உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g88 9/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1988
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • வத்திக்கன் செல்வாக்கை இழந்து வருகிறது
  • ஒன்று சேர்ந்து வாழ்நாளை குறுக்கிவிடுகிறது
  • அறுவைச் சிகிச்சைக்கு இசை
  • வளர்ந்துவரும் பாலைவனங்கள்
  • பூமியின் வரம்புகளை மீறிச் செல்லுதல்
  • விஷத்தின் விலை
  • தூய்மைக் கேட்டில் பேரளவான உயிர்பலி
  • “முழு ஆற்றலையும் ஈடுபடுத்தி முனைப்பாக முயற்சி செய்தல்
  • இரத்தம் சம்பந்தமான புதிய பயமுறுத்தல்
  • கொல்லும் வைரஸ் ஜயரைத் தாக்குகிறது
    விழித்தெழு!—1996
  • எய்ட்ஸ் நோய்க்கடத்திகள்—எத்தனை பேர் மரிக்கக்கூடும்?
    விழித்தெழு!—1989
  • அபாயத்தில் இருப்பது யார்?
    விழித்தெழு!—1987
  • எய்ட்ஸ் ஓர் அனைத்துலகக் கொலையாளி
    விழித்தெழு!—1989
மேலும் பார்க்க
விழித்தெழு!—1988
g88 9/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

வத்திக்கன் செல்வாக்கை இழந்து வருகிறது

பல நூற்றாண்டுகளாக ஸ்பேய்ன் மற்றும் பிரான்ஸ் என்ற பெயர்கள், சுவையான மதுவகைகளும் தீவிரமான ரோமன் கத்தோலிக்கக் கோட்பாடுகளும் ஒரே பொருளையுடைய சொற்களாக இருந்துவந்தன. இன்று மதுவகைகள் மேலும் தாராளமாக கிடைக்கக்கூடியதாக இருக்கையில், இந்த இரண்டு ஐரோப்பிய தேசங்களிலும் ரோமன் கத்தோலிக்க சர்ச்சுக்கும் ஆதரவு வேகமாகக் குறைந்துவருகிறது. ஸ்பேய்ன் நாட்டவரில் 46 சதவிகிதத்தினர் மாத்திரமே கத்தோலிக்க மதத்தை கடைப்பிடிப்பவர்களெனப் பதிவு செய்து கொள்வதை விரும்புகிறார்களென்றும் ஸ்பேய்னிலுள்ள மொத்த ஆட்களில் வெறும் 18 சதவிகிதத்தினர் மாத்திரமே ஒவ்வொரு வாரமும் சர்ச்சுக்குச் செல்வதாகவும் டச் ரோமன் கத்தோலிக்கப் பத்திரிக்கை குரூஸ்பன்ட் அறிவிப்பு செய்கிறது. அந்தத் தேசத்திலுள்ள ரோமன் கத்தோலிக்கர்களில் 55 சதவிகிதத்தினர் போப்பின் அதிகாரப் பூர்வமான அறிவிப்புகளை அசட்டை செய்தாலும், இன்னும் நல்ல கத்தோலிக்கர்களாக இருக்க முடியுமென கருதுவதாக பிரான்ஸிலுள்ள பாரிஸின் ஸோஃபிரீஸ் நிறுவனம் அறிவித்தது கருச் சிதைவும், விவாகத்துக்கு முன்பு பாலுறவு கொள்வதும் அனுமதிக்கப்படவேண்டும் என்றும் “ஒரு திருச்சபையில் அல்லது கத்தோலிக்க அமைப்பில் உறுப்பினராயிருப்பது முற்றிலும் அவசியமற்றது” என்பதாகவும் அவர்கள் நினைக்கிறார்கள். ஸ்பேய்னிலும் பிரான்ஸிலும் மக்கள் தொகையில் 15 சதவிகிதத்தினர் இப்பொழுது மதத்திலிருந்தே விலகிச் சென்றுவிட்டதை ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றனர்.

