நமக்கும் நம்முடைய பிள்ளைகளுக்கும் என்ன எதிர்காலம்?
ஒரு குடும்பம் அது சம்பாதிப்பதற்கும் மேலாக செலவு செய்து கடனைத் தீர்க்கும் திறமுடையதாக இருக்க முடியாது. ஒரு தேசமும் அதன் வருவாய்க்கு மேலாக செலவு செய்து அதே சமயம் செழிப்பாகவும் இருக்க முடியாது; சுற்றுப்புறச் சூழலின் சம்பந்தமாகவும் செலவுக்கு குறைந்த வரவின் நிலையைத் தொடர்ந்து கொண்டிருக்க முடியாது. புதிதாக உருவாகும் மண்ணைவிட அதிகமானதை நாம் செலவு செய்து, தாவரங்கள் பயன்படுத்திக் கொள்வதற்கும் அதிகமான கரியமில வாயுவை உருவாக்கி, நாம் மீண்டும் நடக் கூடியதற்கும் அதிகமாக மரங்களை வெட்டி வீழ்த்தி, பூமி மறுசுழற்சி செய்யக் கூடியதற்கும் அதிகமான காற்றையும் நீரையும் அசுத்தப்படுத்திக் கொண்டிருக்க முடியாது. தேசீய கணக்கில் ஏற்படும் குறைக்குக் கணக்கு கொடுக்குப்பட வேண்டிறிருப்பதை போலவே சுற்றுப் புறச் சூழலில் ஏற்படும் குறைவுக்கும் கணக்கு கொடுக்க வேண்டியதாயிருக்கும். அவை பணத்திலும் சர்வ தேசீய ஒத்துழைப்பிலும் திரும்ப செலுத்தப்படும் அல்லது நம்முடைய மற்றும் நம்முடைய பிள்ளைகளின் உயிர்களை அதற்காக செலுத்த வேண்டியிருக்கும்.
நவீன தொழில் நுணுக்கத் துறை பூமியைக் கெடுப்பதைக் கூடியகாரியமாக்கி விட்டது. அதைத் தடை செய்வதற்கு அது பயன்படுத்தப்படலாம். ஏன் பயன்படுத்தப்படவில்லை? பண ஆசை. அதற்கு பல கோடி ரூபாய் செலவாகலாம். இந்த உலகம் தன்னுடைய சொந்த குறுகிய நோக்குடைய பொருள் சம்பந்தமான ஆசைகளுக்கு அப்பால்——தன்னுடைய சுயநலதின் காரணத்தால்—அதைப் பார்க்க முடியாது. பணமாக கொடுக்க அது மறுப்பதன் காரணமாக மேல் மண் இழப்பில், காடுகள் இழப்பில், நீர்த்தேக்கத்துக்குச் சாதகமான பாறை அல்லது மண் இழப்பில், உஷ்ண வீட்டுக்குரிய ஒரு சூழலில், நச்சுப்படுத்தப்பட்ட நீரில், அதிகமாகி வரும் நோயில், மனித உயிர்களில் அதைச் செலுத்திவிடும். அதன் பணத்தை விடாமல் பற்றிக் கொண்டிருக்கிற இந்த உலகம் அதன் பிள்ளைகளின் எதிர்காலத்தை விற்றுக் கொண்டிருக்கிறது.
அது சரியான நேரத்தில் விழித்துக் கொள்ளுமா? சரித்திரத்தின் விடை நம்பிக்கையளிப்பதாக இல்லை, ஆனால் கடவுளின் பதில் நம்பிக்கையளிக்கிறது. யெகோவா தேவன் தாமே குறுக்கிட்டு “பூமியைக் கெடுக்கிறவர்களை கெடுக்கப்” போவதாகச் சொல்கிறார். (வெளிப்படுத்துதல் 11:18) பூமியின் சுற்றுப்புறச் சூழலைக் கெடுத்து அதன் அழகை அழித்துக் கொண்டிருப்பவர்களை அவர் இந்த பூமியிலிருந்து நீக்கிப் போடுவார், ஏனென்றால், உயிரைப் பாதுகாப்பதற்கும் அழகாக இருப்பதற்காகவுமே அதை அவர் படைத்தார். “வானம் எனக்குச் சிங்காசனம்; பூமி எனக்குப் பாதபடி” என்று அவர் சொல்கிறார். மேலுமாக அவர் சொன்னதாவது: “என் பாதஸ்தானத்தை மகிமைப் படுத்துவேன்.”—ஏசாயா 66:1; 60:13.
