முள்ளம்பன்றியின் முட்கள்
உங்களுக்குத் தெரியுமா—
○ ஒரு முள்ளம்பன்றிக்கு எத்தனை முட்கள் உள்ளன?
○ தன்னைத் தாக்கும் எதிரியை நோக்கித் தன் முட்களை எய்வதுண்டா?
○ இந்த முட்கள் நோய் நுண்மங்களைப் பரப்பி நச்சுப்படுத்துவது ஏன் அரிது? என்றாலும் சில சமயங்களில் மரணத்தை விளைவிப்பதற்குக் காரணம் என்ன?
தங்களைத்தாங்களே அடிக்கடி மாற்றிக்கொள்ளும் அந்த 30,000-ற்கும் மேற்பட்ட முட்கள் ஒருபோதும் வலியத்தாக்குவதற்காகப் பயன்படுத்தப்படுவதில்லை, ஆனால் தற்காப்புக்கு மட்டுமே பயன்படுத்தப்படுகிறது; அல்லது முள்ளம்பன்றி தன் முட்களை பிறர் நோக்கி எய்வதுமில்லை. உண்மைதான், தன்னைத் தாக்கும் எதிரியை நோக்கி முள்சுமை மிகுந்த தன் வாலை அசைக்கும்போது, ஒருசில முட்கள் தெரிக்கக்கூடுமென்றாலும், எதிலும் குத்தி மாட்டிக்கொள்ளுமளவுக்கு அதில் போதுமான வேகம் கிடையாது. தன்னைத் தாக்கும் எதிரி தன் வாலில் சிக்கினால், முட்களை வெளியே எடுப்பது மிகவும் கடினம்.
ஒருசில ஆண்டுகளுக்கு முன்பு, ஒரு முள்ளம்பன்றியுடன் உயிரியல் ஆய்வாளர் ஒருவருக்கு அப்படிப்பட்ட கொடிய அனுபவம் ஏற்பட்டது. தன் கையில் குத்திய ஒரு முள் இரண்டு நாட்களுக்குப் பின்பு வெளியே வந்தது. அதற்கு முன் சதைக்குள் பத்து அங்குலம் வரை சென்றது. எந்தவிதமான நோய் நுண்மங்களும் பரவி நச்சுப்படுத்தவில்லை. அவர் மற்ற முட்களை பரிசோதனைக்குட்படுத்திப் பார்த்தார், அவற்றில் சிறிதளவு நோய் எதிர்ப்புச்சக்திக்குரிய தன்மைகள் இருப்பதைக் கண்டு வியந்தார். இந்தக் காரணத்தினிமித்தமே அதன் முட்கள் நோய் நுண்மங்களைப் பரப்பி நச்சுப்படுத்துவது அரிது.
என்றபோதிலும், ஒரு முள்ளின் கொடுக்குத் தலை முக்கியமான ஒரு உருப்பைக் குத்தினால், அது அந்த நபருக்கு மரணத்தை ஏற்படுத்தக்கூடும். அதன் முட்கள் ஒரு மிருகத்தின் வாயை சாப்பிடக்கூடாதளவுக்குக் குத்தினால், அந்த மிருகம் சாப்பிடக்கூடாமல் மரிக்க நேரிடும்.
முள்ளம்பன்றி தனக்கு விருப்பமான உணவை—தண்ணீர் அல்லிகளை—அருந்த தீர்மானிக்கும்போது, அதன் முட்கள் மிதவைச் சட்டை போன்று செயல்படுகின்றன. அந்த விலங்கினத்தைப் போன்று, அதன் முட்களும் உண்மையிலேயே ஒரு புத்திக்கூர்மை படைத்த திட்ட அமைப்பாளரின் படைப்பு. (g88 2⁄22)