உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g89 7/8 பக். 30-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1989
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • குற்றச்செயல் செலவுகள்
  • வெற்றியில் மகிழாதவர்
  • கேள்விக்குப் பதில் இல்லை
  • நீடித்துழைக்க உருவமைக்கப்பட்டிருக்கிறது
  • மனைவியை அடித்தல் அங்கீகரிக்கப்படுகிறது
  • மடத்துறவிகளுக்கு ஏய்ட்ஸ் பரிசோதனை
  • உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு ஊர்ந்துவருகிறது
  • பகுதிப் பரிகாரங்கள்தான்
  • தேனீக்களுக்கு ஆபத்து
  • துப்பாக்கிக்குண்டால் அறுவைசிகிச்சை
  • உணர்விழந்திருக்கிறார்கள் ஆனால் விழித்திருக்கிறார்களா?
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2001
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1991
  • இரத்தமேற்றுதல்—எந்தளவு பாதுகாப்பானது?
    உங்கள் உயிரை இரத்தம் எப்படிக் காப்பாற்ற முடியும்?
மேலும் பார்க்க
விழித்தெழு!—1989
g89 7/8 பக். 30-31

உலகத்தைக் கவனித்தல்

குற்றச்செயல் செலவுகள்

ஐக்கிய மாகாணங்களில் குற்றச்செயல் இழைப்பவனைச் சிறையில் போடுவதில் உட்படும் ஆண்டு செலவு சராசரியாக ரூ.1,80,000 ($12,000) முதல் 3,60,000 ($24,000). “அந்தப் பணத்துக்கு ஒரு சிறுவனை ஹார்வர்டு பல்கலைக்கழகத்திற்கு அனுப்பலாம்,” என்று ஃபோர்ப்ஸ் (Forbes) பத்திரிகை குறிப்பிடுகிறது. என்றபோதிலும், நியு யார்க் போன்ற நகரங்களில் அதற்கான ஆண்டு செலவு ரூ.5,25,000 ($35,000). இப்படியாக அதிக செலவை உட்படுத்தும் சிறையிடுதல் குறித்த கவலை “திடீர் சிறைவாசிகளால்” ஆண்டுதோறும் கூட்டப்படுகிறது. கிடைத்திருக்கும் புள்ளிவிவரங்கள்படி ஐக்கிய மாகாணங்கள் முழுவதும் ஏறக்குறைய 55,000 ஆண்களும் பெண்களும் சிறையிலிருக்கின்றனர். “அமெரிக்க மக்களில் 450 பேருக்கு ஒருவர் சிறையிலிருக்கின்றனர்” என்று ஃபோர்ப்ஸ் அறிக்கை செய்கிறது, “மேற்கத்திய உலகிலேயே மிக உயர்ந்த எண்ணிக்கை.” இதன் சுமையைக் கூட்டும் விதத்தில் ஒவ்வொரு ஆண்டும் 35,000 முதல் 40,000 பேர் சிறைவாசிகளாகின்றனர், இது “நான்கு நாட்களுக்கு ஒரு புதிய சிறைச்சாலை என்பதற்கு ஈடாக இருக்கிறது.”

வெற்றியில் மகிழாதவர்

இலட்சாதிபதியாக்கும் ஜாக்பாட் ஜெயித்திட வேண்டும் என்பது வேலையில்லாதிருக்கும் ஒருவருடைய கனவாக இருக்கும். தன்னுடைய வேலையை இழந்த 27 வயதான ஒருவர் அப்படிப்பட்ட பரிசுச் சீட்டில் ரூ.9.6 கோடி ($64 இலட்சம்) பெற்றார். என்றபோதிலும், வெற்றிபெற்றது முதல் இலட்சாதிபதி பாப் கேம்பெல் கூறுவதாவது: “இது யாருக்கும் கிட்டக்கூடாது.” ஏன் கூடாது? தி டொரான்டோ ஸ்டர் (The Toronto Star) குறிப்பிட்டபடி, பொருள் சம்பந்தப்பட்ட காரியங்களை வாங்கினது அவ்வளவு மகிழ்ச்சியையும் திருப்தியையும் கொடுக்கவில்லை என்பதைக் கண்டார். “அது இல்லாமலேயே நான் அந்தளவுக்கு மகிழ்ச்சியாயிருப்பேன்,” என்கிறார் கேம்பெல். ஒரு வேலை தேடுவதில் இருக்கும் அழுத்தத்தை அது நீக்கிப்போட்டது என்பதை ஒப்புக் கொள்கிறவராய், “அவ்வளவுதான்,” என்கிறார். ஏராளமான பணத்தைப் பரிசாக பெறுவதில் உடனடியான மகிழ்ச்சி ஏதும் இல்லை என்று அவர் மற்றவர்களை எச்சரிக்கிறார்.

