“நான் கடவுளை நேசிக்கிறேன், அவர் இந்த மரத்தைப் படைத்தார்”
அநேகர் மரத்தைப் பார்த்து பணத்தைப் பார்க்கிறார்கள். இந்த இரண்டு வயது சிறுமி இந்த மரத்தைப் பார்த்து கடவுளை நேசிக்கிறாள். அவள் வளர்ந்து பெரியவளாகையில் அவள் இன்னும் அதிகத்தைப் பார்த்து இன்னும் அதிகமாக கடவுளை நேசிப்பாள். இதோ அவள் அணைத்துக் கொண்டிருக்கும் அடிமரத்தின் உட்புறம் பற்றிய சில விஷயங்கள்.
இது “குழாய் இணைப்புகளால்” பளுவாயிருக்கிறது. சில வேர்களிலிருந்து இலைகளுக்கும் மற்றவை இலைகளிலிருந்து வேர்களுக்கும் செல்கின்றன. மேலே செல்பவை மரத்தின் மென்மையான உட்பகுதியில் இருக்கின்றன. அவைத் தண்ணீரையும் தாதுப் பொருட்களையும் மரத்திலுள்ள ஒவ்வொரு இலைக்கும் எடுத்துச் செல்கின்றன. கீழ்நோக்கிச் செல்பவை மரப்பட்டைக்குக் கீழே இருக்கின்றன. அவை உணவை இலைகளிலிருந்து வேர்களுக்கு எடுத்துச் செல்கின்றன.
ஒவ்வொரு சல்லி வேரின் நுனியும் கடிமான எண்ணைப் பசையுள்ள மேற்பகுதியைக் கொண்டிருந்து, ஒரு தக்கைத் திருகைப் போல அது சுருள் சுருளாக திருகிக் கொண்டே மண்ணுக்குள் செல்கிறது. இந்த நுனிக்குப் பின்னால் தண்ணீரையும் தாதுப் பொருட்களையும் உறிஞ்சும் நூற்றுக் கணக்கான உறிஞ்சிப் பகுதிகள் இருக்கின்றன. இந்தத் தண்ணீரால் நூற்றுக் கணக்கான அடிகள் மேலே சென்று மிக உயர்ந்த மரத்தின் மிக உயரமான இலையையும் சென்றெட்ட முடிகிறது.
இலையானது காற்றிலிருந்து கார்பன் டைஆக்சைடையும் சூரியனிலிருந்து ஆற்றலையும் வேர்களிலுள்ள தண்ணீரையும் தாதுப் பொருட்களையும் பயன்படுத்தி உணவை உற்பத்தி செய்கிறது. உணவு குழாய் “இணைப்புகள்” இவைகளை மரத்திலுள்ள ஒவ்வொரு செல்லுக்கும் எடுத்துச் செல்கின்றன. இதைச் செய்வதற்குரிய இலையின் ஆற்றல் புரிந்துகொள்ளப்படவில்லை. இது ஒரு அற்புதம் என்பதாக அழைக்கப்பட்டிருக்கிறது.
மரத்தை நேசிக்கும் நமது சிறுமி அணைத்துக் கொண்டிருக்கும் அடிமரத்தினுள் நடைபெறும் காரியங்களில் இது ஒரு சிறு பகுதியே.
இப்பொழுது அவளுக்கு வயது ஏழு. இப்பொழுது அவள் இலைகள் வேர்கள் மற்றும் அடிமரம் அடங்கிய முழு மரத்தையும் புரிந்துகொள்ள தன் கருத்தை விரிவாக்கியிருக்கிறாள். அவள் இன்னும் கடவுளை நேசிக்கிறாள். அவரை மரத்தைப் படைத்தவராகப் பார்க்கிறாள். இப்படியாக உலகப்பிரகாரமான ஞானிகளைக் காட்டிலும் அதிகத்தை அவள் பார்க்கிறாள்.—ரோமர் 1:20; 1 கொரிந்தியர் 3:19, 20. (g88 3⁄8)