சமாதானம் பாதுகாப்பு—அதற்கான தேவை
“இந்த இருபதாம் நூற்றாண்டில் போரானது அதிக கொடூரமானதாயும் அதிக நாசகரமானதாயும் அதன் எல்லா அம்சங்களிலும் அதிக இழிவானதாகவும் வளர்ந்துவந்திருக்கிறது. ஹிரோஷிமா மற்றும் நாகசாகியில் வீசப்பட்ட குண்டுகள் ஒரு போரை முடிவுக்குக் கொண்டுவந்தன. நாம் மற்றொரு போரை இனி ஒருபோதும் கொண்டிருக்கக்கூடாது என்பதையும்கூட அவை வெகு தெளிவாக எடுத்துரைத்தன. இதுவே எங்குமுள்ள மனிதரும் தலைவர்களும் கற்க வேண்டிய பாடம், மேலும் அதை அவர்கள் கற்றுகொள்ளுகையில் நிரந்தரமான சமாதானத்திற்குரிய வழியை அவர்கள் கண்டடைவார்கள் என்று நான் நம்புகிறேன். இதைத்தவிர தெரிந்துகொள்வதற்கு வேறொன்றுமில்லை.”—ஹென்றி L. ஸ்டிம்ஸன், “அணுகுண்டை பயன்படுத்துவதற்கான தீர்மானம்” ஹார்ப்பர்ஸ் பத்திரிகை, பிப்ரவரி 1947.
ஐக்கிய நாட்டு சங்கம் நிறுவப்பட்டு ஓர் ஆண்டுதான் கடந்திருக்க, 1940-45 வரையாக ஐக்கிய மாகாணங்களின் போர் காரியதரிசியாக இருந்த திரு. ஸ்டிம்ஸன் மேற்கூறிய வார்த்தைகளை பேசினார். சரி, ஏறத்தாழ நாற்பது ஆண்டுகளுக்கு பின்பு மனிதன் “பாடத்தைக் கற்றுக் கொண்டானா?” நீங்கள் “நிரந்தரமான சமாதானத்தில்” வாழ்க்கையை அனுபவித்து மகிழக்கூடிய நிலையை ஐக்கிய நாடுகள் சங்கம் உருவாக்கியிருக்கிறதா? இரண்டாம் உலக போர் முதற்கொண்டு போருக்கும் போர் ஆயுதங்களுக்கும் மனிதவர்க்கம் எந்த அளவுக்கு விலையை செலுத்த வேண்டியதாக இருந்திருக்கிறது என்பதை சிந்தித்துப் பாருங்கள்.
மானிட உயிர் சேதம்: ஐக்கிய நாட்டு சங்கம் சமாதானத்தை கொண்டுவருவதற்கு எடுத்திருக்கும் முயற்சிகள் மத்தியிலும் இரண்டாம் உலக போர் முதற்கொண்டு மானிட உயிர் சேதம் என்னவாயிருந்திருக்கிறது? “இரண்டாம் உலகப்போரின் பேரழிவு முதற்கொண்டு 66 நாடுகளிலும் பிராந்தியங்களிலும் 105 பெரும் போர்கள் நடைபெற்றிருக்கின்றன. (ஓர் ஆண்டுக்கு 1000-ற்கு மேற்பட்ட மரணங்கள் [மதிப்பிடப்பட்டிருக்கின்றன]) 1945 முதற்கொண்டு நடந்துவரும் போர்கள் 160 லட்சம் உயிர்களை கொன்றிருக்கிறது. படைத்துறையிலிருந்தவர்களை காட்டிலும் படைத்துறை சேராத மக்களே அதிகமாய் மாண்டு இருக்கின்றனர். (முக்கியமாய் படைத்துறை சாராத மக்களின் எண்ணிக்கை, அறைகுறையாக இருக்கிறது; பெரும்பாலான போர்களுக்கு அதிகாரப்பூர்வ பதிவேடுகள் இல்லை.)—உலக இராணுவ சமூக செலவுகள் 1983 ரூத் சிவார்ட் என்பவரால் எழுதப்பட்டது.
சமாதானமும் பாதுகாப்பும் உண்மையிலேயே தூரமாக நழுவிச் சென்று கொண்டிருக்கிறது—அடிக்கடி ஏற்படும் போர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கிறது. “1950-ம் ஆண்டுகளில் சராசரியாக [போர் எண்ணிக்கை] ஓர் ஆண்டுக்கு 9-ஆக இருந்தது; 60-ல் ஓர் ஆண்டுக்கு 11-ஆகவும், 70-ல் . . . , ஓர் ஆண்டுக்கு 14 ஆகவும் இருந்தது” என்று விவரிக்கிறார் சிவார்ட்.
மனோநிலை சார்ந்த சேதம்: ஹிரோஷிமா முதற்கொண்டு மனிதன் அணு ஆயுத போரின் பயத்தில் வாழ்ந்து வந்திருக்கிறான். ஏன், 1945-ல் இருந்த ஒரு சில அணு ஆற்றல் ஆயுதங்கள் 1983-க்குள்ளாக உலக முழுவதிலும் 50,000-ஆக அதிகரித்திருக்கிறது. இன்னமும் அதிகம் உற்பத்தி செய்யப்படுகிறது! தெளிவாகவே, அணு ஆற்றலுள்ள ஆயுதங்களின் எண்ணிக்கையும் அதனை வைத்திருக்கும் நாடுகளின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்போது அணு ஆயுத போரின் அபாயமும் அதிகரிக்கிறது. அணு ஆயுத போரின் பயத்தில் வாழும் மனோநிலை சார்ந்த தேசங்களைப் பற்றியது என்ன?
