உவாட்ச்டவர் ஆன்லைன் லைப்ரரி
உவாட்ச்டவர்
ஆன்லைன் லைப்ரரி
தமிழ்
  • பைபிள்
  • பிரசுரங்கள்
  • கூட்டங்கள்
  • g87 3/8 பக். 29-31
  • உலகத்தைக் கவனித்தல்

இதற்கு வீடியோ இல்லை.

மன்னிக்கவும், இந்த வீடியோவை இயக்க முடியவில்லை.

  • உலகத்தைக் கவனித்தல்
  • விழித்தெழு!—1987
  • துணை தலைப்புகள்
  • இதே தகவல்
  • ஆப்பிரிக்காவில் நெருக்கடி
  • புகைபிடிக்கும் இளம்-சமுதாயம்
  • வேலை செய்யும் இடங்களில் ஊட்டச்சத்து
  • கீரீன்விச் நேரத்திற்கு பிரிவு வாழ்த்துக்கள்
  • ஜப்பான் தொழிலாளர்கள்
  • இராணுவ செலவுகள்
  • கால்நடைகளுக்கு வெறியச்சத்துள்ள பானம்
  • கடற்கொள்ளை மோசமாகிக் கொண்டிருக்கிறது
  • பிரிட்டனில் சிறுபிள்ளைப் புணர்ச்சி
  • ஆகாயத்திலிருந்து தேடும் பணி
  • நிச்சயமற்ற அறுவை சிகிச்சை
  • வேலையைக் குறித்த உயர்ந்த மனப்பான்மை
  • போராயுத வியாபாரம் அது எவ்விதம் உங்களை பாதிக்கிறது
    விழித்தெழு!—1990
  • போர்க்கருவிகள்—அவைகளுக்கு என்ன செலவாகிறது?
    விழித்தெழு!—1988
  • இக்கட்டிலிருக்கும் பிள்ளைகள்
    விழித்தெழு!—1993
  • பயனுள்ள அந்தக் கற்பனைக் கோடுகள்
    விழித்தெழு!—1995
மேலும் பார்க்க
விழித்தெழு!—1987
g87 3/8 பக். 29-31

உலகத்தைக் கவனித்தல்

ஆப்பிரிக்காவில் நெருக்கடி

“இரு பத்தாண்டுகளாக இருந்துவந்திருக்கும் பஞ்சமும், வறட்சியும், கடனும் ஆப்பிரிக்காவில் கடுமையான நெருக்கடி நிலைமையை உருவாக்கிவிட்டது. “ஓர் உலக யுத்தத்தின் பாதிப்புக்கு ஒப்பிடுமளவுக்குக் கடுமையான நெருக்கடி,” என்று ஆப்பிரிக்காவின் முன்னேற்றத்திற்கான திட்டங்களை வகுக்கும் செயற்குழுவின் அறிக்கை ஒன்று கூறுகிறது. அது கூடுதலாகக் குறிப்பிடுவதாவது: “அதன் அளவு கற்பனைக்கு அப்பாற்பட்டது, அதன் கொடுமை உலகின் மற்ற பகுதியால் நினைத்துப்பார்க்க அல்லது புரிந்துகொள்ள முடியாதளவுக்கு இருக்கிறது.” பென்ஸில்வேனியாவில் ஈஸ்டனின் தி எக்ஸ்பிரஸ் கொடுத்த அறிக்கையின்படி, “உலகின் 34 ஏழை நாடுகளில் 20 நாடுகள் ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கிறது,” மேலும் அது உலகத்திலேயே மிக அதிக மக்கள் தொகை அதிகரிப்பைக் கொண்டிருக்கிறது, மற்றும் பயிற்சிபெற்ற வேலையாட்கள் குறைவும் அங்கு அதிகமாகக் காணப்படுகிறது.” ஏற்கனவே ஆப்பிரிக்காவின் தேவையைப் பூர்த்திசெய்ய முடியாத நிலையிலிருக்கும் உணவு உற்பத்தி, ஆப்பிரிக்கா நாடுகள் சிலவற்றில் அதிகமாகக் குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அந்தச் செயற் குழு “தியாகங்களை” உட்படுத்தும் பல சிபார்சுகளை செய்தது, அத்துடன் “ஆப்பிரிக்காவின் நிலைமை நம்பிக்கையிழந்ததாய் இல்லை” என்றும் குறிப்பிட்டது.