ஒன்று சேர்ந்து வாழ்நாளை குறுக்கிவிடுகிறது

“ஊட்டச்சத்தில்லா உணவும் அடிக்கடி கர்ப்பமாகிவிடுதலும் ஒன்று சேர்ந்து, ஒரு பெண்ணின் ஆயுசு காலத்தை அவள் பெற்றெடுக்கும் ஒவ்வொரு குழந்தையும் ஐந்து வருடங்களுக்கு குறைத்துவிடக்கூடும்” என்கிறது ஏஸியா வீக். “கர்ப்பம் தரிப்பதற்கிடையே இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் இடைவேளை இருத்தல் வேண்டும் என்று சர்வதேச நிபுணர்கள் பரிந்துரைசெய்கிறார்கள்.” கருத்தரிப்பதன் காரணமாகவும் “தாய் அதிகமான சக்தியை இழந்துவிடுவதிலிருந்து” நீண்ட இடைவேளை அவளைப் பாதுகாத்து குழந்தையின் உடல் ஆரோக்கியத்தையும்கூட மேம்படுத்தக்கூடும். “சத்துணவு குறையைத் தவிர்ப்பதிலும் சிறு குழந்தைகளின் சாவு விகிதத்தைக் குறைப்பதிலும்” தாய் பாலூட்டுவது பிரயோஜனமாயிருப்பதாகவும்கூட அறிக்கை எடுத்துச்செல்கிறது.

அறுவைச் சிகிச்சைக்கு இசை

அறுவைச் சிகிச்சையின்போது நோயாளிக்கு இசை உதவக்கூடுமா? உதவக்கூடும் என்பதாக வாஷிங்டனில் போர்ட்டௌன் சென்ட்டிலுள்ள ஜெபர்ஸன் பொது மருத்துவமனையில் செய்யப்பட்ட ஆராய்ச்சியின் முடிவுகள் காண்பிக்கின்றன. அறுவைச் சிகிச்சையறையில் 25 வித்தியாசமான நோயாளிகளின் மீது இசை ஏற்படுத்திய பாதிப்பு, இசையின் துணைகொண்டு மருத்துவம் செய்யும் ஹெலன் லின்ட்குவஸ்ட் போனியினாலும், மயக்க மருந்தைக் கொடுக்கும் நர்ஸ் நோரீன் மக்ரேனினாலும் கூர்ந்து கவனிக்கப்பட்டது ஒரு அறுவைச் சிகிச்சைக்கு முன்னால், அறுவை மருத்துவ மருத்துவ அறையினுள் சப்தங்கள் ஏற்படுத்தக்கூடிய பயத்தை அகற்றுவதற்கு அமைதிப்படுத்தும் மருத்துக்குப் பதில் இசைபயன்படுத்தப்பட்டது. இனிமையான இசை, இந்த அழுத்தத்தையும் இருதயத்துடிப்பின் வேகத்தையும் குறைத்து, நோயாளிகளை அமைதிப்படுத்தத் தேவையான நோவகற்றும் மருந்தைப் பாதியாகவும்கூட குறைத்துவிடுகிறது என்பதாக அமெரிக்கன் ஹெல்த் குறிப்பிடுகிறது. ஜெர்மன் குடியரசில் செய்யப்பட்ட இதைப்போன்ற ஒரு ஆராய்ச்சியில் இதேவிதமான ஒரு விளைவு காண்பிக்கப்பட்டது. ஒரே சீரான வேகத்தையும் ஓசையொழுக்கையும் கொண்ட 40-கள் மற்றும் 50-களின் முதல்தரமான இசையும் பிரபலமான இசையும் பயன்படுத்தப்பட்டது. கட்டுக்கடங்காத கரகரப்பான சப்தங்கள் தவிர்க்கப்பட்டன. வேதனையைத் தணிக்கும் இசையின் பாதிப்பு 2.5 மில்லிகிராம் வேலியத்துக்குச் சமமாக இருப்பதாக கேட்டுக் கொண்டிருந்த நோயாளிகள் பொதுவாக அறுவை சிகிச்சைக்குப் பின் தெம்பாக உணர்ந்தார்கள். அவர்களால் விரைவில் குணமடைந்து வீட்டுக்குப் போய்விடவும் முடிந்தது.