அணு ஆயுத போருக்கு தயாரித்தல்—மனோநிலை சார்ந்த பாதிப்புகள் என்ற புத்தகம் பதிலளிப்பதாவது: சிறு பிள்ளைகள் மற்றும் பெரியவர்களுடைய நாட்டம் மற்றும் நடத்தை ஆகியவற்றின் பேரில் அணு ஆயுதங்களின் நிழலில் வாழ்வது ஏற்படுத்தும் மிகவும் துரிதமாக கூடுதலான விசாரணைக்குட்பபடுத்த வேண்டும். இங்கே தானே நம்முடைய சமுதாயங்களுக்கு பேரளவான சேதங்கள் ஏற்படுவதற்கு ஏராளமான சாத்தியம் இருக்கிறது, தலைமுறையினர், பெரியவர்களாக வளரவளர, அது வட்டியாக கூடுகிறது. ஒரு பிள்ளையின் கனவுகளுக்கு என்ன வாய்ப்புகள் உண்டு?
மெய்யாகவே, வாலிபப்பருவத்தினரே முக்கியமாய் பாதுகாப்பற்ற ஒரு எதிர்காலத்திற்கு இறையானவர்களாக இருக்கின்றனர். 10 முதல் 12 வயதான ஆஸ்திரேலிய பள்ளி பிள்ளைகளிடம் நடத்தப்பட்ட ஒரு சுற்றாய்வில் பின்வரும் குறிப்புகள் வெளிவந்தன. “நான் பெரியவனாக ஆகும்போது ஒரு போர் இருக்கும் என்று நினைக்கிறேன். அப்போது ஆஸ்திரேலியாவிலிருக்கும் எல்லோரும் செத்துப் போவார்கள்.” “இந்த உலகம் ஒரு பாழ்நிலையிலிருக்கும். எல்லா இடங்களிலும் மாண்டுபோன உயிரினங்களே இருக்கும், மேலும் அமெரிக்க ஐக்கிய மாகாணங்கள் இந்தப் பூமியிலே இல்லாமற் போகும்படி செய்யப்படும்.” 70 சதவிகிதத்திற்கும் மேற்பட்ட பிள்ளைகள் “அணு ஆயுத போர் நிகழ்வதற்கான சாத்தியம் இருக்கிறது என்று குறிப்பிட்டார்கள்.” அநேக இளைஞர் இன்றைக்காக மட்டுமே வாழ்ந்திரு என்ற மனப்பான்மை கொண்டு அதன் விளைவாக போதை வஸ்துக்களுக்கு திரும்புவதற்கு ஒரு காரணம், பாதுகாப்பான ஒரு எதிர்காலம் இல்லாமையாகும் என்று ஆராய்ச்சியாளர்கள் அஞ்சுகின்றனர்.
பொருளாதார சேதம்: 1930-ம் ஆண்டுகளின் மத்திபத்திற்கு முன்பாக உலகத்தின் இராணுவ செலவுகள் ஒரு ஆண்டிற்கு சுமார் ரூ.4,500 கோடி . ஆனால் 1982-ல் அது ரூ.6,60,000 கோடியாக உயர்ந்திருக்கிறது. மேலும் உங்களுக்கு தெரிந்திருக்கிறபடி அது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டேயிருக்கிறது. இப்படிப்பட்ட செலவுகளை தெளிவுபடுத்திக் காட்ட உலக இராணுவமும் சமூக செலவுகளும் 1983 பின்வருமாறு விவரிக்கிறது: “உணவு இல்லாமையாலும், அதிக செலவாகாத தடுப்பு ஊசி போடப்படாமையாலும் ஒவ்வொரு நிமிடமும் 30 பிள்ளைகள் சாகின்றன. ஒவ்வொரு நிமிடமும் உலகத்து இராணுவ செலவு கஜானாவிலிருந்து ரூ.1.3 கோடியை உறிஞ்சிவிடுகிறது.” (தடித்த எழுத்து எங்களுடையது) இப்பொழுது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்குள் அது நிமிடத்திற்கு ரூ.2 கோடியாக அதிகரித்துவிட்டது.
போருக்கும் போர் ஆயத்த நிலைக்கும் மனிதன் செலுத்தியிருக்கும் உயர்ந்த விலையை நீங்கள் சிந்தித்துப் பார்க்கையில், ஒரு காரியம் நிச்சயமாயிருக்கிறது: மனிதன் தன் வழியில் “நிரந்தரமான சமாதானத்திற்குரிய வழியை” கண்டுபிடிக்கவில்லை. என்றபோதிலும் உங்களை நீங்களே பின்வருமாறு கேட்டுக் கொள்ளுங்கள்: நம்முடைய வாழ்நாட்காலத்திலேயே உலக முழுவதும் சமாதானம் ஏற்படுவதற்கு எதாவது ஒரு வழி இருக்கிறதா? எந்த ஊற்றுமூலத்திலிருந்து அது வரக்கூடும்? நீங்கள் ஐக்கிய நாடுகள் சங்கத்தை எதிர்நோக்கியிருக்க வேண்டுமா? அப்படியில்லாவிடில் சமாதானமும் பாதுகாப்பும் எப்படி நிலைநாட்டப்படும்.? (w85 10/15)