புகைபிடிக்கும் இளம்-சமுதாயம்

சமீபத்தில் தென் ஆப்பிரிக்காவில் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வின்படி பெரியவர்களைவிட சிறியவர்களே அதிக எண்ணிக்கையில் புகைபிடிக்கின்றனர். 3,000 பள்ளி பிள்ளைகளை உட்படுத்திய இந்தச் சுற்றாய்வு ஆஸ்திரேலியாவின் புற்றுநோய் சங்கத்தால் ஏற்பாடு செய்யப்பட்டது. தி ஆஸ்திரேலியன் பத்திரிகை அறிக்கையின்படி, அந்தப் பிள்ளைகள் முந்தின வாரம் புகைபிடித்தார்களா என்று கேட்கப்பட்டபோது 16 வயது இளைஞரில் 40% அப்படி செய்ததாக ஒப்புக்கொண்டனர். பெரியவர்களில் 27% மட்டுமே தாங்கள் புகைபிடித்ததாகக் கூறுகின்றனர். ஏராளமான இளம் பிள்ளைகள்—15 வயதுள்ளவர்களில் 8 சதவிகிதத்தினரும், 12 வயதினரில் 1 சதவிகிதத்தினரும்—தாங்கள் சங்கிலித் தொடர் புகைபிடிப்பாளர்களென உரிமைப் பாராட்டினர். அதற்கு மேலாக, பையன்களைவிட பெண்பிள்ளைகள்தான் அதிகம் புகைபிடிப்பவர்களாக இருந்தனர். தாங்கள் விரும்பினால் அந்த நேரமே புகைபிடிப்பதை நிறுத்திவிட முடியும் என்று மாணவர்களில் அநேகர் நம்பிக்கை தெரிவித்தனர்.

வேலை செய்யும் இடங்களில் ஊட்டச்சத்து

ஐக்கிய மாகாணங்களில் பல தேசத்தவர் வேலை செய்யும் நிறுவனங்கள் முதல் சிறிய குடும்பளவில் நடத்தப்படும் நிறுவனங்கள், வர்த்தக ஸ்தாபனங்கள் மற்றும் உற்பத்தியாளர்கள் வரை, எல்லோருமே வேலை செய்யும் இடங்களில் நல்ல ஊட்டச்சத்துள்ள உணவையே கொடுக்கின்றனர் என்று தி நியு யார்க் டைம்ஸ் அறிக்கை செய்கிறது. வேலை செய்யும் இடங்களிலேயே ஊட்டச்சத்தும் ஆரோக்கியமும் என்ற திட்டங்கள் வேலையாட்களின் சுக நலத்தைப் பராமரிக்கும் செலவைக் குறைத்து, உற்பத்தியைப் பெருக்கி ஒரு மகிழ்ச்சியுள்ள வேலையாட்களைக் கொண்ட தொகுதியை உருவாக்குகிறது என்று இந்தக் காரியத்தை ஊக்குவிப்பவர்கள் உரிமைப் பாராட்டுகின்றனர். இந்தத் திட்டங்கள் “உணவகத்தில் பரிமாரப்படும் உணவை ஊட்டச் சத்துள்ள உணவு வகைக்கு மாற்றுவது போன்ற எளிய ஏற்பாடுகள் செய்வது மட்டுமல்லாமல், நீச்சல்குளம், உடற்பயிற்சிக்கான பொருட்கள், மற்றும் இருதய நோயாளிகளுக்கு மறுவாழ்வு திட்டம் ஆகிய உடல்நலத் தகுதிக்கான 37,000 சதுர அடி [3,440 சதுர மீட்டர்] வசதியை ஏற்படுத்துவது போன்ற பெரியதளவு ஏற்பாடுகள், மாற்றங்களைச் செய்வதை உட்படுத்தக்கூடும்” என்று அந்தக் கட்டுரை கூறுகிறது. உணவு பரிமாறும் அநேக நிறுவனங்கள் தங்களுடைய உணவில் எவ்வளவு கலோரி மற்றும் கொலஸ்ட்ரால் அளவு இருக்கிறது என்பதையும் குறிப்பிடுகின்றன. மற்றும் அவர்கள் கொழுப்பும் சோடியம் உப்புச் சத்தும் குறைந்த உணவு வகைகளை இருதய நோயால் பாதிக்கப்பட்டிருக்கும் வேலையாட்களுக்கென்றே தயாரித்தளிக்கின்றன.

