போதை மருந்துகள் மூலம் நான் எளியதோர் வாழ்க்கையை நாடினேன்
சிறைச்சாலையின் இருண்ட அறையில் பழுதடைந்த அழுக்கான ஒரு ஃபோம் ரப்பர் துண்டில் உட்கார்ந்துகொண்டிருந்தேன். அந்த நாளில் சம்பவித்த காரியங்களை என் மனதில் விமர்சித்தேன். பிடிபடுமளவுக்கு நாங்கள் எப்படி முட்டாள்தனமாக நடந்திருக்கக்கூடும்!
நாங்கள் மட்டும் குழப்பமடையாமல் அமைதியாக இருந்திருந்தால், போலீஸ் எங்கள் காரை கவனித்திருக்க மாட்டார். அந்த மரிஜுவானா துண்டுகளை அப்புரப்படுத்தியிருந்தால், போலீஸ் சாம்பல் தட்டைப் பார்ப்பதற்குள் அந்த கஞ்சா பையை மறைந்திருந்தால் நலமாயிருந்திருக்கும். இந்தக் குழப்பத்தில் நான் எப்படி சிக்கினேன்? என் மனம் கடந்துசென்ற ஆண்டுகளைப் பின்னிட்டுப் பார்க்கத் துவங்கியது . . .
ஓர் இளைஞனாக நான் உயரமாக மெலிந்து இருந்ததால் நான் பிரித்து காணப்பட்டேன். அதிகமாக வெட்கப்பட்டேன். எனக்கு ஒரு சில நண்பர்களே இருந்தனர். ஆனால் நான் பள்ளியில் பிரபலமாக இருக்க விரும்பினேன். முடியை நீளமாக வளர்க்க ஆரம்பித்தேன், ஜீன்ஸ் போட ஆரம்பித்தேன். சிநேகிதரோடு என் வரிசையில் உட்கார ஆரம்பித்தேன்.
ஒருநாள் திடீரென்று இப்படி நடந்தது. நான் புகைபிடித்துக்கொண்டிருந்த ஒரு சில சகாக்களுடன் இருந்தேன். மரிஜுவானா சிகரெட் ஒன்று என்னிடம் நீட்டப்பட்டது. என்னை அவர்கள் மட்டமாக நினைத்துவிடக்கூடது என்பதற்காக நான் அவர்களோடு சேர்ந்து அதைப் புகைத்தேன். ஆக நான் ஒரு புதியதோர் நண்பர் வட்டாரத்தில் இழுக்கப்பட்டேன். கடைசியில் நான் பிரபலமாக ஆக ஆரம்பித்ததோடு எனக்கு அநேக நண்பர்களும் கிடைத்தனர்.
பின்னால் நான் அதிக போதை தரும் மருந்துகளை எடுக்க ஆரம்பித்தேன். அது அதிக கிளர்ச்சியூட்டுவதாகவும் வீரமளிப்பதாகவும், போதை கொண்டு கட்டுப்பாடற்ற வாழ்க்கைக்குரிய காரியங்களைச் செய்ய தூண்டியது. எல்லோரும் கஞ்சா புகைத்தால் வாழ்க்கை இன்னும் அதிக எளிதான ஒன்றாயிருக்கும் என்று என்னிடமே சொல்லிக்கொள்வேன். ஏன்? ஏனென்றால் உங்களைச் சூழ இருக்கும் அழகைப் போற்றிடவும் இளைப்பாறவும் செய்வதால், அது உங்களுக்கு நல்லதாக இருக்கும். அப்படியாக விவாதித்தேன். ஆனால் இந்த அசுத்தமான சிறைச்சாலையின் அறையிலே உண்மை என்னை கண்ணத்தில் அறைந்துவிட்டது.
