் ஐக்கிய மாகாணங்களுக்கும் இடையில் விரிவாகிக்கொண்டு போகும் பொருளாதார மற்றும் தொழில் நுட்ப உறவின்” பேரில் ஊன்ற வைக்கப்பட்டிருப்பதாகத் தோன்றுகிறது. (g86 7/22)