கீரீன்விச் நேரத்திற்கு பிரிவு வாழ்த்துக்கள்

1884-ல் கீரீன்விச் நேரம்தான் உலகமெங்கும் நேரம் பார்ப்பதற்கும் கடற்பயணம் செய்வதற்கும் ஒரு பொது அளவு கால அறுதியாக அமைந்தது. உண்மையில் பார்க்கப்போனால் கப்பற்பயணம் செய்பவர்கள் தங்கள் பயணத்தை துவங்குவதற்கு முன்பு தங்கள் கடிகாரங்களை அமைத்துக்கொள்வதற்கு கீரீன்விச் வானாராய்ச்சி நிலையம் 1675-லேயே நேரத்தை அறுதியிட்டது. இன்று அந்த வானாராய்ச்சி நிலையத்தின் ஆறு அணு கடிகாரங்களையும் இயக்குவதற்கு ஆண்டுதோறும் ரூ.10,00,000 செலவாகிறது, மற்றும் ஒவ்வொரு வறுங்குழாயையும் மாற்றிட ரூ.3,00,000 செலவாகிறது. இதற்கான பணத்தை வேறு காரியங்களுக்கு பயன்படுத்தலாம் என்றும், அதன் வறுங்குழாய்கள் பழுதடைவதால் அவை மாற்றப்படாது என்றும் பிரிட்டன் தீர்மானித்திருக்கிறது. என்றபோதிலும் நேரத்தைப் பார்ப்பதற்குரிய ஒரு பொது கணக்கை பாரீஸிலுள்ள கோ-ஆர்டினேட்டட் யூனிவர்சல் டைம் வைத்துக்கொள்ளும். இந்த நேரம் உலக முழுவதிலிருந்தும் 150 அணு கடிகாரங்களிலிருந்து கிடைக்கப்பெறுகிறது—இதில் கீரீன்விச் வானாராய்ச்சி நிலையம் ஒரு சிறிய பங்கைத்தான் அளித்தது.

ஜப்பான் தொழிலாளர்கள்

“ஜப்பானில் தொழில் வெற்றிக்கு அடிப்படைக் காரணங்களில் ஒன்று, அந்த மக்கள் வேலை வெறியராக இருப்பது,” என்று பெரேட் பத்திரிகை கூறுகிறது. ஜப்பானிய பிள்ளைகளுக்கு, சென்யு கொராக்கு —முதலில் கஷ்டப்படு, பின்பு அனுபவி—என்ற தங்கள் நாட்டின் சரித்திர சுலோகம், சிறுவயது முதல் கற்றுக் கொடுக்கப்படுகிறது.” இதன் பலனாக பெரும்பாலான ஜப்பானியர் ஓய்வைவிட வேலையை விரும்புகின்றர், பலர் தங்கள் விடுமுறை நாட்களைக்கூட அனுகூலப்படுத்திக்கொள்வதில்லை. இந்தளவுக்கு வேலைக்கும் முதலாளிகளுக்கும் உடன்பட்டிருப்பதுதானே பிரச்னைக்கு விலகியதாயில்லை. “ஜப்பான் தொழிலாளர்களில் பாதிபேர் வேலையிலிருந்து விடுப்பு எடுத்துக்கொள்வதற்கு அடிப்படைக் காரணம் அழுத்தம்,” என்கிறது மெய்னிச்சி டெய்லி நியூஸ். “அதே சமயத்தில் 20 பேரில் ஒருவர் வயிற்றுப் புண் மற்றும் இருதயக் கோளாறுகள் உட்பட அழுத்தத்தால் ஏற்படும் உடல்நிலையால் கஷ்டப்படுகின்றனர்.” 60,000 தொழிலாளர்களை உட்படுத்திய ஒரு சுற்றாய்வில் 72.5 சதவிகித பெண்களும், 62.9 சதவிகித ஆண்களும் ஏதோ ஒரு வகை அழுத்தத்தால் அவதியுறுகின்றனர் என்பது அறிக்கை செய்யப்பட்டது. இந்த நிலை நிர்வாக ஸ்தானத்திலிருந்தவர்கள் மத்தியில் அதிகமாகக் காணப்பட்டது, இவர்கள் மாதந்தோறும் 30 மணிநேரத்திற்கும் அதிகமாக கூடுதல் மணிநேரம் வேலை செய்தவர்கள்.