கேள்விக்குப் பதில் இல்லை

இன்று வாழும் இலட்சக்கணக்கான உயிரினங்கள் எப்படி வந்தன என்ற கேள்வி பரிணாமவாதிகளை வெகு காலமாக வாதித்துவந்திருக்கிறது. ஓர் உயிரினம் ஓர் உயிரினமாக இருக்க அது மற்ற உயிரினங்களுடன் சேர்ந்து உயிரினங்களைப் பிறப்பிக்க முடியாது—எதிலிருந்து தோன்றி வளர்ச்சியடைந்திருக்கிறது என்று சொல்லப்படுகிறதோ, அதோடு சேர்ந்து பிறப்பிக்கவுங்கூடாது. ஒருவேளை பிறப்பு ஏற்படுமானால், அது (கோவேரிக் கழுதையின் விஷயத்தில் இருப்பதுபோல்) அழிந்துவிடுகிறது, அல்லது முதிர்ச்சியடைவதற்கு முன்பு மரித்துவிடும். அறிவியல் பத்திரிகையாகிய டிஸ்கவர் (Discover) குறிப்பிடுகிறபடி, பிறப்புமூலத்துக்குரிய ஆய்வாளர்கள் இப்பொழுது “ஓர் மீட்பு ஜீன், உயிரினங்கள் தடையில் ஒரு சிறிய குறை” கண்டுபிடித்திருக்கின்றனர். அதைத் தாங்கிச்செல்லும் ஈக்களைப் பலவீனப்படுத்திட, ஒரு வகை பழ–ஈக்களின் கலப்பு இன ஆண் ஈக்கள் உயிர்பிழைப்பதைக் கூடிய காரியமாக்கியிருக்கிறது. “என்றபோதிலும் அந்த ஜீன் உயிரினத் தடையை முற்றிலும் முறித்திடுவதாயில்லை; ஆண் ஈக்களைப் இனவிருத்திக்குத்தகுந்தவையாய் ஆக்கிட முடியவில்லை,” என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. இது ஓர் “இக்கட்டான கேள்வியை” எழுப்புகிறது என்று டிஸ்கவர் கூறுகிறது. “அதைத் தாங்கிச்செல்லும் பெற்றோர் அதிலிருந்து நன்மையடையவில்லை என்றால், அதைச் சுதந்தரித்துக்கொள்ளும் பிள்ளைகள் அதைக் கடத்த முடியவில்லை என்றால், அந்த ஜீன் எப்படி பரிணாம அடிப்படயில் தோன்றியிருக்கக்கூடும்?”

நீடித்துழைக்க உருவமைக்கப்பட்டிருக்கிறது

செயற்கை இரத்த நாளம் ஒன்று அதைப் பெற்றிடும் உருப்போடு சேர்ந்து “வளரும்” தன்மையுடையது. இது ஒக்காயாமா பல்கலைக்கழக ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களால் உருவமைக்கப்பட்டிருக்கிறது என்று தி ஜப்பான் டைம்ஸ் (The Japan Times) அறிக்கை செய்கிறது. இந்தப் புதிய நாளங்கள் அறுவை சிகிச்சையின்போது நீக்கிவிடப்பட்ட குறைபட்ட இரத்த நாளங்களிலிருந்து எடுக்கப்பட்ட கொலாஜன் என்ற ஒரு வகை புரதத்திலிருந்து உருவமைக்கப்பட்டது. புதிய நாளங்கள் ஒரு கூட்டிணைப்புப் பொருளாலான ஃபைபர் உறையில் போடப்பட்டு ஒரு விசேஷமான ஒட்டும் பொருளால் பலப்படுத்தப்படுகிறது. இரத்தம் உறைவதைத் தடைசெய்ய இணைக்கப்பட்ட நாளத்திற்குள் அந்த ஒட்டும் வஸ்து ஒரு மெல்லிய திரை போன்று நீரைச் சுரக்கிறது. இது வேண்டாத உறையவைக்கும் என்ஸைம்கள் தோன்றுவதைத் தடை செய்கிறது. அந்த நாளங்கள் நோயாளியுடனேகூட “வளரும்” விசேஷ தன்மை படைத்ததால், அசாதாரண இருதய தமனிகள் மற்றும் சிரைகள் உடைய குழந்தைகள்தானே அதிகப்படியான நன்மை பெறுவார்கள்.

