உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g90 7/8 பக். 32
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1990
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • இராணுவச் செலவு
  • இணையில்லா பேரம்
  • இருக்கை வார்கள் உயிரைக் காக்கின்றன
  • போப்பால் தீர்வு
  • முதிர் கரு எதைக் கேட்கிறது
  • நிலையான சமாதானத்தையும் பாதுகாப்பையும் மனிதர் கொண்டுவர முடியுமா?
    உண்மையான சமாதானம்
  • உலகை கவனித்தல்
    விழித்தெழு!—2001
  • உலகத்தைக் கவனித்தல்
    விழித்தெழு!—1987
  • ஏன் இந்த வாழ்க்கைச் செலவு நெருக்கடி?
    விழித்தெழு!—1990
மேலும் பார்க்க
விழித்தெழு!—1990
g90 7/8 பக். 32

உலகத்தைக் கவனித்தல்

இராணுவச் செலவு

“இராணுவச் செலவு பொருளாதார வளர்ச்சியை ஊக்குவிப்பதாகவோ அல்லது தடை செய்வதாகவோ இருக்கிறதா?” என்று ஐ.நா. க்ரானிக்கள் (UN Chronicle) கேட்கிறது. 13 நாடுகளின் நிபுணர்கள் தயாரித்த ஓர் ஆய்வின்பேரில் க்ரானிக்கள் அறிக்கை குறிப்பிடுவதாவது, “இராணுவத்திற்குச் செலவு செய்யப்படும் நீண்ட காலச் செலவு பெரும்பாலும் பாதகமான ஒன்றாகவே இருக்கிறது.” ஆரம்பத்தில் வேலை வாய்ப்புகளும் தேவையும் வளர்க்கப்பட்டாலும், இராணுவச் செலவு ஒரு நாட்டின் பொருளாதாரத்தைப் பாதிப்பதிலேயே முடிவடைகிறது, “ஏனென்றால், அது வீடு கட்டிக் கொடுப்பது போன்ற பலன் தரும் பிரிவுகளில் முதலீடு செய்யப்பட்டிருக்கும் தொகயை ஏராளமாக வடித்து விடுகிறது,” நலத்துறை மற்றும் சமூகப் பாதுகாப்பு முறைகள் பெரும்பாலான மேற்கத்திய நாடுகளில் நிலைக்க முடிந்தாலும், இராணுவச் செலவு வளரும் நாடுகளில் இந்தப் பணிகளுக்குப் பெருஞ் சேதத்தை ஏற்படுத்திவந்திருக்கிறது. “நாடு எவ்வளவுக்கு ஏழ்மையில் இருக்கிறதோ, அந்தளவுக்கு இராணுவச் செலவின் பொருளாதார பாதிப்பும் அதிகமாக இருக்கிறது, அதன் நலன் பற்றி குறிப்பிடவேண்டியதில்லை,” என்று க்ரானிக்கள் குறிப்பிடுகிறது. அது மேலும் கூறுவதாவது: “உலகம் இராணுவ நோக்கத்திற்காக மூன்று மணி நேரத்துக்கு ஒரு முறை ரூ. 480 கோடி செலவு செய்கிறது. அந்தப் பணத்தைக் கொண்டு இந்தப் பூகோளத்திலுள்ள ஒவ்வொரு தனி பிள்ளைக்கும் கொடிய நோய்களுக்கு எதிராகத் தடுப்பு ஊசி போட முடியும்.”

இணையில்லா பேரம்

சிக்கனமான ஒரு விமானப் பயணச்சீட்டுத் தொகக்கு—ரூ.48,000-க்கும் குறைந்த தொகக்கு—எரிபொருளுக்கும் ஊதியங்களுக்கும் சேர்ந்து பிரிட்டிஷ் ஏர்வேய்ஸுக்கு ரூ.4,00,000 செலவை உட்படுத்தும் ஒரு போயிங் 747 விமானப் பயணத்தில் ஒரு ஜப்பானிய இளம் பெண் தனிப் பயணியாகப் பயணம் செய்யும் வாய்ப்பைப் பெற்றாள். திருமதி யமமோட்டோ, ஜம்போ ஜெட்டின் 8,000 மைல் பயணம் முழுவதும் தனி பயணியாக 353 இருக்கைகளில் எதையும் தெரிந்துகொள்ளும் வாய்ப்பையும், ஆறு திரைப்படங்களையும், சுவை மிகுந்த உணவையும், 15 விமானப் பணியாட்களின் முழு கவனிப்பையும் பெற்றாள். அந்த விமானப் பயணத்தில் 20 மணி நேரம் தாமதம் ஏற்பட்டதால், மற்ற பயணிகளெல்லாரும் வேறு விமானங்களில் ஏற்றப்பட்டனர். அட்டவணையின் நேரத்துக்கு சீரமைத்துக்கொள்வதற்காக விமானம் பிரிட்டனுக்குத் திரும்ப வேண்டியிருந்ததால், காத்துக்கொண்டிருந்த திருமதி யமமோட்டோவுக்கு வாழ்க்கையில் ஒரு முறையே கிடைக்கும் இப்படிப்பட்ட வாய்ப்பு அளிக்கப்பட்டது. “திருமதி யமமோட்டோ பயணிகளில்லாத ஓர் இரயிலை எதிர்பார்த்தவளாக டோக்கியோவுக்குத் திரும்பினால், அவளுடைய கற்பனை வீணாக இருக்கும்,” என்று ஏஷியா வீக் குறிப்பிடுகிறது.