இராணுவ செலவுகள்

போராயுதங்களைத் தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருப்பது மனிதவர்க்கத்திற்கு எவ்வளவு செலவை ஏற்படுத்துகிறது? 1985 உலக இராணுவம் மற்றும் சமூக செலவுகள் என்ற கட்டுரையில் அதன் ஆசிரியரான ரூத் லெகர் சிவார்டு பின்வரும் புள்ளிவிவரங்களை அளிக்கிறார்: “இரண்டாம் உலக மகா யுத்தம் முதலான இரணுவ செலவு ரூ.1,70,000 கோடி (1982 விலைவாசிபடி)—மூன்றாம் உலகில் வாழும் 360 கோடி மக்களின் ஆண்டு வருமானத்தைவிட ஆறு மடங்கு அதிகமாயிருந்தது. அணு ஆயுத போர்க்கருவிகளை உருவாக்குவதற்கு ரூ.30,000 கோடி முதல் ரூ.40,000 கோடி வரை செலவு செய்யப்பட்டிருக்கிறது. இதனால் இன்று உயிருடனிருக்கும் ஒவ்வொருவரையும் 12 முறைகள் அழிப்பதற்கான அழிக்கும் சக்தி படைத்தவையாய் இருக்கின்றன. இன்றைய இராணுவ செலவு ஆண்டுக்கு ரூ.800 கோடியாகும். சோவியத் யூனியன் மட்டுமே, முன்னேறும் நாடுகளில் கல்விக்கும் உடல்நலத்திற்கும் செலவழிக்கப்படும் தொகையைக் காட்டிலும் அதிக பணத்தை ஒரு ஆண்டில் இராணுவத்திற்கு செலவு செய்கிறது. ஐக்கிய மாகாணங்களின் விமானப் படைக்கான வரவு செலவு திட்டம் லத்தீன் அமெரிக்கா, ஆப்ரிக்கா மற்றும் ஆசியா (ஐப்பானை சேர்க்காமல்) ஆகிய இடங்களிலுள்ள 120 கோடி பிள்ளைகளின் கல்விக்கான வரவு செலவு திட்டத்தில் ஒதுக்கப்பட்ட தெகையைவிட அதிகமாயிருக்கிறது. ஒரு போர் விமானத்தை செயல்படுத்த நாள் ஒன்றுக்கு ரூ.5,90,000 செலவாகிறது. உலகமெங்கும் இன்று 43 பேருக்கு ஒரு இராணுவ வீரன் இருக்கிறான். ஆனால் 1,030 பேருக்கு ஒரு மருத்துவர்தான் இருக்கிறார்.