மனைவியை அடித்தல் அங்கீகரிக்கப்படுகிறது

ஆஸ்திரேலியா முழுவதும் 1,500 ஆண்கள் மற்றும் பெண்கள் பேரில் வேகமாக நடத்தப்பட்ட சுற்றாய்வின் அறிக்கை ஆச்சரியமாயிருந்தது. சுற்றாய்வில் சராசரியாக 20 சதவிகிதம் (பெண்கள் 17 சதவிகிதம்; ஆண்கள் 22 சதவிகிதம்) மனைவியை அடிப்பதை அங்கீகரித்தனர். உடல் சம்பந்தப்பட்ட வன்முறை நடத்தை அங்கீகரிப்பில் வித்தியாசம் இருந்தபோதிலும், “அவள் அவனுக்குக் கீழ்ப்படியாவிட்டால், பணத்தை விரயம் செய்தால், வீட்டைச் சுத்தமாக வைக்கத் தவறினால், தன்னோடு படுக்க மறுத்தால், மற்றொரு மனிதனோடு படுத்ததை ஒப்புக்கொண்டால்,” ஆண்களும் பெண்களும் ஆகிய இருவருமே கணவர் மனைவியைத் தள்ளுவது, உதைப்பது, அல்லது அடிப்பதை அங்கீகரித்தனர் என்று தி ஆஸ்திரேலியன் (The Australian) அறிக்கை செய்கிறது. தாங்கள் பார்க்கிற இப்படிப்பட்ட குடும்பத்தில் வன்முறையைக் காவல்துறையினருக்குத் தெரியப்படுத்துவதில் அயலகத்தார் பாகத்தில் தயக்கம் இருப்பது குறித்தும் அந்த அறிக்கை வெளிப்படுத்தியது. கணக்கெடுப்பில் மூன்றில் ஒரு பகுதியினராவது குடும்பத்தில் வன்முறையைத் தனிப்பட்டவர்களுடைய விவகாரம் என்று கருதினார்கள்.

மடத்துறவிகளுக்கு ஏய்ட்ஸ் பரிசோதனை

ஆத்தோஸ் (கிரீஸ்) மலையில் நிறுவப்பட்டிருக்கும் 20 கிழக்கத்திய மடங்களைச் சேர்ந்த மடத்துறவிகள் “அளவுகடந்த அமைதியின்மையின் நிலையில்” இருக்கின்றனர் என்று பிரெஞ்சு செய்திப் பிரிவு AFP அறிக்கை செய்கிறது. காரணம்? புதிதாக மதமாறிய அவர்களுடைய முன்னாள் அங்கத்தினர் ஒருவர் “ஏய்ட்ஸ் நோய்க் கிருமித் தாங்கியவராய்” இருந்தார். அந்த மடத்துறைத் தலைவர்கள் “2,000 மடத்துறவியருக்கும் முனிவர்களுக்கும் ஏய்ட்ஸ் பரிசோதனை செய்யப்படுவது குறித்து ஆலோசிக்கின்றனர்.”

உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு ஊர்ந்துவருகிறது

மனிதரால் அதிகமாக வெறுக்கப்படும் பூச்சிகள் கரப்பான் பூச்சிகள்தான் என்று ஆய்வுகள் காண்பிக்க, டாக்டர் பான் காங் என்ற ஆராய்ச்சி விஞ்ஞானி, அண்மையில் வாஷிங்டனில் நடைபெற்ற பூச்சிநூல் சார்ந்த கருத்தரங்கில் கரப்பான்கள் ஆரோக்கியத்துக்கும் அதிக ஆபத்தானவை என்று விளக்கினார். தி நியு யார்க் டைம்ஸ் (The New York Times) அறிக்கையின்படி, சாதாரணமாகக் கருதப்பட்டு வந்ததைவிட உடல் ஆரோக்கியத்துக்குக் கேடு கரப்பான் பூச்சிகளால் உண்டாகிறது, இதுதான் மிகச் சாதாரணமாகக் காணப்படுகிறது, “அமெரிக்காவின் உயர்ந்தளவு ஆஸ்துமா நோய் கரப்பான்கள் அதிகமாகக் குடிகொண்டிருக்கும் நகரத்தின் உட்பகுதிகளில் காணப்படுகிறது” என்றும் கூறினார். தோல் நோய்க் கிருமிகள் ஓரணுவுயிர்நுண்மங்கள், நச்சுக்கிருமிகள் மற்றும் சில நோய்க்கிருமிகள் கரப்பான்களால் கடத்தப்படுகின்றன என்று சொல்லப்படுகின்றன. கரப்பான்களின் பெருக்கம் மக்கள் நெருக்கம் மிகுந்துவரும் புறநகர்ப் பகுதிகளில் அதிகமாக இருக்கிறது என்ற கருத்தைத் தெரிவிப்பவராய், நியு யார்க் மக்கள் உடல்நல துறையில் ஆராய்ச்சி புரியும் டாக்டர் ஸ்டீபன் C. ஃப்ரான்ட்ஸ் கூறியதாவது: “மொத்தத்தில் இந்தப் பிரச்னை அதிகமாக இருப்பதற்குக் காரணம், இந்தப் பூச்சிகள் நம்மோடு வாழ்வதற்கான சூழ்நிலையை நாம் உருவாக்கிவருகிறோம்.”

