போராயுத வியாபாரம் அது எவ்விதம் உங்களை பாதிக்கிறது
“பாதுகாப்பிற்கு செலவழிப்பதில் உள்ள பிரச்னை என்னவென்றால் வெளிப்புற சக்திகளிலிருந்து எதைப் பாதுகாக்க விரும்புகிறோமோ அதை உள்ளே இருந்தே அழித்துப் போடமல் காக்க எந்த அளவுக்கு செலவிட வேண்டும் என்பதைக் கணக்கிடுவதே” என்று முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி ஐசுனோவர் 1956-ல் சொன்னபோது பூகோள இராணுவ செலவழிப்பு இப்போது இருப்பதற்கு பாதியே இருந்தது. எப்படி இவ்வளவு மிகப்பெரிய அளவில் விரிவடைந்து இருக்கும் போர்த்தளவாட வியாபாரம் உங்களை பாதித்திருக்கிறது? உலக இராணுவமும் சமூக செலவிடுதலும் என்ற ஓர் ஆராய்ச்சி அறிக்கை இதை விளக்கும்:
1. தற்போதைய உலக படைகளுக்கான செலவழிப்பின் அளவுகளில், சராசரியாக ஒவ்வொரு நபரும் தன் வாழ்க்கையின் மூன்று அல்லது நான்கு வருடங்கள் வேலை செய்து சம்பாதிப்பதற்கு சமமானது.
2. மட்டுக்கு மீறிய அளவில் போர்க்கருவிகளை வாங்குதல், எதிர்கால சந்ததிகளின் பேரில் பெரும் பாரமான பொதுக்கடனை குவித்திருக்கிறது.
3. இராணுவ அதிகாரத்தை தொடர்வதற்காக சமூக தேவைகள் அசட்டை செய்யப்பட்டதானது 5 பேரில் ஒருவரை கொடுமையான வறுமையில் விட்டிருக்கிறது. படிப்பறியாமை, நோய், நீடித்த பட்டினி ஆகியவற்றால் வாதிக்கப்படும் பூகோள ஜனத்தொகை நிலையாக வளர்ந்து கொண்டே போகிறது.
4. உயர்தொழில் அறிவு இராணுவத்திற்குப் பயன்படுத்தப்படுவது வெகு குறைவான வேலை வாய்ப்புகளையே உண்டுபண்ணுகிறது. வேலையில்லாத் திண்டாட்டம் அதிகரிக்கிறது. அதற்கொப்பான தொகயை கல்வி, ஆரோக்கியம், பட்டணத்திற்குள் வீட்டு வசதி, மேலும் சமுதாயத்துக்குரிய தேவைகள் ஆகியவற்றிற்கென செலவழித்தால் வேலை வாய்ப்பு அதிகரிக்கும்.
5. உலகத்தில் 43 ஆட்களுக்கு 1 படைவீரர் இருக்கிறார். ஆனால் 1,030 ஆட்களுக்கு ஒரு மருத்துவர் தான் இருக்கின்றார்.
6. பல ஆண்டுகளாக இராணுவ மிகைபாடுகள் சரித்திரத்தில் எந்தச் சமயத்திலும் இல்லாத அளவுக்கு ஒரு நிலையற்ற சூழ்நிலையையும், மனித வாழ்க்கைக்கு அதிக ஆபத்தையும் உருவாக்கியிருக்கிறது.
7. பெருமளவில் அழிக்கும் யுத்தக் கருவிகள் மனித குலத்தையே கைதிகளாக பிடித்து வைத்திருக்கின்றன.
மிகப்பெரிய “களவு”
உலகிலுள்ள ஏழை மக்கள்—பணக்கார நாடுகளிலும் ஏழை நாடுகளிலும்—போராயுத வியாபாரத்தினால் அதிகமாக பாதிக்கப்பட்டிருக்கின்றனர். ட்வைட் டி ஐசுனோவர் இவ்விதமாக அதைச் சொல்கிறார்: “செய்யப்படும் ஒவ்வொரு துப்பாக்கியும், கடலில் விடப்படும் ஒவ்வொரு போர்க்கப்பலும், எரியப்படும் ஒவ்வொரு ஏவுகணையும், உணவின்றி பட்டினியில் இருப்பவர்களிடமிருந்தும், உடையின்றி குளிரில் இருப்பவர்களிடமிருந்தும் திருடுவதை இறுதி கருத்தில் அர்த்தப்படுத்துகிறது. படை ஆயுதம் தரித்து இருக்கும் உலகம் பணத்தை மட்டும் செலவழிப்பதில்லை. அதன் தொழிலாளிகளின் வேர்வையை, விஞ்ஞானிகளின் புத்திக் கூர்மையை, அதன் பிள்ளைகளின் வீடுகளை செலவழிக்கிறது.” இந்தக் “களவிற்கு” இரையாவோர்க்கு இது எதை அர்த்தப்படுத்தும்?