கால்நடைகளுக்கு வெறியச்சத்துள்ள பானம்

பன்றிக்குட்டிகளுக்கு வயிற்றுப்போக்கை தடுப்பது என்ன? வெறியச்சத்துள்ள பானங்கள்—இதுதான் மேற்கு ஆஸ்திரேலியாவில் பன்றி பண்ணையாளர் ஒருவரின் முடிவு. தான் வளர்க்கும் பன்றிக்குட்டிகள் குடிக்கும் குடிநீரில் சுவையூட்டப்பட்ட வெறியச்சத்துள்ள பானம் சேர்க்கப்பட்டதிலிருந்து ஒரு பன்றிகுட்டிகூட வயிற்றுப்போக்கால் சாகவில்லை. சாதாரணமாக பன்றிக்குட்டிகள் தாயிடமிருந்து பிரிக்கப்பட்டு வேறு உணவு சாப்பிட ஆரம்பிக்கும்போதுதானே இந்த நோய் ஏற்படுகிறது. பன்றிகள் குடிக்கும் குடிநீரில் காணப்படும் கிருமிகளைக் கொல்லுவதற்கு மிகச் சிறந்தது பழவகைகளிலிருந்து செய்யப்பட்ட வெறியச்சத்து பானங்கள் என்று ஓர் ஆய்வுக் குழுவின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடற்கொள்ளை மோசமாகிக் கொண்டிருக்கிறது

1985-ல் “கடற்கொள்ளையும் துப்பாக்கி முனைக்கொள்ளையும் மோசமாகிவிட்டது,” என்று லண்டனின் தி கார்டியன் அறிக்கை செய்கிறது. சர்வதேச கடற்பயண செய்தித்துறை மூன்று முக்கிய அபாய மண்டலங்களைக் குறிப்பிடுகிறது: மேற்கு ஆப்ரிக்க கடல் மண்டலம், தென் சீனா கடல், மற்றும் கரீபியன் கடல். தாய்லந்து வளைகுடாவில்தான் கடுமையான சில கொள்ளைகள் நடந்திருக்கின்றன. அங்கு சிறிய படகுகளில் வந்த அகதிகள் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டிருக்கின்றனர். டிசம்பர் 1985-ன் மத்தியில் ஒரு பயங்கர கொள்ளைக்கூட்டத் தாக்குதல் நடந்தது, மலேசியாவுக்குக் படகில் தப்பிச் சென்றுகொண்டிருந்த 50 வியட்நாம் மக்கள் கொள்ளையடிக்கப்பட்டு கற்பழிக்கப்பட்டனர். மேற்கு ஆப்ரிக்கா கடற்பகுதியில் 30 ஆயுதந்தரித்த ஆட்களைக் கொண்ட ஒரு கொள்ளைக் கூட்டம், நின்றுகொண்டிருந்த சரக்குக் கப்பலில் நுழைந்து மாலுமிகளைக் கட்டிவைத்து, சரக்குகளைக் கொள்ளையடித்தனர். கரீபியன் கடலில் செல்லும் படகுகள் போதை மருந்து கடத்தற்காரர்களால் கடத்தப்பட்டன. கடற்கொள்ளைக்காரரை தாக்கி அவர்களுடைய கடற் தளங்களை நிர்மூலமாக்க வேண்டும் என்று அந்தச் செய்தித்துறை அரசாங்கத்தைத் துரிதப்படுத்தியுள்ளது.

