உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 2/8 பக். 29-30
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • உண்மையுள்ள கீழ்ப்படியாமை
  • கவலையுண்டு பண்ணும் சமுத்திரம்
  • உடல் ஆரோக்கியத்துக்காக உறக்கம்
  • சமுத்திரத்தில் தொலைந்துபோனது
  • உரத்து ஒலிக்கிற இசையின் பாதிப்பு
  • விசேஷமான திருவருள் பாலிப்பு
  • விண்வெளியில் எட்டாவது இடம்
  • சர்ச் சட்டங்கள் மாற்றப்பட்டன
  • இசையினால் மாறுபட்ட நடத்தை
  • ‘பட்டயங்களை பட்டயங்களாக அடிப்பது’
  • உலோக வெறி
  • உலகத்தை கவனித்தல்
    விழித்தெழு!—1986
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—1997
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1995
விழித்தெழு!—1990
g90 2/8 பக். 29-30

உலகத்தைக் கவனித்தல்

உண்மையுள்ள கீழ்ப்படியாமை

தேசீய கத்தோலிக்க செய்தியாளர், நடத்திய ஒரு சுற்றாய்வின்படி, ஒரு நல்ல கத்தோலிக்கனாக இருப்பதற்கு சர்ச்சின் அதிகாரப்பூர்வமான போதகங்களை ஆதரிப்பது அவசியமில்லை என்பதாக அநேக கத்தோலிக்கர்கள் நம்புகிறார்கள். உதாரணமாக, சுற்றாய்வில் உட்படுத்தப்பட்ட 70 சதவீதம், ஞாயிற்றுக்கிழமை சர்ச்சுக்குப் போகமலே அவர்கள் நல்ல கத்தோலிக்கர்களாக இருக்க முடியும் என்பதாக நினைத்தார்கள். 66 சதவீதம், நல்ல கத்தோலிக்கனாக இருப்பது, கருத்தடையின் சம்பந்தமான சர்ச்சின் போதனைக்குக் கீழ்ப்படிய தங்களைக் கட்டுப்படுத்துவதில்லை என்பதாகவும், 57 சதவீதம், விவாகரத்து மறுவிவாகம் போன்ற விஷயங்களில் கீழ்ப்படிய வேண்டிய அவசியமில்லை என்றும் நினைத்தார்கள். 55 சதவீதம் தாங்கள் ஒருபோதும் சர்ச்சை விட்டு விலகி செல்ல மாட்டோம் என்று சொன்னபோதிலும், 13 சதவீதம் மாத்திரமே அது தங்களுடைய வாழ்க்கையில் அதிமுக்கியமானதாக இருப்பதாகச் சொன்னார்கள்.

கவலையுண்டு பண்ணும் சமுத்திரம்

ஒரு சமயம் உலகிலேயே நான்காவது பெரிய ஏரியாக இருந்த ஏரல் சமுத்திரத்தின் கிளை ஆறுகள், விவசாயத்துக்காக வேறு வழியில் செலுத்தப்படுவதன் காரணமாக, கவலைக்கிடமான வேகத்தில் அது சுருங்கிக்கொண்டு வருவதாக சோவியத் விஞ்ஞானிகள் தெரிவித்திருக்கிறார்கள். இன்றைய செய்தி குறிப்புகளின்படி கடந்த 28 ஆண்டுகளுக்குள் ஏரி 43 அடி கீழ்மட்டத்துக்குச் சென்றுவிட்டிருக்கிறது. ஏறக்குறைய 27,200 சதுரமைல் தண்ணீர் பரப்பு மறைந்துவிட்டிருக்கிறது. இதன் விளைவாக இப்பொழுது இது உலகிலுள்ள ஏரிகளின் வரிசையில் ஆறாவது இடத்திலிருக்கிறது. தேசீய நிலயியல் பிரகாரம், “மீன்கள் இனத்தைச் சேர்ந்த இருபது வகைகள் . . . மறைந்துவிட்டன,” ஏனென்றால் நீரின் உப்புத்தன்மை திடீரென்று மிகுதியாகிவிட்டிருக்கிறது. இதனால் முன்னொரு காலத்தில் 60,000 ஆட்களுக்கு வேலை கொடுத்து வந்த மீன்பிடிப்பு தொழில் துறை இல்லாமற் போனது. சமுத்திரத்தின் கீழ் நோக்கிய சரிவை மாற்றுவதற்கு வழிகள் ஆராயப்பட்டு வந்தபோதிலும், நிலைமை அடுத்த நூற்றாண்டுக்குள் படுமோசமாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