நான் போதை மருந்துகளைப் பயன்படுத்திய விஷயம் ஏன் பெற்றோருக்குத் தெரியாது. அவர்களுக்குத் தெரிந்தால், அது அவர்களை எவ்வளவாக புண்படுத்தும்! நித்தியமாகத் தென்பட்டதற்குப் பின்பு, சிறையின் கதவு திறவுண்டது. என்னுடைய தகப்பன் என்னை ஜாமினில் விடுதலை செய்ய வந்திருப்பதாக ஒரு அதிகாரி கூறினார். அந்தப் பயண நேரம் எனக்குக் கஷ்டமாக இருந்தது.
நீதிமன்ற அதிகாரிகளை எதிர்ப்பட என் தகப்பனார் ஒரு வழக்கறிஞரை ஏற்பாடு செய்தார். அவர் எங்களுடைய குடும்ப நன்பராதலால், நான் இக்கட்டான நிலையிலிருக்கிறேன் என்பதைக் கண்டு அவருக்கு ஒரே குழப்பம். பின்பு காவல் நிலையத்திலுள்ள அதிகாரிகளிடம் என் வழக்கறிஞர் என் சார்பில் பேசினார். என்ன முடிவு ஏற்படுமோ என்று நான் ஆவலாகக் காத்துக் கொண்டிருந்தேன்.
கடைசியாக நான் விடுவிக்கப்படலாம் என்று தீர்மானிக்கப்பட்டது, ஏனென்றால் நான் இதற்கு முன்னதாகக் கைது செய்யப்பட்டதாக காவல் துறையில் எந்த அறிக்கையும் கிடயாது. வழக்கறிஞர் என்னை அழைத்து, என் கவனத்தைப் போதை மருந்துகளிலிருந்து திருப்பி பிரயோஜனமான மற்று காரியங்களில் செலுத்த ஊக்குவித்தார். நான் அப்படியே செய்கிறேன் என்று உறுதி கூறினேன். ஆனால் செயலைக்காட்டிலும் வார்த்தைகளுக்கு மதிப்பு குறைவே.
மனச்சோர்வும் தற்கொலை முயற்சியும்
என்னுடைய பழைய நண்பர்களுடன் தொடர்ந்து கூட்டுறவுகொள்ள ஆரம்பித்தேன். என்னுடைய சக தோழர்களின் அழுத்தத்தின் காரணத்தால் நான் மறுபடியும் போதை மருந்துகளை எடுக்க ஆரம்பித்தேன். ஒரு சமயத்துக்குப் பின் அதிலுள்ள கிளர்ச்சி குறைய ஆரம்பித்தது. ஆனால் அவை இல்லாமல் என்னால் இருக்கமுடியவில்லை. என்னைச் சூழ இருந்த பிரச்னைகளிலிருந்து வெளியேற எனக்கு ஊக்குவிப்பும் நாள் முழுவதும் உதவியும் தேவைப்பட்டது. நானும் என்னுடைய நண்பர்களும் போதை மருந்துகளின்றி இன்பமாயிருக்க முடியவில்லை. ஏரிகறையோரத்திலே எழிலொழுகும் ஒரு நாளில்கூட நாங்கள், “ஐயோ, கொஞ்சம் கஞ்சா கிடைத்தால்!” என்று புலம்புவோம்.
கடைசியில் நான் மனச்சோர்விலேயே ஆழ்ந்துவிட ஆரம்பித்தேன். வாழ்க்கை எனக்கு நோக்கமற்றதாகிவிட்டது. உச்சபோதை காண்பதைவிட எனக்கு வாழ்க்கையில் எந்தவித நோக்கமும் இருப்பவில்லை. தற்கொலை செய்துக்கொள்வது குறித்து யோசிக்க ஆரம்பித்தேன். ஒருநாள் ஆளவுக்கு மிஞ்சி மருந்தெடுத்துக்கொள்ள வேண்டும் என்று என் பாட்டியார் அலமாரியிலிருந்த எல்லா மருந்துகளையும் விழுங்கினேன். ஆனால் அடுத்தநாள் காலை எப்பொழுதும்போல் விழித்தது எனக்கு ஆச்சரியமாயிருந்தது.