நீதியை நேசிக்கும் ஜனங்களால் குடியிருக்கப்படும்படியாக அதை அவர் படைத்தார்—கடந்த காலத்தில் ஒரு சமயம் வாழ்ந்த லட்சக்கணக்கானோராலும் இப்பொழுது வாழ்ந்துக் கொண்டிருக்கும் லட்சக்கணக்கானோராலும் இன்னும் பிறக்கப் போகின்ற லட்சக்கணக்கான குழந்தைகளாலும் அது நிரப்பப்படும். இதை அவர் தம்முடைய வார்த்தையாகிய பைபிளிலும் பதிவு செய்திருக்கிறார். இவைகளை நீங்களே ஏசாயா 45:18 மற்றும் யோவான் 5:28, 29-ல் வாசித்துப் பார்க்கலாம்.
அதை நேசிக்கும் ஜனங்கள் அதைப் பராமரிக்கும் போது, பூமி ஆரம்பத்தில் அதற்கிருந்த அழகை மீண்டும் பெற்றுக் கொள்ளும். அப்பொழுது நீதியான மனச்சாய்வுள்ள ஆட்களும் அவர்களுடைய பிள்ளைகளும் மகத்தான ஒரு எதிர்காலத்தைக் கொண்டிருப்பர்: “இன்னுங் கொஞ்சநேரந்தான், அப்போது துன்மார்க்கன் இரான்; அவன் ஸ்தானத்தை உற்று விசாரித்தாயானால் அவன் இல்லை. சாந்தகுணமுள்ளவர்கள் பூமியைச் சுதந்தரித்து, மிகுந்த சமாதானத்தினால் மனமகிழ்ச்சியாயிருப்பார்கள். நீதிமான்கள் பூமியைச் சுதந்தரித்துக்கொண்டு, என்றைக்கும் அதிலே வாசமாயிருப்பார்கள்.”—சங்கீதம் 37:10, 11, 29.
ஒருபோதும் மரிக்கமாட்டார்களா? ஒருபோதும் மரிக்க மாட்டார்கள்! “தேவன்தாமே அவர்களோடேகூட இருப்பார்; அவர்களுடைய கண்ணீர் யாவையும் தேவன் துடைப்பார்; இனி மரணமுமில்லை, துக்கமுமில்லை, அலறுதலுமில்லை, வருத்தமுமில்லை; முந்தினவைகள் ஒழிந்துபோயின.” (வெளிப்படுத்துதல் 21:3, 4) இது நம்பமுடியாத ஒரு வாக்காகத் தோன்றுகிறதா? இல்லை. இந்தத் தற்போதைய பொல்லாத உலகம் தொடர்ந்திருப்பதற்கு அது மிகவும் மோசமானதாக இருக்கிறது.—தானியேல் 2:44.
ஆனால் நீங்களும் உங்கள் பிள்ளைகளும் தொடர்ந்து உயிர் வாழ்ந்திருக்கக்கூடும். யெகோவா தேவன் அவருடைய குமாரனின் பலியின் மூலமாக இதை கூடிய காரியமாகச் செய்கிறார். யெகோவாவையும் அவருடைய குமாரனையும் பற்றி கற்றறிவது, உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் நித்திய ஜீவனை—நீதி வாசமாயிருக்கப் போகும் ஒரு புதிய உலகில் ஜீவனை—அர்த்தப்படுத்தும். (யோவான் 3:16; 17:3; 2 பேதுரு 3:13) உங்களுக்கும் உங்கள் பிள்ளைகளுக்கும் இது மகிழ்ச்சியான ஒரு எதிர்காலமாக இருக்கக்கூடும். அப்படி இருக்குமா இராதா என்பது உங்களைப் பொருத்ததாக இருக்கிறது. (g87 7⁄22)