வளர்ந்துவரும் பாலைவனங்கள்

“ஒவ்வொரு ஆண்டும் பெல்ஜியம் அளவில் இரண்டு மடங்கான 60,000 சதுர கிலோ மீட்டர் பரப்பளவு (23,000 சதுர மையல்கள்) பாலைவனமாகிக்கொண்டு வருகிறது.” என்கிறது நியு சையன்டிஸ்ட் பத்திரிக்கை “10 ஆண்டுகளுக்கு முன்னால் 94 தேசங்கள் இந்நிலையை மாற்றப்போவதாக உறுதியளித்திருந்தபோதிலும் இது இவ்விதமாக இருக்கிறது.” பாலைவனமயமாதலை நிறுத்தப் பணக்கார தேசங்கள் இதுவரையாக ஒதுக்கியுள் 13 லட்சம் கோடி ரூபாயில் பெரும்பகுதி சாக்கடைக் கழிவுநீக்க ஏற்பாடுகளுக்காகவும் சாலைகள் அமைப்பதற்காகவுமே பயன்படுத்தப்பட்டு வந்திருக்கிறது. மாவட்ட அளவிலி ஓரளவு வெற்றி கிட்டியிருந்தபோதிலும் ஒரு தேசத்தாலும்கூட பாலைவனத்தின் வளர்ச்சியைத் தடைசெய் முடியவில்லை.

பூமியின் வரம்புகளை மீறிச் செல்லுதல்

உயிர்களை அழிக்காமல் பாதுகாக்கும் பூமியின் அமைப்புகள் “ஒரு வரம்புக்கு” அப்பால் நெருக்கித் தள்ளப்படுவதனால் நிலையான மாற்றமும் சேதமும் ஏற்படக்கூடும் என்று எச்சரிக்கிறது உவர்ல்ட்வாட்ச் நிறுவனம் 1987 உலக ஆரோக்கியத்தின் நிலை என்ற அதன் புதிய அறிக்கை “வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்தச் செய்யப்படும் முயற்சிகளே உலகமனைத்தின் பொருளாதாரத்தின் நலனை அச்சுறுத்த ஆரம்பித்துவிட்டிருக்கின்றன” என்று சொல்லுகிறது.. தூய்மைக்கேட்டின் விளைவுகளும் தாவர மற்றும் மிருக உயிரின் வகைகள் மாண்டு மறைந்து போதலும் உணவு மற்றும் எரி பொருள் உற்பத்தி குறைவும் “பூமியை எதிர்கால சந்ததியினருடைய குடியிருப்புக்குத் தகுதியற்றதாக்கிக் கொண்டிருக்கிறது” என்கிறது அறிக்கை. அது மேலுமாகக் குறிப்பிட்டதாவது: “உடனடி கவனம் தேவைப்படுகின்ற இத்தனைச் சிக்கலான பல பிரச்னைகளை இதுவரை எந்த ஒரு சந்ததியும் எதிர்ப்பட்டதில்லை. நமக்கு முன் வாழ்ந்தவர்கள் எதிர்காலத்தைப் பற்றி எப்பொழுதும் கவலையுள்ளவர்களாக இருந்திருக்கிறார்கள் ஆனால் நம்முடைய பிள்ளைகள் சுதந்தரித்துக்கொள்ள போகும் பூமி குடியிருப்புக்குத் தகுதியுள்ளதாக இருப்பதை முடிவுசெய்யும் தீர்மானங்களை நாம்தாமே முதலாவதாக எதிர்ப்படுகின்றோம்”.