பிரிட்டனில் சிறுபிள்ளைப் புணர்ச்சி

பிள்ளைகளைக் கொடுமைப்படுத்துதலைத் தடைசெய்யும் தேசிய சங்கத்தின் ஆண்டு அறிக்கைபடி பிரிட்டனில் சிறு பிள்ளைப் புணர்ச்சியின் எண்ணிக்கை பயங்கரமாக அதிகரித்திருக்கிறது. 1979 முதல் 1984 முடிய, இந்தக் காலப்பகுதியில் சிறு பிள்ளைகளை முறைகெட்ட விதத்தில் நடத்துதல் இங்கிலாந்திலும் வேல்ஸிலும் 70 சதவிகிதம் அதிகரித்தது. சிறுபிள்ளைகளுடன் உடலுறவுக் கொள்ளும் செயலே உச்சக்கட்டத்தை எட்டியிருக்கிறது. 1984-ல் 15 வயதுக்குக் கீழ்ப்பட்ட 7,038 பிள்ளைகள் இப்படியாக நடத்தப்பட்டிருக்கின்றனர் என்றும், வாரத்திற்கு ஒரு பிள்ளை மரிப்பதற்குப் பெற்றோரே காரணம் என்றும் அந்தச் சங்கத்தின் கணக்கெடுப்பு காட்டுகிறது. “பிள்ளைகள் புத்திமாராட்டமுள்ளவர்களால் கொல்லப்படுவதைப் பார்க்கிலும் பெற்றோரால்தான் அதிகமான கொல்லப்படுகின்றனர்,” என்று லண்டனின் தி கார்டியன் அறிக்கை செய்கிறது. சிறுபிள்ளைகளைத் தவறாக நடத்துதலுக்கு வேலையில்லாத் திண்டாட்டம், விவாகப் பிரச்னைகள் மற்றும் கடன் தொல்லைகளே காரணமாக இருக்கிறது என்று குறிப்பிடப்பட்டது.

ஆகாயத்திலிருந்து தேடும் பணி

மெல்போர்னிலுள்ள ஆறு சிறப்பு அங்காடிகள் காணமற்போன தள்ளுவண்டிப் பிரச்னையைத் தீர்க்க உண்மையிலேயே ஆகாயத்திலிருந்து தேடும் முயற்சியை மேற்கொண்டனர். ஆண்டுதோறும் கடைகளுக்குத் திருப்பிக்கொடுக்கப்படாத தள்ளுவண்டிகளின் எண்ணிக்கை 35,000 என்று கணக்கிடப்படுகிறது. காணமற்போன ஒவ்வொரு தள்ளுவண்டிக்குப் பதில் வண்டி செய்வதற்கு ரூ.1,500 செலவாகிறது, எனவே சிறப்பு அங்காடிக்கு ஏராளமான நஷ்டம். ஆகையால் காணாமற்போன தள்ளுவண்டிகளைக் கண்டுபிடிப்பதற்காக நகரத்தை சுற்றிப் பார்வையிட ஒரு ஹெலிகாப்டர் விமானம் வாடகைக்கு எடுக்கப்பட்டது. நான்கு மணிநேரம் மேற்குப் புறநகர்ப்பகுதி மீது செய்யப்பட்ட தேடும் முயற்சியினால் 110 தள்ளுவண்டிகள் கண்டுபிடிக்கப்பட்டன. இவை பயன்படுத்தப்படாத வெற்றிடங்களிலிருந்தும், வீடுகளின் பின்புறத்திலிருந்தும், குழிகளிலிருந்துங்கூட கண்டெடுக்கப்பட்டன. நகர் முழுவதும் மேற்கொள்ளப்படும் ஒருவார தேடும் பணியில் 500 தள்ளுவண்டிகளாவது கண்டெடுக்கப்படும் என்று அந்த சிறப்பு அங்காடிகள் எதிர்பார்க்கின்றன.