உடல் ஆரோக்கியத்துக்காக உறக்கம்

அதிகமாக ஓய்வைப் பெற்றுக்கொள்வது, நோயை எதிர்ப்பதற்கு உடலுக்கு உதவி செய்கிறது என்பது உண்மையா? விஞ்ஞானிகள் ஆம் என்கிறார்கள்! அவர்கள் உடலில் நோய் தடைக் காப்பு பிரதிபலிப்புக்கும், ஆழ்ந்த உறக்கத்துக்குமிடையே திட்டவட்டமான ஒரு பிணைப்பைக் கண்டுபிடித்திருக்கிறார்கள். அமெரிக்க உடல் ஆரோக்கியம் பிரகாரம், முரமைல் பெப்டைட்ஜ் என்கிற சிறிய புரதப் பொருட்கள், மிகவும் அமைதியான வகையான ஆழமான, கனவுகளற்ற உறக்கத்தை உண்டுபண்ணுகின்றன, என்றும் அவை “உடலின் தற்காப்பு அமைப்பில் முக்கியப் பகுதியாக இருக்கும் இன்டர்லூக்கின் 1-ன் உற்பத்தியைத் தூண்டுவதாகவும்” கண்டுபிடித்திருக்கிறார்கள். ஆய்வாளர் டாக்டர் ஜேம்ஸ் M. க்ரூகர், “ஒரு நாளின் வேலைகளிலிருந்தோ அல்லது ஒரு நோயிலிருந்தோ மீண்டு முன்னிலை எய்துவதாக இருந்தாலும்சரி, உறக்கமானது களைப்பகற்றுவதில் ஒரு பங்கைக் கொண்டிருக்கக்கூடும்” என்பதாக நம்புகிறார்.

சமுத்திரத்தில் தொலைந்துபோனது

1988-ன்போது 7,000 நோயுள்ள கடல்நாய்களின் சடலங்கள் வட சமுத்திர கடற்கரைக்கு அடித்து கொண்டு வரப்பட்டது. இவற்றின் மரணத்துக்குக் காரணம், சளிக்காய்ச்சல் போன்ற நோய்க்குறிகளை உண்டுபண்ணும் ஒரு வைரஸ் ஆகும். மனிதன் இதற்கு பொறுப்புள்ளவனாக இருக்கிறானா? ஒவ்வொரு ஆண்டும் மனிதன் இலட்சக்கணக்கான டன்கள் தொழில்துறை கழிவுப் பொருட்களையும் பூச்சுக் கொல்லிகளையும், எண்ணெயையும், சாக்கடை நீர் கசடையும் வட சமுத்திரத்திற்குள் கொட்டுவதை கவனிக்கும் சில விஞ்ஞானிகள் இந்தக் கேள்வியை எழுப்பியிருக்கிறார்கள். இதன் விளைவாக, “கடல் நாயினுடைய ஏராளமான கொழுப்புக்குள் சிக்கிக்கொள்ளும் தொழில்துறை வேதியற் பொருட்கள் அவைகளின் தற்காப்பு அமைப்பை பலவீனப்படுத்தி, திடீர் தாக்குதல் செய்யும் வைரஸ்-க்கு எதிராக அவைகளை உதவியற்றவையாகச் செய்கின்றன” என்பதாக பொருளியலர் அறிவிக்கிறது. PCB (பாலிக்ளோரினேட்டட் டைபினாய்ல்ஸ்) பத்தாண்டுகளுக்கும் மேலாக தடை செய்யப்பட்டிருந்தும், அவை தண்ணீரிலும் கடல் நாயின் கொழுப்பிலும் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. ஆனால் கடல் நாய் மரணத்துக்கும், சமுத்திரத்தின் தூய்மையைக் கெடுத்துக் கொண்டிருக்கும் ஆயிரக்கணக்கான வேதியற் பொருட்களுக்குமிடையே நேரடியான ஒரு தொடர்பை விஞ்ஞானிகள் மிக நுட்பமாகக் குறிப்பிட்டுக் காண்பிக்கும்வரை, உண்மை “சமுத்திரத்தில் தொலைந்தே” இருக்கும் என்கிறது பொருளியலர்.