விஷத்தின் விலை

அநேக விஷயங்களின் விலை, விலையேறப்பெற்ற கற்கள் அல்லது தங்கத்தையும்விட மிகவும் மதிப்புள்ளவையாக உள்ளன என்கிறது சோவியத் பத்திரிக்கை ஸ்புட்நிக். “உதாரணமாக, 1 அவுன்ஸ் நல்ல பாம்பினுடைய விஷத்தின் விலை ரூ 1,17000, பங்கேரஸ் செரூலஸ் ரூ 1,82,000, நீர் பாம்பு ரூ 5,59,000, வட அமெரிக்க காரல் சிலின்டர் பாம்பு ரூ 7,28,000, ஆப்பிரிக்க பூம்ஸ்லாங் ரூ 36,79,000, பம்பிள்பீ (பாம்பஸ் முஸ்கோரம்) ரூ 1,47,000, அமெரிக்காவின் பெண் ப்ளாக் விடோ ஸ்பைடர் ரூ3,06,80,000.” இவைகளுக்கு ஏன் இவ்வளவு விலை? இவைகளைப் பெறுவது கடினமாகவும், சில வகைகள் அபூர்வமாகக் காணப்படுவதுமே இதற்கு காரணமாக இருக்கிறது. தவிர, பூச்சுகள் மில்லி கிராம் அளவிலும் பாம்புகள் சுமார் 10 துளிகள் விஷத்தையுமே கொடுக்கின்றன. அடுத்தமுறை இதே அளவைப் பெற்றுக்கொள்ள இன்னும் ஒரு மதம் தேவைப்படலாம். அதன் விலை இவ்வளவு உயர்வாக இருந்தபோதிலும் இவைகளால் கடிக்கப்படுகிறவர்களைக் காப்பாற்றுவதற்கும், மருந்துசெய்யப் பயன்படும் இரத்த நிணநீர்களில் இவைகளைப் பயன்படுத்துவதற்கும். நோய்களைக் குணமாக்கவும் தேவைப்படுவதால் இந்த விஷயங்களுக்கு தேவை அதிகம்.

தூய்மைக் கேட்டில் பேரளவான உயிர்பலி

“பாதி நிலப்பகுதி வனமாக அல்லது மலைப் பிரதேசமாக இருக்கும் ஸ்விட்ஸர்லாந்தில் அமில மழைக்குப் பலியாகிறவர்கள் 50 சதவிகிதம்” என்று இன்டர்நேஷனல் ஹெரல்ட் ட்ரிப்யூன் அறிவிக்கிறது “சில இடங்களில் உயிரிழந்துபோன அல்லது உயிரை இழந்துக் கொண்டிருக்கும் மரங்கள் 65 சதவிகிதத்தை எட்டியுள்ளன.” அமில மழையைப் பெரும்பாலான வட ஐரோப்பாவைப் பாதிக்கும் கவலைக்குரிய பிரச்னையாகக் கருதும் உயிரின் வாழ்க்கைச்சூழல் ஆய்வாளர்களுக்கு. இப்படிப்பட்ட புள்ளிவிவரங்கள் கவலையைத் தருகின்றன. உதாரணமாக, ஜெர்மன் குடியரசில் 50 சதவிகிதத்துக்கும் மேலான மரங்கள் உயிரற்றதாகவோ அல்லது உயிரிழந்து கொண்டிருப்பவையாகவோ இருக்கின்றன. பிரான்ஸில் வோஸ்ஜெஸ் பிரதேசத்திலும் இதுவே உண்மையாக இருக்கிறது. போலந்தில் அமில மழைக்குப் பலியானவர்கள் 40 சதவிகிதமாக இருக்கக்கூடும். பிரெஞ்சு வாராந்தரப்பத்திரிக்கை எல் எக்ஸ்பிரஸ்ஸில் மேற்கோள் காண்பிக்கப்பட்டிருந்த போலந்தின் சமுதாய விஞ்ஞான பல்கலைக்கழக ஆதார ஏடு ஒன்றின்படி போலந்து முழுவதிலும் காற்றும் நீரும் அசுத்தமாக்கப்படுலும்கூட பரவிக்கொண்டே வருகிறது. ஐரோப்பாவின் கவலைக்குரியத் தூய்மைக் கேட்டுப் பிரச்னையின் மத்தியிலும் அமில மழை நிபுணரான டாக்டர் க்ளாட் மார்ட்டின் சொல்வதாவது: “இதற்கு நடவடிக்கை எடுப்பதற்கும், போதிய அளவு உறுதியான அதைச் செய்வதற்கும், ஓரளவு தயக்கம் இருந்து வருகிறது.”