பகுதிப் பரிகாரங்கள்தான்

“இயற்கையாகவே அமைந்திருக்கும் உறுப்புகளின் சிக்கலான இயல்பை தொழில்நுட்பம் ஒருவேளை முழுமையாக ஒருபோதும் செயற்கையில் அமைத்திட முடியாது,” என்று செயற்கை உறுப்புகள் பேரில் மியூனிச் சர்வதேச காங்கிரஸில் சொல்லப்பட்டது. மியூனிச் சியுடுஷ் ஸீடங் (Suddeutsvhe Zeitung) என்ற பத்திரிகையில் வெளிவந்த அறிக்கையின்படி, “இயந்திர உறுப்புகளில் இருக்கும் குறைபாடு, அதுதானே பிரதானமானதும் இன்றியமையாததுமானதாயிருப்பினும், உடல் சம்பந்தப்பட்ட இயக்கத்தை ஒரு குறிப்பிட்ட செயலுக்குட்பட்டதாகக் குறைத்துவிடுவதில் உள்ளடங்கியதாயிருக்கிறது.” உதாரணமாக மனிதனின் இருதயம் வெறுமென இரத்தத்தைச் செலுத்துவதைவிட அதிகத்தைச் செய்கிறது, சிறுநீரகங்கள் வெறுமென நச்சுப்பொருட்களை வடிகட்டுவதைவிட அதிகத்தைச் செய்கிறது—ஹார்மோன்களையும் உண்டுபண்ணுகின்றன. செயற்கை இருதயம் பொது இரத்த ஓட்ட மண்டலம் வாயிலாக இரத்தத்தைப் பல பகுதிகளுக்குச் செலுத்த முடிகிறது என்றாலும், அது ஹார்மோன்களிடமிருந்து அல்லது நரம்புகளிலிருந்து வரும் செயல்குறிகளுக்குப் பிரதிபலிக்க முடியாது, அல்லது இரத்த ஓட்டத்தை சமநிலையில் வைக்கும் அதன் சிக்கலான ஒழுங்கு அமைப்பின் மீது செல்வாக்குச் செலுத்திடவும் முடியாது என்று அந்தக் கட்டுரை குறிப்பிடுகிறது. மனிதனின் சிறுநீரகத்தில் “மிகவும் உயர்தரமான செல் சவ்வுகளின் இயல்பான அமைப்புக்கு” நச்சுக்களைப் பிரித்தெடுக்கும் செயற்கை முறையான டயலிஸிஸும் (dialysis) குறைபடுகிறது: “உறுப்புக்கள் நச்சுப்படுவதைத் தவிர்க்க இரத்தத்தின் ப்ளாஸ்மாவிலிருந்து எந்தப் பொருட்கள் அப்புறப்படுத்தப்படவேண்டும் என்பதை மருத்துவர்கள் இன்றுவரையும் அறியார்கள்.”

தேனீக்களுக்கு ஆபத்து

“கானடா தேசத்தின் தேன் உற்பத்தியாளர்கள் ஆசிய பூச்சிகளின் (varroa jacobson) அமைதியான படையெடுப்புக்குப் பயந்து வாழ்கிறார்கள், ஏனென்றால் அவை ஏற்கெனவே தேனீக்களைப் பாதிக்கின்றன,” என்று கானடா செய்தித்தாள் தி சண்டே ஸ்டர் (The Sunday Star) அறிக்கை செய்கிறது. தேனீ முட்டைப் புழு பருவத்திலிருக்கும்போது, அந்தப் பூச்சிகள் தாக்கி, “தேனீக்களிலிருந்து ரசத்தை உறிஞ்சுவிடுகின்றன,” இப்படியாக தேனீயின் ஆயுளைப் பாதியாகக் குறைத்தவிடுகின்றன. தேனீக்களை ஆராய்ந்துவரும் ஓர் அதிகாரி அந்த ஆசிய பூச்சிகளின் தாக்குதலைக் கடந்த 300 ஆண்டுகளில் தேன் உற்பத்தியாளருக்கு ஏற்பட்டிராத “மிகக் கடுமையான” நெருக்கடி என்று குறிப்பிடுகிறார். “ஐக்கிய மாகாணங்களிலுள்ள ஒவ்வொரு தேன்கூடும் அடுத்த இரண்டு வருடங்களுக்குள் தாக்கப்படும் . . . வேளாண்மை மீது அது பலமான பாதிப்பைக் கொண்டிருக்கும்,” என்று ஸ்டர் (Star) குறிப்பிடுகிறது. தேனீக்கள் தொகையில் குறிப்பிடத்தக்க சரிவினால் தாவரங்களில் மகரந்த சேர்க்கை தேவையானளவுக்கு இல்லாமல் குறைந்துவிடும்.”