அது கல்விபெறும் வாய்ப்புகளை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறது:
◼ ஒரு புதிய அணு நீர்மூழ்கி கப்பலின் விலை 160 மில்லியன் பள்ளி வயது பிள்ளைகளையுடைய 23 வளரும் நாடுகள் கல்விக்கென ஒரு வருடம் செலவிடும் தொகக்குச் சமம்.
◼ ஐக்கிய மாகாணங்களின் விமானப்படை செலவு ஆப்பிரிக்கா, லத்தீன் அமெரிக்கா, மேலும் ஜப்பானைத் தவிர ஆசியா ஆகிய கண்டங்களில் நூறு கோடிக்கு மேலான பிள்ளைகளுக்கு கல்விக்கென செலவிடப்படும் மொத்த தொகயைவிட அதிகம்.
அது பணத்தை அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறது:
◼ சமீப ஆண்டுகளில் உலகின் போரயுத இறக்குமதியில் 75 சதிவிகிதத்தை முன்னேற்றமடைந்து வரும் நாடுங்கள் செய்திருக்கின்றன—இது பொறுப்பற்ற முறையில் அந்நிய நாட்டு செலவாணியை பயன்படுத்துவதாய் அநேக தேசங்கள் சமாளிக்க முடியாத பாரமான அயல்நாட்டு கடன்களில் விட்டிருக்கிறது.
◼ முன்னேற்றமடைந்து வரும் நாடுகளின் மொத்தமான அயல்நாட்டு கடன்கள் 1988-ற்குள் பிரம்மாண்டமான 1.3 டிரில்லியன் ($ 1,300,00,00,00,000) டாலர்களை எட்டியது.
◼ உலகின் இராணுவ பட்ஜெட் ஒவ்வொரு வருடமும் மிகவும் ஏழ்மையான 44 தேசங்களில் இருக்கும் 250 கோடி ஆட்களின் வருமானத்திற்கு சமமாக இருக்கிறது.
அது உணவையும் குடிநீரையும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறது:
◼ விமானம் தாங்கிய போர்க்கப்பல் ஒன்றை இயக்குவதற்கு ஒரு நாளுக்கு 5,90,000 டாலர்கள் செலவாகிறது, ஆனால் ஆப்பிரிக்காவில் மட்டும் ஒவ்வொரு நாளும் 14,000 பிள்ளைகள் பசியினாலும் அல்லது பசி சம்பந்தப்பட்ட காரணங்களினாலும் மரிக்கின்றனர்.
அது ஆரோக்கியத்தையும் உயிரையும் அவர்களிடமிருந்து எடுத்துக்கொள்கிறது:
◼ சாதாரணமாய் காணப்படும் நோய்களினால் ஒவ்வொரு நிமிடமும் சராசரியாக 30 பிள்ளைகள் இவ்வுலகில் மரிக்கின்றனர். சமூக மற்றும் ஆரோக்கிய தேவைகளுக்கு இராணுவ அதிகாரத்திற்கும் மேலாக முக்கியத்துவம் கொடுத்தால் இவைகளை அம்மை குத்துதல், சுத்தம் சுகாதாரத்திற்கான நடவடிக்கைகள் மேலும் சரியான ஊட்டச்சத்து ஆகியவை மூலம் தவிர்க்கப்படலாம்.
◼ 750 மில்லியன் பிள்ளைகளைத் தொற்று நோய்களிலிருந்து பாதுகாப்பதற்கான ஓர் அம்மை குத்தும் திட்டம் உலக போரயுதங்களுக்கான இரண்டு நாட்கள் செலவை மட்டும்தான் உட்படுத்தும்.
◼ மிக ஏழ்மையான நாடுகளில், சராசரி வாழ்நாட்காலம் பணக்கார நாடுகளை விட 30 வருடங்கள் குறைவாக இருப்பதற்கு ஒரு காரணம் ஆரோக்கிய தேவைகள் புறக்கணிக்கப்பட்டு அதிகமான போரயுதங்களை நாடிச் செல்வதே.
உண்மையிலேயே போரயுத வியாபாரிகள் துயர் மிகுந்த உலக நிலைமைகளுக்காக கனத்த உத்தரவாதம் உடையவர்களாய் இருக்கின்றனர். இந்த நிலைமைகளைக் குறித்து அவர்கள் எவ்வாறு உணருகின்றனர்? “மனசாட்சி என்ற பிரச்னை எங்களுக்கு இல்லை. எங்களுடைய முன்னேற்றத்திற்கு எங்கள் சொந்த பணத்தையே செலவழிக்கிறோம்” என்று போரயுதங்களை உற்பத்தி செய்யும் முதன்மையான ஒரு தேசத்தின் வெளி விவகார உப-மந்திரி கூறுகிறார். ‘அதை நிறுத்த முடியுமா?’ என்று பொதுமக்களில் ஒருவர் கேட்கக்கூடும். இந்தக் கேள்வியை பின்வரும் இரண்டு கட்டுரைகளில் சிந்திப்போம். (g89 6/8)