“முழு ஆற்றலையும் ஈடுபடுத்தி முனைப்பாக முயற்சி செய்தல்

தாவர மற்றும் மிருக உயிரின் வகைகள் எத்தனை என்பது துல்லியமாக அறியப்படவில்லை. 50 லட்சத்திலிருந்து 300 லட்சம் வரையில் இருப்பதாக மதிப்பீடுகள் காண்பிக்கின்றன. சுமார் 16 லட்சம் மட்டுமே இதுவரையில் அடையாளங்கண்டு இனவுறுதி செய்யப்பட்டிருக்கிறது. ஒப்பிட்டுப் பார்க்கையில், இத்தனை குறைவான எண்ணிக்கை மாத்திரமே அறிவியல் பாடங்களுக்காகவும் அல்லது பொருளாதார உபயோகத்துக்காகவும் ஆராயப்பட்டிருப்பதன் காரணமாக, “லட்சக்கணக்கான உயிரினவகைகள், துடைத்தழிக்கப்படுவதற்கு முன்பாக அவற்றைக் கண்டுபிடித்து ஆராய்வதற்கு முழு ஆற்றலையும் ஈடுபடுத்தி முனைப்பாக முயலுவதற்கு இயற்கை ஆய்வின் ஒரு புதிய சகாப்தத்தை” உருவாக்க உயிர்நூல் அறிஞர்கள் அழைப்பு விடுப்பதாக தி நியுயார்க் டைம்ஸ் விளக்குகிறது. பெரும்பாலான உயிரினவகைகள் வெப்ப மண்டல மழைக்காடுகளில் வாழ்வதால், இவ்விடங்களில் மரங்களை வெட்டி வீழ்த்துவதாலும் அல்லது கால்நடை வளர்ப்பு பண்ணைகளாக மாற்றப்படுவதாலும் இவை அழிக்கப்பட்டு வருகின்றன. திமிங்கலம் அல்லது செங்கரடி பூனை போன்றவை பெறுவது போல, இந்தச் சிறிய உயிரினங்கள் பொதுமக்களின் அனுதாபங்களைப் பெறுவதில்லை. என்றாலும் அவையே “மனிதர்கள் உட்பட கடைசியாக எல்லா உயிர்களையும் பேணிக்காக்கும் கடுஞ்சிக்கலான அமைப்புக்கு அஸ்திபாரமாக இருக்கிறது” என்று டைம்ஸ் அறிவிக்கிறது.

இரத்தம் சம்பந்தமான புதிய பயமுறுத்தல்

வழக்கத்துக்கு மாறான புற்றுநோயை உண்டுபண்ணும் ஒரு வைரஸ், ஏய்ட்ஸ்க்குக் காரணமான வைரஸ் பரவுகின்ற அதே முறையில் பரவக்கூடும் என்பதாக அமெரிக்காவின் சுகாதார அதிகாரிகள் கவலை தெரிவித்துள்ளார்கள். “இரத்தத்தினால் பரவுகின்றதும் மிகவும் கவலைக்குரிய நோயோடு சம்பந்தப்பட்டதுமான வைரஸ் ஒன்றை அமெரிக்காவில் கண்டுபிடித்திருப்பதற்கு நமக்கு இப்பொழுது அத்தாட்சி இருக்கிறது” என்கிறார் செஞ்சிலுவையின் மருத்துவ நிர்வாகி S. ஜெரால்ட் சான்ட்லர். என்றழைக்கப்பட்ட கிருமி தானே முதல் முதலில் மனிதர்களில் புற்றுநோயை உண்டுபண்ணுவதாக அறியப்பட்டிருக்கும் முதல் கிருமியாக இருக்கிறது. இரத்தத்தில் ஒரு வகையான வெள்ள அணுப் பெருக்கக்கோளாற்றை இது உண்டு பண்ணுவதோடு கூட, இந்தக் கிருமி சிக்கலான அணும உள்ளிரிக்காழ்ப்புக்கு ஒத்த ஒரு நரம்பு சம்பந்தப்பட்ட வலிப்பு நோயை உண்டுபண்ணுவதாகவுங்கூடச் சொல்லப்படுகிறது. “இந்தக் கிருமி நீண்ட காலம் வெளிப்படாமல் இருப்பதால் இது அசாதாரணமான ஆபத்துக்குரியதாக இருக்கிறது” என்கிறது வால் ஸ்ட்ரீட் ஜர்னல் கிருமியால் பாதிக்கப்பட்டவர்களுக்கு பல வருடங்கள் வெள்ளை அணுப் பெருக்கக் கோளாறு வராமலிருக்கலாம்.” ஆனால் நோய் வந்துவிடுமேயானால், பாதிக்கப்பட்ட நபர் பொதுவாக மூன்று மாதங்களே பிழைத்திருப்பார். (g87 7/8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்