ஒருநாள் மாலை நேரம், நான் போதை மருந்து அருந்தாதிருந்தபோது எங்கள் வீட்டின் மொட்டை மாடிக்குச் சென்றேன். முழு நிலாக்காலம். சாம்பல் வண்ண மேகங்கள் வானத்தின் குறுக்கே தவழ்ந்து சென்று கொண்டிருக்க, குளிர்ந்த தெனறலில் உயரமான ஊசிலை மரங்கள் அசைந்துகொண்டிருந்தன! ‘இந்த அமைதியான அழகுக்கும் இயற்கையில் காணப்படும் ஒழுங்குக்கும் பின்னால் யாராவது ஒருவர் இருக்கிறாரா?’ என்று வியந்தேன். ‘ஒருவருடைய மாம்ச இச்சைகளைத் திருப்தி செய்ய நாடிச்செல்லும் மிருகங்களைப் போன்ற ஒரு வாழ்க்கையை வாழ்வதைவிட வாழ்க்கைக்கு உயர்ந்ததோர் நோக்கம் உண்டா?’ என்னுடைய ஆவிக்குரிய தேவையை உணர ஆரம்பித்தேன்.
மறுஜென்மம் குறித்து வாசிக்க ஆரம்பித்தேன். சென் புத்த மதத்தினிடமாகச் சென்றேன். ஒரு பழைய பைபிளைத் தேடி கண்டுபிடித்து, அதன் மீது படிந்திருந்த தூசியைத் துடைத்து “புதிய ஏற்பாட்டை” வாசிக்க ஆரம்பித்தேன். அதில் எனக்குப் பிரியமாயிருந்த சில கருத்துக்களை கவனித்தேன். உதாரணமாக, இயேசு சொன்ன இந்த வார்த்தைகள்: “மனுஷர் உங்களுக்கு எவைகளைச் செய்ய விரும்புகிறீர்களோ, அவைகளை நீங்களும் அவர்களுக்குச் செய்யுங்கள்.”—மத்தேயு 7:12.
‘இந்த உலகத்தில் அதை யார் பொருத்திக்கொள்கிறார்கள்?’ என்றேன், ‘பைபிளை எனக்கு யார் விளக்க முடியும்? இதைக் கண்டுபிடிக்க சர்ச் சர்ச்சாக செல்ல தீர்மானித்தேன். நான் சற்று வெட்க சுபாவ முடையவனாதலால், என்னுடைய வாகனத்திலிருந்து இறங்கி அவற்றுக்குள் செல்வதற்கு எனக்கு தைரியம் இருக்கவில்லை.
பழையதோர் புத்தகத்தில் பதில்
ஒரு நாள் மாலை நேரம் நான் கடவுளிடம் ஜெபிக்க முயன்றேன். “பைபிள் நியமங்களை உண்மையிலேயே பொருத்தக்கூயவர்களைக் கண்டுபிடிக்க தயவுசெய்து எனக்கு உதவியருளும்,” என்று விண்ணப்பம் பண்ணினேன். ஒரு வாரத்திற்குப் பின்பு நான் பழைய புத்தகக் கடையில் பார்த்துக்கொண்டிருந்தேன். அங்கருந்த சில புத்தகங்களில் ஒரு சிறிய நீலநிற புத்தகம் என் கண்ணுக்குப்பட்டது. அதுதான் நித்திய ஜீவனுக்கு வரீநடத்துகிற சத்தியம். அதை வாங்கி முழுவதுமாக வாசித்தேன். அது பைபிளின் அடிப்படைப் போதனைகளை விளக்கியதோடு பைபிள் வசனங்களின் மேற்கோள்களுடன் அந்தக் கூற்றுகளை ஆதரித்தது. யெகோவாவின் சாட்சிகளின் ராஜ்ய மன்றத்தில் நடைபெறும் கூட்டங்களுக்குச் செல்லும்படியாக பக்கம் 138-லுள்ள ஆலோசனையைப் பின்பற்ற தீர்மானித்தேன்.