துப்பாக்கிக்குண்டால் அறுவைசிகிச்சை

“ஒவ்வொரு நாளும் நூறுதடவைகளுக்கு மேலாக தன்னைக் கழுவிக்கொள்ளும்படியான ஒரு கட்டாய உணர்வால் வாதிக்கப்பட்ட” 22 வயது மனிதன் தற்கொலை செய்துகொள்ள முயன்ற போது தற்செயலாக தானே தன்மீது ஒரு மூளை அறுவைசிகிச்சை நடத்தினான்” என்று நியு யார்க் டெய்லி நியூஸ் அறிவிக்கிறது. தன்னை ஆட்டிப்படைத்த அந்தக் கட்டாய நடத்தையால் கவலைப்பட்டவனாய், அவன் “ஒரு 22-ரக துப்பாக்கியைத் தன் வாயில் வைத்து சுட்டான். அது அவனுடைய மூளையின் இடது பக்கத்தின் முன்பகுதியைப் பாதித்தது,” என்று நியூஸ் விளக்குகிறது. தன்னைச் சுட்டுக்கொல்லுவதற்கு மாறாக, தன்னை ஆட்டிப்படைத்த அந்தக் கட்டாய நடத்தை உணர்வுக்குக் காரணமாக இருக்கும் என்று நம்பப்படுகிற மூளையில் அந்தப் பகுதியை நீக்கிவிட்டான் என்று பிரிட்டிஷ் உளநூல் பத்திரிகை-யில் டாக்டர் லெஸ்லி சோலியம் (British Journal of Psychiatry) அறிக்கை செய்தார். தனக்கிருந்த அந்தக் கட்டாய நடத்தை உணர்விலிருந்து விடுவிக்கப்பட்ட அவன் இப்பொழுது ஒரு புதிய வேலையைக் கொண்டிருப்பதோடு தற்போது கல்லூரிக்கும் செல்லுகிறான்.

உணர்விழந்திருக்கிறார்கள் ஆனால் விழித்திருக்கிறார்களா?

“அறுவைசிகிச்சையின்போது மயக்கமருந்தளிக்கப்பட்ட நோயளிகள் உணர்விழந்தவர்களாக இருக்கின்றனர், ஆனால் செவிடர்களாக இருக்கவேண்டிய அவசியமில்லை,” என்று ஜியோ (Geo) பத்திரிகை அறிக்கை செய்கிறது. நோயாளிக்குத் தேவையான அளவு மயக்க மருந்து அளிக்கப்பட்டிருந்தபோதிலும், ஒலி அதிர்வுகளைப் பதிவு செய்யும் மூளையின் திறமை பாதிக்கப்படுகிறதில்லை என்று ஆராய்ச்சிகள் காண்பிக்கின்றன. இது மயக்க மருந்தின் செல்வாக்கிலிருக்கும் நோயளிகள் அறுவை சிகிச்சை செய்யப்படும் அறையில் சொல்லப்பட்ட காரியங்களைக் கவனித்திருந்து அதற்குப் பின்னால் அவற்றை ஞாபகத்தில் கொண்டிருக்க முடிந்திருக்கிறதற்குக் காரணத்தை விளக்குகிறது. மியூனிச் மருத்துவர் ஒருவர் இந்த ஆலோசனையைக் கொடுக்கிறார்: “மயக்க மருந்து அளிக்கப்பட்டிருக்கும் நோயாளி விழித்திருக்கிறார் என்பதுபோல் அவரை நடத்த வேண்டும்.” நம்பிக்கையூட்டும் குறிப்புகளைப் பேசுவதும், நோயளியைக் குறித்து கேலியாக, அர்த்தமற்றவிதத்தில் பேசுவதைத் தவிர்ப்பதும் இதில் உட்படுகிறது. (g88 7⁄8)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்