இருக்கை வார்கள் உயிரைக் காக்கின்றன

இருக்கை வார்கள் அல்லது பெல்ட்டுகள் உண்மையிலேயே உயிரைக் காக்கின்றன என்று அத்தாட்சிகள் நிரூபிப்பதாய் ஐக்கிய மாகாணங்களில் இருக்கை வார்களின் உபயோகம் குறித்த ஓர் ஆய்வு காண்பித்தது. ஜாமா (JAMA) என்ற மருத்துவ பத்திரிகையில் வெளிவந்த அந்த ஆய்வின்படி, இருக்கை வார் சம்பந்தப்பட்ட விதிக்குக் கீழ்ப்படிந்த “முன் இருக்கைப் பயணிகளில் விபத்தின்போது கடுமையான காயங்களும் மரணங்களும் வெகுவாகக் குறைவாயிருந்தது.” எனவே அடுத்த முறை நீங்கள் ஒரு காரில் ஏறினால், உங்களுடைய இருக்கை வாரை மாட்டிக்கொள்ளுங்கள்; ஓர் உயிரை—உங்களுடைய சொந்த உயிரை—பாதுகாப்பவர்களாய் இருப்பீர்கள்! (g89 6/8)

போப்பால் தீர்வு

போப்பால் விஷ வாயுக் கசிவு விபத்தில் பலியானவர்களுக்கு இழப்பீட்டுத் தொகயை நாடுகிறவர்களுக்குத் “தீர்வு கண்களுக்கு எட்டிய தூரத்தில் இல்லை,” என்று இந்தியா டுடே (India Today) என்ற பத்திரிகை குறிப்பிட்டாலும், கடைசியாக ஒரு விதத் தீர்வு காணப்பட்டிருப்பதாகத் தெரிகிறது. (மே 8, 1990 விழித்தெழு! பத்திரிகையைப் பாருங்கள்.) நீதிமன்றத்தை உட்படுத்தாத ஓர் இழப்பீட்டுத் தீர்வில், இந்த பேரழிவின் பலியாட்களுக்கு வழக்கறிஞர்கள் ரூ. 4,800 கோடி கேட்டிருந்த போதிலும், யூனியன் கார்பைட் ரூ. 752 கோடி கொடுப்பதாக ஒப்புக்கொண்டது. பலியாட்கள் சராசரியாக ரூ. 2,31,360 பெறுவர். இது “ஐக்கிய மாகாணங்களில் ஒருவருக்கு ஏறக்குறைய ரூ.1,60,00,000-க்கு சமானமாக இருக்கும்” என்று தி எக்கானமிஸ்ட் (The Economist) என்ற பிரிட்டிஷ் பத்திரிகை குறிப்பிட்டது. ஏழை நாடுகளில் பெரிய தொழில் நிறுவனங்கள் ஆபத்தான தொழிற்சாலைகளைக் கட்டுவதற்கு ஊக்கம் அளிக்கும் வகையில் இந்த இழப்பீட்டுத் தீர்வுத் தொக குறைவாக இருந்திருக்கக்கூடும். விபத்துகளுக்குப் பலியாகிறவர்களுக்கு அவர்கள் இழப்பீடாகக் குறைந்த பணமே கொடுக்க நேரிடும் என்றும் அந்தப் பத்திரிகை குறிப்பிட்டது. இந்தக் குறைந்த இழப்பீட்டுத் தொக யூனியன் கார்பைடின் நிதிப்பத்திர அடிப்படையிலான பொதுக்கடனின் பத்திர விலையும் அதிகரிக்கச் செய்தது என்றும் தி எக்கானமிஸ்ட் மேலும் கூறுகிறது.

முதிர் கரு எதைக் கேட்கிறது

பிறவா முதிர் கரு வெளி சத்தத்தை எவ்வளவாய்க் கேட்கக்கூடும் என்பதை அண்மையில் கண்டுபிடித்த ஆராய்ச்சியாளர் ஆச்சரியப்பட்டார்கள். தாயின் கருப்பையில் குழந்தையின் தலைக்குப் பக்கத்தில் ஒரு மைக் அல்லது ஒலிப்பெருக்கி பொருத்திட, மருத்துவர்கள் வித்தியாசமான வெளிச் சத்தத்தைக் கேட்க முடிந்தது; 12 அடி தூரத்தில் நடக்கும் ஒரு சம்பாஷணை முதல் மூடப்பட்ட கதவுக்கு மறுபக்கத்திலிருக்கும் கூடத்தில் செல்லும் ஒரு வண்டி கடந்துபோவதையும் மருத்துவர்கள் தெளிவாகக் கேட்க முடிந்தது. இதேவிதமாக, அயர்லாந்திலுள்ள ஓர் உளநூல் மருத்துவர் குறிப்பிட்டதாவது, தாய் கர்ப்பமாய் இருக்கும்போது தவறாமல் கேட்டுக்கொண்டிருந்த ஒரு தொலைக்காட்சி நிகழ்ச்சியின் இசையைப் பிறந்த குழந்தைகள் அறிந்துகொள்வதாகத் தெரிகிறது. பிறவாத குழந்தைகளின் சின்னஞ்சிறு காதுகளில் என்ன பாதிப்பை ஏற்படுத்தக்கூடும் என்பதன் பேரில் இப்படிப்பட்ட கண்டுபிடிப்புகள் கூடுதல் ஆய்வுக்கு வழிநடத்தக்கூடும் என்று ஐ.மா. பத்திரிகை பெண்ணின் உலகம் (Woman’s World) அறிக்கை செய்கிறது. (g89 6/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்