நிச்சயமற்ற அறுவை சிகிச்சை

ஏறக்குறைய 1 கோடி 10 லட்சம் அமெரிக்கர்களுக்குக் கிட்டப் பார்வை பிரச்னை இருக்கிறது. அதை சரிசெய்வதற்காக 1,50,000 போர் ரேடியல் கெரடாட்டமி [radial Keratotomy] என்ற சிகிச்சை முறையை மேற்கொண்டனர். 1978-ல் ஐக்கிய மாகாணங்களில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த சிகிச்சை முறையில் முன்பகுதி விழி வெண்படலம் தட்டையாக்கப்பட்டு அதைச் சுற்றி சிறிய கீரல்கள் செய்யப்பட்டது. என்றபோதிலும் சிலருக்கு கடுமையான பின் பாதிப்புகள் இருக்கிறது என்பது சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டிருக்கிறது. உதாரணமாக, பார்வை எந்தளவுக்கு முன்னேறும் என்று முன்னறிவிக்க முடியாது. மற்றும் முன்விழி வெளிப்படலம் குணமடைகையில், அது உருவமைப்பில் மாற்றம் பெற ஆரம்பிக்கிறது. இதனால் பார்வையும் மாறுகிறது. எனவே சிகிச்சைப் பெற்ற கண்கள் குறைவாகவும் திருத்தப்பட்டிருக்கலாம், அளவுக்கு அதிகமாகவும் திருத்தப்பட்டிருக்கலாம். முன்விழி வெளிப்படலம் குணமடைவதற்குப் பல மாதங்கள் எடுக்கக்கூடுமாதலால், பல மாதங்களுக்கு பார்வையில் வேறுபாடு காணப்படுவதோடு, கடைசியில் ஒரு கண் மற்றொன்றிலிருந்து வித்தியாசப்பட்ட பார்வையைப் பெறக்கூடும், இந்த அறுவை சிகிச்சை முறை “நிச்சயமாகவே முன்னேறிக் கொண்டிருக்கும் நிலையிலிருக்கிறது. எனவே காலப்போக்கில் அது பாதுகாப்பானதாகவும் என்ன நடக்கும் என்பதை உறுதி செய்யும் நிலையை அடைய வேண்டியதாகவும் இருக்கிறது,” என்று கண்சிகிச்சை பேராசிரியர் ஜார்ஜ் உவாரிங் கூறுகிறார்.

வேலையைக் குறித்த உயர்ந்த மனப்பான்மை

சுவிட்ஸர்லாந்தில் 1960 முதல் வேலையில்லாப் பிரச்னையின் சராசரி விகிதம் 0.14-க இருந்திருக்கிறது. 1968 முதல் 1975-க்கு இடைப்பட்ட காலப்பகுதியில் பூஜியமாக இருந்தது என்று அதிகாரப்பூர்வமாக அறிக்கை செய்யப்பட்டது. இரண்டாம் உலக மகா யுத்தம் முதல் இதுவரையாக பார்க்கும்போது 1984-ல் 1.1 என்ற உச்சவிகிதம் காணப்பட்டது. இதை சுவிட்ஸர்லாந்து மக்களில் பெரும்பான்மையினர் இக்கட்டு நிலை என்று கருதுகின்றனர். வேலை செய்கிறவர்களின் எண்ணிக்கையில் இந்த உச்சநிலை இருப்பதற்குக் காரணம் என்ன? தி நியு யார்க் டைம்ஸில் அறிக்கை செய்யப்பட்டதுபோல், “அளவில் சிறிய தேசம், தேசமுழுவதும் சிறிய தொழிற்சாலைகள், வர்த்தகம் சார்ந்த பொருளாதாரம் மற்றும் கருத்துவேறுபாடுகளைத் தீர்க்க நடுவர் தீர்ப்பு முறையும், இதனால் வேலை நிறுத்தங்கள் குறைவாக இருப்பதும்”ஆகிய அம்சங்களை ஜேனீவா பல்கலைக்கழக ஆய்வுக்குழு குறிப்பிட்டுக் காட்டியது. “என்றபோதிலும் விளக்கமாக குறிப்பிட முடியாத பல காரணங்கள் உண்டு,” என்கிறார் அந்த ஆய்வுக்குழுவின் ஆசிரியர் ஆலேன் ஷானன்பர்கர். “இங்கு, சுவிட்ஸர்லாந்தில், வேலை அர்த்தமுடைய ஒன்றாக இருக்கிறது.” (g86 3/22)

    தமிழ் பிரசுரங்கள் (1971-2025)
    வெளியேறவும்
    உள்நுழையவும்
    • தமிழ்
    • பகிரவும்
    • விருப்பங்கள்
    • Copyright © 2025 Watch Tower Bible and Tract Society of Pennsylvania
    • விதிமுறைகள்
    • தனியுரிமை
    • ப்ரைவசி செட்டிங்
    • JW.ORG
    • உள்நுழையவும்
    பகிரவும்