நான் இதுவரை எந்த ஒரு சாட்சியுடனும் பேசினதில்லை. ஆனால் தன்னுடைய வண்டிக்கு மெத்தையனைகளை செய்த ஒருவர் ஒரு யெகோவாவின் சாட்சி என்று என் தாய் எனக்கு சொன்னது என் ஞாபகத்துக்கு வந்தது. அவரிடம் மதத்தைப்பற்றி எதுவும் பேசக்கூடாது என்று என் தாய் என்னை எச்சரித்தாள். நான் தொலைப்பேசி எண்களைக் கொண்ட புத்தகத்தில் அவருடைய தொலைப்பேசி எண்ணைக் கண்டுபிடித்து, அவரிடம் தொடர்பு கொண்டு, ராஜ்ய மன்றம் இருக்கும் இடத்தைக் கேட்டறிந்தேன்.
அவர் மன்றத்தின் முன் கூடத்தில் என்னை சந்தித்து உள்ளே கூட்டிச் சென்றார். அந்தப் பக்கமாக வந்த எல்லாரிடமும் என்னை அறிமுகப்படுத்தினார். அவர்களெல்லாரும் ஒருவரையொருவர் நன்கு அறிந்திருந்தனர், அந்த மன்றம் சர்ச்சிலிருப்பதுபோல் நிசப்தமாக இருப்பதற்கு பதிலாக ஒருவரோடொருவர் நட்புடன் பேசிக்கொள்ளும் சம்பாஷணையுடன் உற்சாகமாய்க் காணப்பட்டது. என்னுடைய T-சட்டையும் நீல வண்ண ஜீன்ஸ் பேன்ட்டையும் அணிந்தவனாகவும் மற்றும் என் தோள்வரை முடி வளர்ந்த நிலையிலும் நான் அவர்களுக்கு விசித்திரமாகக் காணப்பட்டிருப்பேன். ஆனால் நான் அப்படி வித்தியாசமாக உணரும்படி அவர்கள் நடந்துகொள்ளவில்லை. அவர்கள் என்னை வரவேற்றார்கள்.
கூட்டம் முடிந்தவுடன் அவர் (திரு. பார்சியாசெப்) என்னைப் பார்த்து, நான் பைபிளைப் படிக்க விரும்புகிறேனா என்று கேட்டார், நானும் ஒப்புக்கொண்டேன். என்னுடைய வாழ்க்கையில் மாற்றங்களைச் செய்யவேண்டிய அவசியத்தை என்னால் காணமுடிந்தது. என்னுடைய உடையும் தலைசீவுதலும் மாறியது. போதை மருந்துகளின் பிடியிலிருந்து விடுபட்டேன். என்னுடைய பழைய நண்பர்களை விட்டுவிட்டு யெகோவாவின் சாட்சிகளிலிருந்து புதிய நண்பர்களைத் தெரிந்து கொண்டேன்.
வழக்கறிஞரும் அவருடைய கட்சிக்காரரும்
நான் ஒரு யெகோவாவின் சாட்சியாக முழுக்காட்டுதல் பெற்று ஒரு வருடத்துக்குப் பின்பு, 1979-ல் முழுநேர ஊழியத்தில் பிரவேசித்தேன். அப்படிச் செய்துகொண்டிருந்த முதல் ஆண்டில் எதிர்பாராத ஒன்று சம்பவித்தது.
வழக்கறிஞரும் ஒரு சபையில் மூப்பருமாக இருந்த ஒரு சாட்சி அந்தப் பட்டணத்திலிருந்த சில வழக்கறிஞர்களைச் சந்தித்து நம்முடைய நம்பிக்கைளைக் குறித்து பேசுவதற்கு வந்தார். என்னையும் அவருடன் கூட்டிச் சென்றார். நாங்கள் சந்தித்த வழக்கறிஞரில் ஒருவர், போதை மருந்துகளை என்னிடம் வைத்திருந்ததற்காகக் கைதி செய்யப்பட்ட சமயத்தில் என் விடுதலைக்கு உதவினவராவர்.