உரத்து ஒலிக்கிற இசையின் பாதிப்பு

பிள்ளைகள் உரத்து ஒலிக்கின்ற இசையைக் கேட்பதைக் குறித்து, அடிக்கடி பெற்றோர் கவலைத் தெரிவிக்கையில், இளைஞர்கள் இப்பொழுது மற்றொரு ஊற்றுமூலத்திலிருந்து வரும் எச்சரிப்பை—அதாவது இசைக் கலைஞர்கள் தாமே கொடுக்கும் எச்சரிப்பைக் கேட்கிறார்கள். காரணம்? “அதிகமதிகமான கலைஞர்கள் தங்கள் செவியுணர்வு நிரந்தரமாக சேதப்பட்டு விட்டிருப்பதை கண்டுணர்ந்து வருகிறார்கள்” என்பதாக டைம் பத்திரிகை தெரிவிக்கிறது. உட்செவியில் அமைந்திருக்கும், ஒலியைத் தாங்கிச் செல்லும் முடிகள் இடைவிடாமல் 100 டெசிபிள்களுக்கும் அதிகமான சப்தத்துக்கு வெளிப்படுத்தப்படும்போது பிரச்னை ஆரம்பமாகிறது—ராக் இசை நிகழ்ச்சிகள் சுமார் 120 டெசிபிள்களாக இருக்கின்றன. இதன் காரணமாக “உயர்-டெசிபிள் ராக்கினால் திரும்பத் திரும்பத் தாக்கப்படுவது” இந்த முடிகளைத் தட்டையாக்கி, அவைகளின் .“விரிவாற்றலை நிரந்தரமாக இழக்கும்படிச் செய்துவிடுகின்றன” என்பதாக டைம் விளக்குகிறது. காதுகளில் அணியப்படும் ஒலிவாங்கியில் மணிக்கணக்கில் ஸ்டீரியோ இசையைக் கேட்பது, “செவிக் குழாயில், தீயணைக்கும் குழாயின் வாய் அடைத்துக் கொள்வதுப்” போல இருக்கிறது என்பதாக ஒலி விஞ்ஞான வல்லுநர் சொன்னார். (g89 1/8)

விசேஷமான திருவருள் பாலிப்பு

நியு யார்க் நகரிலுள்ள புனித ஜான் கத்தீட்ரல், ஆண்டுதோறும் நிகழம் ஒரு பொது காட்சிக்கு மையமாகிவிட்டிருக்கிறது—மிருகங்கள் மீது திருவருள் பாலிப்பு. மேற்றிராணியைச் சேர்ந்த பிஷப் பால் மூர் ஆசி வழங்கிய மிருகங்களில், ஒரு வான்கோழி, ஒரு கழுகு, ஒரு மலைப்பாம்பு, ஒரு மீன், லாமா எனப்படும் ஓர் ஒட்டக இனவிலங்கு, ராக்கூன் என்றழைக்கப்படும் வட அமெரிக்காவிலுள்ள மரமேறும் ஒரு பாலூட்டி, ஓர் ஆமை, 8,000 பவுண்டு எடையுள்ள ஒரு யானையும் அடங்கும். அவர் ஒரு குடுவையிலிருந்த பத்து பில்லியன் கடற்பாசியையும்கூட ஆசீர்வதித்தார்! “புனிதர்” ஃபிரான்சிஸ் பறவைகளுக்குப் பிரசங்கித்ததாகக் கூறும் ஒரு கட்டுக்கதையே இந்தப் பழக்கத்துக்கு ஆதாரமாகும். ஒவ்வொரு ஆண்டும் நகரம் முழுவதிலும் செல்லப் பிராணிகளை வைத்திருக்கும் நூற்றுக்கணக்கானோர் விசேஷித்த அருள் பாலிப்புக்காக கத்தீட்ரலுக்குத் தங்கள் மிருகங்களைக் கொண்டு வருகின்றனர்.

விண்வெளியில் எட்டாவது இடம்

இஸ்ரேல் தன்னுடைய முதலாவது விண்வெளி துணைக்கோளை வெற்றிகரமாக அனுப்பி வைத்திருப்பது, இதை இப்படிப்பட்ட திறமைக் கொண்ட எட்டாவது நாடாக ஆக்குகிறது. (ஐக்கிய மாகாணங்கள், சோவியத் யூனியன், ஃபிரான்ஸ், சீனா, ஜப்பான், இந்தியா மற்றும் பிரிட்டன் ஆகியவை மற்ற நாடுகளாகும்.) ஓஃப்க்-1 என்றழைக்கப்படும் இஸ்ரேல் நாட்டு துணைக்கொள், பூமியின் காந்த களம் மற்றும் விண்வெளி நிலைமைகளின் பேரில் அறிவியல் செய்திக் குறிப்புகளைச் சேகரிப்பதற்காக திட்டமிடப்பட்டிருப்பதாகச் சொல்லப்படுகிறது.

