போர்க்கருவிகள்—அவைகளுக்கு என்ன செலவாகிறது?
தேசங்களின் இன்றைய இராணுவ வரவுசெலவு திட்டங்கள் மனதுக்குத் திகைப்பூட்டுகிறது. போர்க் கருவிகளுக்கான அத்தகைய செலவுகள் மனிதவர்க்கத்தின் இன்றியமையாத தேவைகளைக் காட்டிலும் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதைப் பார்க்கையில் அவை பகுத்தறிவுக்கு எதிராகவும் இருக்கிறது. இந்த ‘முடிவு காலத்தில்’ ஒரு “ராஜா” (அல்லது ஆளும் அரசு) அதின் “பொன்னையும்” “இரத்தினத்தையும்” (அதின் வள ஆதாரங்கள் அல்லது செல்வம்) “அரண்களின் தேவனை” (இராணுவம்) மகிமைப்படுத்த செலவழிப்பான் என்று பைபிள் முன்னறிவித்தது. மற்ற அரசுகளும் அதையே செய்கின்றன. போர்க்கருவிகளுக்கான இந்தக் குருட்டுத்தனமான செலவழிப்பால் குடிமக்களுக்கு வழக்கமான நுகர்பொருட்களும்கூட கிடைப்பதில்லை. குறைபாடுகளும் அங்காடிகளுக்கு முன்னால் என்றும் காணப்படுகிற வரிசைகளும் வழக்கமாய்விட்டன.—தானியேல் 11:35-38.
மார்ச் 30, 1985-ல் மான்ட்ரியால், கனடாவிலிருந்து வெளியான பிரெஞ்சு பத்திரிகையான ப்ளஸ் அறிக்கை செய்தபடி போர்க் கருவிகளுக்கு பித்துப்பிடித்த வகையில் செலவிடப்படும் தொகையைச் சிந்தித்துப் பாருங்கள்.
◻கடந்துபோகும் ஒவ்வொரு வினாடியும் உலக தேசங்கள் போர்க்கருவிகளுக்கு 4,81,000 ரூபாய்க்கும் அதிகமாக செலவிடுகின்றன.
◻ஐந்து கோடிக்கும் அதிகமான ஆட்கள் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ போர்க்கருவிகளைத் தயாரிப்பதில் வேலைக்கு அமர்த்தப்பட்டிருக்கின்றனர்.
◻அமெரிக்க ஐக்கிய மாகாணங்களில் ஆராய்ச்சிக்கு செலவிடப்படும் ஒவ்வொரு ரூபாயிலும் 62 பைசா இராணுவ ஆராய்ச்சிக்காக செலவிடப்படுகிறது மற்றும் மொத்த அரசு செலவுகளில் 27 சதவிகிதம் தற்பாதுகாப்பு நோக்கங்களுக்காக செலவிடப்படுகிறது; சுவிட்சர்லாந்திலும் மொத்த அரசு செலவுகளில் 25 சதவிகிதம் தற்பாதுகாப்புக்காக செலவிடப்படுகிறது.
◻போர்க்கருவிகள் ஏற்றுமதி செய்யும் 12 பெரிய தேசங்களில் சோவியத் யூனியனும் ஐக்கிய மாகாணங்களும் மொத்த போர்க்கருவிகள் விற்பனையில் 73 சதவிகிதத்திற்குக் காரணமாக விளங்குகின்றன, ஃபிரான்ஸ் 9 சதவிகிதத்திற்குக் காரணமாக விளங்குகிறது மற்றும் கனடா 1984-ஆம் ஆண்டில் சுமார் 16,90,000 கோடி ரூபாய் மதிப்புள்ள இராணுவக்கருவிகளை ஏற்றுமதி செய்தது.
அதிகமாகக் கடன்பட்டுள்ள, மேலும் மற்ற நாடுகளிலிருந்து வாங்கியக் கடனைத் திருப்பிக்கொடுக்கக் கஷ்டப்படும் தேசங்கள்தான் போர்க்கருவிகளுக்குப் பெரிய அளவில் செலவு செய்யும் நாடுகளின் வரிசையில் இடம் பெறுகின்றன.
◻இலத்தீன் அமெரிக்க நாடுகள் மேற்கத்திய வங்கிகளுக்குச் செலுத்த வேண்டிய 45,50,00,000 கோடி ரூபாயில் 11,70,00,000 கோடி ரூபாய் போர்க்கருவிகளுக்காக செலவழித்தது.
◻1,69,00,000 கோடி ரூபாய் கடனுள்ள பெரு 1983-ல் போர்க்கருவிகளுக்காக 52,00,000 கோடி ரூபாய் செலவழித்திருக்கிறது.
◻போரில் ஈடுபட்டிருந்து மத்திய அமெரிக்க தேசங்கள் 1979 முதற்கொண்டு 1983 வரையாக தங்கள் இராணுவச் செலவுகள் 50 சதவிகிதம் அதிகரித்திருப்பதைக் கண்டிருக்கின்றன.
◻சில நாடுகளின் கட்டுப்படுத்த முடியாத பணவீக்கம் நிலவும் பொருளாதார நிலைமையைச் சிந்தித்துப் பார்க்கையில் இராணுவத்தைத் தாங்கி நிற்க ஒரு நபருக்கு ஒரு ஆண்டுக்கான செலவின் சுமை திகைக்க வைக்கிறது: ஆர்ஜென்டீனா, ரூ2730; சில்லி ரூ1560; வெனிஜூலா ரூ871; மெக்சிகோ ரூ247; பிரெசில் ரூ221.
இந்த நொறுக்கும் இராணுவச்சுமை நீக்கப்படுமானால் அது எவ்வளவு ஆசீர்வாதமாகவும், பெரிய துயர்துடைப்பாகவும் இருக்கும் என்பதைக் கற்பனை செய்து பாருங்கள்! இருப்பினும், தேசங்கள் தாங்களாகவே நிறுத்தமாட்டார்கள். சர்வ வல்லமையுள்ள கடவுளாகிய யெகோவாவால் மட்டுமே அதை நிறுத்தமுடியும், அவர் நிறுத்துவார். இதோ அவருடைய நிச்சயமான வாக்குறுதி: “அவர் பூமியின் கடைமுனை மட்டும் யுத்தங்களை ஓயப்பண்ணுகிறார்,” ஆம், “அவர் உலகம் முழுவதும் யுத்தத்திற்கு முடிவைக் கொண்டுவருகிறார்,” அதோடுகூட “யுத்த வாகனங்களையும் நெருப்பினால் சுட்டெரிப்பார்.”—சங்கீதம் 46:9; R.K. ஹாரிசனின் தி சால்ம்ஸ் ஃபார் டுடே.
இந்த வசனங்கள் நம்பத்தக்கதும் உண்மையுள்ளதுமாக இருக்கிறது, ஏனென்றால், “சமாதானத்தின் தேவன்” பொய்ச்சொல்ல முடியாது!—ரோமர் 16:20; எபிரெயர் 6:18; வெளிப்படுத்துதல் 21:1-5. (g86 7⁄22)