என்னுடைய நண்பர் எங்கள் சந்திப்பின் நோக்கத்தைச் தெரியப்படுத்தி, பின்பு என்னை அறிமுக்கப்படுத்தினார். நாங்கள் கைகுலுக்கியபோது அவருடைய முகத்தில் ஆச்சரியமும் அவநம்பிக்கையும் காணப்பட்டது. பின்பு அவர் பெரிய புன்சிறிப்புடன், “லேடு ஸ்டன்சல்!” என்னால் உன்னை அடையாளங் கண்டிருக்க முடியாது! நீ உண்மையிலேயே மாறிவிட்டிருக்கிறாய்!” என்றார்.
அவருடய ஆரம்ப அதிர்ச்சி மறைந்ததும், நான் முதலாவது படித்த புத்தகத்தின் ஒரு பிரதியை அவரிடம் காண்பித்து சொன்னேன்: “இந்தப் புத்தகம் பைபிள் நியமங்களைப் புரிந்துகொள்வதற்கும், இந்த மாற்றங்களைச் செய்வதற்கான அவசியத்தையும் நான் காணும்படி எனக்கு உதவியது. இதன் ஒரு பிரதியை உங்களுக்குக் கொடுக்க விரும்புகிறேன். அந்தப் புத்தகத்தைப் பெற்ற அவர் நன்றி தெரிவித்தார். அது அவரை எப்படி பாதித்திருக்குமோ என்று நாங்கள் திரும்பி வருகையில் பேசிக்கொண்டோம்.
ஒரு சில நாட்களில் நாங்கள் அதை அறிய முடிந்தது. என்னுடைய சார்பில் பேசிய அந்த வழக்கறிஞரிடமிருந்து என் தாய்க்கும் வழக்கறிஞர் தோழருக்கும் மிக உருக்கமான கடிதங்கள் வந்தன. தான் ஒரு அற்புதத்தைப் பார்த்ததாக—ஆபத்தான போதை மருந்தைப் பயன்படுத்திய ஓர் இளைஞர் இப்பொழுது சமுதாயத்துக்குப் பயனுள்ளவராக இருக்குமளவுக்கு அருமையான இளம் மனிதராக மாறியிருப்பதைப் பார்த்ததாக எழுதினார்.
கடந்த ஏழு ஆண்டுகள் நான் முதிர்ச்சி பெறுவதற்கு அதிக உதவியாக இருந்திருக்கிறது. 1981-ல் யெகோவாவின் சாட்சிகளின் தலைமைக் காரியாலயத்தில், பெத்தேலில் பணியாற்ற ஏற்றுக்கொள்ளப்பட்டேன். கடந்த ஆண்டு நான் சூவை விவாகஞ்செய்து பெத்தேலில் அவளும் என்னோடுகூட சேர்ந்து கொண்டபோது என் வாழ்க்கை இன்னும் அதிக சுவையான வாழ்க்கையானது.
எனவே என்னுடைய வாழ்க்கையை எளியதொன்றாக ஆக்கினது போதை மருந்துகளல்ல—அவை எதிரான ஒன்றையே ஏற்படுத்தியது! போதை மருந்துகளை வெறுத்தொதுக்கி என்னுடைய சிருஷ்டிகராகிய யெகோவா தேவனை சேபிப்பதன் மூலமே என்னுடைய வாழ்க்கை எளிதொனறாகவும் திருப்தியும் மகிழ்ச்சியும் நிறம்பிய ஒன்றாகவும் ஆனது. (மத்தேயு 6:22)—லேடு ஸ்டன்சல் கூறியது.
g87 11⁄22