சர்ச் சட்டங்கள் மாற்றப்பட்டன

“அமெரிக்காவின் மிகப் பழமையான சர்ச் ஆப் காட் என்றழைக்கப்படும் பெந்தெகொஸ்தே பிரிவு, ஆபரணங்களை அணிதல், ஒப்பனைப் பொருட்களைப் பயன்படுத்துதல் மற்றும் திரைப்படங்களுக்குச் செல்வதும்கூட, தனிப்பட்ட புனிதத்தன்மையோடு பொருத்தமானதாக இருக்கும் என்பதாக தீர்மானித்திருக்கிறது” என்று கிறிஸ்தவ நூற்றாண்டு குறிப்பிடுகிறது. பெண்கள் குட்டையான முடி வைத்திருப்பதையும், குடும்ப அங்கத்தினராக இல்லாத எதிர்பாலாரோடு நீச்சலடிப்பதையும் தடை செய்திருந்த, 1911-ல் இயற்றப்பட்ட சர்ச்சின் ஒழுக்க சட்டத் தொகுப்பில் இது ஒரு முக்கிய மாற்றமாகும். ஏன் இந்த மாற்றம்? ஏனென்றால் சர்ச் வெளிநாடுகளுக்கு விரிவாகியப்போது, “தோற்றத்தின் மீதும் நடத்தையின் மீதும் வைக்கப்பட்ட கட்டுப்பாடுகள் நகர்ப்புற சூழ்நிலைமைகளிலும் அயல்நாட்டு கலாச்சாரத்திலும் விளங்கிக் கொள்ளப்படவில்லை” என்பதாக அறிக்கைச் சொல்கிறது. மேலும் அட்லான்டாவிலுள்ள 9,200 உறுப்பினர் கொண்ட அவர்களுடைய சர்ச்சில், “வெள்ளிக்கிழமை இரவுகளில் மறுபடியும் பிறந்த பருவ வயதினரை, அதன் வரவேற்பு கூடத்தில் கிறிஸ்தவ ராக் இசைக் குழவினர் பாடுவதைக் கேட்பதற்கு சர்ச் அழைக்கிறது.”

இசையினால் மாறுபட்ட நடத்தை

தனக்குத் தெரிந்த இசைப்பாட்டுகளையுடைய இசையைக் கேட்டுக் கொண்டிருப்பானேயானால், ஒரு காரோட்டி மாறுபட்ட வகையில் நடந்துகொள்ளக்கூடும் என்பதாக மேற்கு பெர்லினில் ஓர் இசை ஆராய்ச்சியாளர் தெரிவிக்கிறார். “காரணம் (இடது பக்கம் பேச்சையும் வலது பக்கம் இசையையும் பதிவு செய்யும்) மூளையின் இரு பாகங்கள் மீதும் ஒரே சமயத்தில் அழுத்தம் ஏற்படுகிறது” என்பதாக ஜெர்மன் செய்தித்தாள் சடன்சி சையுட்டுங் விளக்குகிறது. வெறும் இசையொலியில், பாட்டு இல்லாததாலும், அந்நிய மொழி பாடல்கள் பெரும்பாலான ஓட்டுநர்களால் புரிந்துகொள்ள முடியாததாலும் இப்படிப்பட்ட இசையே உகந்ததாகும். ஆனால் இசையின் தொனியும்கூட ஓட்டும் பழக்கங்களைப் பாதிக்கிறது என்பதாக ஆராய்ச்சி காண்பிக்கிறது: தொனி அதிகமாயிருக்கையில் ஓட்டுநர் மீது அழுத்தம் கூடுகிறது.

‘பட்டயங்களை பட்டயங்களாக அடிப்பது’

ஐக்கிய மாகாணங்களும் சோவியத் யூனியனும் கடந்த ஆண்டு கையொப்பமிட்ட “INF ஒப்பந்தம் (இடை தொலை எல்லை அணுசக்திகள்) ஒவ்வொரு தேசமும் தன் படைக்கலக் கொட்டிலில், கொண்டிருக்கும் அணுகுண்டுகளின் எண்ணிக்கையில் ஒன்றையும்கூட குறைப்பதில்லை” என்பதாக பெரேட் பத்திரிகை சொல்கிறது. 2,612 ஏவுகணைகளை அழிப்பதை ஒப்பந்தம் தேவைப்படுத்திய போதிலும் ஒவ்வொரு பக்கமும், “இந்த ஏவுகணைகளிலிருந்து அணுசக்தி வெடிப்பு முனைப் பகுதிகளை அகற்றி புதிய ஆயுத அமைப்புகளுக்கு மாற்றல் செய்ய . . . அல்லது பல்வேறு வித்தியாசப்பட்ட பீரங்கிப்படை ஏவுகணைகளுக்கு அல்லது அணுகுண்டுகளுக்கு மாற்றி அமைத்து மீண்டும் அவைகளைச் செயல்படுத்துவதை அனுமதிக்கிறது.” அவ்விதமாகச் செய்வது, “பட்டயங்களை பட்டயங்களாக அடிப்பதற்கு” ஒப்பாக இருந்தாலும், “ஆயுதப் போட்டியை மாற்றச் செய்வதில் நீண்ட கால முன்னேற்றங்கள் எதுவும் செய்யப்படாததாயும்” இருப்பதை அர்த்தப்படுத்துகிறது என்று பிரிட்டனின் மான்செஸ்டர் கார்டியன் வீக்லி குறிப்பிடுகிறது. சாத்தியமான “புதிய ஆயுதங்களின் சந்ததி”க்காக, அணுவைப் பிளக்கத்தக்க பொருட்களை விட்டுச் செல்வதே நாம் செய்து கொண்டிருக்கும் காரியமாகும். இது “ஆயுத குறைப்பு ஒப்பந்தத்தின் மூலமாக நாம் எய்த நம்பியிருக்கும் காரியத்துக்குச் சரியாக நேர் எதிர்மாறான காரியமாகும்.”

உலோக வெறி

1986 முதற்கொண்டு அலுமினியத்தின் விலை மூன்று மடங்காக அதிகரித்துவிட்டிருப்பதால், திருடர்கள் உண்மையில், “அமெரிக்காவின் நெடுங்சாலைகளை இடித்து வீழ்த்திக் கொண்டிருக்கிறார்கள்” என்பதாக தி வால் ஸ்டீரீட் ஜர்னல் தெரிவிக்கிறது. பணவீக்கமடைந்த பொருட்களின் விலைகளை பணமாக்கும் ஆர்வத்தில், கடந்த ஆண்டு திருடர்கள் கலிஃபோர்னியா நெடுஞ்சாலைகளிலிருந்த 34 இலட்சம் ரூபாய் பெறுமானமுள்ள பொருட்களைத் திருடியிருக்கிறார்கள். பவுண்டுக்கு 55 சென்ட் என்பதாக ஓட்டை உடைசல்களில் விற்பனை செய்வதற்காக எடுத்துக்கொள்ளப்படும் உருபடிகளில், அலுமினியத்தினாலான நெடுங்சாலை அறிவிப்பு குறிகளும், விழாதபடி தடுக்கும் கைப்பிடிகளும் அடங்கும். விமானப்படையின் வெடிகுண்டு விமான பாகங்கள், விவசாய வேளாண்மைக் குழாய்கள், காலி வீடுகளிலிருந்து எடுக்கப்பட்ட அலுமினிய பக்கச் சுவர்கள், கட்டிட வேலை நடைபெறும் இடங்களிலிருந்து சாரக்கட்டுக்கு வேண்டிய பொருட்களும்கூட திருடப்பட்டிருப்பதாக தெரிகிறது. போக்குவரத்து துறையின் பிரதிநிதி ஒருவர் பின்வருமாறு சொன்னதாக ஜர்னல் அறிவிப்புச் செய்கிறது: “விளக்குக் கம்பத்தை எவராவது மோதி தள்ளிவிடும் விபத்து ஏற்பட்ட பின், உடனடியாக பணியாட்கள் அவ்விடத்துக்கு விரைந்து செல்லாவிடில், [விளக்கு கம்பங்கள்] கூட மறைந்துவிடுகின்றன.” (g89 1⁄22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்